jaga flash news

Friday, 12 February 2016

மானுட சேவை

ராமவதாரம் முடிந்து ராமன் வானுலகு செல்லும்போது தன்னை உற்ற அனைவர்க்கும் மோட்சகதி கிடைக்கச் செய்கிறான்.
ஆனால் மூன்று பேர் மட்டும் ராமனுடன் மோட்சகதிக்கு இலக்காக மறுத்துவிடுகின்றனர்.
அவர்கள்தான் ஜாம்பவான், விபீஷணன், அனுமன் ஆகியோர்.
இவர்கள் மறுத்ததற்கு ஒரே ஒரு காரணம் தான்.
விண்ணுலகில் ராமபிரானுக்கு கோவில்கள் இல்லை. அங்கே ராமநாமத்தை ஜெபிக்கும் அவசியமோ நாம ஸ்மரணைக்கான தேவையோ இல்லை. அவசியமும் தேவையும் பக்திபுரிவதற்கு எதற்கென்று கேட்கலாம். அவர்கள் மூவரின் நோக்கமும் பூவுலகில் ராமநாமத்தை எப்போதும் ஜெபித்துக்கொண்டு, மானுடர்கள் உய்ய வழிகாட்டவேண்டும் என்பதுதான். சேவையில் வாழ்வை அர்த்தப்படுத்திக்கொள்வதே உயர்ந்த மானுட தேவலட்சணமாகும். விண்ணகத்தில் அதற்கு இடமேது?
விண்ணகத்தில் அவன் திருவடியை அடைந்து அவனோடு கலந்துவிட்டபின் எப்படி சேவையாற்ற முடியும்? உண்மையில் முக்தியை வேண்டுபவர்களைவிட இப்படி சேவையாற்றுபவர்களையே உலகம் பெரிதும் கொண்டாடுகிறது.
அனுமனும், “நான் பூவுலகில் சிரஞ்ஜீவியாக இருந்துகொண்டு, ராமநாம ஸ்மரணை என்னும் ஜீவசக்தியும் ஆன்ம சக்தியுமான இயக்கம் என்றும் தொடர்ந்தபடி இருக்க விரும்புகிறேன்’ என்கிறான். அதனாலேயே ராமபிரானும் அவனுக்கு அந்த வரத்தை அளிக்கிறார். இதனால் பூவுலகில் நித்ய சஞ்ஜீவியாக அதாவது பக்தி மூலிகையாக- அப்படியே நித்ய சிரஞ்சீவியாக- அதாவது அழிவேயில்லாதவனாக அனுமன் வாழ்ந்துவருகிறான்

No comments:

Post a Comment