jaga flash news

Sunday, 14 October 2012

ஆடி மாசம் புது மண தம்பதிகளை ஏன் பிரிச்சு வைக்கிறாங்க..?

ஆடி மாசம் முதலிரவு நடந்தா கரு உண்டாகி அடுத்த பத்தாவது மாசமான சித்திரையில் குழந்தை பிறக்கலம்..சித்திரை அக்னி நட்சத்திரம் எனும் கடுமையான வெப்பம் நிறைந்த மாசம்..இம்மாதத்தில் குழந்தை பிறந்தால் வெப்பத்தால் உண்டாகும் நோய்கள் குழந்தையை பாதிக்கும் உடல் நலிவடையும்..அப்போ எல்லாம் இவ்வளவு மருத்துவ வசதி கிடையாது...குழந்தைகள் பிறப்பதும் ஏதாவது நோயால் இறப
்பதுமாக இருப்பதால் ஒவ்வொருவரும் 10,15 குழந்தைகள் வரை பெற்றுக்கொண்டனர்...சில குழந்தைகள் இறந்தாலும் சில குழந்தைகள் பிழைக்குமே என்பதற்காக..சித்திரை மாசம் குழந்தை பிறந்தா அப்பனுக்கு ஆகாது வம்சத்துக்கு ஆகாது என்பதும் இதனால்தான்..அக்குழந்தைக்கு பல நோய்கள் உண்டாகலாம்..என்பதோடு அவன் ஜாதகத்தில் மேசத்தில் சூரியன் உச்சம் ஆகியிருக்கும்..சரியான கோபக்காரனக இருப்பான்..யாரிடமும் அனுசரித்தும் போக மாட்டான்..குடும்பத்தில் கணவன்,மனைவிக்குள் கருத்து வேறுபாடாகவும் இருக்கும் என்றெல்லாம் யோசித்துதான் ஆடி மாதத்தை அதுக்கு ஆகாதுன்னு சொல்லி வெச்சிருக்காங்க!!

No comments:

Post a Comment