jaga flash news

Saturday 2 August 2014

வாஸ்து

வாஸ்து சாஸ்திரமும் அதன் பழமையும்

     கட்டடம் கட்டிய நிலம் அல்லது கட்டடம் கட்டபோகிற நிலத்தை குறிக்கும் சொல்தான். "வாஸ்து" ஆகும்.  ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும் அதன் பலன்களையும்  விளக்கும் ஒரு
வேதமே வாஸ்துசாஸ்திரமாகும்

பண்டைய வாஸ்துசாஸ்திர நூல்கள்
1.அதர்வன வேதம்
2.வராஹமிஹிரரால் எழுதப்பட்ட பிருஹத் சம்ஹிதை
3. மயனால் எழுதப்பட்ட மயமதம்
4. மானசாரரால் எழுதப்பட்ட மானசாரம்
5. விஸ்வகர்மாவின் விஸ்வகர்மீயம்
முதலியன
வாஸ்துபுருஷ மண்டலமும், வாஸ்து புருஷனும்
         வாஸ்துபுருஷ மண்டலம் என்பது ஒரு சதுர வடிவத்தை 64 அல்லது 81 கட்டங்களாகப் பிரித்த ஒரு வரி வடிவமாகும். கட்டிடம் கட்டுவதற்கான மனையில் கட்டிடத்தின் அமைப்பு நோக்கும் திசை மற்றும் கட்டிடத்தின் வெவ்வேறு பகுதிகள் இருக்கவேண்டிய இடம் என்பவற்றைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது வாஸ்துபுருஷ மண்டலம் ஆகும்.  . இம் மண்டலத்தின் மையப் பகுதிக்கு  பிரம்ம தேவன் அதிபதியாக உள்ளார். 81 கட்டங்களைக் கொண்ட வாஸ்துபுருஷ மண்டலத்தில் மையப்பகுதியிலுள்ள ஒன்பது கட்டங்களும் இவருக்கு உரியவை இதனால் இப்பகுதி பிரமஸ்தானம் என்று சொ்ல்லப்படுகிறது. இம் மண்டலத்தில் மொத்தமாக 45 தேவர்கள் இருப்பதாக வாஸ்துநூல்கள் சொல்கின்றன

     வடக்குத் திசைக்குக் குபேரனும், கிழக்குத் திசைக்கு ஆதித்தனும், தெற்குத் திசைக்கு இயமனும், மேற்குத் திசைக்கு வருணனும் அதிபதிகள். வடமேற்கு திசைக்கு வாயுவும் வடகிழக்கு திசைக்கு ஈசனும் தென்கிழக்கு திசைக்கு அக்னியும் தென்மேற்கு திசைக்கு பித்ருவும் அதிபதிகள்.

ஜன்னல் ஏன் ஈசானிய முலையில் வைக்க வேண்டும் ?

வடகிழக்கு பருவ காற்று தென்மேற்கு பருவகாற்று இவைகளை கருத்தில் கொண்டு வடகிழக்கு, வடமேற்கு ஆகிய திசைகளில் ஜன்னல் வைக்கலாம் என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொ்லப்படுகிறது. அறிவியல் ரீதியாகப் பார்த்தால் வடகிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளில்தான் காற்று அதிகமாகக் கிடைக்கிறது. அதனால் வடகிழக்கு பகுதியில் ஜன்னல் வைப்பதுதான் நல்லது இதனால் அவ்வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பபர்கள். இதனால்தான் நமது முன்னோர்கள் பூஜை அறையையும் முதியோர் தங்கும் அறையையும் ஈசானிய மூலையில் கட்டினார்கள்

ஆண் சந்ததியே இல்லாமல் போக காரணம் என்ன?
நாமது வீடுகளில் ஈசானிய மூலையை காற்று வராதபடி அடைத்து வைக்கக் கூடாது. தாராளமாக காற்று வரும்படி அந்த பக்கத்தில் சன்னல் வைக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் அடிக்கடி நோய் ஏற்படும். ஆண் சந்ததி ஏற்கடாது

தென்மேற்கு திசையில் திறப்பு இல்லாமல் இருக்க வேண்டும் ஏன்?
வடக்கு, வடகிழக்கு திசைகளில் அலமாரிகள் வைக்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் வடக்கு, வடகிழக்கு திசையில் இருந்து வரும் காற்று வீட்டிற்குள் நுழையும் வகையில் இருந்தால் அந்த வீட்டில் செல்வமும் ஆரோக்கியம் சந்தோசமும் நிறைந்து இருக்கும் அதனால் அங்கு ஜன்னல்கள் வைக்கலாம். தென்மேற்கு திசையில் அலமாரிகள் வைக்கலாம்
வீட்டு வாசல் படியில் உட்காரக் கூடாது ஏன்?

நமது வீட்டில் இருக்கும் வாசல்படியின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருந்தால் ரெம்ப நல்லது. நாம் நினைத்ததை பேச வாய் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு ஒரு வீட்டின் நுழைவு வாசலும் மிக முக்கியம். ஆன்மிக ரீதியாகப் பார்த்தால் வாசல் வழியாகத்தான் லட்சுமி நமது வீட்டில் வாசம் செய்ய வருவார்கள் அதனால் வாசலின் குறுக்கே உட்காருவது வீட்டிற்கு வரும் லட்சுமியை தடுப்பதற்கும் அவமதிப்பதற்கும் சமமாகும்

நாம் வீடு கட்டும்போது வாசல்கால் நடுவதுண்டு அப்போது பல நவரத்தினக் கற்களையும் பஞ்சலோக பொருட்களையும் வைத்து பல்வேறு பூஜைகள் செய்து இருப்போம் இப்படி அதற்கு தெய்வீகத் தன்மையை உண்டு பண்ணிவிட்டு இப்போது, அதன் மீது அமர்தால் அது லட்சுமியை அவமதிப்பதாகத்தானே கருதமுடியும்

வீடு கட்ட வாஸ்து செய்வது எப்படி

          வாஸ்துபுருஷன்  ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களில் உறக்கத் தில் இருப்பார்.  சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஜப்பசி, கார்த்திகை, தை மற்றும் மாசி ஆகிய மாதங்களில் குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட நாழிகைகள் முழித்திருப்பார். அப்போது பல் துலக்குவது, ஸ்நானம் செய்வது போன்ற செயல்களைச் செய்வார். அதன்பிறுகு மறுபடியும் உறங்கச் செல்வார். எனவே அவர்  உணவு சாப்பிட ஆரம்பித்து, தாம்பூலம் தரிக்கும் நேரத்துக்குள் மனை முகூர்த்தம் செய்ய வேண்டும்.
வீட்டின் தலைவாசல் வைக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்
          வாஸ்துபுருஷன்  படுத்திருக்கும் நிலை மற்றும் திசையை அறிந்து அதற்கேற்ப தலைவாசல் வைக்க வேண்டும். எந்த மாதத்தில்  வீடுகட்டு கிறோமோ, அந்தந்த மாதத்திற்கு ஏற்ப தலை வாசல் வைக்கும் திசை மாறுபடும். வாஸ்துபுருஷன் அந் தந்த மாதத்தைக் குறிக்கும் ராசி எதுவோ அதில் தன் காலை நீட்டிய படியும், அந்த ராசியிலிருந்து  ஏழாவது ராசியில் தலையை வைத்தும் இட கையை தலையிலும் வலது கையை மேலேயும் வைத்துக் கொண்டு படுத்து இருப்பார். உதாரணமாக, சித்திரை மற்றும் வைகாசி ஆகிய மாதங்களில் மேற்கே தலை வைத்துப் படுத்திருப்பார் அதனால் அம்மாதங்களிள் மேற்கே வாசல் வைக்கக் கூடாது. வாஸ்துபுருஷன் கிழக்கே கால் நீட்டி இருக்கும் சமயங்களில் கிழக்கில் வாசல் கூடாது. இவ்வாறே தெற்குப் புறமும் வாசல் இருப்பது கூடாது. அவர் பார்த்துக் கொண்டிருக்கும் திசையான வடக்குப் புறத்தில் மட்டும்தான் தலைவாசல் வைக்க வேண்டும்.

          வாஸ்துபுருஷன் சயனத்தில இருக்கும் பொழுது, அவரது தலை இருக்கும் பகுதியில் வாசல் வைத்தால் கணவருக்கு பாதிப்புகளும், கெடுதிகளும் நேரும். அவரவர் ராசிக்கேற்ற திசையை அறிந்து அதன்படி தலைவாசல் வைக்கலாம்.

          மேஷத்தில் பிறந்தவர்களுக்கு வடக்கு திசையும், ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு தெற்கும், துலாத்தில் பிறந்தவர்களுக்கு எல்லாத் திசை களும், கும்பத்தில் பிறந்தவர்களுக்கு மேற்கும் ஏற்றதாகும்

           இபபொழுது நிறையபோ் நுழைவு வாயிலுக்கு எதிராக நிலைக் கண்ணாடி வைக்கிறார்கள்  இதனால்.நமது வீட்டுக்குள்  நன்மை தரும் ஆற்றல் வராமல் திரும்ப வெளியே போய்விடும் இதனால் வீட்டில் நன்மைகள் ஏற்படாது

          வீட்டிற்கு எதிரே வெற்றுச் சுவர் இருப்பது அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு நல்லது இல்லை. நமது குடும்பத்தில் கண்டை சச்சரவுகளும் வீண் செலவுகளும் ஏற்படும்.  சிலரது வீடுகளில் அதிர்ஷ்ட  மீன் தொட்டியை வைத்திருப்பார்கள்.  மீன் தொட்டியை வீட்டின் தலைவாசல் கதவின் வலது புறம் வைக்கக் கூடாது படுக்கை அறையிலும் சமையல் அறையிலும்  வைக்கக் கூடாது.

வீட்டை எப்படி அமைக்கலாம்
1. தென்கிழக்கு திசையில் சமையல் அறை வைக்க வேண்டும்
2. கிழக்கு திசையில் படிக்கும் அறை நுழை வாயில் குடிநீர் குழாய் குளியல் அறை வைக்க வேண்டும்
3.தெற்கு திசையில் சாப்பிடும் அறை படுக்கை அறை வைக்கலாம்
4.தென்மேற்கு திசையில் புத்தக அறையை வைக்கலாம்
5.மேற்கு திசையில் நமது பிள்ளைகளின் படுக்கை அறை வைக்கலாம்
6.வடக்கு திசையில் பண்ம் பீரோ பொருள் சேமிக்கும் அறை வைக்கலாம்
7. வடமேற்கு .திசையில். க்க்கூஸ் கழிவு நீர் அலுவலக அறை வைக்கலாம்
8.மேற்கு வடகிழக்குத் திசையில் பூஜை அறைகள் வைக்கலாம்
 வீட்டின் வாசல்களை  அமைக்கும் முறைகள்
   தலைவாசல் உயரமானதாகவும் அகலமானதாகவும் அதைவிட சின்னதாக அடுத்த வாசலும்  அதைவிட சின்னதாக அதற்கு அடுத்த வாசலும் இப்படியாக கடைசியில் பின்வாசல் முன்னதை காட்டிலும் சின்னதாக வைக்க வேண்டும் தலைவாசல் மற்றும் பின் வாசல்களில் அமைக்கப்படும் நிலைகளின் கீழ் பகுதியில் குறுக்குச் சட்டம்  வைக்க வேண்டும்

          நாம  வீடு கட்டும்போது கல்மண்சிமென்ட், மரம் போன்றவை களை பயன்படுத்து கிறோம் இவைகள் பழைய வீட்டில் இருந்து கழித்த தாகவோ அல்லது வேறு நபரிடம் மிச்சமானதாகவோ இருக்கக் கூடாது

வாஸ்து சாஸ்திரம் ஒரு விஞ்ஞானமே

       நமது முன்னோர்கள் அனுபவப்பூர்வமாக உணர்ந்து அதன் அடிப்படையில் எழுதப்பட்ட ஒன்றுதான் வாஸ்துசாஸ்திரமாகும்
1. சமையலறையை ஏன் அக்னிமுலையில் வைக்கவேண்டும்?
      வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டின் சமையலறை அக்னிமூலையில் கட்ட  வேண்டும்  அப்படி வைக்காமல் வீட்டின் நடுவே சமையலறையை வைத்தால் சமையல் வாசனையும் அதிலிருந்து வரும் புகையும் வீட்டுக்குள்ளேயே இருக்கும். வெளியே போகாது. அதைச் சுவாசிப்ப வர்களுக்கு சுவாச நோய் வரும். மேலும் வீட்டின் நடுப்பாகத்தில் சமையலறை இருந்தால் திடீரென தீ பிடித்தால் வீட்டுக்குள் இருப்பவர்கள் வெளியே வரமுடியாது தீ விபத்தில் சிக்கிக் அவஸ்தைபடுவார்கள். அதனால்தான் நமது முன்னோர்கள் நன்கு யோசித்து வீட்டின் சமையலறை இந்த இடத்தில்தான் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

2. சமையலறையை ஏன் கிழக்குப்பக்கத்தில் வைக்கவேண்டும்?
    சமையலறையை கிழக்குப் பக்கத்தில் வைத்தால் சூரிய வெளிச்சம் 
நன்றாக வீட்டில் பரவும். காற்றும் புகையும் எளிதில் ஜன்னல் வழியாக வெளியே  போகும்.வீட்டில் நன்கு சூரிய வெளிச்சம் பரவுவதால் புழு,பூச்சி. கிருமி போன்ற சிறு உயிரினங்கள் இறந்துபோகும். மேலும் வடகிழக்குப் பகுதியிலிருந்து வரும் காற்று வீட்டுக்குள் புகுந்து நல்ல காற்றோட்ட வசதியை உண்டுபண்ணும் இதன்முலம் வியாதிகள்  பரவுவது தடுக்கப்டுகிறது

3. தண்ணீரும் குப்பைகளும் வெவ்வேறு இடத்தில் இருக்க வேண்டும் என வாஸ்து சாஸ்திரம் ஏன் சொல்கிறது?
     ஈசான மூலையில் தான் ஆழ்குழாய், கிணறு ஆகியவற்றை அமைக்க வேண்டும் அதுதான் நல்லது. வீட்டின் தென்மேற்கு மூலையைக் குப்பைகள். கழிவுகள் போடும் இடமாக அமைக்க வேண்டும்..   கழிவுகளும் தண்ணீரும் ஒரே இடத்தில் இருந்தால் வியாதி பரவும். அதனால் தணணீரும் குப்பைகளும் வெவ்வேறு இடத்தில் இருக்க வேண்டும். அதுதான் நல்லது
4. வீட்டின் கீழ்தளத்தில் அதிகமான சன்னல்களும் மேல் தளத்தில் குறைவான சன்னல்களும் வைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் ஏன் சொல்கிறது?

    கீழே நிறைய கட்டிடங்களும் பல மரங்களும் உள்ளது. அவைகள் நமது வீட்டிற்குள்ளே காற்று நிறைய வருவதை தடை செய்கிறது. அதனால் கீழ்தளத்தில் அதிகமான சன்னல்கள் வைக்க வேண்டும் அப்படி வைத்தால் தான் நிறைய காற்று நமது வீட்டில் பரவும். மேல் தளத்தில் குறைவான சன்னல்கள் இருந்தாலே போதுமானது

5. தொழிற்சாலையின் மெயின் வாசல் வடகிழக்கில்  இருக்கவேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் சொ்ல்ல காரணம் என்ன?
     தொழிற்சாலையின் மெயின் வாசல் வடகிழக்கில் இருந்தால்  காற்று நிறைய வரும். அதனால் வடபாகத்தில் குப்பைகளைப் போடாமல் காலியாக விடவேண்டும். மாறாக குப்பை போட்டால் காற்று அடித்து குப்பபை யாவும்  தொழிற் சாலைக்குள்ளேயே வந்துவிடும். 

     தொழிற் சாலையின் தென்கிழக்குப் பாகத்தில் புகைக் கூண்டு வைக்கவேண்டும். அப்படி வைத்தால் வடகிழக்குப் பகுதியில் இருந்து காற்று வீசுகிறபோது  புகைக்கூண்டிலிருந்து வெளிவரும் புகை தொழிற்சாலைக்குள் வராது. வேறு பகுதிக்குச் சென்றுவிடும். 
    தொழிற்சாலைகளில் வேலை பார்பவர்கான குடியிருப்பு வீடுகளை தொழிற்சாலையின் வடமேற்கு பகுதியில் அமைக்கவேண்டும் இந்த வடமேற்கு பகுதி சந்திரனைச் சார்ந்தது அதனால் மன அமைதி ஏற்படும்

     தொழிற்சாலையின் மேல்கூரையில் விழக்கூடிய மழைத் தண்ணீர் கிழக்கு அல்லது மேற்குப் பக்கம் இறங்கும்படி செய்ய வேண்டும். தென்மேற்கில் இறங்கினால் அங்குள்ள குப்பை மற்றும், கழிவுப் பொருட்களுடன் மழைத் தண்ணீர் கலந்து பல தீய விளைவுகளை உண்டாக்கும்

No comments:

Post a Comment