jaga flash news

Saturday, 20 February 2016

சூடு சொரணை ஏதும் உனக்கு இல்லையா?”

புத்தர் ஒருமுறை கிராமங்கள் வழியாகப் போய்க்கொண்டிருந்தார். ஒரு கிராமத்தில் அவருக்கு ஏகப்பட்ட மரியாதை. அடுத்த கிரா மத்தில் ஏகப்பட்ட திட்டு, வசைமொழி, அவமானப் படுத்தல்கள். புத்தரோ அமைதி யாய் இருந்தார்.
அவமானப் படுத்தியவர்களுக்கே அவமானமாகி விட்டது. “யோவ்.. இவ்ளோ திட்டறோமே, சூடு சொரணை ஏதும் உனக்கு இல்லையா?” என்று கடைசியில் கேட்டேவிட்டார்கள். புத்தர் சிரித்தார்.

“இதுக்கு முன்னால் நான் போன கிராம த்தில் ஏகப்பட்ட பரிசுப் பொருட்கள் கொடுத்தார் கள். எனக்கு எதுவுமே தேவையில்லை என திருப்பிக் கொடுத்துவிட்டேன். இங்கே ஏகப்பட்ட வசை மொழிகள் தருகிறீர்கள். இதையும் நான் கொண்டு போகப் போவதில்லை. இங்கே தான் தந்துவிட்டுப் போகப்போகிறேன். எனவே என்னை எதுவும் பாதிக்காது” என்றாராம்.

நம் மனது முடிவெடுக்காவிட்டால், யாரும் நம்மை காயப்படுத்த முடியாது எனும் உளவியல் உண்மையைத் தான் புத்தர் தனது வாழ்க்கையின் அனுபவம் வாயிலாக விளக்குகிறார்...

2 comments:

  1. இதற்கு ஒரு கதை கூறுகிறேன்.

    A Father bade his Sons live in harmony.
    They would not listen 2 him. S he told them 2 bring a besom & said:

    "Break it."

    No matter how hard they tried, they could not break it. Then the father untied the besom & told them 2 break the twigs 1 by 1 with no trouble at all.

    It's the same with U, the father said.
    If U live in harmony, no 1 will get the better of U. But if U quarrel & split up, any1 will easily ruin U.

    ReplyDelete