jaga flash news

Tuesday, 8 January 2013

ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை


ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு

பெண்கள் கருத்தரிக்காமல் இருப்பதற்கு கருத்தடை மாத்திரைகள் உள்ளன. இதை அதிக அளவில் பயன்படுத்தும் பெண்கள் கருப்பை கோளாறில் சிக்கி அவதிப்பட்டனர்.
புற்று நோய் காரணமாக கருப்பை அகற்றப்படும் பெண்களின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
இதை கருத்தில் கொண்டு சில ஆண்டுகளுக்கு முன்பு ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை அறிமுகமானது. இதில் எக்கச்சக்கமான பின் விளைவுகள் ஏற்பட்டதால் அம்மாத்திரைகளை ஆண்கள் பயன்படுத்தவில்லை.
இந்நிலையில் இஸ்ரேல் நாட்டில் உள்ள பார் இலான் பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள் பக்க விளைவு இல்லாத ஆண்களுக்கான கருத்தடை மாத்திரையை கண்டு பிடித்தனர். இதுபற்றி விஞ்ஞானி ஹேம் பிரித் பார்டு கூறும்போது, உலகில் உள்ள மக்கள் தொகையை ஒரு கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். இதற்காகத்தான் பெண்களுக்கான கருத்தடை மாத்திரை அறிமுகப்படுத்தப்பட்டது. இதை பயன்படுத்திய பல பெண்களின் கருப்பை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதனால் நாங்கள் ஆண்களுக்கான கருத்தடை மாத்திரையை கண்டுபிடித்துள்ளோம். இந்த மாத்திரை சாப்பிடும் ஆண்களுக்கு பின்விளைவு எதுவும் ஏற்படாது. இதை ஆண்கள் துணிந்து சாப்பிடலாம்.
ஆண்களின் உயிரணுவில் உள்ள கருத்தரிக்கும் சக்தி மிகுந்த புரோட்டீனை இந்த கருத்தடை மாத்திரைகள் முழுமையாக கரைத்து விடும். இதனால் கருத்தரிக்கும் வீரியத்தன்மை அவர்களது உயிரணுவில் சுத்தமாக இருக்காது.
இதை சாப்பிடும் ஆண்களுக்கு எந்தவித பக்க விளைவும் ஏற்படாது. இதுபற்றி நடத்திய பரிசோதனையில் பக்க விளைவு இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இரவில் படுக்கைக்கு செல்வதற்கு முன்புதான் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் எல்லாம் கிடையாது. 3 மாதத்திற்கு ஒரு தடவை இந்த கருத்தடை மாத்திரையை ஆண்கள் சாப்பிட்டால் போதும்.
அவர்களது உயிரணுவில் உள்ள கருத்தரிக்கும் புரோட்டீன் முழுமையாக கரைந்து விடும். இம்மாத்திரைகளை விரைவில் உலகம் முழுவதும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
கணவர் கருத்தடை மாத்திரை சாப்பிட்டால் மனைவி எந்தவித கருத்தடை சாதனமோ, மாத்திரையோ பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றா

No comments:

Post a Comment