jaga flash news

Thursday, 7 August 2014

புனித தீர்த்தம் - punitha theertham

புனித தீர்த்தம் - punitha theertham

இந்தியாவில் ஆன்றோர்கள் புனித ஆலயங்களின் வழிபாடுகள் மூலம் சூட்சுமமாக உடல்நோயும் ,உளநோயும் நீங்கி நலம்பெற வழி வகுத்துள்ளனர்

ஆலயங்களை வலம்வருதல், அங்கங்கள் பூமியில் பட விழுந்து வணங்குதல், அங்கப்பிரதட்சணம் செய்தல், காவடி எடுத்தல், திருமண் இடுதல், திருநீறு , சந்தனம், குங்குமம்அணிதல், திருத்துழாய்(துளசி), வில்வம், பயன்படுத்துதல் போன்ற ஆன்மீக செயல்பாடுகள் அனைத்தும் உடலும் ,உள்ளமும் நலம்பெற அமைந்துள்ளன.

ஆலய வழிபாட்டு முறைகளில் தலைசிறந்ததாகப் புனித தீர்த்தம் வழங்குதல் அமைந்துள்ளது.

வைணவ திருத்தலங்களில் வழங்கும் "துளசி தீர்த்தம்" இரத்தத்தை சுத்தம் செய்வதுடன், உடலில் பிராணசக்தி மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை வலுப்படுத்துகின்றது. துளசி தீர்த்தம் தொடர்ந்து அருந்தி வருபவர்களுக்கு கேன்சர் எனப்படும் புற்று நோய் வராது என்பது மருத்துவ உண்மையாகும்.

சைவத்திருத்தலங்களில் வழங்கும் "வில்வ தீர்த்தம்" குன்மம், வயிற்றுக் கடுப்பு, மேகவாயு, போன்றவைகளைப் போக்குகின்றது. அல்சர் எனப்படும் குடல்ப் புண்ணையும் போக்குகின்றது.

ஆலயங்களில் வழங்கப்படும் மேற்கண்ட இரண்டு தீர்த்தங்களும் முறைப்படி தயார் செய்தால் இம்மருத்துவ குணங்கள் நிச்சயம் உண்டு.

நாம் வீட்டிலேயே செய்து உண்டு பயன்பெறக்கூடிய ஒரு புனித தீர்த்தம் முறையை இப்போது பார்ப்போம். இப்புனித தீர்த்தம் காய கற்ப சஞ்சீவியைப் போல பற்பல நோய்களை நீக்கி நல்வாழ்வு அளிக்கும் குணம் கொண்டது.

புனித தீர்த்தம்

1 - ஏலம், 2 - இலவங்கம், 3 - வால்மிளகு, 4 - ஜாதிப்பத்திரி, 5 - பச்சைக் கற்பூரம் இவைகளில் முதல் நான்கும் வகைக்கு ஒரு பங்கும், பச்சைக் கற்பூரம் கால் பங்கு சேர்க்கவும்.

முதல் நான்கு பொருள்களையும் உலர்த்தி இடித்து பொடித்துக்கொள்ளவும். பிறகு பச்சைக் கற்பூரத்தையும் பொடித்து இதனுடன் கலந்து கொள்ளவும். இதனை பாட்டலில் பதனம் செய்து பூஜை அறையில் வைக்கவும்.

இந்த தீர்த்தப் பொடியை திரிகடி [மூன்று விரல் அளவு] அளவு எடுத்து ஒரு தாமிர தம்ளரில் தண்ணீரில் கலந்து முதல் நாள் இரவு வைத்து மறு நாள் காலை வெறும் வயிற்றில் பூஜை முடித்தவுடன் அருந்த சகல நோய்களும் எளிதில் நீங்கி உடல் பலம் பெறும்.

இதனுடன் சைவ வழிபாட்டில் உள்ளவர்கள் வில்வம் சேர்த்து அருந்தலாம். வைணவ வழி பாட்டில் உள்ளவர்கள் துளசி சேர்த்து அருந்தலாம்.

இருதயம், இரைப்பை பலம் பெரும்,கண்கள் பற்றிய நோய் யாவும் நீங்கும், நரம்புத்தளர்ச்சி, சளி, சுவாசகாசம் நீங்கும், இரத்தம் சுத்தியாகும், பித்த ரோகங்கள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், வாய்க்கசப்பு, மூச்சடைப்பு, வயிற்று வலி, கழிச்சல், மார்புவலி, மாரடைப்பு, போன்றவைகள் நீங்கும். இரத்தம் பெருகும் .

இது உடலைப் பற்றிய நோய்களை நீக்கும் வல்லமை கொண்ட சஞ்சீவி மருந்து முறையாகும். இது அனுபவத்தில் கை கண்ட அரிய முறையாகும்.

No comments:

Post a Comment