jaga flash news

Sunday, 14 February 2016

சிவன் கோயிலில் முதலில் வணங்க வேண்டியது அம்மனா? சுவாமியா?

சிவன் கோயிலில் முதலில் வணங்க வேண்டியது அம்மனா? சுவாமியா?
சிவன் கோயிலில் நுழைந்தவுடன் வாயிலில் அமைக்கப்பட்டுள்ள நந்தியின் பின்புறமாகச் சென்று அதன்
 சிரசு வழியாக சுவாமியை தரிசிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து நந்திக்கு இடதுபுறமாக வந்து 
நின்று உள்ளே நுழைவதற்கு நந்தியம்பெருமானிடம் அனுமதி கேட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும்.
உள்ளே நுழைந்தவுடன் முதலில் விநாயகர், சுப்ரமணியர் ஆகியோரை தரிசனம் செய்த பின்னர் நேரே 
மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கும் ஈஸ்வரனை வணங்க வேண்டும். மூலவர் சந்நதியிலிருந்து 
வெளியே வந்து பிரதட்சிணம் செய்த பின்னர் அம்பாள் சந்நதிக்குச் சென்று வணங்க வேண்டும். இதுவே 
சிவாலய தரிசன முறை. மதுரை மீனாக்ஷி அம்மன் ஆலயம் போன்ற அம்பிகையின் விசேஷத் 
திருத்தலங்களில் முதலில் அம்பாளை வணங்கிய பின்னரே ஸ்வாமி சந்நதிக்குச் செல்ல வேண்டும்

1 comment:

  1. தெரிந்த விஷயமே. ஆனாலும் அருமை.

    ReplyDelete