jaga flash news

Wednesday 31 October 2012

வசம்பின் மருத்துவக் குணங்கள்


இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம்.
அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.
இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.
# சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.
# வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
# இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டுய, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.
# கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.
# பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது…!

1 comment:

  1. அய்யா...வெ.சாமி அவர்களே.... பிறந்த குழந்தைக்கு, வசம்பை சுட்டு வைத்துக் கொண்டு...ஒரு மாதத்து குழந்தை என்றால், தாய்ப்பாலில், ஒரு உரசு...2 மாதத்து குழந்தை என்றால்...2 உரசு அழுந்த உரசி, அதோடு, பெருங்காயம், இந்துப்பூ சாதிக்காய், மாச்சக்காய், இவைகளையும் மாதக்கணக்குப்படி உரசி இரவு குழந்தைகள் உறங்கச் செல்லுமுன் இதைத் தாய்ப்பாலில் கலந்து கொடுக்க... குழந்தைகள் ஆரோக்கியமாக உறங்குவார்கள். எந்தவித நோய்களும் அணுகாது. சிலர், குழந்தைகளுக்கு தலைக்கு எண்ணெய் வைக்கும்போது மட்டுமே கொடுப்பார்கள். அதைவிட தினமும் கொடுத்தால்..மிகவும் நலம். ஆனால், அனைத்தையும், இலேசாக சுட்டு வைத்துக் கொண்டு தான் கொடுக்க வேண்டும். கிளிக்கு நாவில் வசம்பு தடவி பேச வைப்பதுபோல் தான் குழந்தைகளுக்கும். வார்த்தைகள் திருத்தமாக பேசுவார்கள். அதிகமாக கொடுத்தால்...திக்குவாய் வர வாய்ப்புண்டு. ஆகவே..அந்தந்ந மாதக் கணக்குபடி உரசி கொடுக்க வேண்டும்.

    ReplyDelete