jaga flash news

Saturday, 9 August 2014

கருட புராணம் ரகசியங்கள்

ஸ்ரீ கருடப் புராணம் 
பறவை வேந்தனான கருடன் ஸ்ரீ பரமாத்வாவை நோக்கி, ஒ ஜெகன்னாதா! பரந்தாமா! ஸ்ரீ ஹரியே! உலகத்தில் ஜீவர்கள் ஏன் பிறக்கிறார்கள்? என்ன காரணத்தால் சுவர்க்க நரகங்களை அடைகிறார்கள்?. எந்தப் புண்ணியத்தைச் செய்தால், இன்ப வீடான தேவர்களின் உலகை அடைவார்கள். எத்தகைய கர்மங்களால் பாவங்கள் நிவர்த்தியாகும். இறக்கும் வரை யாரை நினைத்தால் நற்கதி கிடைக்கும்? இவற்றையெல்லாம் அடியேனுக்குத் தெளிவாகக் கூறியருள வேண்டும் என்று வேண்டினான்.
ஸ்ரீ மந்நாராயணர் எல்லோர் மனதிலும் புகுந்து அனைத்தையும் பார்க்க வல்லவரும், எல்லா செயல்களுக்கும் காரணமாகியவருமான ஸ்ரீ ஹரி பகவான் புன்னகையுடன் பறவை வேந்தனை நோக்கிக் கூறலானார்.
கருடனே! நீ நல்லதொரு கேள்வியை நல்ல முறையில் கேட்டு விட்டாய். அது உலகினருக்குப் புரியாத ரகசியங்கள். அவற்றை நாம் கூறுவோம். கவனமாகக் கேள். எத்தனை நாட்கள் வாழ்ந்தாலும் என்றாவது இறப்பது நிச்சயம் என்பதை யாரும் நினைப்பதில்லை. உயிர்களைக் கவர்ந்து செல்லும் கூற்றவன்(எமன்) என்றும் விடமாட்டான் என்ற உண்மையை உணர்ந்த மனிதன் பயந்தாவது நல்ல தருமங்கள் இயற்றி அறநெறிப்படி வாழ்வான். அவன் தர்மங்களை ஒழுங்காகச் செய்து வருவானாகில், அக்கருமங்களே அவனைக் காப்பாற்றும். தனக்குரிய கர்மங்களை ஒருவன் முறைப்படிச் செய்கிறானோ, அவனே எல்லாவிடத்திலும் மேன்மையடைவான். 
பிரம்ம, ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என நான்கு வருணத்தார் இருக்கிறார்கள். பிராமணருக்கு ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்று ஆறு கர்மங்கள் உள்ளன. ஷக்த்திரியருக்கு ஓதல், வேட்டல், ஈதல், உலகோம்பல், படைபயித்றல், பொறுத்தல் என்று ஆறுவகைக் கருமங்கள் உண்டு. வைசியருக்கு ஓதல், கேட்டல், பொருளீட்டல், ஈதல், பசுக்களைக் காத்தல், ஏரூழல் என ஆறு கர்மங்கள் உண்டு. சூத்திரருக்கு ஓதல், முன்னவருக்கு பணியாற்றல், பொருளீட்டல், உழுதல், பசுகாதல், வேட்டல் முதலிய ஆறு கர்மங்கள் உண்டு. அவரவர் குலமரபுக்குரிய ஒழுக்கபடி நடப்பதே பெரிய தவமாகும். அதில் வழுவாது ஒழுங்காக வாழ்பவர் எவரோ, அவரே போகத்தையும் யோகத்தையும் ஒருங்கே அடைந்து நெடுநாள் வாழ்ந்து, இறுதியில் தமக்குரிய உலகை அடைவார்கள். அவாவை ஒழித்து பட்ற்றற்றவர்களே பேரறிஞர்களாவர். என்று திருமால் திருவாய் மலர்ந்தருளினார் மூன்று ஆசைகள் கொண்ட சிறந்த பிறவிகள் 
ஸ்ரீ வாசுதேவன், கருடனை நோக்கி கூறலானார்:

பறவைகளுக்கு அரசே! உலகில் எண்பத்து நான்கு லட்சம் யோனிபேதங்கள் உள்ளன. அவை அண்டகம், உற்பிசம், சராவுசம், சுவேதசம் என்று நான்கு வகையில் உள்ளன. அண்டகம் என்ற வகையில் முட்டையிலிருந்து இருபத்தோரு லட்சம் பறவைகள் தோன்றின. உற்பிச வகையில் இருபத்தோரு லட்சம் மரஞ், செடி, கொடி, தாவர வகைகள் தோன்றின. கருப்பப் பையிலிருந்து தோன்றுவதான சிராயுசம் வகையில் இருபத்தோரு லட்சம் மனிதர்கள் தோன்றினர். வேர்வையிலிருந்து தோன்றுவதான சுவேதசம் வகையில் இருபத்தோரு லட்சம் கொசு முதலியவைகளும் தோன்றியுள்ளன. கருடா! பிறவிகள் அனைத்திலும் மானுடப் பிறவி அரிதினும் அரிது. மனிதப் பிறவியே புண்ணியப் பிறவியாகும். எல்லா விதத்திலும் மானிடப் பிறவியே சிறப்புடையது. புண்ணியத்தால் அடைந்த மானுடப் பிறவியால் பாக்கியம் அடையாதவர்கள், தமக்குத் தானே வஞ்சனை செய்து கொள்பவர்களாவார்கள். மண், பொருள் , ஆசைகள் எனப்படும் இம்மூன்று ஆசைகளால், மயக்கமுற்று செய்யத் தகாதவற்றைச் செய்து தன் மனசாட்சிக்கும், மனிதாபிமான உணர்வுக்கும், மாறுபாடான தீயச் செயல்களைச் செய்து, தர்மங்களை அறியாமல் உழல்பவன் எவனோ, அவன் மிருகங்களுக்கு ஒப்பாவான். இதனால் அறிவுணர்வும், அன்புணர்வும், அறநெறி வாழவும் வளராது. அளவில்லாமல் ஆசைகள் வளர்ந்து கொண்டேயிருக்கும். ஆசையே அழிவுக்குக் காரணம் என்று போதிக்கும் மகான்களோ, யாவராலும் போற்றப்பட்டு, நம் இறுதி நாளான அந்திம காலத்தில் சுவர்க்க லோகத்தை அடைவார்கள். ஆசைக்கு அடிமையானவர்கள் வயோதிகப் பருவம் வந்ததும், தன் புத்திரர், பௌத்திரர்கள் துணித்து கிழப் பிணமே! வாய் திறவாமலே வெறுமனே விழுந்து கிட! என்று இழித்தும், பழித்தும், அதட்டியும் பேசும் ஏச்சு மொழியைக் கேட்டு, மனம்பொறுமிக் கிடப்பான்.ஆகையால் கல்வியும் வித்தையும் கற்றுணர்ந்தவனேயானாலும் ஞானம் (மெய்யறிவு) இல்லாவிட்டால் பொண்ணுக்கு அடிமையாகி கிடப்பான்.

கருடா! இந்திரிய உணர்வினாலேயே ஒவ்வோர் ஜீவராசிகள் நாசம் அடையும் போது பஞ்ச இந்திரிய இச்சைகளையுடைய மனிதன் அடையக்கூடிய கேடுகள் கொஞ்சமாகயிராது என்பதில் சந்தேகமில்லை. இல்லற வாழ்வின் சுகதுக்கங்களில் எது அதிகமாயினும் பெண்டுபிள்ளைகள் அதிகமாகிப் பந்தபாசத்தால் கட்டுண்ட மனிதன் நிம்மதியடைய மாட்டான். உலகில் மனிதன் பிறந்து பிறந்தே இறக்கிறான்.ஆசைகளால் நோயுற்று மாண்டு விடுகின்றான். ஒருவரும் தனக்கு துணையில்லாமல் ஒருவனாகவே யாருக்கும் சொல்லாமல் மடிந்து போகிறான். பொய்யான பத்திரங்கள் எழுதி பொய் சொல்லி, ஏமாற்றி, வழிப்பறி, கொலை புரிந்து, தீயச் செயல்களைச் செய்து, தான் சேர்த்த பொருள்களை, உரியவருக்கு அளித்து, பழி பாவங்களோடு போகிறான். அவன் மனைவி மக்கள் பாவங்களில் பங்கு ஏற்றுக் கொள்வாரில்லை. முக்திக்குச் சாதனமான, தவம், தருமம், தானம் செய்து, பிரபக்தி மார்க்கம் எனப்படும் தேவ சேவைகளை செய்வதே உத்தமமாகும். இவ்வாறு ஸ்ரீ நாராயணர் உணர்த்தியருளினார் பிரேத ஜென்மம் நீங்க வழி 
கருடாழ்வார் ஸ்ரீமந் நாராயண பகவானைத் தொழுது வைகுண்ட நாதரே! மனிதர்களுக்கு மிகவும் கொடியதான பிரேத ஜென்மம் வராமல் ஒழியும் மார்க்கம் எது என்பதை தேவரீர் தயவு செய்து கூறியருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம். ஸ்ரீமந் நாராயண பகவான் கருடனை நோக்கிக் கூறலானார். 

ஒ கருடா! மனிதர்கள் இறந்தவுடன், பிரேத ஜென்மத்தை நிவர்த்திக்க விரும்பியா யாவரும் ஐந்து வயதுக்கும் மேற்ப்பட்ட யார் இறந்தாலும், அவருக்கு பிரேத ஜென்மம் ஏற்படாமல் இருக்க கர்மம் செய்பவன் விருஷோற்சர்க்கம் செய்தல் அவசியம். இந்தக் கருமத்தைத் தவிர வேறு கர்மங்கள் செய்வதற்கில்லை. இறந்தவருக்கு பிரேத ஜென்மம் வருவதில்லை. இறந்தவர்களுக்கு இறந்த பதினொன்றாம் நாள் விருஷோற்சனம் என்ற கர்மங்கள் தன புத்திரனாவது, மனைவியாவது ஆண், பெண் வயிற்றுப் பிள்ளையாவது, பெண்ணாயினும் செய்யலாம். ஆனால், புத்திரன் செய்வது தான் சிறந்தது. கர்மம் செய்யாமல் சிரார்த்தம் மட்டும் செய்வதால் எந்த பலனுமில்லை. பிள்ளையில்லாமலும், பெண்ணில்லாமலும் ஒருவர் இறந்து, உரிய உத்திரக் கிரியைகளைச் செய்யாமல் விட்டுவிட்டால் அவன் இரவு பகலாக பசியோடும், தாகத்தோடும் ஐயையோ! என்று கூச்சல்லிட்ட வண்ணம் உலகமெங்கும் நெடுங்காலம் வரை அலைந்து, திரிந்து பிறகு புழுக்கள், கிருமிகள் முதலிய ஜென்மங்கள் எடுத்து, பிறந்து பிறந்து மரிப்பான். யாருமேயில்லாதவன் உயிரோடிருக்கும் போதே சாவதற்கு முன்பாக, நற்கர்மங்கள் செய்யக் கடவன் என்று திருமால் திருவாய் மலர்ந்தருளினார். தான தருமங்களும் விருஷோற்சனமும் 
வேத வடினனாகிய கருடன் சர்வலோக நாதரான ஸ்ரீமந் நாராயணனை வணங்கி, ஹே பரமாத்மா!
ஒருவன் மனத்தூய்மையோடு தானதர்மங்களைத் தன கையாலே செய்வானாயின், அதனால் அவன் அடையும் பயன் என்ன? அவனுக்காக அவனுடைய மகன் முதலியோர் தான தர்மம் செயபவர்களானால்அதனால் உண்டாகும் பயன் என்ன? இவற்றைத் திருவாய் மலர்ந்தருள வேண்டுகிறேன்! என்று வின்னபஞ் செய்ய பாம்பணையில் துயிலும் பரமாத்மா கூறலானார். கருடனே!

மனத்தூய்மை இல்லாமலும், மனவுறுதி இல்லாமலும் செய்யப்படும் நூறு கோதானங்களுக்கு எத்தனைப் பயன் உண்டோ, அதனை பயனும் சித்த சுத்தத்தோடு சாஸ்திரங்களில் விதித்த வண்ணம் ஒரு பசுவை நல்லவருக்கு தானம் செய்தால், அதனை பயனும் கிடைக்கும். கோதரணம் கொடுப்பவரும், வாங்குபவரும் மனத்தூய்மை உள்ளவராகயிருக்க வேண்டும். கற்றுணர்ந்த சான்றோருக்குக் கொடுக்கப்படும் தானம். வாங்குபவர் உத்தமராக இருக்க வேண்டும். தானம் கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் புண்ணியமுன்டாகும். வேத சாஸ்திரங்களை ஓதாமலும், ஒழுக்க வழியில் நில்லாமலும், பிராமணன் என்ற பெயரை மட்டும் கொண்டவனுக்கு தானம் கொடுத்தால், அந்த தானமே தானங் கொடுத்தவனுக்கு நரகத்தைக் கொடுக்கும். மேலும் தானம் வாங்குவதற்கே தகுதியில்லாதவன் தானம் வாங்குவானாயின் அவன் இருபத்தோரு தலைமுறை உள்ளவர்களோடு நரகம் புகுவான். 
ஒரு பசுவை, ஒருவருக்கு மட்டுமே தானம் கொடுக்க வேண்டும். சாதுக்களிடம் நல்லப் பொருள்களைப் பக்தி சிரத்தையோடு தானம் கொடுத்தவன், அந்தப் பிறவியிலாவது, மறுபிறவியிலாவது அதற்குரிய நற்பயனைச் சந்தேகமின்றி அடைவான். தானம் கொடுப்பவன் எளியவனாக இருந்தால் ஏதாவது ஒருபொருளைக் கொடுத்தாலும் போதுமானது. கருடா! மரித்த பிறகு செய்ய வேண்டிய கிரியைப் பற்றி உனக்கு ஒருவாறு கூறினேன் என்று ஸ்ரீமந் நாராயணர் கூறியருளினார் யம லோகத்திற்கு போகும் வழி 
ஸ்ரீ வேத வியாச முனிவரின் மாணவரான, சூதபுராணிகர் நைமிகாரணியவாசிகளான மகரிஷிகளை நோக்கி, அருந்தவ முனிவர்களே கருடாழ்வான். திருமகள் கேள்வனைப் பணிந்து வணங்கி, சர்வலோக நாயகா! யமலோகம் என்பது இங்கிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது? அதன் தன்மை யாது? அவற்றைத் தயை செய்து கூறியருள வேண்டும் என்று கேட்கவும் கருணைக் கடலான கார்மேக வண்ணன், கருடனை நோக்கிக் கூறலானார்.
கருடனே! மனிதர்கள் வாழும் மானுஷ்ய லோகத்திற்கும் யமபுரிக்கும் இடையில் எண்பத்தாறாயிரம் காதம்( 1காதம் =7km ) இடைவெளியுள்ளது. 
அந்த யம லோகத்தில் யெழும் எமதர்மராஜன் கூற்றவன் உலகத்தினர் ஒவ்வொருவருக்கும் ஆயுட்காலம் முடிந்ததும் ஜீவனைப் பிடித்து வரும்படியாகத் தன தூதர்களிடம் கூறுவான். விகாரமான மூவகைத் தூதர்களை ஏவியனுப்புவான். வாழ்நாள் முடிந்த ஜீவனைப் பாசத்தால் கட்டிப் பிடித்து காற்றின் உருவமான தேகத்தில் அடைத்து யமலோகத்திற்குச் செல்வார்கள். ஆவி உருவ சீவர்களை யமபுரித் தலைவன் கால தேவன் முன்னால் நிறுத்துவார்கள். அவர் அத்தூதர்களை நோக்கி, ஏ கிங்கரர்களே! இந்த சீவனை மீண்டும் கொண்டு போய் அவன் வீட்டிலேயே விட்டு பன்னிரெண்டாம் நாள் கழிந்த பிறகு முறைப்படி மீண்டும் நம் திருச்சபை முன்பு நிறுத்துங்கள் என்று கட்டளையிடுவான். உடனே ஒரு நொடி நேரத்திற்குள் சீவனின் இல்லத்திற்கே கொண்டு வந்து விட்டு விடுவார்கள். ஆவி வடிவுடைய அந்த உயிர் சுடுகாட்டிலே தன் சிதைக்கு பத்து முழ உயரத்தில் நின்று, தீப்பற்றிக் கொழுந்து விட்டு எரியும் தன் உடலைப் பார்த்து, அந்தோ! ஐயையோ! என்று ஓலமிட்டு அழும். தீயிலோ உடல் எரிந்து வெந்து சாம்பலாகும் போது தன் உறவு பொருள் மீது இருந்த ஆசையானது ஒழியாது. சீவனுக்குப் பிண்டத்தலான சரீரம் உண்டாகும். புத்திரன் பத்து நாட்கள் போடும் பிண்டத்தால் சரீரம் முழுவதும் பூரணமாக உண்டாகும்.
அவன் வாழ்ந்த வீட்டின் முன்பு நின்று அங்கு இருப்பவர்களைப் பார்த்து பசி தாகத்தால் ஆ..ஆ... என்று கதறி பதறி நிற்பான். பன்னிரெண்டாம் நாளில் பிராமணர் மூலமாய் புத்திரனால் கொடுக்கப்பட்டவற்றை உண்டு பதின்மூன்றாம் நாளன்று பிண்டவுருவத்தில் பாகத்தால் பிணித்து கட்டிப் பிடித்துக் கொண்டு போகும் போது தன் வீட்டை திரும்பித் திரும்பிப் பார்த்து கதறிக் கொண்டே யம லோகத்தை அடைவான். பிண்ட சரீரம் பெற்ற சீவனன், யம கிங்கரர்களால் பாகத்தால் பிணைத்துக் கட்டப்பட்ட நிலையில் நாள் ஒன்றுக்கு இருநூற்று நாற்பத்தேழு காத வழி இரவுபகலுமாக நடந்து செல்ல வேண்டும். அவன் போகும் வழியில் கல், முள், அடர்ந்த காடுகளைக் கண்டு பிண்ட சீவன் பசியாலும், தாகத்தாலும் வருந்தித் தவிப்பான். 
வைவஸ்வத பட்டணம் என்ற பட்டணமுண்டு. அங்கு அச்சம் தரும் மிகவும் கோரமான பிராணிகளுக்கு இருப்பிடமாகவும், துக்கத்தையே கொடுப்பதாகவும் அமைந்திருக்கும். பாபம் செய்தவர்கள் மிகப் பலர் எப்போதும் ஆ, ஆ, ஊ, ஊ என்று ஓலமிடுவார்கள். அங்கு வெப்பத்தால் கொதிக்கும் கொதிநீர்தான் காணப்படும். குடிக்க ஒரு துளித் தண்ணீர் கூடக் கிடைக்காது. அருந்துவதற்கு அருகதையற்ற ரத்தம் பொழிவதாக இருக்கும். நான் உயிரோடிருந்த போது எத்தனை பாவங்கள் செய்தேன். ஞானிகளையும், பாகவத சந்நியாசிகளையும் ஏசிப் பேசிப் பரிகாசம் செய்தேன். அவற்றையெல்லாம் இப்போது அனுபவிக்கின்றேன். மலை போன்ற ஆயுதத்தால் யமகிங்கரர்கள் இரக்கமில்லாமலே என்னை அடித்துப் புடைக்கிறார்களே! அந்தோ! உடலுமில்லாமல் ஆவியாய் அவதியால் அலறித் தவிக்கிறேன். ஒவ்வொரு குரலுக்கும் தூதர்கள் அவனைத் துன்புறுத்த அவன் அவர்களால் யமபுரிக்கு இழுத்துச் செல்லப்படுவான்! என்று திருமால் கூறியருளியாதகச் சூதபுராணிகர் கூறினார். சீவன் செல்லும் பாதையில் பரதவித்தல் 
சூதபுராணிகர் நைமிசாரணியவாசிகளை நோக்கி, திருமாலின் திருவடி மறவாத பக்தர்களே என்று கூறலானார்.
கருடனுக்குத் திருமால் பின்வருமாறு கூறியதாவது:

யமதூதர்களால் பாசக் கையிற்றால் கட்டுண்டும், அவர்களிடம் உதையுண்டும் செல்லும் சீவன் தன் மனைவி மக்களோடு வாழ்ந்த காலத்தில் அடைந்திருந்த இன்பத்தை நினைத்து, துன்பமடைந்து பசியாலும் தாகத்தாலும் மெலிந்து சோர்வுற்று இளைத்து, ஈன ஸ்வரத்தோடு ஐயகோ! நம்மோடு வாழ்ந்த உற்றார் உறவினர் எங்கே? இந்த யம படர்களிடம் சித்ரவதைப்ப்படும்படி விட்டு விட்டார்களே! நான் சேர்த்த பொருள்கள் எங்கே ? ஊரையடித்து உலையில் போட்டோமே, உழைத்தவன் உழைப்பை உறிஞ்சி நயமாக வஞ்சித்து வாழ்ந்தோமே! என்று அலறித் துடிப்பான். 
கருடா! தீய தொழில் புரிந்தோர் அடையும் கதியைப் பார்.
பிறகு அந்த சேதனன் சிறிது தூரம் அனாதையாக காற்றின் வழியிலும் புலிகள் நிறைந்த வழியிலும் இழுத்துச் சென்று ஓரிடத்தில் தங்கி, இறந்த இருபத்தெட்டாம் நாளில் பூமியில் புதல்வனால் செய்யப்படும் ஊனமாகிய சிரார்த்த பிண்டத்தைப் புசித்து முப்பதாம் நாளன்று யாமியம் என்று நகரத்தைச் சேர்வான்.
அங்கு பிரேதக் கூட்டங்கள் கூட்டம் கூட்டமாக கூடியிருக்கும். புண்ணிய பத்திரை என்ற நதியும் வடவிருட்சமும் அங்கு உள்ளன. பிறகு "அவ்யாமியம்" என்ற நகரத்தில் சிறிது காலம் தங்கியிருந்து இரண்டாவது மாசிக பிண்டத்தை அருந்தி இரவும் பகலும் தூதர்களால் இழுத்துச் செல்லப்பட்டு யாருக்கும் பயத்தை ஏற்படுத்தும் ஆரண்யத்தின் ஊடே சென்று வழிநடக்கும் வேதனையோடு ஓவென்று அழுது தூதர்கள் செய்யும் கொடுமையால் வருத்தித் துன்புறச் செல்லும் வழியில் திரைபக்ஷிக மாசிக பிண்டத்தை வேண்டி சங்கமன் என்ற அரசனுக்குரிய சௌரி என்ற நகரத்தைச் சார்ந்து அங்கு மூன்றாம் மாசிக பிண்டத்தை புசித்து அப்பால் சென்று, வழியிலே பொறுக்க முடியாத குளிரினால் மிகவும் வருந்துவான். பிறகு "குருரபுரம்" என்ற பட்டணத்தை அடைந்து அங்கு ஐந்தாவது மாசிக பிண்டத்தையுண்டு அப்பால் நடந்து "கிரௌஞ்சம்" என்ற ஊரையடைந்து, அந்த ஊரில் ஆறாவது மாசிக பிண்டத்தை உண்டு, அங்கு வாழ்ந்ததை நினைத்து வாய்விட்டு புலம்புவான். அப்போது யமபடர்கள் சினங்கொண்டு அவ்வாயிலே புடைப்பார்கள். வருந்தி செல்லும் வழியில் அஞ்சத்தக்க ரூபமுடைய படகோட்டிகள் பதினாறாயிரம் பேர்கள் கூட்டமாக அவன் முன்பு ஓடிவந்து தீப்பொறி பறக்க விழித்து,
ஏ ஜீவனே! எப்போதாவது வைதரணி சோதானம் என்ற தானத்தைச் செய்திருந்தாயானால் இனி நீ கடந்து செல்ல வேண்டிய வைதரணி நதியை, நீ இனிதாகக் கடக்க நாங்கள் உனக்கு உதவி செய்வோம். இல்லையெனில் அந்த நதியிலே உன்னைத் தள்ளிப் பாதாளம் வரையிலும் அழுத்தித் துன்பப்படுதுவோம். அந்த நதியிலே தண்ணீரே இராது. இரத்தமும், சீழும், சிறுநீரும் மலங்கலுமே நிறைந்து துஷ்ட ஜந்துக்களிலும் கோடி ஜந்துக்கள் வாழும் இடமாகும். பசு தானத்தை நீ செய்திராவிட்டால், வைதரணி நதியிலே, நீண்ட நெடுங்காலம் மூழ்கித் தவிக்க வேண்டும் என்று ஓடக்காரர்கள் கூறுவார்கள். 
பூமியில் வாழ்ந்த காலத்தில் வைதரணி "கோதானம்" என்ற தானத்தை செய்யாமல் போனாலும் அவன் இறந்த பிறகு அவன் குலத்தில் பிறந்த அவன் மகனாவது அவனைக் குறித்துச் செய்ய வேண்டும். செய்திருந்தால் ஜீவன் அந்த நதியைக் கடந்து யமனுக்கு இளையோனாகிய விசித்திரன் என்பவனது பட்டினத்தைச் சார்ந்து ஊனஷானி மாசிகப் பிண்டகத்தை உண்ணும் போது, சில பிசாசுகள் அவன் முன்பு பயங்கரத் தோற்றத்துடன் தோன்றி, அந்த சீவனைப் பார்த்து, அட மூடனே! நீ யாருக்கும் தானம் செய்யாதவனாக இருந்தால், உன் பசிக்கென்று உனக்காக மாதந் தவறாமல் மாசிக சிரார்த்ததைச் செய்து, உன் கைக்கு கிடைத்து, நீ ஆவலோடும், பசியோடும் புசிக்க துடிக்கும் அன்னத்தை, பேய் பிசாசுகள் புடிங்கிச் சென்று விடும்.
பறவைகளின் அரசே! ஒரு பொருளுமே இல்லாத வறிஞனாகப் பூவுலகில் வாழ்ந்தாலும் கூட, தன்னை யாசித்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் தன்னால் இயன்றவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் தன்னால் இயன்ற சிறு உதவியாவது செய்ய வேண்டும். அப்படி செய்யாதவர்கள், இறந்த பிறகு தூதர்களால் இழுத்துவரப்பட்ட சீவன், புத்திரன் அவன் பொருட்டு கொடுக்கும் மாசிக பிண்டம் அவனுக்கு சேராமல் பிசாசுகளின் கரங்களிலேதான் சேரும். ஐயகோ! பசியால் என்னை நாடி வந்தவர்களுக்கு கொடுக்காத பாவத்தின் பயனோ இது? வயறு பசிக்க, நாக்கு வறல நான் தவிக்கும் தவிப்பை காண ஒருவருமில்லையே!
பூமியில் பொருள் மிகுந்தவனாக வாழ்ந்த என்னை நவ்விய பொது, அவனுக்கு அரை வயிற்றுப் பசிதீரவாவது அன்னம் கொடுத்தேனா! சாக்காடு என்று ஒன்று நிச்சயமாக இருக்கிறது என்று புராணங்களில் படித்ததை நம்பினேனா! "செத்த பிறகு என்ன கதி வந்தால் என்ன, இருக்கும்போது நமக்கு ஏன் கவலை!" என்று இருமாந்திருந்தேனே! இப்போது இங்கு நான் படும் தொல்லையை யாரிடம் சொல்வேன். என்னவென்று சொல்வேன்! என்று துக்கப்படுவான்.

அப்போது அவன் அருகே இருக்கும் தூதர்கள் அவனைப் பார்த்து' முழு மூடனே! பூமியில் மனிதனாகப் பிறக்கும் வாய்ப்பைப் பெற்று, மானிட ஜென்மம் கிடைப்பது அரிது. அவன் இன்மைக்கும் மறுமைக்கும் தருமங்களையும் ஏராளமாகத் தான் வாழ்கின்ற காலமெல்லாம் செய்து புண்ணியங்களை சேர்த்திருக்கலாமே, அதை விட்டு மறுமைக்கு பயன் தராத பொருளைச் சேர்ப்பதிலேயே காலங்கழித்த மானிடனை என்னவென்று சொல்வது? பூமியில் வாழ்கின்ற காலத்திலேயே சேக்கிற நல்வினைத் தீவினைப் பயன்களை அடையாமல் உடலை இழந்து ஆவியான பின்பு எதையுமே செய்ய இயலாது. மண்ணுலகத்திலே ஆடம்பரமாக, அகம்பாவமாக, ஆனந்தமாகப் பெரியோரை மதிக்காமல் செல்வதும், உழைப்பாளியை உதைக்கச் செய்வதும் மனிதர்கள் செய்யும் புண்ணிய பாவங்களின் பயனேயாகும் என்பதை அறிவாயாக. இறந்தபின் நினைத்து என்ன பயன்?.

கருடனே! உதக கும்பதானம் என்ற ஒருவகைத் தானமாக செய்யப்பட்டதாயின் ஜீவன், அந்த உதக கும்பத்திலுள்ள நீரைப் பருகியாவது சிறிதளவாவது தாகவிடாய் தீர்ந்து ஏழாம் மாதத்தில் அவ்விடத்தை விட்டு மீண்டும் நடந்து செல்வான். இதுவரை பாதி தொலைவைக் கடந்தவனாய் அம்மாதத்தில் அவனுக்குரியவர் பூவுலகில் அன்னதானம் செய்ய வேண்டும். பிறகு அந்த ஜீவன் பக்குவபதம் என்ற பட்டினத்தைச் சார்ந்து எட்டாவது மாசிக பிண்டத்தை உண்டு, அங்கிருந்து நடந்து "துக்கதம்" ஊரை அடைந்து உண்பான். விருஷோற்சனம் செய்யாமையால் அநேகம் ஜீவர்கள் பிரேத ஜென்மத்தோடு அப்பட்டணத்தில் கூட்டம், கூட்டமாக கூடி, ஒ ஒ வென்று ஓயாமல் ஓலமிட்டுக் கதறிக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு கதறும் அச்சீவர்களை பாது அங்குவந்த ஜீவனும் கத்தி கதறிவிட்டு, அப்பால் நடந்து "அதத்தம்" என்ற ஊரையடைந்து பதினொன்றாம் மாசிக பிண்டத்தை உண்டு, அங்கிருந்து "சீதாப்ரம்" என்ற நரகத்தை அடைந்து அங்கு சீதத்தால் வருந்தி, பன்னிரெண்டாவது மாதத்து வருஷாப்தியப் பிண்டத்தை உண்டு, அங்கிருந்து புறப்பட்டு நான்கு திசைகளையும் பார்த்து ஈனக் குரலில் யமகிங்கர்களே! என் உற்றார் உறவினர்களை காணோமே! ஏழையேன் என் செய்வேன் என்று அழுவான்.

அப்போது எமதூதர்கள் அந்த சீவனை நோக்கி முழுமூடனே! உன் மனைவி மக்கள் இன்னமுமாயிருப்பார்கள்? அவர்கள் மேல் உனக்குள்ள ஆசைகள் இன்னும் நீங்கவில்லையா? நீ செய்த புண்ணிய பாவங்களின் பயன்களைத்தான் இங்கு நீ காண முடியும் என்று அறைவார்கள். ஐயோ! முன்னமே நீங்கள் சொன்னது மறந்து ஏதேதோ பிதற்றுகிறேன் என்று தனக்குள் தானே மனம் புழுங்கி நடந்து வைவஸ்வத பட்டினம் என்ற நகரத்தைச் சேர்வதற்கு முன்பே ஊனற்பதிக பிண்டத்தை அருந்தி யமபுரி பட்டினமாகிய வைவஸ்வத பட்டினத்தை அடைவான். யமபுரி நூற்றி நாற்பத்து நான்கு காதவழி அகலமுள்ளதால் காந்தர்வ அப்சரசுகளோடு கூடியதாய் என்பது நான்காயிரம் பிராணிகள் வாழுமிடமாகயிருக்கும் ஜீவன்கள் செய்யும் பாப புண்ணியங்கள் அறிந்து, எமதர்மனுக்குத் தெரிவிக்கும் பன்னிரண்டு நிறவனர்கள் என்பவர்கள் அந்த நகரில் இருப்பார்கள். ஜீவர்கள் அனைவரும் அந்தப் பன்னிரு சிரவணர்களையும் ஆராதனை செய்து ஆராதித்தால், ஜீவன் செய்த பாபங்களை யெல்லாம் மறைத்து புண்ணியங்களை மட்டும் சிரவணர்கள் யமதர்மராஜனுக்கு எடுத்துரைப்பார்கள் என்று திருமால் கூறியருளினார். பாப புண்ணியங்களை ஆராய்ந்து செல்லும் பன்னிரு சிரவணர்கள் 
பாப புண்ணியங்களை ஆராய்ந்து செல்லும் பன்னிரு சிரவணர்கள்

சூதமாமுனிவர், சௌகாதி முனிவர்களை நோக்கிக் கூறலானார். வேத வடிவிலான பெரிய திருவடி பரம காருண்யரான திருமாலின் திருவடிகளைத் தொழுது பெருமாளே! தேவரீர் முன்பு கூறியருளிய அச்சிரவணர்கள் பன்னிருவர்களும் யாவர்? அவர்கள் யாருடைய புதல்வர்கள்? வைவஸ் வத நகரத்தில் அவர்கள் இருப்பதற்கு காரணம் என்ன? மனிதர்கள் செய்யும் பாப புண்ணியங்களை அச்சிரவணர்கள் எவ்வாறு அறிவார்கள்? இவற்றையெல்லாம் அடியேனுக்கு நவின்றருள வேண்டுகிறேன் என்று வேண்டினான். அதற்கு திருமால் மகிழ்ந்து கூறலானார். 
புள்ளரசே! கேட்பாயாக! ஊழி காலத்தில் தன்னந் தனியனான ஸ்ரீ மகா விஷ்ணுவானவர் அயனாராதி தேவரோடு யாவரும் யாவும் தன்னுள்ளே ஒடுக்கிக் கொண்டு நெடும்புணலில் பள்ளி கொண்டிருந்தார். அப்போது மகா விஷ்ணுவின் உத்திகமலத்தில் நான்முகனாகிய பிரமன் தோன்றி, ஸ்ரீ ஹரியைக் குறித்து நெடுங்காலம் மாதவம் புரிந்து வேதங்களையும் படைத்தருளினார். அவ்வாறு படித்தவுடனேயே உருத்திரன் முதலிய தேவர்கள் எல்லாரும் அவரவர் தொழில்களைச் செய்யத் துவங்கினார்கள். எல்லோரையும் விட ஆற்றல் மிக்க யமதர்மராஜனும் ஜைமினி என்ற நகரத்தை அடைந்து சிம்மாசனத்தில் வீற்றிருந்து ஜீவர்கள் செய்யும் பாப புண்ணியங்களை அறிய வேண்டும் என்று ஆராய்ந்தார். அறிய தொடங்கிய அவனுக்கு சேதனர்கள் செய்யும் பாப புண்ணியங்களை அறிந்து கொள்ள முடியவிலை. பல காலம் முயன்றும் அவனால் அந்தச் செயலில் வெற்றியடைய முடியவில்லை. எனவே யமதர்மராஜன் மனம் வருந்தி நான்முகனைக் கண்டு வணங்கி, சதுர்முகனே! மஹா தேவனே! அடியேன் ஜீவர்களின் பாவ புண்ணியங்களை நீண்ட நாட்கள் ஆராய்ந்தும் தெளிவாக அறிந்து கொள்ள முடியவில்லை. அறிந்தால் அல்லவோ பாவிகளை தண்டிக்கவும், புண்ணியசாலிகளை இரட்சிக்கவும் முடியும். ஆகையால் அவற்றை உணர்ந்து , அறிந்து தக்கவை செய்யவும் எனக்கு அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்தித்தார்.

அதைக் கேட்டதும் நான்முகன், ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்தெறிந்து, நீண்ட கண்களை உடையவர்களும் மிக்க மேனியசகுடயவர்களும் மனக்கண்ணால் யாவற்றையும் அறிந்து கொள்ளக் கூடியவர்களான பன்னிரண்டு புதல்வர்களைப் படைத்தது, யமதர்மனைப் பார்த்து தர்மனே! உலகத்தில் பிறந்த ஜீவர்கள் அனைவரும் நினைப்பதையும் பேசுவதையும் செயல்புரிவதையும் உணர்ந்தறிய வல்லவர்கள். இவர்கள் ஜீவர்கள் செய்வதை எல்லாம் அறிந்து உனக்கு அறிவிப்பார்கள். நீ பாப புண்ணியங்களை அறிந்து சிஷையும் ரகைஷயும் செய்வாயாக! என்று சொல்லி, அப்பன்னிருவரையும் யமதர்மனுடன் செல்லும்படிப் பணித்தல். கலனும் பிரமனை வணங்கி அந்தப் பன்னிரு சிரவணர்களோடு தென்புலத்தை அடைந்து, சேதனர்களுடைய புண்ணியங்களையும், பாவங்களையும் அறிந்து அவற்றுக்குத் தக்கவாறு தண்டித்தும் காத்தும் வருவானாயின். 

பக்ஷி ராஜனே! பூவுலகில் வாழ்வின் இறுதிக் காலம் முடிந்தவுடனே, வாயு வடிவனான ஜீவனை யம கிங்கர்கள், யமபுரிக்கு இழுத்துச் செல்வார்கள். அறம்,பொருள்,இன்பம்,வீடு என்ற நான்கு வகை புருஷார்த்தங்களில் தர்மஞ் செய்த உத்தமர்கள் யாவரும் தர்ம மார்க்கமாகவே வைவஸ்வத நகரம் என்னும் யமபுரிக்குச் செல்வார்கள். மோட்சத்தில் இச்சை கொண்டு வேத சாஸ்திர புராணங்களை அறிந்து தெய்வ பக்தி செய்பவர்கள் தேவி விமானம் ஏறி தேவருலகை அடைவார்கள். பாவிகள் கால்களால் நடந்தே செல்வார்கள். கடுமையான, கொடுமையான கரடுமுரடான பாதையை கடந்து செல்ல வேண்டும். வாழுங்காலத்தில் ஜீவன் சிரவணரைப் பூஜித்தவனாகயிருந்தால், ஜீவனின் பாவங்களை மறைத்து புண்ணியங்களை மட்டுமே யமதர்ம தேவனிடம் சொல்வார்கள். பன்னிரண்டு கலசங்களில் தண்ணீர் நிறைந்து அன்னம் பெய்து அக்கலசங்களை அந்தந்தச் சிரவணரைக் குறித்து தானதர்மங்கள் செய்தால் ஜீவனுக்கு யமலோகத்தில் சகலவிதமான நன்மைகளையும் செய்வார்கள். 

கருடா! பன்னிரண்டு சிரவணர்களின் தோற்றம் முதலியவற்றைச் சொல்லும் இந்த புண்ணிய சரிதத்தை பக்தியோடு கேட்டவர்கள் பாபம் நீங்கிய புனிதராவார்கள் என்று கூறியருளினார். 28 கொடிய நரகங்கள். 
பக்ஷி ராஜனான கருடன் திருமகள் கேள்வனைச் சிரம் வணங்கி கார்மேக வண்ணரே! நரகங்கள் என்பவை யாவை? அவை எவ்வாறு இருக்கின்றன? அவற்றில் யார் யார் எவ்வாறு தண்டிக்கப்படுகின்றார்கள்? அவற்றை அடியேனுக்கு விபரமாக தெரிவிக்க வேண்டும் என்று கேட்க, கார்மேக வண்ணன் கருடனை நோக்கி, காசிப் புத்திரனே காலதேவனால் நிச்சயிக்கப்பட்ட தீவாய் நரகங்கள் எண்பத்து நான்கு லட்சமிருக்கின்றன. அவற்றில் கொடிய நரகங்கள் 28 இருகின்றன. அவை


1 . பிறன்மனைவி,குழந்தை,பொருள் இவற்றை கொள்ளையடிப்போர் அடையுமிடம் தாமிரை நரகம். 


2 . கணவன் அல்லது மனைவியை வஞ்சித்து வாழ்வோர் கண்களில் இருள்,கவ்விய மூர்ச்சித்து விழும் நரகம் அந்த தாமிஸ்ரம்.


3 .அக்கிரமமாகப் பிறருடைய குடும்பங்களை அழித்து பலவந்தமாகப் பொருள் பறிக்கும் சுயநலக்காரர்கள் அடையும் நரகம் ரௌரவமாகும்.


4. குரு என்ற ஒருவகையான அகோரமான மான்கள் பாவிகளைச் சூழ்ந்து துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவமாகும். 


5. தன் சுவைக்காக ஜீவன்களை வதைத்தும் சித்திரவதை செய்தும் புவியில் வாழ்ந்து மரித்தவன் அடையும் நரகம் கும்பி பாகம்.


6. பெரியோரையும், பெற்றோரையும் துன்புறுத்திய வெறியர்கள் அடையும் நரகம் காலசூத்திரம்.


7. தன தெய்வத்தை நிந்தித்து தனக்குரிய தர்மங்களை விடுத்த அதர்மிகளடையும் நரகம் அசிபத்திரமாகும்.


8 .அநியாயமாகப் பிறரை தண்டித்து அகந்தையுடன் அநீதிகளும் பலவகைக் கொடுமைகளும் புரிந்தவர்கள் அடையும் நரகம் பன்றிமுகம்.


9. சித்திரவதை, துரோகம், கொலை செய்த கொடியவர்கள் அடையும் நரகம் அந்தகூபம்.


10.தான் மட்டும் உண்டு பிறரைத் துளைக்கும் கிருமிகள் போல வாழ்ந்து, பக்தியில்லாத பாவிகள் அடையும் நரகம் கிருமி போஜனம்.


11 .பிறர் உரிமைகளையும் உடமைகளையும் தனக்கிருக்கும் வலிமையால் அபகரித்துக் கொள்ளும் பலாத்காரம் பாவிகளைடையும் நரகம் அக்கினி குண்டம்.


12. கூடத் தகாத ஆண் அல்லது பெண்ணைக் கட்டித் தழுவிக் கூடி மகிழும் மோக வெறியர்கள் அடையும் நரகம் வக்ர கண்டகம்.


13. நன்மை, தீமை, உயர்வு, தாழ்வு இவற்றை பாராமல் தரங்கெட்டு எல்லோருடனும் கூடி மகிழும் மோகந்தகாரப் பாவிகள் அடையும் நரகம் சான்மலியாகும்.


14 .அதிகார வெறியாலோ, கபடவேசத்தாலோ, நயவஞ்சகத்தாலோ நல்வழிகளைக் கெடுக்கும் அதர்மிகள் அடையும் நரகம் வைதரணி.


15 .கூச்சமில்லாமல் இழிமகளைக் கூடி ஒழுங்கீனங்கள் புரிந்தும் தன வழியை விட்டு ஓர் இலட்சியமுமில்லாமல் மிருகங்களைப் போல் திரியும் கயவர்கள் அடையும் நரகம் பூயோதம்.


16 .பிராணிகளைத் துன்புறுத்திக் கொலை புரியும் கொடுமைக்காரர்கள் அடையும் நரகம் பிராணரோதம்.


17 . டம்பத்திற்க்காக பசு வதை புரிந்து யாகம் முதலியவற்றைச் செய்யும் பித்தலாட்டகாரர்கள் அடையும் நரகம் விசஸனம்.


18 .வாழ்க்கைத் துணைவியை வற்புறுத்தி விபரீத மோக இச்சைக்கு ஆளாகிக் கெடுக்கும் தீயோர்கள் அடையும் நரகம் லாலா பக்ஷம்.


19 .வீடுகளுக்கு தீ வைப்பது, சூறையாடுவது, ஜீவா வதை புரிவது, விஷமூட்டுவது, கூட்டங் கூட்டமாகக் குடிமக்களைக் கொல்வது போன்ற செயல்களைச் செய்த பாவிகள் அடையும் நரகம் சாரமேயாதனம்.


20 .பொய்சாட்சி கூறுதல் முதலிய அகம்பாவச் செயல்புரியும் பாவிகள் அடையும் நரகம் அவீசி.


21 .எக்குலத்தினராயினும் மதுபோதைப் பொருள்களைக் கொடுத்தும் குடித்தும் குடிகளைக் கெடுக்கும் குடிகேடர்கள் அடையும் நரகம் பரிபாதனம். 


22 .தன்னை மட்டுமே பெரியதாய் மதித்து பெரியோரையும், நல்லோரையும் அவமதித்து தீச்செயல் புரிந்த பாவிகள் அடையும் நரகம் கஷாரகர்த்தமம்.


23 .நரமேத யாகம் புரிதல், ஆணாயினும் பெண்ணாயினும் மனித மாமிசம் புசித்தல், சாதுவான பிராணிகளை வதைத்தல் முதலான தீவினை புரிந்தோரை முன்னின்று வதைக்கு அவதிப்படும் நரகம் ரகோஷாகனம்.


24 .எவ்விதத் தீமையும் புரியோதாரைக் கொல்லுதல், நயவஞ்சகமாகக் கொல்லுதல், தற்கொலை செய்து கொள்ளுதல், நம்பிக்கைத் துரோகம் புரிதல் இவர்கள் அடையும் நரகம் சூலரோதம்.


25 .தீமையே புரிந்த துரோகிகளடையும் நரகம் தந்த சூகம்.


26 .பிராணிகளைக் கொடூரமாக வதைத்த கொடுமைக்காரர்கள் அடையும் நரகம் வடாரேவதம்.


27 .வீட்டுக்கு வந்த விருந்தினரை வெறுத்து நிந்தித்த லோபிகளும் பகிர்ந்துண்ண விரும்பாத சுயனலவாதிகாலும் அடையும் நரகம் பரியாவர்த்தனகம்.


28 .செல்வச் செருக்காலும், செல்வாக்கினாலும், பிறரைத் துன்புறுத்துகிறவர்களும் அநீதியாய்ப் பொருள் சம்பாதித்து, அறநெறிகளில் செலவிடாமல் பதுக்கி வைப்பவர்கள் அடையும் நரகம் சூசிமுகம் என்பதாகும். 

இத்தககைய இருபதெட்டு வகை நரகங்கள் ஒவ்வொரு வகையிலும் எராளமானவையாக மிகக் கொடியனவாக அமைந்திருக்கும்.
இறந்தவனைக் குறித்து நாள்தோறும் கொடுக்கபடும் உதககும்ப தானத்தை யமதூதர்கள் பெற்று திருப்தி அடைவார்கள். மாசிக வருஷ பதிகம் முதலியவற்றால் ஜீவன் திருப்தியடைவான். அவற்றால் யம கிங்கரர்களும் திருப்தி அடைவார்கள்.
வைனதேயா! ஒருவன் இறந்த ஓராண்டு முடியுந் தருவாயில் அவனது ஜீவன் பிண்டத்தாலாகிய சரீரத்தோடு யமபுரியை அடைவான் என்றோமே! அந்த ஜீவன் யம லோகத்தை அடையும் முன்பாக அந்த பிண்ட சரீரத்தை தவிர்த்து அங்குஷ்ட பரிமாணமுள்ள ஒரு புதிய வடிவம் பெற்று ஒரு வன்னி மரத்தில் சிறிது காலம் தங்கியிருந்து அதன் பிறகு கர்மத்தாலாகிய சரீரத்தை பெறுவான். அப்போது யம கிங்கர்கள் அந்த ஜீவனை யமபுரிக்கு அழைத்துச் சென்று தர்ம ராஜனின் கொலுமண்டபத்திற்க்குக் கொண்டு செல்வார்கள் என்று திருமால் கூறியருளினார். 

சித்திரகுப்தன் கணக்கும் நரகங்களும் 

சூதமா முனிவர் சௌனகாதி முனிவர்களுக்கு பன்னிரண்டு சிரவணரின்சரிதத்தைச் சொல்லிய பிறகு மேலும் தொடர்ந்து சொன்னார். முனிவர்களே! திருமால் கருடனை நோக்கி கூறலானார்.
கருடா! ஜீவர்கள் பூவுலகில் வாழ்ந்த காலத்தில் செய்த பாப புண்ணியங்களை எல்லாம் சித்திர குப்தன் என்ற யம லோக கணக்கன் சிரவணர்களின் மூலமாக அறிந்து யம தர்மராஜனுக்கு அறிவித்து அவனது உத்தரவுப்படியே அவரவரது பாவங்களின் தன்மைக்கேற்ற தண்டனை வாசித்துச் சொல்ல யமதர்மன் தன கிங்கர்களைக் கொண்டு அத்தண்டனைகளை அவ்வவ்போதே நிறைவேற்றிச் செய்து விடுவான். ஜீவனானவன் வாக்கால் செய்த பாவங்களை வாக்காலும், உடலால் செய்த பாவப் புண்ணியங்களை உடலாலும் மனத்தால் செய்த பாவப் புண்ணியங்களை மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும். பெரியோரை இகழ்ந்து நீச மொழிகளால் ஏசிபேசினால் பாவங்கள் உண்டாகி வாயிலிருந்து புழுக்களாக சொரியும். புண்ணியங்களை மட்டும் செய்தவர்கள் நல்ல சரீரத்தோடு நோய் இன்றி இன்பமாக வாழ்வார்கள். பிறவுயிர்களை ஊட்டி வதைத்தவர்கள் கொடூரமான சரீரத்தை அடைந்து துன்புறுவார்கள். 
பக்ஷி ராஜனான கருடன் திருமகள் கேள்வனைச் சிரம் வணங்கி கார்மேக வண்ணரே! நரகங்கள் என்பவை யாவை? அவை எவ்வாறு இருக்கின்றன? அவற்றில் யார் யார் எவ்வாறு தண்டிக்கப்படுகின்றார்கள்? அவற்றை அடியேனுக்கு விபரமாக தெரிவிக்க வேண்டும் என்று கேட்க, கார்மேக வண்ணன் கருடனை நோக்கி, காசிப் புத்திரனே காலதேவனால் நிச்சயிக்கப்பட்ட தீவாய் நரகங்கள் எண்பத்து நான்கு லட்சமிருக்கின்றன. அவற்றில் கொடிய நரகங்கள் 28 இருகின்றன. அவை யமபுரியும், யமதர்மராஜனும் 
சூதமா முனிவர், நைமிசாரணியவாசிகளை நோக்கிக் கூறலானார்:



பறவைகளுக்கு அரசே! அங்குஷ்ட பரிமாணமுள்ள ஜீவன் கர்ம சரீரம் பெற்று வன்னிமரத்தை விட்டு யமகிங்கரர்களுடன் 20 காத தூரவழி விஸ்தாரமுள்ள சித்திரகுப்தனது பட்டினத்தின் வழியாக யமபுரிக்குச் செல்வான்.. அந்த யம பட்டணம் புண்ணியஞ் செய்தோரின் பார்வைக்கு மிகவும் ரம்மியமாகக் காணப்படும் .
எனவே இறந்தவனைக் குறித்துப் பூவுலகில் இரும்பாலாகிய ஊன்றுகோல், உப்பு, பருத்தி, எள்ளோடு பாத்திரம் ஆகிய பொருள்களைத் தானம் செய்ய வேண்டும். இத்தகைய தானங்களால் யமபுரியுல்லுள்ள யமபரிசாரகர்கள் மிகவும் மகிழ்ந்து ஜீவன் யம பட்டினத்தை நெருங்கியதுமே காலதாமத படுத்தாமல் அவன் வந்திருப்பதை யமதர்மராஜனுக்குத் தெரிவிப்பார்கள். தர்மத்துவஜன் என்ற ஒருவன், சதாசர்வ காலமும், யமனருகிலேயே இருந்து கொண்டிருப்பான். பூமியில் இறந்தவனைக் குறித்து கோதுமை, கடலை, மொச்சை, எள், கொள்ளு, பயிறு, துவரை ஆகிய இந்த ஏழு வகையான தானியங்களைப் பாத்திரங்களில் வைத்துத் தானஞ் செய்தால், அந்தத் தர்மத்துவஜன் திருப்தி அடைந்து யமனிடத்தில் இந்த ஜீவன் நல்லவன், புண்ணியஞ் செய்த புனிதன்! என்று விண்ணபஞ் செய்வான். 

கருடா! பாபம் செய்த ஜீவனுக்கோ! அந்த யமபுரியே பயங்கரமாகத் தோன்றும். அவனுக்கு தர்ம ராஜனாகிய யமனும் அவனது தூதர்களும், அஞ்சத்தக்க பயங்கர ரூபத்தோடு தோற்றமளிப்பார்கள். அந்த மவஞ் செய்தவனும் அவர்களைக் கண்டு பயந்து பயங்கரமாக ஓலமிடுவான். புண்ணியஞ் செய்த ஜீவனுக்கு யமதர்மராஜன் நல்ல ரூபத்தோடு தோற்றமளிப்பான். புண்ணியம் செய்த ஜீவன் யமனைக் கண்டு மகிழ்ந்து இறைவனின் தெய்வீக ஆட்சியை கண்டு வியப்பான். யம தர்மராஜன் ஒருவனேதான் என்றாலும், "பாபிக்குப் பயங்கர ரூபதொடும், புண்ணியஞ் செய்தவனுக்கு நல்ல ரூபதொடும்" தோன்றுவான். புண்ணியஞ் செய்த ஜீவன் யமனருகே தோன்றுவானாயின், 'இந்த ஜீவனுக்குரிய மண்டல மார்க்கமாக பிரம்ம லோகம் சேரத் தக்கவன்' என்று தான் வீற்றிருக்கும் சிம்மாசனிதிலிருந்து சட்டென்று எழுந்து நின்று மரியாதை செலுத்துவான். யம தூதர்களும் வரிசையாக மரியாதை செலுத்துவார்கள். பாவஞ் செய்த ஜீவனை பாசத்தில் கட்டிப் பிணைத்து உலக்கையால் ஓச்சி ஆடுமாடுகளைப் போல இழுத்துக் கொண்டு காலன்முன் நிறுத்துவார்கள்.
அங்கு பூர்வ ஜென்மத்தில் அந்த ஜீவன் செய்த புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப வேறு ஜென்மம் அடைவான். அதிகம் புண்ணியம் செய்திருந்தால் அந்த ஜீவன் யம தூதர்களால் துன்புறுத்தப்படாமல் யமதர்மன் முன்பு சென்று தேவனாக மாறித் தேவருலகம் செல்வான். பாபம் செய்தவனாகின் யமதர்மனைக் காண்பதற்கும் அஞ்சுவான். உடல் நடுங்க பயப்படுவான். தூதர்கள் யமதர்மன் கட்டளை ஏற்று நரகத்தில் விழுந்து பிறகு கிருமி புழு முதலியவற்றின் ஜென்மத்தை அடைவான். அந்த ஜீவனுக்குப் புண்ணியம் மிதமாக இருக்குமானால் முன்பு போல் மானிடப் பிறவியை பெறுவான். தான தருமங்களைச் செய்தவன் யாராயினும், எந்த ஜென்மத்தை அடைந்தாலும் அவன் செய்த தானதர்ம பயன்களை அந்த ஜென்மத்தில் அடைவான்.
செல்வந்தன், அறிவிலே பேரறிஞன், வலுவிலே பலசாலி, கலைத் துறையில் பெருங் கலைஞன், விஞ்ஞானி, மதத் தலைவர் என்றெல்லாம் புகழ்ப் பெறுவான். அவன் இறந்தவுடனேயே அவன் உடலில் அரைஞான் கயிறு கூட அறுத்தெறியப்பட்டு விடும். அவன் ஜீவன் பிரிந்த உடனே, அவன் உடலை குழியில் புதைத்து மண்ணோடு மண்ணாகும். மானிடப் பிறவி கிடைப்பது அரிது. அப்படியே கிடைத்தாலும் கூன், குருடு, செவிடு, மலடு நீங்கிப் பிறத்தல் அரிது. ஒழுக்கத்தில் பெற வேண்டிய முக்தியை பெறவில்லை என்றால், தவம் முதலியவற்றைச் செய்து வருந்தித் தன கரத்தில் அடைந்த அமிர்தம் நிறைந்த பொற்கவசத்தைச் சிந்தி பூமியில் கவிழ்ந்தவனுக்கு ஒப்பாகுவான்! என்று திருமால் ஓதியருளினார் பிரேத ஜென்மம் விளைவிக்கும் துன்பம். 

கருடன் கேசவனைத் தொழுது ஸ்வாமி! பாவங்களில் எத்தகைய பாவத்தை செய்தவன், பிரேத ஜென்மத்தை அடைகிறான்? அந்த பிரேத ஜென்மத்திலிருந்து எப்படி நீங்குகிறான்? அந்த பிரேத ஜென்மதொடு பூவுலகில் சஞ்சரிப்பது உண்டா அல்லது யமனுடைய காவலிலேயே கிடப்பானோ? இவற்றையெல்லாம் அடியேனுக்கு விளக்கமாக சொல்ல வேண்டும் என்று வேண்ட, திருமால் கருடனை நோக்கிக் கூறலானார்.
வைன தேயனே! பிறருடைய பொருளையும் மனைவியையும் அபகரிப்பவன் எவனோ, அவனே இறந்த பிறகு வேறு சரீரத்தை யடையாமல் காற்று ரூபமாக பிரேத ஜென்மதையடைந்து பசி தாகத்தோடு வருந்தி யமனுடைய காவலையும் நீங்கி எங்கும் திரிவான். யார் ஒருவன் இறந்தவர்களின் பொருள்களை அபகரித்துக் கொள்பவன், தீவாய் நரகங்களை யெல்லாம் அனுபவிப்பான். மோசம் செய்து அபகரிக்கும் பாவியினும் கொடும்பாவி ஒருவனும் இருக்க மாட்டான். பிரேத ரூபத்தில் யாரையும் நிம்மதியாக இருக்கவிட மாட்டான். பித்துக்களின் தினத்தில் பிதுக்களை வீட்டுக்குள்ளே போக விடாமல் தடுத்து துரத்துவான். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எதையும் அனுபவிக்க விடமாட்டான். தன் புத்திரன் முதலியோருக்கு சந்ததி உண்டாகாமல் வம்சம் நாசமடையும் படி செய்வான். அவர்களுக்கு பல துன்பங்களை உண்டாக்கி வருத்தப்படுவான் என்று கூறி அருளினார்.
அப்போது பறவை வேந்தன் பெருமாளை நோக்கி, ஆதிமூர்த்தி! பிரேத ஜென்மமடைந்தவர் வேறு என்ன செய்வான்? எவ்விதமாக தோற்றமளிப்பான்? பிரேத ஜென்மம் அடைந்திருக்கிறான் என்பதை எப்படி அறிய முடியும்? இவற்றைத் தயவு செய்து நவின்றருள வேண்டும் என்று வேண்ட ஸ்ரீமன் நாராயணர் கூறுகிறார்.
வைன தேயா! பிரேத ஜென்மம் அடைந்தவன் தான் சார்ந்த குலத்தையே அதிகப்பிடிப்பான். தருமங்கள். தானங்கள் செய்பவருக்கும் ஹரி நாம சங்கீர்த்தனம் செய்பவருக்கும் திருவன, பத்ரி முதலிய ஸ்தலங்களுக்குத் தீர்த்த யாத்திரை ஷேச்த்ராடனம் முதலியவற்றைச் செய்பவருக்கும் பிரேத ஜென்மம் அடைந்தவனால் ஒரு துன்பமும் நேராது. நற்கருமம் எதையும் செய்யாதவனுக்கும், பாகவதரை நிந்திப்பவனுக்கும் தெய்வ பக்தி இல்லாதவனுக்கும், புலால் உண்பவனுக்கும் மது அருந்துவோன்னுக்கும், பொய் சொல்பவனுக்கும் பிரேத ஜென்மம் அடைந்தவனால் அதிகமான துன்பங்கள் உண்டாகும். பாவங்களையே செய்வதும், குழந்தைகள் பிறந்து பிறந்து இறப்பதற்கும், சுற்றத்தாரோடு ஒற்றுமையில்லாமல் மனம் வேறுபட்டு வாழ்வதற்கும், பசுக்களை போஷிக்க முடியாமற் போவதற்கும், நண்பனோடு விரோதிக்க நேரத்தாலும், வைதிக உபவாச தினமாகிய ஏகாதசி தினத்தில் அன்னம் உண்ணுதலும், ஹரி பக்தி செய்ய முடியாமல் வாழ்நாள் வீணாவதற்கும் ஜெப ஓமங்களைச் செய்ய முடியாமல் போவதற்கும், தந்தை தாயாரை இகல்வதர்க்கும், அயலாரை கொல்ல முயற்சிப்பதற்கும், இழிந்தோர் செய்யும் தொழிலைச் செய்து பிழைக்க நேரிடுவதர்க்கும், அதர்மங்களையே எண்ணுதலும், பிதுர் கர்மங்களை விக்கினத்தால் தடைபட்டு குறைபட்டு போதலும், புத்திரன் பகைவனைப் போல தூசிப்பதர்க்கும், மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாமல் நெடுநாட்கள் பிரிந்து வாழ்வதற்கும்.. இவைகளெல்லாம் பிரேத ஜென்மத்தை அடைந்தவனாலேயே தோன்றுவனவாகும். கருடா! யாருக்கு பிரேத ஜென்மதோஷம் நேரிட்டிரிகிறதோ, துக்கமும் துன்பமும் சூழ்ந்து கொண்டே இருக்கும்.
பிரேத ஜென்மத்தை யடைந்தவன் பயங்கரமான முகத்தோடும் வாள் போன்ற பற்களோடும் தன் குடும்பத்தாரின் கனவில் தோன்றி, அயோ! என்னைக் காப்பாற்றுவோர் யாருமில்லையா? பசிதாகத்தோடு வருந்துவான். என் பிரேத ஜென்மம் நீங்கவில்லையே என்று கதறுவான் என்றார் திருமால். தோஷ பரிகாரமும், முதன்மையானவர்களை பூஜித்தலும். 
நைமிசாரணிய வாசிகளே! இவ்வாறு திருமால் கூறியதும் கருடாழ்வார்! ஸ்ரீ மந் நாராயனமூர்த்தியைத் தொழுது ஜெனார்தனா! பிரேத ஜென்மத்தையடைந்தவன் அந்த ஜென்மதிலிருந்து எவ்வாறு நீங்குவான்? எவ்வளவு காலம் ஒருவனுக்குப் பிரேத ஜென்மம் பிடித்திருக்கும்? இவற்றைக் கூற வேண்டும் என்று பிரார்த்தித்தான். 
அதற்கு திருமால் அவனை நோக்கி கூறலானார்.

பட்சி ராஜனே! பிரேத ஜென்மத்தையடைந்தவன், தன் உறவினர்களின் கனவில் தோன்றினாலும், துன்பத்திற்கு மேல் துன்பங்கள் செய்தாலும் அதைப் பற்றி பெரியோரிடம் தெரிவித்து அவர்கள் விதிக்கும் தர்ம விதிகளில் சித்தம் வைத்து மாமரம், தென்னை மரம், சண்பகம், அரசு முதலிய விருட்சங்களை வைத்துப் பயிர் செய்ய வேண்டும். மலர் செடிகளை உண்டாக்கி நந்தவனம், அமைக்க வேண்டும். பசுக்கூட்டங்களை வயிறார மேய்வதன் பொருட்டு பசும்புல் வளரத் தக்க நிலங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும். தண்ணீருக்காக குளம் வெட்ட வேண்டும். பகவத் கைங்கரியம் பாகவத கைங்கரியம் முதலியவற்றைச் செய்ய வேண்டும்.
கங்கை, யமுனை, காவிரி, தாமிரபரணி முதலிய நதிகளில் நீராடித் தானதர்மங்களைச் செய்ய வேண்டும். துன்பங்கள் எப்போது வருகின்றதோ, அப்போதெல்லாம் இவற்றை எல்லாம் அவசியமாக செய்ய வேண்டும். செய்யாவிட்டால் துன்பங்கள் மேலும் மேலும் விருத்தி யாகும். பிரேத ஜென்மம்த் தோஷத்தால் தர்மச் செயல்களில் புத்தி நாடாமலிருக்க கூடும். பக்தியும் ஏற்படாமல் போகலாம். புத்தி நாடாவிட்டாலும் பக்தி வராவிட்டாலும் எவன் ஊக்கத்துடன் முயன்று அந்தந்த தர்மச் செயல்களைச் செய்கிறானோ அவன் இன்பமடைவான். அதனால் பிரேத ஜென்மத்தை அடைந்தவனும் இன்படைந்து பூவுலகத்தை யடைந்து அங்கு தனது பிரேத சரீரத்தை நீக்கிக் கொள்வான். அவன் தனது குலம் விளங்கும் ஒரு புத்திரன் உண்டாகிக் கொள்வான் என்றருளினார்.
அதற்கு கருட பகவான் திருமாலை நோக்கி, ஆராவமுதே! ஒருவனுக்கு தன் குலத்தில் ஒருவன் பிரேத ஜென்மமடைந்திருகிறான் என்பது தெரியவில்லை. அப்பிரேத ஜென்மமடைந்தவன் சொப்பனத்தில் வந்து சொல்லவுமில்லை. அப்படியிருக்க, அவனுக்கும் அவன் குலத்தினருக்கும் துன்பம் மட்டுமே உண்டாகிறது. அவன் பெரியோரிடம் அந்த விஷயத்தை சொல்லி செய்ய வேண்டியவை யாவை என்று கேட்கிறான். அவர்களும் பிரேத ஜென்ம தோஷத்தால் தான் இத்தகைய துன்பங்கள் நேரிடுகின்றன என்று சொல்கிறார்கள். அப்போது அவன் செய்ய வேண்டியவை யாவை? அவற்றைச் சொல்ல வேண்டும் என்று கேட்டான். திருமால் கருடனை நோக்கி கூறலானார்.
ஒ! புள்ளரசே! இது போன்ற சமயங்களில் பெரியோர் செய்வதைச் சத்தியம் என்றே உறுதியாக நம்ப வேண்டும். ஸ்நானம், ஜெபம், ஓமம், தனம், தவம் முதலியவைகளால் ஒருவன் தன் பாவங்களை நிவர்த்தி செய்து கொண்டு, நாராயண பலி செய்தல் வேண்டும். பாவங்களை நிவர்த்தி செய்து கொள்ளாமல் நாராயண பலி செய்வதற்கு முயன்றால் அது நிறைவேறாமல் செய்யும் பொருட்டுப் பூதப் பிரேதப் பைசாசங்கள் பெரிய தடைகளை ஏற்ப்படுத்தும், புண்ணிய காலங்களில் புண்ணிய ஷேத்திரங்களில் பிதுர்க்களைக் குறித்து எவன் ஒருவன் தானதர்மனகளைச் செய்கிறானோ, அவன் பூதப் பிரேத பைசாசங்களால் தொந்திரவும், துன்பமும் அடைய மாட்டான்.
சரீரத்தை உண்டாகுவதாலும் நல்ல நெறிகளைப் போதிப்பதாலும். தாய், தந்தை, குரு மூவரும் முதன்மையானவர்கள். எந்தக் காலத்திலும் அவர்களைப் பூஜிப்பது மனிதனின் கடமை. தாய், தந்தை மரித்த பிறகு அவர்களைக் குறித்துத் தானம் தர்மங்களை எவன் செய்கிறானோ அவற்றின் பயனை அவனே அடைகிறான். புத் என்ற நரகத்திலிருந்து தாய், தந்தையரைக் கரையேற்றுவதனாலேயே மகனுக்குப் புத்திரன் என்ற பெயர் உண்டாயிற்று. எவன் ஒருவன் தாய் தந்தையர் சொற்படி நடவாமல் தன் பெண்டு பிள்ளைகளின் சொற்படி நடக்கிறானோ, புலையனிலும் புலையனாவான். ஒ, கருடா! கிணற்றிலாவது நதியிலாவது விழுந்து மரித்தவனுக்கும், வாளால் வெட்டப்பட்டு இறந்தவனுக்கும் தற்கொலை செய்து கொண்டவனுக்கும் ஓராண்டுக் காலம் வரையிலும் எந்தவிதக் கிரியைகளும் செய்யலாகாது. கர்மம் செய்வதற்கும் குடும்பத்தில் திருமணம் முதலிய வைபவங்களையும் விசேஷ தர்மங்களையும் செய்யலாகாது. தீர்த்த யாத்திரை, சேஷ்திராடனம் முதலியவற்றிலும் ஈடுபடலாகாது. வருஷ முடிவில் கர்மம் செய்து அதன் பிறகு யாவுஞ் செய்யலாம் என்று கூறியருளினார். பிரேத ஜென்மமடையக் காரணங்கள்: 




ஸ்ரீமந் நாராயணன் இவ்வாறு கூறியதும் கருட பகவான் திருமகள் தலைவனைத் திருவடி தொழுது ஒ அனந்த கல்யாண குணநிலையரே! ஒரு ஜீவன் எத்தகைய பாவங்களால் பிரேத ஜென்மத்தை அடைவான், அடைந்தவன் என்ன பொருளை உண்பான்? எங்கே வசிப்பான்? இவற்றை அடியேனுக்குப் புகன்றருள வேண்டும் என்று கேட்கவும் பரமபத நாதன் பக்ஷிராஜனை நோக்கி கூறலானார்:


புள்ளரசே! பூர்வ ஜென்மத்தில் மகாபாவம் செய்தவனே பிரேத ஜென்மத்தை அடைவான். ஒருவன் பெருவழிகளில் கிணறு, தடாகம், குளம், தண்ணீர்பந்தல், சத்திரம், தேவாலயம் பலருக்கும் பயன்படும்படியான தருமத்தைச் செய்து, அவனது குலத்தில் பிறந்த ஒருவன் அவைகளை விற்று தனதாக்கிக் கொண்டவனும், மரித்தவுடன் பிரேத ஜென்மத்தை அடைவான். 


பிறருக்கு உரிமையான பூமியை அபகரித்தவனும், எல்லைகளை புரட்டித் தன் நிலத்தோடு சேர்த்துக் கொண்டவனும், தற்கொலை செய்து இறந்தவனும், மிருகங்களால் தாக்கியிறந்தவனும், சம்ஸ்காரம் செய்ய தன் குலத்தில் ஒருவரும் இல்லாமல் இறந்தவனும், தேசாந்திரங்களில் ஒருவரும் அறியாமல் இறந்தவனும், விருஷோர்சர்க்கம் செய்யாமல் மாண்டவனும், தாய் தந்தையருக்குச் சிரார்த்தம் செய்யாமல் இருந்து இறந்தவனும் பிரேத ஜென்மத்தை அடைவான். கட்டிலில் படுத்துத் தூங்கிக் கொண்டோ, விழித்துக்கொண்டிருக்கும் போதோ செத்தவனும், தெய்வத்திரு நாமங்களை உச்சரிக்காமல் உயிர் விட்டவனும், ரஜஸ்வாலையான பெண் சண்டாளன் முதலியோரை தீண்டிவிட்டு ஸ்நானம் செய்யாமல் சூதகத் தீட்டோடு இறந்தவனும், ரஜஸ்வாலையாய் இருக்கும் போது அவ்வீட்டில் இறந்தவனும், தாய், மனைவி, பெண், மருமகள் முதலியவர்களுடைய சரீர தோஷத்தைத் தன் கண்களால் பாராமலேயே பிறர் வார்த்தைகளைக் கேட்டு ஜாதிப் பிரஷ்டம் செய்தவனும், மனு நூலுக்கு விரோதமாக தீர்ப்பு வழங்குவோனும், தீர்மானம் செய்பவனும், அந்தணரையும் பசுக்களையும் கொல்பவனும் ஹிம்சிப்பவனும், கல், மதுபானம் முதலியவற்றை அருந்துவோனும், குரு பத்தினியைக் கூடியவனும் வெண்பட்டு, சொர்ணம் ஆகியவற்றை களவாடுவோனும், பிரேத ஜென்மத்தை அடைவார்கள். 


பிரேத ஜென்மம் அடைந்தோர் அனைவரும் எப்போதும் கொடிய பாலைவனங்களில் சஞ்சரித்து வருந்துவார்கள் என்றார் திருமால் ஜனன மரண விதிகள்! 



கருட பகவான் ஆதிபகவனைத் தொழுது வணங்கி சர்வேசா!


பூவுலகில் பிரம, ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என்ற நான்குவகை குலத்தினர் இருக்கிறார்கள் அல்லவா? அவர்களள்லாமல் மிலேச்சர் என்று ஒரு வகை அமைபினரும் இருகிறார்கலல்லவா? அவர்களில் பலர் பலவிதமாகயிருகின்றார்கள். அவர்கள் குறிப்பிட்ட காலத்தில் இறத்தலுக்குக் காரணம் என்ன என்பதை நவின்றருல வேண்டும் என்று வேண்டினான்.
நெடுமால் கருடனை நோக்கி, நீ கேட்ட கேள்வி சிறந்தது தான். அதற்குரிய விடையைக் கூறுகிறேன் கேள். உயிரினங்கள் மரிக்கும் காலத்தில் ஜீவனைக் கவர்வதர்க்கென்றே காலன் என்பவன் நியமிக்கப் பெற்றிருக்கிறான். உலகத்தில் வாழ்கின்ற ஜீவர்கள் அவர்கள் செய்யும் பற்பல விதமான தோஷங்களால் ஆயுள் குறைந்து மாய்கிறார்கள். மரித்தவன் வீட்டில் உணவருந்துவோனும் பிறனுடைய மனைவியைப் புணர்வதற்கு இச்சிப்பவனும், தனக்குத் தகாத இழிதொழிலைச் செய்பவனும் வாழ்நாளை இழப்பார்கள். இகவாழ்வுக்கும் பரலோக வாழ்வுக்கும் உறுதியான தான நல்வினைகளைச் செய்யாதவனும் பெரியோர்களைப் போற்றி செய்து பூஜி யாதவனும், தூய்மையில்லாதவனும் தெய்வபக்தி இல்லாதவனும் யம லோகத்தில் எப்போதும் உழல்வார்கள். பிறருக்குக் கேடு நினைப்பவனும் பொய்யுரைப்போனும், ஜீவன்களிடத்தில் கருணையில்லாதவனும், சாஸ்திர முறைப்படி வாழாதவனும் தனக்குரிய அறநெறிகளைத் தவிர்த்து பிறருக்குரிய கர்மங்களை செய்பவனும் யம லோகத்தில் வேதனைப்படுவார்கள். புண்ணிய தீர்த்தம் ஆடாத நாளும், ஜெபவேள்விகள் செய்யாத திவசமும், தேவராதனை செய்யாத தினமும், புனிதரான மகான்களையும் உலகிற்கு நல்லவைகளை செய்யும் நல்லவர்களை வழிபடாத பகலும், சாஸ்திரம் உணராத நாளும், வீணாளேயாகும். சூத்திர மரபில் பிறந்தவன் பிரம குலத்தினரே தெய்வம் என்று நினைத்துப் பக்தி செய்து, அவரிட்ட தொழிலைப் புரிந்து தாசனாய் இருப்பானாகில் அவன் நற்கதியை அடைவான். அவன் வேறொரு கர்மமும் செய்ய வேண்டியதில்லை. அவன் உயர்ந்த ஜாதியருக்குரிய கர்மங்களைச் செய்வானேயாகில் நலிவுருவான். 

கருடா! மனிததேகம் என்ன பூவுலகில் சஞ்சரிக்கும். எந்த ஜீவனின் தேகமும் நிச்சயமற்றது. நிராதாரமானதாக உள்ளது. சுக்கில சுரோணிதத்தால்(விந்து, நாதம்) உண்டாவது, அன்னபானாதிகாளால் விருத்தியடைவது. காலையில் வயிறு நிரம்ப உண்ட அன்னம் மாலையில் நசித்து விடும். உடனே பசிக்கும். மீண்டும் அன்னம் உண்ணாவிடில் மெய் தளரும் குலையும். ஆசையால் சரீரம் அநித்தியமானதென்றும் அது கர்ம வினையினால் வருவது என்றும் எண்ணி மீண்டும் பூவுலகில் பிறவி எடுக்காமல் இருக்கும் பொருட்டு நற்கர்மங்களைச் செய்ய வேண்டும். பூர்வ கர்மத்தால் வருகின்ற தேகத்தை யாருடையது என்று கூறலாம்? அதை வீணாகச் சுமந்து திரிந்து மெலிகின்ற ஜீவனுடையது என்று சொல்லலாமா? யாருக்கும் சொந்தமில்லை. ஜீவன் போன பிறகு புழுவாகவும் சாம்பலாகவும் அழியும் உடலானது. ஒருவருடயதும் அல்லவென்று அறிந்தும் ஓர்ந்து, சரீரத்தின் மீது ஆசை வைக்காமல் பகவத் பாகவத ஆசாரிய கைங்கரியங்களைச் செய்ய வேண்டும். பாவங்கள் என்பவை மனம், வாக்கு, காயம் ஆகியவற்றால் செய்யப்படுகின்றன. அதிகமாக பாவங்களைச் செய்தவன் நாய், நரி முதலிய இழிந்த ஜென்மம் அடைவான். ஜீவன் கர்ப்ப வாசம் செய்யும் காலத்தில் தாயினுடைய மல மூத்தராதிகளால் அதிகமாகத் துன்பங்களை அடைவான். இறப்பதை விட பிறப்பதில் உள்ளதான துன்பத்தையும் கர்மாதியையும் எண்ணி ஜீவனானவன் நல்ல ஒழுக்க நற்பண்புகளுடன் ஜீவிக்க வேண்டும். தாய் வயிற்றிலிருந்து பிறந்தவன் பால்ய வயதில் உண்ட விளையாட்டுகளால் தனக்கு உறுதியாக உள்ளது எது என்பதை அறிவதில்லை. முதுமைப் பருவத்தில் சோர்வாலும் கிலேசத்தாலும் ஒன்றையும் உணர்வதுமில்லை. இவ்விதம் உறுதியை உணராமல் ஒழிபவரே மிகப் பலராவர். பூர்வ ஜென்ம புண்ணியத்தால் உறுதியானதை உண்பவன் எவனோ அவனே நிரதசிய இன்ப வீடாகிய நமது உலகையடைவான். கர்ம வினைகளாலேயே ஜீவன் பிறந்து பிறந்து இறக்கிறான். பிறந்து அதிக வயது உலகில் வாழாமல் ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக மரிப்பது என்பது மகா பாவத்தினால் என்பதை அறிவாயாக. கொடிய பாவம் செய்தவனே பிறந்த உடனே மறித்து மீண்டும் பிறந்து மடிகிறான். அவன் பிறத்தலுக்கும் இறத்தலுக்கும் கணக்கென்பதில்லை. பூர்வ ஜென்மத்தால் நல்ல நெறிப்படி வாழ்ந்து தான தர்மங்களை மனங்கோணாமல் செய்து வரும் சேதனன் பூமியில் பிறந்து தன் மனைவி மக்களோடு நெடுங்காலம் சுகமாக வாழ்ந்து இறுதியில் நல்லுலகம் சேர்வான். 

ஒ, வைனதேயா! கற்பந் தரித்த ஆறு மாதத்துக்குள் அந்தக் கர்ப்பம் எந்த மாதத்திலாவது கரைந்து விழுந்ததாயின் விழுந்த மாதம் ஒன்றாயின் ஒருநாளும், இரண்டானால் இரண்டு நாட்களும், மூன்றாயின் மூன்று நாட்களும், நான்காயின் நான்கு நாட்களும், ஐந்தாயின் ஐந்து நாட்களும், ஆராயின் ஆறு நாட்களும், கர்ப்பத்தை கருவுற்றிருந்த மாதாவுக்கு மட்டுமே சூதகத் தீட்டு உளதாகும். பிதாவுக்கு அத்தீட்டு இல்லை. கருவழியாமல் பத்தாம்
மாதத்தில் பிறந்து மூன்று வயதுக்குள் மாண்டால் இறந்த அந்தக் குழந்தையை உத்தேசித்து பால்சோறும், ஊர்க்குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். மூன்று வயதுக்குமேல் ஐந்து வயதுக்குள் ஒரு குழந்தை இறந்து போகுமானால் மேற்சொன்னது போலவே பலருக்கு அன்னம் கொடுத்தல் வேண்டும். இவ்விதமில்லாமல் பிறந்த ஒரு மாதத்திற்குள் குழந்தை இறந்தால் அந்ததந்த வர்ணதாருக்குரியபடி செய்து தீர்த்தமும் பாலும் பாயசமும் முதலிய உணவுப் பொருட்களைத் திரவ வடிவில் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். உலகில் பிறந்தவன் இறப்பதும் இறந்தவன் மீண்டும் பிறப்பதும் திண்ணமாகையால் இறந்த பிறகு மீண்டும் மறுபிறவிஎடுக்காமல் மீளாவுலகெய்ய முரற்சி செய்ய வேண்டும்.இவைகளை முறைப்படி செய்யாவிட்டால், ஒரு நாளில் ஒரு வேளை கூட பசியாற உன்ன வழியற்ற தரித்தரனுக்கு புத்திரனாகப் பிறந்து கூழ் குடிப்பதற்கு வகையில்லாமல் வருந்தி விரைவில் மடிந்து மீண்டும் பிறப்பான். 

ஒருவன், தான் இறந்தால் மறு ஜென்மத்திலாவது உயர்ந்த குலத்தில் பிறக்க வேண்டும். சகல சாஸ்திரங்களிலும் நிகரற்ற நிபுணனாக விளங்க வேண்டும் என்று கருதி அதற்குரிய கர்மங்களைச் செய்வதைவிட ஜென்மமே வராமைக்கு உரிய கர்மங்களைச் செய்வதே மிகவும் நல்லது. தீர்த்த யாத்திரை சேது புனித நதிகளில் நீராடியவர், மனத்தூயமையுடயவர், பொய் சொல்லாமல் இன்சொல் பேசுவான், சகல் சாஸ்திர சம்பன்னனாவான். ஏராளமான சம்பத்துக்கள் இருந்தும், தானதர்மம் செய்யாதவன் மறுபிறவியில் தரித்தவனாக பிறப்பான். மனிதன் தனக்குள்ள சம்பத்துக்குத் தகுந்த படி தானதர்மஞ் செய்ய வேண்டும் என்று திருமால் கூறினார் புத்திரர்கள் பௌத்திரர்கள் கர்மம் 
ஸ்ரீயப்பதியான ஸ்ரீமந் நாராயனமூதியானவர் கருடாழ்வானை நோக்கி கூறலானார்.




ஒ! காசிப் புத்திரனே! மேலே சொன்னதைத் தொடர்ந்து இனி நான் பாவத்தினாலேயே உலகில் பிறவி எடுத்த ஜீவன் மரிக்கிறான். கர்ப்பத்திலேயே கருவானது சிதைந்து விட்டால் ஒரு கிரியையும் செய்ய வேண்டியதில்லை. ஐந்து வயதுக்குட்பட்டு இருந்தால் சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி செய்து ஊர்க்குழந்தைகளுக்கு பால் பாயாசம் போஜனம் முதலியவற்றை வழங்க வேண்டும். குழந்தை இறந்த பதினொன்றாம் நாளும் பன்னிரெண்டாம் நாளும் சாஸ்திரத்தில் சொல்லியுள்ளது போலச் சில கர்மங்களை செய்யலாம். விருசொர்ச்சனமும் விசேஷ தானங்களையும் ஐந்து வயதுக் குழந்தை மரித்தர்காகச் செய்ய வேண்டியதில்லை. மரித்தவன் பாலகனாயினும் இளைஞனாயினும் விருத்தனாயினும், உதககும்ப தானத்தை அவசியம் செய்ய வேண்டும். மூன்றாம் வயது ஆவதற்குள் மரித்து விடுங் குழந்தைகளைப் பூமியில் புதைக்க வேண்டும். இருபத்து நான்காவது மாதம் முடிந்து இருபத்தைந்தாவது மாதம் பிறந்தவுடனே இறந்த குழந்தைகளை அக்கினியில் தகனஞ் செய்ய வேண்டும். பிறந்த ஆறு மாதங்கள் வரையில் சிசுவென்றும், மூன்று வயது வரையில் பாலகன் என்றும், ஆறு வயது வரையில் குமரன் என்றும், ஒன்பது வயது வரையில் பவுண்டகன் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. 
ஐந்து வயதுக்கு மேல் பன்னிரண்டு வயது நிரம்பியேனும் மரித்துவிட்டால் விருஷோந்தம் செய்ய வேண்டும். பால் தயிர் வெல்லம் சேர்த்து பிண்டம் போடல் வேண்டும். குடம்,குடை,தீபம் முதலியவற்றை தானம் செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால், மறுபிறவியில் மரமாகத் தோன்றுவான். அந்த மரம் நெல் குத்தும் உலக்கை செய்யப்பட்டு விடும். பூணுலை இடதுபக்கம் தரித்துக் கொண்டு, தருப்பையுடன் ஏகோதிஷ்டி போன்ற சிரார்த்தங்களைச் செய்தால் மரித்தவன் மறுஜென்மத்தில் நல்ல குளத்தில் பிறந்து தீர்க்காயுளுடன் வாழ்வான். நல்ல புத்திரனையும் பெறுவான். தனக்குத் தன்னுடைய ஆன்மாவே புத்திரனாக ஜெனித்தல் உண்மை! ஆகையால் புத்திரன் இறந்து விட்டான் என்றால், அந்தப் புத்திரனுக்கு அவனுடைய தந்தையும், தந்தை மாய்ந்தால் அவனுடைய புத்திரனும் கர்மம் செய்ய வேண்டும். ஒருவன், தனக்குத்தானே புத்திரன் ஆகிறான் என்று வேதஞ் சொல்கிறது.
தண்ணீர் நிறைந்த குடங்களை வரிசையாக வைத்து பகலில் அவற்றின் உள்ளே சூரியனைப் பார்த்தாலும், பௌர்ணமி இரவுகளில் சந்திரனைப் பார்த்தாலும் ஒவ்வொரு குடத்திலும் சந்திர சூரிய உருவங்கள் தெரிவது போல், ஒருவனே தனக்குப் பல புத்திரர்களாக பிறக்கின்றான். அதனால்தான் தைதந்தைகளைப் போன்ற உருவமும் அறிவும் ஒழுக்கமும் உடையவர்களாக விளங்குகின்றான். ஆயினும் குருடனுக்கு குருட்டுப் பிள்ளையும், ஊமைக்கு ஊமைப் பிள்ளையும், செவிடனுக்குச் செவிட்டுப் பிள்ளையும் பிறத்தல் என்பது இல்லை. எனவே தந்தைக்கு அமைந்துள்ள சிறப்பான அம்சங்களில் ஏதேனும் ஒன்று தயையனுக்கும் பொருந்திருக்கும் என்றார் திருமால்.
கருட பகவான், பரமபதியை வணங்கித் தொழுது ஜெகன்னாதா! பலவிதமான புத்திரர்கள் பிறக்கின்றார்கள். விலைமகளுக்கு பிறந்த புத்திரன் தந்தைக்கு கருமம் செய்யலாமா? அப்படி அவன் கருமஞ் செய்தால் அவனுக்கு நல்லுலகம் கிடைக்குமா? பெண் ஒருத்தியிருந்து, அவள் வயிற்றிலும் பிள்ளை இல்லை என்றால் அவன் மரித்தபின் அவனது கருமத்தை யார் செய்ய வேண்டும். இவற்றை விலக்கியருள வேண்டும் என்று கேட்டார். பக்தவச்சலனாகிய பரமன், கருடனை நோக்கி கூறலானார்.
புள்ளரசே! ஒருவன் தனக்கே தனது இல்லாள் வயிற்றில் பிறந்த பிள்ளையின் முகத்தைத் தன் கண்ணால் பார்த்து விட்டானென்றால் புத் என்ற நரகத்தை அந்த ஜென்மத்தின் இறுதியில் காணமாட்டான். மணம் புரிந்து கொண்ட ஒருவனுக்கும் ஒருத்திகுமே புத்திரன் பிறந்தால், அவள் குலத்துப் பிதிர்த் தேவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். ஒருவனுக்கு முதல் மகனே அதாவது தலைச்சவனே தன் தந்தை மரித்தால் அவனது ஈமக் கிரியைகளையும் கர்மங்களையும் செய்ய கடமைப்பட்டவன். மற்ற புத்திரர்கள் இருந்தால் இவர்கள் இறந்த தகப்பனைக் குறித்து சிறிது கர்மங்களும் சிரார்த்தாதிகளையுமே செய்யக் கூடும்.

ஒருவன் தனக்கு பௌத்திரன் பிறந்து அவனை எடுத்தப் பார்த்த பிறகே மரிப்பானாகில் இறுதிக் காலத்தில் அவன் நல்லுலகையடைவான். கொள்ளுப் பேரனைப் பார்த்த பிறகு மாண்டவன், அதைவிட நல்லுலகை அடைவான். பெண்ணைப் பெற்றவனுக்கு வாய்க்கும் மணமகன் அந்தப் பெண்ணுக்கு விலைகொடுக்காமல் திருத்துழாயோடு அவன் கன்னிகாதானம் செய்து கொடுக்க, அவளை மணம் புரிந்து கொண்டு அவளோடு வாழ்ந்து புத்திரனைப் பெறுவானேல் அந்தப் புத்திரன் தன் குலத்து இருபோதொரு தலைமுறையினரையும் கரையேற்றுவான்.அவ்வாறு பிறந்த புத்திரனே தாய்தந்தையருக்கு கர்மஞ் செய்யத்தக்க உரிமையுடையவன். ஒருவன் மரித்தால் அவனுடய காதற் கிழத்தியின் மகன் சிறிது கர்மம் மட்டுமே செய்யலாம். அவன் தான் செய்யத் தகுந்த சிறிதளவு கர்மத்தைச் செய்வதோடு நிற்காமல் முற்றும் செய்வானாயின், செய்தவனும் மரித்தவனும் நரகம் சேர்வார்கள். ஆனால் காமக் கிழத்தியின் மகன் தன்னைப் பெற்றவனைக் குறித்து ஆண்டுதோறும் சிரார்த்தம் செய்யலாம். பெற்றவனைக் குறித்தன்று. அவன் தலைமுறையில் உள்ளோரைக் குறித்து ஒன்றும் செய்யலாகாது.காமக் கிழத்தியின் புத்திரராயினும் அவர்களைப் பெற்றவன் இறந்தால் அவனைக் குறித்துத் தானங்களைச் செய்யலாம். ஆனால் அந்தணருக்குப் போஜனம் செய்யலாகாது. வேசிப்புதிரன் அன்ன சிரார்த்தம் செய்வானாயின் அவனும் சாப்பிட்டவனும் பிதுர்த்தேவரும் மீளா நரகம் எய்துவார்கள். நல்ல குடும்பத்தின் மூலம் பெறுகின்ற புத்திரனே சிரேஷ்டமானவன். ஆகையால், மக்கள் அனைவரும் சற்புதிரனையே பெறுதல் வேண்டும் என்றார் திருமால் சபிண்டிகரணமும் கதிபதிகளும் 

பகவான் அவ்வாறு பிதுர்க் கர்மம் செய்வதற்கு உரிமையுடவன் யார் என்பதைக் கூறிய பிறகு கருடன் அச்சுத பிரானைத் தொழுது வணங்கி ஒ சர்வ ஜெகன்னாதா! இறந்தவனைக் குறித்து சபிண்டிகரணம் செய்வதனால் இறந்தவன் அடையும் பலன் என்ன? அதை செய்யாவிட்டால் அவன் எந்தக் கதியை அடைவான்? எப்போதோ மரித்தவனுக்கும் அண்மையில் மரித்தவனுக்கும் பிண்டம் ஒன்று சேர்ப்பது எவ்விதம்? ஒன்று சேர்த்தால் அவர்கள் எக்கதியடைவார்கள்? அகமுடையான் உயிரோடு இருந்து அகமுடையாள் இறந்தால் அவளுக்குச் சபிண்டிகரணம் செய்வது எப்படி? இவற்றையெல்லாம் உலக நன்மையைக் கருதி அடியேனுக்குக் கூறியருள வேண்டும் என்று வேண்டினார். அதற்க்கு ஸ்ரீ கேசவபிரான் கருடனை நோக்கி கூறலானார்.
ஒ விநுதையின் மகனே! உலக வாழ்வைவிட்டு உடலையும் விட்டு மாண்டவனுக்கு வருஷம் முடியும் வரை சகலமும் சாஸ்திரப்படி செய்து சபிண்டிகரனமும் செய்து அவன் குடும்பத்தில் முன்னமே மாண்டவருடைய பிண்டத்தோடு இறந்தவனுக்குரிய பிண்டத்தையும் சேர்த்தல் வேண்டும். அவ்வாறு செய்தால், இறந்தவன் பிரேதத்துவம் நீங்கி, பிதுர்த் தேவர்களோடு சேர்ந்து கொள்வான். இறந்தவன் இறந்த பன்னிரெண்டாம் நாளிலும் மூன்றாவது பக்ஷிதிலும் ஆறாவது மாதத்திலும் சபிண்டிகரணம் செய்யலாம். தந்தை இறக்க, அவன் புத்திரன் தந்தைக்குரிய கருமங்கள் எல்லாவற்றையுஞ் செய்து சபிண்டிகரணம் மட்டுமே செய்யாமல் நிறுத்தி வைதிருக்குஞ் சமயத்தில் கர்மஞ் செய்த புத்திரனுக்கு கல்யாணஞ் செய்ய நேரிட்டால் உடனடியாகச் சபிண்டிகரனத்தைச் செய்த பிறகுதான், மணவினையைச் செய்தல் வேண்டும். சபிண்டிகரணம் செய்யும் வரையிலும் மாயந்தவன் பிரேதத்துவதுடனே இருப்பான். ஆகையால் கருமஞ் செய்தவனுக்கு சிறிது அசுத்த தோஷம் இருக்கும். ஆகையால் அவன் சுபகாரியங்களில் ஒன்றைக் கூட செய்யலாகாது. சந்நியாசிகளுக்குக் கூட பிக்ஷையிடல் கூடாது. பிண்டம் சேர்த்த பிறகு, இறந்தவன் பிரேதத்துவம் நீங்கி, பிதிர்த்துவம் பெற்று மகிழ்வான். ஆதலாலும், தேகம் அநித்திய மாதலாலும், கிருத கிருத்தியம் பலவிதமாதலாலும், பன்னிரெண்டாம் நாளிலேயே சபிண்டிகரணம் செய்வது மிகவும் உத்தமமாகும். ஔபாசணம் செய்வதற்கு, விக்கினும் நேரிட்டாளுங்க்கூடப் பன்னிரெண்டாம் நாளில் சபிண்டிகரணம் செய்யலாம். சபிண்டிகரணம் செய்த பிறகு தாய்தந்தையர் குலத்தில் மூன்று தலைமுறையில் உள்ளவருக்கும் சிரார்த்தம் செய்ய வேண்டும். சோடசம் சபிண்டிகரணம் முதலியவற்றைச் செய்தால் இறந்தவன் பிரேதத்துவம் நீங்கி பிதுர்களோடு சேர்ந்து மகிழ்ந்து இன்பமடைவான். 
பெண்ணைப் பெற்றவன் பொருள் சிறிதும் வாங்காமல், அந்தப் பெண்ணைக் கன்னிகாதானம் செய்திருந்தால், பின்பு அவன் இறந்ததால் அவளுடைய அகமுடையான் கோத்திரத்தைச் சொல்லி, சமஸ்கிரியைகளையுஞ் செய்தல் வேண்டும். இறைச்சியை விற்பவனைப் போலப் பெண்ணைப் பெற்றவன் , விலைப்பெற்று பெண்ணைக் கொடுத்திருந்தால், அவன் மாண்டுபோனால் அவளுக்கு அவளுடைய பிதாவின் கோத்திரத்தைச் சொல்லிக் கிரியைகளைச் செய்ய வேண்டும். பிதாவுக்கு புத்திரன் மட்டுமே கர்மம் செய்தல் வேண்டும். புத்திரன் இல்லாவிட்டால் இறந்தவனுடைய கனிஷ்டனாயினும், ஜெஷ்டனாயினும், அவர்களில் ஒருவனுடைய புத்திரனாயினும் கர்மம் செய்ய வேண்டும், மாயந்தவனுடைய சகோதரர்கள் பங்கு பிரித்துக் கொண்டு, தனித்தனியாக வாழ்வாராயின் அவனுடைய அகமுடையாள் கர்மம் செய்ய வேண்டும். இறந்தவனுக்கு புத்திரரும், மனைவியும் இல்லாவிட்டால், மரித்தவனுடைய தாயாதி செய்ய வேண்டும். தாயாதியும் இல்லாவிட்டால் அவனுக்கு மாணாக்கன் இருந்தால் அவன் கர்மம் செய்ய வேண்டும். மேற்சொன்னவர்களில் ஒருவருமே இல்லாவிட்டால், புரோகிதனே இறந்தவனுக்குரிய கர்மங்களை செய்யலாம். நாலைந்து பேர் சகோதரர்கள் இருந்து அச்சகொதரர்களில் ஒருவருக்கு மட்டுமே புத்திரன் இருந்தால், மற்ற சகோதரர்களும் புத்திரன் உடையவறேயாவர் அவ்விதமாகவே ஒருவருக்கு நாலைந்து மனைவியர் இருந்து அவர்களில் ஒருத்திக்கு மட்டுமே புத்திரன் இருந்தால் மற்ற மனைவியரும் புத்திரனுடயவறேயாவர். புத்திரன் பூணூல் அணிவதற்கு முன்னமே தந்தை இறந்தால் அந்தப் புத்திரனே கர்மம் செய்ய வேண்டும். புத்திரனைப் பெறாதவள் இறந்தால், அவளுக்கு அவளுடைய கணவனே கருமஞ் செய்ய வேண்டும். இறந்தவனுக்காக சபிண்டிகரணம் செய்த பிறகு தெரியாமையினாலாவது பிதுர்த் தேவர்கள் அனைவரையும் குறித்தல்லாமல் இறந்தவனை மட்டுமே குறித்துச் சிரார்த்தம் செய்தால், இறந்தவனும் சிரார்த்தம் செய்பவனும், சிரார்த்ததைச் செய்விக்கின்ற புரோகிதனும் நரகம் அடைவார்கள்.
இறந்தவனுக்குப் பலர் இருந்தாலும் ஓராண்டு வரையிலும் ஒருவனே கிரியைகள் அனைத்தையும் செய்ய வேண்டும். வருஷம் முடியும் வரை, நித்திய சிரார்த்ததொடு ஒரு குடத்தில் புனல் நிறைத்து உதககும்ப தானத்தை செய்தல் வேண்டும். கர்மனகளைத் தவறாமல் செய்தால், இறந்தவன் விமானம் ஏறி நல்லுலகம் அடைவான். பாட்டன் உயிரோடு இருக்கும் பொது தகப்பன் இறந்தால் அவனக்கு சபிண்டிகரணம் செய்யலாகாது. பாட்டன் இறந்த பிறகு அந்தப் பாட்டனுக்கு சபிண்டிகரணம் செய்து, பின்பு இறந்த தந்தைக்குச் செய்ய வேண்டும். பிதாவும் பிதாவைப் பெற்ற பாட்டியும் உயிரோடு இருக்கும் போது, தாயார் இறந்தால், அவளுக்கும் சபிண்டிகரணம் செய்யலாகாது. அவர்கள் இருவரும் இறந்த பிறகு, அவர்களுக்குச் சபிண்டிகரனஞ் செய்த பிறகுதான் தாய்க்குச் செய்ய வேண்டும்.பிறனுக்கு உடன்பட்டு, அவள் ஏவலால் தன் கணவனை இழந்து, பிறந்த குலத்துக்கும் தோஷம் உண்டாக்கும் பெண் பெயானவள் என்றுமே மீலாத நரகத்தை அடைவாள். கணவன் நல்லவனாயினும், கேட்டவனாயினும், அறிஞனாயினும், அறிவிளியாயினும் அவன் உயிரோடிருக்கும் போதும் அவன் இறந்த பிறகும் கணவனையே தெய்வம் என்று பக்தி செய்து கற்பு ஒழுக்கத்தில் நிலை நிர்ப்பவளே, உத்தமியாவாள். கொண்ட கணவனை மதிக்காமல் அலட்சியம் செய்து, தன் இஷ்டமாய் அலைபவள்,,சீசீ! இவளும் ஒரு பெண்ணா? என்று பலராலும் ஏசப்பட்டு மறுஜென்மத்தில் ஒரு பரம துஷ்டனைக் கணவனாக அடைந்து, அவனால் அடுத்தடுத்து கண்டிக்கப்பட்டும் துண்டிக்கப்பட்டும் வருந்தி மிகவும் துன்பமடைவாள்.


கணவன் தெய்வ வழிபாடு அதீதி ஆராதனை, விரதானுஷ்டம் முதலியவற்றைத் செய்வானாகில், அவன் மனைவியும் அவனுக்கு அனுகூலமாக யாவையுஞ் செய்ய வேண்டும். கணவனுக்கு பணி செய்வதே தர்ம பத்தினியின் தர்மமாகும். இதத் தருமம் எல்லாருக்கும் பொதுவானது. பெண்கள் உத்தமமான ஒருவனைத் தனது கணவனாக அடைந்து நல்ல மக்களைப் பெட்ட்ரும், குலவிருத்தி செய்து, தன்னைப் பேட்டர தாய்தந்தைக்கும் மணந்த்தவனுக்கும் புகழைத் தேடி, சுமங்கலியாகவே மரித்து உத்தமலோகத்தை அடைவார்கள். இறந்த பிறகும் துன்பப்படாமல் இன்பமடையும் பொருட்டு பன்னிரெண்டாம் நாள் சாஸ்திர விதிப்படி சபிண்டிகரணம் செய்து ஒரு வருடம் வரையிலும் நித்திய சிரார்த்தம் செய்ய வேண்டும் என்று திருமால் திருவாய் மலர்ந்தருளினார் பக்ருவாகனன் கருமம் செய்தல் 


கருடன், பரமபதியை தொழுது பரமபுருஷா! இதற்கு முன்பு பிரேத ஜென்மம் அடைந்தவனைக் குறித்த சரித்திரம் ஏதாவது உள்ளதா? அத்தகைய சரிதரமிருந்தால், அதைச் சொல்லியருள வேண்டும் என்று வேண்டினார்.
ஸ்ரீமந் நாராயண பகவான், கருடனை நோக்கி கூறலானார்:
வைன தேயனே! நீ இப்போது கேட்ட கேள்வி நல்லதொரு கேள்வியாகும். இதற்கு ஒரு கதை உள்ளது. கவனமாகக் கேள் என்றார். திரோதாயுகத்தில் பக்ருவாகணன் என்ற அரசன் இருந்தான். அவன் தன நித்தியகர்மங்களை நியமனத் தவறாமல் செய்து வந்தான். பெரியோர்களால் கொண்டாடப்பட்ட அவன் மகோதயம் என்ற நகரத்திலிருந்து உலகத்தை ஆண்டு வந்தான். அவன் ஒரு நாள் வேட்டையாட விரும்பி, தன படை வீரர்கள் சிலருடன் காட்டுக்குச் சென்று வேட்டையாடினான். அப்போது அவன் பார்வையில் புள்ளிமான் ஒன்று தென்பட்டு, அந்த மான் மீது அம்பெய்தான். அடிப்பட்ட அந்த மான் கீழே விழுந்து எழுந்து ஓடிற்று. மறுபடியும் அம்மான் மீது அம்பெய்தான். அந்த அம்பு குறிதவறாமல் அந்த மான் மீது பாய்ந்தது. அம்பு பாய்ந்த புண்ணிலிருந்து வழிந்து ஒழுகிய ரத்தமானது சிதறியது. அந்த மான் மீண்டும் ஓடி எங்கோ மறைந்தது. அரசன் மானின் உடலிலிருந்து தரையில் விழுந்திருந்த ரத்த சுவட்டைப் பின்பற்றிச் சென்று, நெடுந் தூரம் நடந்து, வேறு ஒரு வனத்தையடைந்தான். அங்கும் அந்த புள்ளிமான் காணாததாலும், வழிநடந்த சோர்வாலும் மிகவும் சோர்வடைந்தான். அரசனுக்குரிய பசியை விடத்தாகம் நெஞ்சை வறளச் செய்தது. தண்ணீருக்காக அந்த வனம் முழுவதும் ஒரு தடாகத்தை தேடியலைந்து, ஒரு தாமரைப் பொய்கையைக் கண்டு அதனுள்ளிறங்கி, நீராடி, புனல் பருகிக் களைப்பு நீங்கினான். அங்கிருந்த ஆலமரம் ஒன்றின் கீழ் அமர்ந்து, தன்னுடன் வேட்டையாட வந்தவர்களுக்காக காத்திருந்தான். நெடுநேரமாகி அந்திமங்கியது. இருள் கவிந்தது.

அப்போது எழும்பும் நரம்பும் தசையும் இல்லாத பிரேதம், பல பிரேதங்களோடு பயங்கரமாக கூச்சல் இருப்பதைக் கண்ட அரசன் பயமும் அதிர்ச்சியும் வியப்பும் அடைந்தான். அந்த பிரேத ஜென்மம், அரசனுடன் நெருங்கி வந்து அரசனே! உன்னைக் காணப் பெற்றதால் இந்தப் பிரேத ஜென்மம் நீங்கி நற்கதியை அடைவேன் என்று வணக்கமாக கூறியது. அரசன் அந்த பிரேத ஜென்மத்தைப் பார்த்து, நீ யார்? எவ்வாறு பேசுகிறாய்? உன் வரலாறு என்ன? அதை விளக்கமாக சொல்ல வேண்டும் என்று கேட்டான்.


உடனே அந்தப் பிரேத ஜென்மம், அரசனை நோக்கி, வேந்தனே! என் சரித்தரத்தை சொல்கிறேன், நீங்கள் கருணையுடன் கேட்க வேண்டும். வைதீசம் என்று ஒரு பட்டணம் உண்டு. அந்தப் பட்டணத்திலே இரதகள, துரகபதாதிகள் எப்போதும் நிறைந்திருக்கும். அந்த நகரத்தில் தான் நான் வைசிய குலத்தில் பிறந்து வளர்ந்து திருமணஞ் செய்து சுகமாக வாழ்ந்து வந்தேன். என் பெயர் தேவன்! நான் என் வாழ்நாள் முழுவதும் தேவாராதனை, பிரதானுஷ்டானம் செய்து வந்தேன். பெரியோர்களை வணங்கி தேவாலயம் பிரமாலையம் முதலியவற்றை சீர் செய்து புதுப்பித்தேன். ஏழைகளையும் அனாதைகளையும் அகதிகளையும் நாதனற்றவர்களையும் ரட்சித்து, சகல ஜீவர்களுக்கும் என்னால் இயன்ற அளவுக்கு நன்மைகளையே செய்து என் வாழ்நாள் முடிந்து நான் மடிந்தேன். புத்திரன் சுற்றத்தார் யாருமில்லை. அதனால் எனக்கு யாரும் கர்மம் செய்யாததால் நான் இத்தகைய பிரேத ஜென்மத்தை அடைந்தேன். இந்த பிரத ஜென்மத்தை நான் அடைந்து வெகு காலமாயிற்று. இந்த ஜென்மத்தொடு நான் மிகவும் வருந்துகிறேன். இறந்தவனுக்கு செய்ய வேண்டிய சமஸ்க்காரம், சஞ்சயனம், விருஷோர்சர்க்கம், சோடசடம், சபிண்டிகரணம், மாசிகம், சிரார்த்தம் முதலிய சடங்குகளை இறந்தவனின் மகன், அல்லது மற்ற உறவினர்கள் ஒருவருமே செய்யாவிட்டால், இறந்தவன் பிரேத ஜென்மத்தையே அடைவான். உலகத்தை ஆளும் உனக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. நீ குடிமக்களின் காவலன் உறவினன். ஆகையால், அடியேனுக்கு செய்தற்குரிய கர்மங்களை செய்து, இந்தப் பிரேத ஜென்மத்தை நீக்க வேண்டும். என்னிடம் சிறப்பான நவரத்தினங்களில் சிறந்த மாணிக்கம் இருக்கிறது. அதை பாதகாணிக்கையாக ஏற்றுக் கொள்வாயாக என்று பிரேத ஜென்மம் அரசனிடம் கொடுத்தது.

அரசன் அந்த பிரேத ஜென்மத்தை நோக்கி, பிரேதமே! நான் எப்படி கருமஞ் செய்ய வேண்டும்? இது எப்படி நீங்கும்? பிரேத ஜென்மத்தை நீ எவ்வாறு அடைந்தாய்! அவற்றை நீ எனக்கு சொல்ல வேண்டும், என்று அரசன் கேட்டான்.
அரசே! அந்தணோத்தர்களின் பொருள்களையும் தெய்வ சொத்துக்களையும், ஸ்த்ரி, பாலகன், அந்தகன், ஊமை, செவிடன் ஆகியோர்களின் பொருள்களை அபகரித்தவன் எவனாயினும், எத்தகைய தானங்களைச் செய்தவனாயினும் இத்தகைய பிரேத ஜென்மத்தை அடைவான். தன் கோத்திரத்தில் பிறந்த பெண்ணையும், பிறனுக்குரியவளையும் விரும்பியவன் பிரேத ஜென்மத்தை அடைவான். தாமரை மலர்களையும் பொன், பொருள், ஏழைகளை ஏமாற்றி பொருள்களை அடைந்தவர்களும் திருடினவர்களும் பிரேத ஜென்மத்தை அடைவார்கள். போரில் புறங்காட்டி ஓடியவனும், செய்நன்றி மறந்தவனும், நல்லது செய்தவனுக்கே தீமைகளைச் செய்தவனும் பிரேத ஜென்மத்தை அடைவார்கள் என்று கூறியது. பிரேத ஜென்மம் எப்படி நீங்கும்? அத்தகயவனுக்கு அத்தகைய கர்மத்தை செய்ய வேண்டும்? எவ்விதம் செய்ய வேண்டும் என்பதைச் சொல் என்றான். வேந்தனே! இதைப் பற்றி சுருக்கமாக சொல்கிறேன் கேள்! நாராயனபலி சகிதனாய், ஸ்ரீமான் நாராயனைப் போல திவ்விய மங்கள விக்கிரகம் ஒன்றைச் செய்து, சங்கு சக்கர, பீதாம்பரங்களைக் கொண்டு அலங்காரஞ் செய்து, கிழக்கு திசையில் ஸ்ரீதரனையும், தெற்குத் திக்கில் மஹா சூரனையும், மேற்குத் திசையில் வாமனனையும், வடக்கில் கதாதரனையும் நடுவில் பிரமருத்திரயரோடு ஸ்ரீ மஹா விஷ்ணுவையும் நிலைநிறுத்தி, ஆராதனை செய்து, வளம் வந்து வணங்கி, அக்கினியிலே ஹோமஞ் செய்து, மீண்டும் நீராடி விருஷோர்சர்க்கம் செய்து, பதின்மூன்று பிராமணர்களை வருவித்து, அவர்களுக்கு வேண்டியதைக் கொடுத்து பிருஷ்டாணன் போஜனம் செய்வித்து, சய்யாதனம், கடகதானம் கொடுத்தால், மரித்தவன் பிரேத ஜென்மத்திலிருந்து நீங்குவான் என்று பிரேதம் கூறியது.

மன்னனித் தேடிக் கொண்டிருந்த அவனது பரிவாரங்கள் அவன் அமர்ந்திருந்த தடாக கரைக்கு வந்து கொண்டிருந்ததை பிரேதம் பார்த்து மறைந்து விட்டது. இது என்ன விந்தை! சேனை வீரர்களை கண்டதுமே பிரேத ஜென்மம் மறைந்து விட்டதே! அரசன் தன் சேனைகளோடு தன் நகரத்தை அடைந்தான். பிறகு அந்த பிரேத ஜென்மத்தைக் குறித்து அதற்குரிய கர்மங்களையும் தர்மனகளையும் முறைப்படி செய்தான். உடனே அந்த பிரேதம் தனுக்கு நேரிட்ட ஆவிப் பிறவியை நீங்கி நல்லுலகை அடைந்தது என்று திருமால் கூறினார். 
அதைக் கேட்டதும் கருடன் ஜெகத்காரணனை நோக்கி, இவை தவிர வேறு என்ன கர்மங்களை செய்தால் பிரேத ஜென்மம் நீங்கும்? அதனையும் எனக்கு கூறியருள வேண்டும் என்று வேண்டினான். 
அதற்க்கு ஆழிவண்ணன், கருடா! எண்ணெய் நிறைந்த ஒரு குடத்தைப் பெரியோர்களுக்குத் தானம் கொடுத்தாலும் சகல் பாவங்களும் நசித்துப் பிரேத ஜென்மமும் நீங்கி விடும். மரித்தவன் இன்பமுடன் மீலாவுலகை அடைவான். குடங்களில் பாலும் நெய்யும் நிரம்ப வார்த்து திக்கு பாலகர்களையும் அஜசங்கரரையும் ஸ்ரீஹரியையும் ஆராதனை செய்து அக்குடங்களை தானம் கொடுப்பது மிகவும் சிறப்புடையதாகும் என்றார். எள் , தருப்பை முதலியன பற்றி 

கருடன், திருமாலைப் பணித்து, சர்வேசா! தாங்கள் இதுவரை கூறிய விசயங்களை மிகவும் சுருக்கமாக சொல்லிவிட்டீர்கள். கருமங்களைச் செய்யும் போது கருமஞ் செய்ய வேண்டிய ஸ்தலத்தை கொமயத்தால் ஏன் மெழுக வேண்டும். பிதுரர்களுக்குரிய கர்மங்களைச் செய்யும் போது மட்டும் எண்ணெய்யும், தர்ப்பைப் புற்களையும் உபயோகைப்பதேன்?கட்டிலில் படுதுரங்கியபடியே இறந்தவர்கள் நற்க்கதியடைய மாட்டார்கள். அப்படியானால் இறக்கும் நிலையை அடைந்தவன் எந்த இடத்தில் எப்படி இறத்தல் வேண்டும்? தானங்களை யெல்லாம் எப்படிச் செய்தல் வேண்டும். இவற்றையெல்லாம் அடியேனுக்குத் தெளிவாகவும் விளக்கமாகவும் கூறியருள வேண்டும் என்று பிரார்த்தித்தான். உடனே புருஷோத்தமன் கருடனை நோக்கிக் கூறலானார்:
வைனதேயா! நல்ல கேள்வி! சொல்கிறேன். நீயும் கவனமாக கேட்ப்பாயாக. புத்திரனைப் பெறாதவனுக்கு எந்த உலகத்திலும் இன்பமில்லை. தர்மமும் தவமும் செய்யவில்லை என்றால் அவனது மனைவியின் வயிற்றில் கர்ப்பம் தரிக்காது. அப்படியே தரித்தாலும் அது பத்து மாதம் நிரம்புவதற்கு முன்னாலேயே கரைந்து, கழிந்து போகும். கருவானது கரைந்து சிதைந்தால் புருஷனுக்கு நற்கதி கிடைக்காது. நன்மைகனைப் பெற்றவனே எல்லா உலகங்களிலும் நன்மையை அடிவான். 

கருமங்களைச் செய்யத் துவங்குவதற்கு முன்னாலேயே ஒரு குறிப்பிட்ட ஸ்த்தலத்தில் திருவலக்கால் துடைத்து சுத்தம் செய்து, கோமியத்தால் நன்றாக மெழுகிய பிறகே, எந்தக் கர்மத்தையும் செய்ய வேண்டும். சுத்தம் செய்யாமல் செய்தால், அரக்கரும், பூதங்களும், பிரேதங்களும், பைசாசங்களும், அங்கு செய்யவிடாமல் அக்கர்மங்களை முற்றுப்பெறாதவாரும் தடுத்து நிறுத்தி விடும். சுத்தம் செய்த ஸ்த்தலத்தில் கருமம் செய்தால் தேவர்கள் அங்கு வந்து அக்கருமங்களை நிறைவேறச் செய்வார்கள். தூய்மை செய்யாதிடத்தில் கர்மம் செய்தால் பயனை இறந்தவன் அடைய முடியாமற் போவதோடு இறந்தவன் நரகத்தை அடைய நேரிடும்.
எள் என்பது எனது வியர்வையிலிருந்து தோன்றியதாகையால் அந்தத் தானியம் மிகவும் பரிசுத்தமானதாகும். அந்த எள் இருவகைப்படும். கருப்பு எள், வெள்ளை எள் என்ற இரு வகையில் எந்த நிறமுள்ள எள்ளையேனும் தானங்களோடு சேர்த்துக் கொடுத்தால் அதிகப் பயன் உண்டாகும். சிரார்த்த காலத்தில் கருப்பு எள்ளைச் சேர்த்தால் பிதுர்த் தேவர்கள் மிகவும் திருப்தியடைவார்கள். சூசைப் புல்லாகிய தர்ப்பைப்புள், ஆதியில் ஆகாயத்தில் உண்டாயிற்று. அந்தத் தருப்பையின் இருகடையிலும் பிரமனும் சிவனும் அதன் நடுவே ஸ்ரீ ஹரியும் வாசஞ் செய்கின்றனர். தர்ப்பை இல்லாமல் சிரார்த்தம் எதுவும் செய்யலாகாது. பிராமணருக்கும், மந்திரத்திற்க்கும் தர்ப்பைக்கும், அக்கினிக்கும், திருத்துழாயக்கும் (துளசி) நிர்மாலிய தோஷமில்லை. ஆகையால் பயன்படுத்திய தர்ப்பைப் புல்லையே மீண்டும் உபயோகப்படுத்தலாம். 
ஏகாதசி விரதமும், திருத்துழாயாகிய துளசியும், பகவத் கீதையும், பசுவும் பிராமண சக்தியும், ஸ்ரீ ஹரியின் சரனுமும் ஆகிய இவையனைத்தும் சம்சார சாகரத்தை கடக்க வேண்டியவருக்கு நல்ல தெப்பமாகும். இறக்கும் நிலையை அடைந்தவன் கோமயத்தில் நன்றாக மெழுகப்பட்ட ஸ்த்தலத்தில் சூசைப் புல்லை பரப்பி அதன் மீது எள்ளை இறைத்து, அந்தத் தர்ப்பைப் புள்ளனையின் மீது சயனித்து, தருப்பைப் புல்லையும் துளசியையும் கையில் ஏந்தி, எனது நாமங்களை வாயார புகன்ற வண்ணம் மடிவாநாகில், அயனரனாதியருக்கும் அரிதாகிய நிரதிசிய இன்பவீடாகிய நமது உலகத்தை வந்தடைவான். மாய்ப்பவன் தர்ப்ப சயனத்தில் குப்புறப்படுத்தலாகாது. முதுகு கீழறவே சயனஞ் செய்தல் வேண்டும். உயிர் நீங்கும் முன்பே திருத்துழாயோடு, தனது நல்லுலக வாழ்வைக் கருதி தாங்களைஎல்லாம் கொடுத்து விட வேண்டும். அவற்றில் உப்பை தானம் செய்வது மிகவும் சிறப்பாகும். உப்பானது, விஷ்ணு லோகத்தில் உண்டானதாகும். ஆகையால் அதற்க்கு மகிமை அதிகம். மரித்தவன் உப்பைத் தானம் செய்வதால் சுவர்க்கலோகத்தை அடைவான் என்றார் திருமால்.

No comments:

Post a Comment