மகத்துவம் நிறைந்த ஏகாதசி விரதம்
ந காயத்ர்யா: பர மந்த்ர:
ந மாது பர தைவதம்
ந காச்யா: பரமம் தீர்த்தம்
ந ஏகாதச்யா: ஸமம் வ்ரதம்.
காயத்ரிக்கு மேலான மந்திரமில்லை,
தாயினும் சிறந்த தெய்வமில்லை
காசிக்கு சமமான தீர்த்தமில்லை
ஏகாதசிக்கும் மேலான விரதமில்லை.
பகவான் மகாவிஷ்ணு உறங்கிக் கொண்டிருந்த போது, அவரது திவ்ய சரீரத்திலிருந்து ஒரு சக்தி, ஸ்திரி ரூபத்தில் வெளியே சென்று உலகத்தையே துன்புறுத்திக் கொண்டிருந்த ஒரு அசுரனை கொன்றதாம்.

சக்தி வடிவான அந்த பெண்ணிற்கு `ஏகாதசி’ என பகவான் பெயரிட்டு ஏகாதசி விரதத்தை ஏற்படுத்தியதாக `பத்ம புராணம்’ கூறுகிறது.
பாற்கடலை கடைந்து அமிர்தம் பெற்ற நாளை `ஏகாதசி’ என்றும் கூறுவதுண்டு. இந்துக்கள் அனைவருக்கும் மிக விசேஷமானது ஏகாதசி விரதமாகும்.
ஏகாதசியன்று உபவாசம் இருப்பது வழக்கம்.
உபவாசம் என்பதற்கு `உண்ணாமை’ என்கிற பொருள் அல்ல.
உப – என்றால் `கூட’
வாசம் – என்றால் வசிப்பது.
யார் கூட வசிப்பது?
பகவான் கூடத்தான்!
அன்று பட்டினி கிடப்பதின் நோக்கம் – வைராக்கியத்தை வளர்த்துக் கொள்ளத் தான்.
வைராக்கியம் வந்தால் தான் ஈஸ்வரனிடம் மனம் லயிக்கும். தியானம் திடப்படும்.
உண்ணாவிரதம் ஆரோக்கியத்திற்கும் நல்லது, மனதுக்கும் நல்லது.
`லங்கணம் (பட்டினி கிடப்பது) பரம அவுஷதம்’ என்று வைத்திய சாஸ்திரமே அறிவுறுத்துகிறது.
பலகாரம் பண்ணுவது என்றால் பல விதமான உணவு வகைகளை ருசிப்பது என்று பொருள் அல்ல. பலம் என்றால் வடமொழியில் `பழம்’ என்று அர்த்தம்.
ஆகவே ஏகாதசியன்று பகல் முழுவதும் பட்டினி கிடந்து இரவில் பால், பழம் மட்டும் சாப்பிடுவது தான் உண்மையான விரதமாகும்.
எட்டு வயதிலிருந்து எழுபது வயது வரை எல்லோரும் இரு பட்சங்களிலும் ஏகாதசி விரதம் இருக்கவேண்டும்.
எந்த தீட்டு காலமாக இருந்தாலும் ஏகாதசி விரதம் மட்டும் கடைபிடிக்கலாம்.
வைகுண்ட ஏகாதசிக்கு, மோட்ச ஏகாதசி என்று பெயர்.
கர்ப்ப ஸ்திரிகளுக்கு விரதங்கள் விதிக்கப்படவில்லை

No comments:
Post a Comment