jaga flash news

Wednesday 9 January 2013

இந்து மதத்தின் செங்கற்கள்......


இந்து மதத்தின் செங்கற்கள்......


பதினெண் புராணங்கள் என்னென்ன?
பஞ்ச புராணங்கள் என்று எதுவும் நமது சம்பிரதாயத்தில் இல்லை. புது சிந்தனையாளர்களின் கண்ணோட்டமாக இருக்கலாம். அதுபற்றிக் கூறியவர்களே அதற்கு சான்று. பதினெட்டு புராணங்கள் உண்டு. அதை மத்ஸ்ய புராணம்மார்க்கண்டேய புராணம்பாகவத புராணம்பவிஷ்ய புராணம்பிரம்மவைவர்த்த புராணம்பிரம்மாண்ட புராணம்பிரம்ம புராணம்வராஹ புராணம்வாமன புராணம்விஷ்ணு புராணம்வாயு புராணம்அக்னி புராணம்,நாரதீய புராணம்பத்ம புராணம்லிங்க புராணம்கருட புராணம்கூர்ம புராணம்ஸ்கந்த புராணம் ஆகியன. இதை தவிர உப காரணங்களும் உண்டு. அவைசனத்குமார புராணம்நரஸிம்ஹ புராணம்சிவ புராணம்,பிரஹன்னாரதீய புராணம்துர்வாச புராணம்கபில புராணம்மானவ புராணம்ஒளசஸை புராணம்வருண புராணம்ஆதித்யபுராணம்மஹேச்வர புராணம்பார்கவ புராணம்வசிஷ்ட புராணம்காலிகா புராணம்சாம்ப புராணம்நந்திகேச்வர புராணம்ஸெளர புராணம்பராசர புராணம். இப்படி 18ல் முடிவடையும் புராணங்கள் புழக்கத்தில் உண்டு. ஐந்து எண்ணிக்கையில் முடிவடையும் புராணத் தகவல் தென்படவில்லை!
புராணங்கள் - 18, உப புராணங்கள் - 18, வித்யைகள் 18, அதேபோல் மகாபாரதம் 18 பர்வாக்களை உள்ளடக்கியது. பாரதப்போர் 18 நாட்கள் நடந்தது. படைகளும் 18 அஷெளஹணியாக இருந்தன. பகவத்கீதையும் 18அத்தியாயங்கள் கொண்டது. ஆக 18 எனும் சிறப்புடன் அமைந்த புராண எண்ணிக்கையில் பஞ்ச புராணம் என்றொரு வழக்கத்தை தோற்றுவிப்பது விளையாட்டு.

சிவபூஜையில் கரடி என்றால் என்ன?
பூஜை செய்யும்போது தடங்கல் வந்தால்சிவ பூஜையில் கரடி வந்த மாதிரி என்று சொல்வார்கள். இதில் கரடி என்பது மிருகத்தை குறிக்காது. கரடி என்பது ஒரு வகை வாத்தியம். முற்காலத்தில் மன்னர்கள் சிவபூஜை செய்யும் போதுகரடி வாத்தியம் வாசிக்கச் செய்வர். இதைத்தான்சிவபூஜையில் கரடி என்பர். ஆனால்,பிற்காலத்தில் இதுவே பூஜைக்கு இடையூறு ஏற்படுவது போல அர்த்தம் மாறி விட்டது.

தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் தெரியுமா?
திருமணத்தின் தாலி கட்டும் போது,
மாங்கல்யம் தந்துனானேன
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்!! - என்று சொல்கிறார்கள். மங்கலமான பெண்ணே! உன்னோடு இன்று நான் துவங்கும் இல்லறவாழ்வு நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று உறுதியளித்துஇந்த திருமாங்கல்யத்தை உன் கழுத்தில் அணிவிக்கிறேன். என் இல்லத் துணைவியாகஎன் சுக துக்கங்களில் பங்கேற்றுநிறைந்த யோகத்துடன் நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக! என்பது இதற்குப் பொருள்.

சம்பந்தரின் வாழ்த்து பெற்ற நாயன்மார்கள்
திருநாவுக்கரசர்சுந்தரர்திருஞானசம்பந்தர் ஆகிய மூவரும் சிவனை பாடிய தலங்கள்பாடல் பெற்ற சிவத்தலங்கள் என அழைக்கப்படுகின்றன. 274தலங்கள் இவ்வாறு பாடல் பெற்றுள்ளன. இதில் திருஞானசம்பந்தர் நாயன்மார்களில் இருவரைப் பற்றி பாடியிருக்கிறார். மதுரையை ஆட்சி செய்த பாண்டியன் நெடுமாறன்சமண சமயத்தை பின்பற்றினார். அவரை சைவ சமயத்தை பின்பற்றச்செய்வதற்காகஅவரது மனைவி மங்கையர்க்கரசியார்அமைச்சர் குலச்சிறையார் இருவரும் திருஞானசம்பந்தரை மதுரைக்கு வரும்படி அழைத்தனர். சம்பந்தரும் மதுரை வந்தார். அவரை குலச்சிறையார் வரவேற்றார். முதலில் திருவாலவாய் கோயிலை தரிசித்த திருஞானசம்பந்தர்மங்கையர்கரசியாரையும்அவரது அமைச்சர் குலச்சிறையாரையும் சிறப்பித்து சொல்லும் வகையில் மங்கையர்க்கரசி வலவர்கோன் பாவை என்னும் பதிகத்தை பாடினார். திருஞானசம்பந்தரால் வாழ்த்தப்பட்ட இவர்கள் இருவரும் சிவனருள் பெற்று நாயன்மார் வரிசையில் இணைந்தனர். குலச்சிறை நாயனாரை சுந்தரமூர்த்திஒட்டக்கூத்தர் இருவரும் பெருநம்பி குலச்சிறையார் என்று பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவராத்திரியும் பெருமாளும்
பெருமாளுக்கும் சிவராத்திரிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறது என்றால் இருக்கிறது. நரகாசுரன் கொல்லப்பட்ட தேய்பிறை சதுர்த்தசி திதியே ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. பகவான் கிருஷ்ணன் ஐப்பசி மாத சிவராத்திரி முழுவதும் விழித்திருந்து அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னால் நரகாசுரனைக் கொன்றார். இதில் இருந்து சிவராத்திரியன்று கண்விழித்து சிவனை வணங்குவோர் எடுத்த செயலில் வெற்றி பெறுவர் என்பது தெளிவாகிறது.

கோமாதா பூஜை
கோமாதாவில் (பசு) முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம். அதன் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். எனவேகோமாதா பூஜை செய்யும் போதுபசுவை முன்புறமாக தரிசிப்பதைவிடபின்புறம் தரிசனம் செய்வது மிகவும் நன்மை தரும். பசுவை வணங்கும்போது முன்நெற்றி மற்றும் வால் பகுதியில் சந்தனம்குங்குமம் வைத்துமலர் அணிவித்து வழிபட வேண்டும். பசுவின் சாணமும் லட்சுமி அம்சமாகும். எனவேதான்அதிகாலையில் சாணத்தை வீட்டு வாசலில் தெளிக்கிறார்கள்.

திருநீறில் மருந்திருக்கு
திருநீற்றின் பெருமை அளவிடற்கரியது. நீறில்லா நெற்றி பாழ் என்று பெரியோர்கள் கூறியுள்ளனர். பாண்டிய மன்னனின் வெப்பு நோய் நீங்குவதற்காக திருஞான சம்பந்தர் திருநீற்றுப்பதிகம் பாடினார். சுத்தமான திருநீறு,வாதத்தினால் உண்டாகும் 81 நோய்களையும் பித்தத்தினால் உண்டாகும் 64 நோய்களையும்கபத்தால் உண்டாகும் 215 நோய்களையும் போக்கும் தன்மை கொண்டது.

இறைவனுக்கு ஆடை
சிவனுக்கு எந்த நேரமாக இருந்தாலும் வெள்ளை பட்டு அணிவிக்க வேண்டும். ஆனால்அம்மனுக்கு காலையில் சிவப்பு பட்டும்மாலையில் நீலம் அல்லது பச்சை பட்டும்அர்த்த ஜாமத்தில் சிவப்பு அல்லது பச்சை கரையுள்ள வெள்ளை பட்டும் சார்த்த வேண்டும்.


ஷண்முகி முத்திரை
நதிகள் அல்லது கடலில் முழ்கி குளிக்கும் போது காதுகளை பெரு விரல்களாலும்மூக்கின் இரு பக்கங்களை நடுவிரல்களால் மூடிக் கொண்டும்கண்களை ஆள்காட்டி விரலால் திறந்து கொண்டும் தெய்வத்தை நினைத்துக் கொண்டு நீராட வேண்டும். இந்த முத்திரைக்கு ஷண்முகி முத்திரை என்று பெயர்.

கும்பிடக்கூடாத நேரம்
கோயில்களில் சில நேரங்களில் சுவாமியை வணங்கக்கூடாது. உற்சவ காலங்களில் சுவாமி புறப்பட்டு வீதி உலாவரும்போது கோயிலில் உள்ள மூலவரையும் பரிவார தெய்வங்களையும் வணங்கக்கூடாது. அபிஷேகம் ஆகும் போதும்நைவேத்யம் தருவதற்காக திரட்டியிருக்கும் போதும் சுவாமியை வணங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

பிரசாதத்துக்காக அடித்துக் கொள்ளாதீர்கள்
இறைவனுக்கு நைவேத்தியம் செய்த பிரசாதத்தை சிறிதளவாவது நாம் உண்ண வேண்டும். சிலர் பிரசாதம் வேண்டொமெனச் சொல்வதும்பெரும்பாலான இடங்களில் பிரசாதத்துக்காக சண்டைபோட்டுக் கொள்வதும் தவிர்க்கப்பட வேண்டும். பிரசாதத்துக்கென தனி மரியாதை இருக்கிறது. தெய்வங்கள் மனிதனைப் போல் நேரடியாக உணவை ஏற்பதில்லை. அவற்றின் பார்வை மட்டுமே அதில்படுகிறது. இதை சமஸ்கிருதத்தில் திருஷ்டி போக் என்பர். கண்ணொளி பட்டது என்பது இதன் பொருள். தெய்வத்தின் கண்ணொளி பட்ட பொருள் புனிதத்தன்மை பெறுகிறது. இதைச் சாப்பிடுபவர்கள் மனம் தூய்மையடைகிறது. உள்ளத்தில் பக்தியை உருவாக்குகிறது. எனவேபிரசாதம் எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் வரிசையில் நின்றுஉரிய மரியாதைகளுடன் பெற்றுச் செல்ல வேண்டும். பிரசாதத்தை பகிர்ந்து சாப்பிடும் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பெண்ணைப் பெற்றால் மோட்சம்
பெண் குழந்தை என்றாலே ஓடிப்போகிறார்கள் பெற்றவர்கள். காரணம்அவளைத் திருமணம் செய்து கொடுக்க பெரும் பொருள் சம்பாதிக்க வேண்டியிருக்கிறதே என்ற பயத்தால். ஆனால்பெண்ணைப் பெற்று சிரமப்பட்டு கல்யாணம் செய்து வைப்பவர்களுக்கு மோட்சம் நிச்சயம் கிடைக்கும். திருமணத்தின் போதுபெண்ணைத் தாரை வார்த்துக் கொடுக்கும் போதுபுரோகிதர் ஒரு மந்திரம் சொல்வார். அதன் பொருள் என்ன தெரியுமா?
மகளே! நீ எப்போதும் என் எதிரில் காட்சி தருவாயாக! நீ அம்பிகையின் அருள் பெற்ற உத்தமி. உன் இருபுறத்திலும் அந்த அம்பிகை காட்சியளிக்கிறாள். நீ எனக்கு எல்லாவகையிலும் பெருமையைக் கொடு. மிகச்சிறந்தவனான இந்த மணமகனுக்கு நான் உன்னை தானம் அளிப்பதால்நான் நற்கதியை அடைவேன். மோட்சத்தை உன் மூலமாகப் பெறும் பாக்கியசாலியாகத் திகழ்கிறேன்என்று ஒரு தந்தை சொல்வது போல் அமைகிறது.

திருவண்ணாமலையில் கிரிவலம் சுற்றி வரும் போது உள்ள அஷ்ட லிங்கத்தை வணங்கினால் ஏற்படும் பலன்கள்
இந்திரலிங்கம் : புதிய வேலைபணி மாற்றம்பதவி உயர்வு கிடைக்கும்
அக்னி லிங்கம் : கற்புசத்யம்தர்மம் தலை காக்கும்
எமலிங்கம் : எமபயம் நீங்கிநீதி வழுவாமல் வாழலாம்
நிருதி லிங்கம் : தோஷங்கள்குழந்தை இல்லாமைசாபங்கள் நிவர்த்தியாகும்
வருணலிங்கம் : ஜலதோஷம்சிறுநீரக வியாதிசர்க்கரை வியாதி நீங்கும்
வாயு லிங்கம் : காசம்சுவாச நோய்மாரடைப்பு நோய் நீங்கும்
குரேப லிங்கம் : ஆக்கப்பூர்வமாக தரிசித்தால் கோடீஸ்வரர் ஆகலாம்.

சக்கரத்தாழ்வார்
எம்பெருமானின் நித்ய சூரிகளில் ஒருவரே சக்கரமாக மாறியுள்ளதால் சக்கரத்தாழ்வார் எனப்படுவார். பெருமாளுக்கு ஐந்து ஆயுதங்கள். சக்கரத்தாழ்வாருக்கு பதினாறு ஆயுதங்கள். சக்கரம்ஈட்டிகத்திகோடரி,தண்டம்சதமுகாக்னிமாவட்டிசக்தி என்னும் எட்டு ஆயுதங்களை வலக்கையிலும் சங்குவில்கண்ணி,கலப்பைஉலக்கைவஜ்ரம்சூலம்கதை ஆகிய எட்டு ஆயுதங்களை இடக்கையிலும் அணிந்திருப்பார்.

சொன்னது
1. கடவுள் மனிதனுக்குச் சொன்னது - கீதை
2. மனிதன் கடவுளுக்குச் சொன்னது - திருவாசகம்
3. மனிதன் மனிதனுக்குச் சொன்னது - திருக்குறள்
4. பகவத் கைங்கரியம் - இறைவனுக்குத் தொண்டு செய்தல்
5. பாகவத கைங்கரியம் - இறைவனுடைய அடியார்களுக்கு தொண்டு செய்தல்.

என்றும் சிரஞ்சீவி எனப் பெயர் பெற்றவர்கள்
அஸ்வத்தாமன்மஹாபலிவியாசர்ஆஞ்சநேயர்விபீஷணன்கிருபாசார்யார்பரசுராமர்


காஞ்சி புராணம்,
காஞ்சி புராணப்படி காஞ்சி மாநகரத்தில் சிவனுக்கு 16,000 கோயிலும்விநாயகருக்கு 1,00,000 கோயிலும்காளிக்கு5000 கோயிலும்விஷ்ணுவிற்கு 12,000 கோயிலும்முருகனுக்கு 6,000 கோயிலும்திருமகள்கலைமகளுக்கு 1000கோயில்களும் இருந்ததாகத் தெரிகிறது.

நவவித பக்தி என்னும் ஒன்பது பக்தி முறை
சரவணம் - இறைவனது பெருமைகளைலீலைகளை காதால் பக்தியுடன் கேட்பது
கீர்த்தனம் - இறைவனின் புகழைப் பாடுதல்
ஸ்மரணம் - எப்பொழுதும் பரமனையே நினைத்து அவன் நாமத்தை ஜபித்தல்
பாதஸேவனம் - இறைவனுக்கு தொண்டு செய்தல்
அர்ச்சனம் - மலரால் அவன் பாதத்தில் அர்ச்சித்தல்
வந்தனம் - நமஸ்கரித்தல்
தாஸ்யம் - ஆண்டவன் ஒருவனுக்கே நாம் அடிமை என்று கருதி செய்யும் செயல்களையெல்லாம் அவனது மகிழ்ச்சிக்காக அர்ப்பணிதல்
ஸ்க்யம் - இறைவனை நண்பனென எண்ணி தோழமை பூண்டு வழங்குதல்
அத்மநிவேதனம் - தன்னை முழுவதும் இறைவனிடம் அர்ப்பணித்து அவனே அனைத்தும் என்று வாழும் இறைவன் அடியார் பணி செய்தல்

8 ன் சிறப்பு:
8 என்ற எண் நலன் பயக்கும் எண்ணே ஆகும்.
பகவான் கிருஷ்ணன் 8வது மகனாக அஷ்டமி திதியில் பிறந்தார்.
8வது அவதாரம் தான் கிருஷ்ணர் அவதாரம்.
மனிதனின் உயரம் அவரது கையால் 8 சாண் ஆகும்.
சூரிய கதிர் பூமியை அடைய 8 நிமிடம் ஆகிறது.
ஜாதகத்தில் எட்டாம் இடம் ஆயுள் ஸ்தானமாகும்.
சிவனின் குணங்கள் 8 - எட்டு வீரச்செயல்கள் நடந்தன. 8 வீரட்டத் தலங்கள் ஆகும்.
முனிவர்கள் அடையும் சித்தி 8, ஐஸ்வரியம் 8, திசையும் 8, விக்ரகங்கட்கு சார்த்துவது அஷ்டபந்தனம் என்னும் 8வகை மூலிகைகளால் ஆன மருந்து ஆகும்.
ஈஸ்வரன் என பின் பெயர் பட்டம் பெற்ற சனியின் ஆதிக்க எண் 8.

அஷ்டபந்தனம்
அஷ்டபந்தனம் என்பது கோயிலில் சுவாமி சிலைகளை பீடத்தில் பொருத்த பயன்படும் ஒரு கலவை ஆகும். இது மூன்று வகையாக உள்ளன.
1. ஏஜகபந்தனம் - என்பது வெள்ளி உலோகத்தால் செய்யப்பட்டவை
2. ஸ்வர்ணபந்தனம் - என்பது தங்கத்தால் செய்வது
3. அஷ்டபந்தனம் என்பது அரக்குசுக்காங்கல்குங்குலியம்ஜாதிலிங்கம்செம்பஞ்சுவெண்ணைமஞ்சள் மெழுகு,பச்சை கற்பூரம் ஆகியவற்றால் ஆனது.

16 செல்வங்கள்
பெரியவர்கள் வாழ்த்தும் போது 16ம் பெற்று பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துவார்கள். இது கீழ்கண்ட 16வகையான செல்வங்களைக் குறிக்கும். வாழ்க்கையில் நமக்கு வழிகாட்டக்கூடிய கல்விநீண்ட ஆயுள்,நம்பிக்கைக்கு உரிய நண்பர்கள்வாழ்க்கைக்கு தேவையான செல்வம்உழைப்புக்கு தேவையான ஊதியம்,நோயற்ற வாழ்க்கைஎதற்கும் கலங்காத மனவலிமைஅன்புள்ள கணவன் மனைவிஅறிவு ஒழுக்கம் ஆற்றல் கொண்ட குழந்தைகள்மேன்மேலும் வளரக்கூடிய புகழ்மாறாத வார்த்தைதடங்கலில்லாத வாழ்க்கை,வருவாயைச் சிக்கனமாக செலவழித்து சேமிப்பு அதிகரித்தல்திறமையான குடும்ப நிர்வாகம்நமக்கு உதவக்கூடிய பெருமக்களின் தொடர்புபிற உயிர்களிடம் அன்பு செலுத்துதல்.

அஷ்டமியின் சிறப்பு
பவுர்ணமி அல்லது அமாவாசையை அடுத்து வரும் எட்டாவது நாள் அஷ்டமி திதி. எட்டு என்ற எண் அனைவராலும் வெறுக்ககூடிய எண்ணாக இருந்து வந்தது. எனவே இந்த எண்ணுக்குரிய திதிக்கு மிகுந்த மன வேதனை ஏற்பட்டது. ஒரு முறை இந்த திதி தனது மனக்குறையை இறைவனிடம் முறையிட்டது. மனமிறங்கிய இறைவன் இந்த திதியின் குறை நீக்க அஷ்டமி திதியில் கண்ணனாக அவதாரம் செய்ததாகவும்,சைவ சமயத்தில் பைரவர் இந்த திதியை தனக்குரிய பூஜை நாளாக ஏற்றுக்கொண்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன. எனவே இந்த திதியில் சுபநிகழ்ச்சிகள் ஏதும் நடப்பதில்லை என்ற குறை நீங்கியது. வட மாநிலங்களில் எல்லாம் அஷ்டமியன்று இறைவழிபாட்டை மிகச்சிறப்பாக செய்கின்றனர்.

மணிகளில் சிறந்த ருத்ராட்சம்
தேவிகளில் சிறந்தவள் கவுரி. கிரகங்களில் சூரியன். மாதங்களில் மார்கழி. மந்திரங்களில் காயத்ரி. நதிகளில் கங்கை. ரிஷிகளில் காசிபர். விருட்சங்களில் (மரம்) கற்பதரு. மலர்களில் பாரிஜாதம். பசுக்களில் காமதேனு. மணிகளில் சிறந்தது ருத்ராட்சம்.

ஜபத்தின் பலன்
பிறர் காதில் விழும்படி ஜபம் செய்வது வாசிகம் எனப்படும். இது ஒரு மடங்கு பலனைத்தரும். தனக்கு மட்டுமே கேட்கும்படி ஜபம் செய்வது உபாம்சு எனப்படும். இது நூறு மடங்கு பலனைத்தரும். மனதால் மட்டுமே ஜபிப்பது மானஸம் எனப்படும். இது ஆயிரம் மடங்கு பலனைத்தரும்

No comments:

Post a Comment