அம்மம்மா..யாரைத்தான் நம்புவதோ...?
ஜெனன லக்கினமும் ராசியும் ஆண் ராசிகளாக இருந்து, அவைகளில் பாவ கிரகங்கள் இருந்தாலும், பார்த்தாலும், அந்தப் பெண், ஆணின் குணம், ரூபம் உடையவளாகவும், பாவச்செயல்களை புரிபவளாகவும் இருப்பாள்.
ஆண் ஜாதகத்தில் ஏழாமிடத்தில் ராகு இருந்தால், கணவனிடம் பகைமை கொ(ல்)ள்ளும் மனைவியும், கேது இருந்தால் வழக்கு தொடுப்பவளான மனைவியும் அமைவாள்.
ஏழில், அல்லது பன்னிரண்டில் நிற்கும்
சந்திரன் நவாம்சத்தில் பாவ கிரகங்களின் வீட்டில் இருந்தாலும், சுக்கிரன் பாவிகளோடு கூடினாலும், ஜாதகனுக்கு அவனுடைய மனைவியே விரோதியாக இருப்பாள்.
புதன் குரு சுக்கிரன் பலமற்றவர்களாகி, அவர்களின் நடுவில் சனியும் இருந்து, மீதமுள்ள கிரகங்கள் பலம் பெற்று, லக்கினம் சரம் ஆனால், அந்தப் பெண், ஆண்களைப் போல நடத்தை உடையவளாவாள்.
பொதுவாக பெண்களின் ஜாதகங்கள் சிறப்பாக அமைய, பெண் ராசிகளாகிய சௌமிய ராசிகளிலே லக்கினம், ராசி அமைந்து, பெண் கிரகங்கள் வலுவடைந்து நின்றால், அந்தப் பெண்,
மான் ஜாதி பெண் எனப்படுவாள். அந்த வகைப் பெண்தான் பெண்களில் உயர்ந்தவள். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நால்வகை குணங்களும் கொண்டவள்.(இந்தக்காலத்தில் இது சந்தேகமே) லக்கினத்தை, ராசியை மற்றும் அதன் அதிபர்களை, சுக்கிரனை, பாபர்கள் பார்க்காமல், இணையாமல் இருக்கவேண்டும். முக்கியமாக சனி, செவ்வாய் கூடாது.
ஆனால் எல்லாப் பெண்களுக்கும் இது போல அமைப்பு ஏற்படாது. தற்போது நிறையபேர் ஆண்களைப்போலவும், ஏன் ஆண்களைவிட மோசமானவர்களாகவும் இருக்கிறார்கள்.(ஒரு சிலர் மட்டும்) அது அவர்களுக்கு ஜாதகத்தில் அமைந்த கிரகங்களே காரணம். பொதுவாக ரிஷபம், கடகம், கன்னி, மீனம் ஆகிய லக்கினங்களில் பிறந்த பெண்கள் நற்குணம் உள்ளவர்களாக இருப்பார்கள் என்று கிரந்தம் கூறுகின்றது. பெரும்பாலும் விருச்சிக, மகர லக்கினங்களில் பிறந்த பெண்களே கொடூர குணம் அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
ஆனால் இதை உறுதியாக கூறமுடியாது. ஏனென்றால் பிற சுப கிரகங்களின் பார்வை, சேர்க்கை, சாரம், பாகை, பரல்கள், நவாம்சநிலை, திசாபுக்தி பொறுத்து நிச்சயம் பலன்கள் வேறுபடலாம்.
No comments:
Post a Comment