jaga flash news

Thursday, 7 August 2014

ஆசௌசம்

ஆசௌசம் உள்ளவரின் வீட்டில் உணவு உண்பதனால் உணவு உண்டவருக்கு வரும் ஆசௌச விபரம்.

அனாவசியமாக ஆசௌசிகள் வீட்டில் உணவு உட்கொள்ளுவதைத் தவிர்ப்பதே மிகவும் நல்லது. ஆசௌசம் இல்லாதவர்களை வற்புறுத்தி உண்ணவைப்பதுவும் பாவமாகும். 
ஆசௌசம் இல்லாத ஒருவன் வேறு வழியின்றி மரண ஆசௌசம் (துடக்கு)உள்ளவர்கள் சமைத்த உணவுகளை உண்ணும்படி நேர்ந்தால் அந்த உணவு ஜீரணமாகும்வரை ஆசௌசம் உண்டு. அதன்பின் ஸ்னானம் செய்து திருநீறு அணிந்து அகோராஸ்திர மந்திரத்தை 1000 உரு ஜபம் செய்தால் சுத்தியடைவர். அல்லது கோவிலில் மந்திரம் ஜெபித்த பஞ்சகவ்வியம் வாங்கி சாப்பிடுவதனாலும் சுத்தியாகும்.
அறியாமல் சாப்பிட்டவருக்கு உடனே ஸ்னானம் செய்தால் சுத்தியாகும்.

ஒரு சில நாட்கள் தொடர்ந்து ஆசௌசிகள் வீட்டில் அவர்களுடன் தங்கியிருக்கவும் சாப்பிடவும் நேர்ந்தாலும் அவர்களைவிட்டு நீங்கியபின்னர், கடைசியாக அங்கு சாப்பிட்ட உணவு ஜீரணமானதும் ஸ்னானம் செய்து திருநீறு அணிந்து மேற்படி அகோராஸ்திர மந்திரத்தை ஜபம் செய்தால் சுத்தியாகும். ஆசௌசம் இல்லாதவர்கள் சமைத்த உணவு அல்லது விலைக்கு வாங்கிய உணவுகளை மரணவீட்டிpற்கு எடுத்துவந்து அங்கு பரிமாறும்பொழுது அதை உண்ணுபவர்களுக்கு ஸ்னானம் செய்த உடன் சுத்தமுண்டாகும்.

ஆதாரம் பழைய வைதிக சைவ ஆசௌச வினா விடை
பிரதி எழுதியவர். சிவாகம-சித்தாந்த பண்டிதர்
சிவஸ்ரீ மு. முத்தையா பட்டர் திருச்செந்தூர்
வெளியீடு: சிவஸ்ரீ இராமநாத சிவாச்சாரியார். (1973)

No comments:

Post a Comment