jaga flash news

Friday, 4 March 2016

வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சம்பழம், மிளகாய் கட்டும் பழக்கம் மூடநம்பிக்கை இல்லையென்று இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது.

வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சம்பழம், மிளகாய் கட்டும் பழக்கம் மூடநம்பிக்கை இல்லையென்று இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது.
எலுமிச்சம் பழத்தில் உள்ள சிட்ரோனிக் அமில்கா (Cidronic amilga) என்னும் அமிலமானது மிளகாயில் உள்ள பென்னியோசிட் (Benniyocid) என்னும் காரத்துடன் இரசாயனப் பகுப்பாகி, மிதீரியட் (methiriyed) என்னும் ஒருவகை உந்து வாயுவை வெளியிடுகிறது. அந்த வாயுவை வாகனத்தின் பானட்டில் இருந்து ஸ்டியரிங் வரை செல்லும் எத்ஹோயிட் (Ethgoid) என்னும் கலப்பு மூலகத்திலான உலோகக்கம்பி வாகனத்தின் உட்பகுதிவரை கடத்துகிறது. அந்த வாயுவானது ஓட்டுனரை நித்திரை கொள்ளாமலும், உற்சாகத்துடனும் இருக்கச் செய்வதுடன், பிரேக் ஆயிலையும் வற்றாமல் பாத்துக்கொள்கிறது.
இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த வாயுவானது மேற்சொன்ன இரசாயனப் பகுப்பால் ஒரு வாரம் மட்டுமே கிடைக்கிறது. அதனால்தான் வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் ஏற்கனவே கட்டப்பட்டவை அகற்றப்பட்டு புதிதாகக் கட்டப்படுகின்றது..!
வெள்ளிக்கிழமைகளில் இதனைச் செய்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. பூமியானது சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் வடமத்திய ரேகையில் கடக்கக் கோட்டுக்கு தெற்கே 5 டிகிரி மேல்நோக்கி ஏறி, 3 டிகிரி கீழ்நோக்கி இறங்குவதால் இந்த இரசாயன பகுப்பு அதிகம் நடக்கிறது ..!!!
நம் முன்னோர்கள் மூடர்கள் அல்ல..! விஞ்ஞான அடிப்படையில் தான் செயல்பட்டிருக்கிறார்கள்..!
நம் முன்னோர் பெருமையை உரக்க சொல்வோம்..!

1 comment:

  1. இதைக் கடைப்பிடித்தாலும், சிலருடைய கார்கள் விபத்துக்குள்ளாகிவிடுகிறதே. ஒருவர் காரை எடுக்கும்போதெல்லாம், ஒரு எலுமிச்சை பழத்தை கார் டயரின் அடியில் வைத்து நசுக்கி தான் எடுத்துச் செல்வது வழக்கம். ஒருநாள், கண்மூடி கண்திறப்பதற்குள், ஒரு கடைக்குள், கார் புகுந்து, கடையில் உட்கார்ந்திருந்த வெட்டி ஆபீஸர்கள் மேல்கார் ஏறி, கடையும், கடையிலுள்ள ஆட்களின் கதையும் முடிந்தது. ஆகவே, தாங்கள் கூறுவது ஒரு பக்கம் உண்மை என்றாலும், நாம், செய்த வினைப்பயனுக்கு தகுந்தாற்போல் தான் ஒவ்வொன்றும் நடக்கும். வாகனத்தைப் பொறுத்தவரை, நாம் எவ்வளவு தான் கவனத்துடன் காரை ஓட்டினாலும், நமக்கு பொல்லாத நேரமாக இருந்தால், தூர போகிறவனும், நம் காருக்குள் வந்து புகுந்திடுவான். ஆகவே, நாம் காரை எடுக்குமுன், நான் ஏற்கனவே கூறியதுபோல், இறைவனிடம், பகவானே, காரில் நான் பொம்மை, இயக்குவது நீரே. என்னுடனே இருந்து, போக்கையும், வரத்தையும் எந்த இடையூருமின்றி காத்தருளும் அப்பனே!என்று சொல்லி காரை எடுத்துப் பாருங்கள். ஆனந்தமாக போய், ஆனந்தமாகவே திரும்பி வரலாம்.

    ReplyDelete