jaga flash news

Tuesday 23 February 2016

ஶ்ரீ அரங்கநாதசாமி கோவில், காரமடை

 
ஶ்ரீ அரங்கநாதசாமி கோவில், காரமடை
அரங்கநாதசாமி கோவில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகில் உள்ள காரமடை என்னும் ஊரில் அமைந்துள்ளது. இக்கோவில் ஏறக்குறைய 1000 வருடங்கள் பழமை வாய்ந்தது. கொங்கு நாட்டு பகுதிகளில் இருக்கும் வைணவ தலங்களில் புகழ்பெற்றது. மூலவர் பெருமாள் சுயம்புவடிவில் சிவலிங்கம் வடிவில் காணப்படுகிறார் 
🌺தல வரலாறு 🌺
இப்பகுதியில் அதிகமாக காரைப் பசுக்கள் மற்றும் காரை மரங்கள் இருந்ததன் காரணமாக இவ்வூருக்கு இப்பெயர் வந்தது. ஒருகாலத்தில் இங்குள்ள தொட்டியர் பிரிவைச் சேர்ந்த மக்கள் ஆடு, மாடுகளை அதிக அளவில் வைத்து இருந்தனர். அந்த கூட்டத்தில் இருந்த ஒரு காரைப் பசு தனியாக சென்று வருவதைக் கால்நடைகளை மேய்க்கக் கொண்டு சென்ற ஒருவர் கண்டார். அவர் அம்மாட்டினைப் பின் தொடர்ந்து சென்றார். அது ஓரிடத்தில் காரைப்புதரில் பால் சொரிவதைப் பார்த்த அவர் கோபத்தில் புதரை வெட்ட ரத்தம் சொட்டியது. இதனைக் கண்ட அந்த தொட்டியர் தனது கண்பார்வையை இழந்தார். அவ்விடத்தில் கோவில் கட்டி வழிபடும்படி அசிரிரீ ஒலித்தது. அப்பசுவின் உரிமையாளருக்கும் கண்பார்வை திரும்பியது. சந்தனக் காப்பிட்டுப் பார்த்தபோது பெருமாள் சுயம்புவடிவில் காணப்பட்டார். அவ்விடத்தில் பெருமாளுக்குக் கோயில் எழுப்பப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இன்றும் பெருமாளின் மீது வெட்டுக்காயம் காணப்படுகிறது.

1 comment:

  1. ஒரு அற்புதம். பெருமாள் இருப்பதை வெளிப்படுத்திய விதம் எம்மை புல்லரிக்கச் செய்கிறது.

    ReplyDelete