jaga flash news

Saturday 11 April 2020

பிளம்ஸ்

தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களில் பிளம்ஸ் அதிகம் பயிராகிறது. சர்வதேச அளவில் பிளம்சை அதிகம் விளைவிக்கும் நாடாக சீனா முதல் இடம் பெறுகிறது.

அமெரிக்கா, செர்பியா, ரோமானியா போன்ற நாடுகளைவிட சீனாவில் இதன் உற்பத்தி அதிகம். மாறுபட்ட வண்ணங்கள், வடிவங்கள், சுவையிலும் வித்தியாசம் என பலவிதமாக காணப்படும் பிளம்சில் மொத்தம் 2 ஆயிரம் வகை இருக்கின்றன. அபரிமிதமான வைட்டமின்களைக் கொண்டது பிளம்ஸ்.

வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே ஆகிய சத்துகளும், வைட்டமின் பி 1, பி 2, பி 3, பி 6 மற்றும் வைட்டமின் இ சத்துகளும் நிறைந்துள்ளன.

பிளம்ஸ் சாப்பிடுபவர்களின் அணுக்களில் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கிறது என்றும், கொழுப்புச்சத்து குறைந்து இதயநோய் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. வைட்டமின் சி சத்து செறிந்த பழம் இது. எனவே, ஆரோக்கியமாக உடலை பராமரிப்பதை போலவே அழகைப் பராமரிக்க உதவும் சரும நல மருத்துவராகவும் பிளம்ஸ் செயல்படுகிறது. குறிப்பாக சருமத்தில் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கவும், கருப்பாக ஏற்பட்டிருக்கும் சின்னச்சின்ன திட்டுக்களையும் சரி செய்கிறது. இதனாலேயே பல்வேறு சரும நல பொருட்கள் தயாரிப்புகளில் பிளம்ஸ் பழத்தின் எசன்சை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

மனப்பதற்றம், மன அழுத்தம் கொண்டவர்கள் தொடர்ச்சியாக பிளம்ஸ் எடுத்துக் கொள்வதன் மூலம் நல்ல மாற்றத்தைக் காண முடியும் என சில ஆய்வுகளும் நிரூபித்துள்ளதாக கூறுகிறார்கள். நோய்த்தொற்று மற்றும் நோய் அழற்சி ஆகியவற்றில் இருந்து நம்மைக் காக்கும் வேலையை பிளம்சில் செறிந்திருக்கும் வைட்டமின் சி செய்கிறது.

நார்ச்சத்து நிறைந்த கனி என்பதால் மலச்சிக்கல் உள்ளவர்கள், குடல் பிரச்சினை, உபாதைகள் மற்றும் செரிமான பிரச்சினை உள்ளவர்களுக்கு பிளம்ஸ் பிரச்சினைகள் தீர்க்கும் அருமருந்து.

விட்டமின்கள் : -

இது வைட்டமின்கள் நிறைந்த பழம் என்பதைப் போலவே பொட்டாசியம், ப்ளூரைடு, பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் தாமிரச்சத்துகள் கொண்டதாகவும் விளங்குகிறது. உடலில் காயங்கள் ஏற்படும்போது அவற்றை எதிர்கொண்டு, விரைவில் ஆற்றும் மருந்தாக பிளம்சில் உள்ள மருத்துவ குணம் அமைகிறது. இரும்புச்சத்து நிறைந்திருப்பதும், சீரான ரத்த ஓட்டமும் கூந்தல் வளர்ச்சிக்கான அடிப்படை மருத்துவக் காரணிகள். எனவே, பிளம்ஸ் கூந்தல் பிரச்சினைகளை நீக்கும் மருந்தாகவும் இருக்கிறது. முடி உதிர்வதையும் தடுக்கிறது.

மினரல் சத்துக்கள் :-

பிளம்ஸ் எடுத்துக்கொள்பவர்களுக்கு முக்கியமாக இதில் உள்ள மினரல் சத்துகள், அதில் உள்ள இரும்புச்சத்துகள் ரத்த அணுக்களுக்கு துணையாக இருப்பதுடன் ரத்தத்தை தூய்மைப்படுத்தும் பணியையும் இப்பழம் செய்கிறது. ஏராளமான வைட்டமின்களும், மினரல்களும் இருப்பதால் கர்ப்பிணிகளின் நலன் காக்கும் பழம் இது. கர்ப்பிணியின் ஆரோக்கியம் காப்பதைப் போலவே கருவில் வளரும் குழந்தைக்கு கண் பார்வை, எலும்பு மற்றும் திசுக்களின் சிறப்பான உருவாக்கத்துக்கும் பிளம்ஸ் உதவுகிறது.

போலிக் அமிலம்:-

போலேட் எனப்படும் வேதிப்பொருளை உடலுக்கு தரும் பணியை போலிக் அம்னிலங்கள் செய்கின்றன. போலிக் அமிலங்கள் கர்ப்பிணி பெண்களுக்கும் அவர்கள் வயிற்றில் வளரும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் உடல் வளர்ச்சிற்கும் மிகவும் அவசியமானதாகும். போலிக் அமிலங்கள் நிறைந்த பிளம்ஸ் பழங்களை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வருவது நல்லது.

சிறுநீரகம் :-

நமது ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சு பொருட்களையெல்லாம் வடிகட்டி சிறுநீரக உடலில் இருந்து வெளியேற்றும் பணியை சிறுநீரகங்கள் செய்து வருகின்றன. பிளம்ஸ் அடிக்கடி சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் பலம் பெற்று அதன் செயல்பாடுகள் சிறக்கும். உடலில் இருக்கும் நச்சுக்கள் அனைத்தையும் சுத்திகரித்து சிறுநீர் வழியாக வெளியேற்றும். மூத்திர அடைப்பை போக்கும்

தழும்புகள் :-

ரத்தக்காயங்கள் உடலில் ஏற்பட்டு அது புண்ணாக மாறி பின்பு ஆறும் போது தோலில் தழும்புகள் ஏற்படுகிறது. இப்படி காயங்கள் ஏற்பட்டு அக்காயங்கள் குணமாகி வரும் சமயங்களில் பிளம்ஸ் பழங்களை அதிகம் சாப்பிடுவதால் காயம்பட்ட இடத்தில் உள்ள திசுக்களில் அதிக ரத்த ஓட்டம் கிடைத்து, பெரிய அளவில் தழும்புகள் ஏற்படாமல் சரி செய்கிறது.

தலைமுடி :-

பிளம்ஸ் பழங்கள் தலைமுடிக்கு பல வகைகளில் நன்மைகளை புரிகிறது. இந்த பழங்களில் தலைமுடி உதிர்வை தடுக்கும் வைட்டமின் ஏ சத்துகள் அதிகம் உள்ளதால் முடிகொட்டுவதை தடுக்கிறது. பொடுகு போன்றவை தலையில் உருவாகாமலும் தடுக்கிறது. தலைமுடிகளின் அடர்த்தியும் கூடுகிறது. இளம் வயதிலேயே தலைமுடி நரைக்கும் பிரச்சனையையும் போக்குகிறது.

உடல் எடை : -

அதிக உடல் எடையால் பல வித உடல் உபாதைகளுக்கு வழி வகுக்கிறது. உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் பல வகையான நன்மை தரும் உணவுகளை உட்கொள்ளும் போது பிளம்ஸ் பலன்களையும் சேர்த்து சாப்பிடுவது நல்லது. உடலில் இருக்கும் செல்களின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பதால் உடலில் கொழுப்புகள் அதிகம் சேராமல் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவுகிறது.

ரத்தம் :-

பிளம்ஸ் பழங்களில் இருக்கும் வைட்டமின் சி சத்து நமது உடலில் இருக்கும் ரத்தத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இந்த பழத்திலுள்ள வைட்டமின் சத்து ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லட்ஸ் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்கிறது. உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ரத்தம் சீராக சென்று வரும் வகையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

ஆஸ்டியோபொரோசிஸ் :-

ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புகள் வலுவிழந்து தேய்மானம் அடையும் ஒரு நோயாகும். இது பெரும்பாலும் மாதவிலக்கு முற்றிலும் நின்ற ஐம்பது வயதிற்கு மேற்பட்ட அதிகம் பெண்களையே தாக்குகிறது. பிளம்ஸ் பழத்தில் “பிளவினாய்ட்ஸ்” எனும் வேதிப்பொருள் அதிகம் நிறைந்துள்ளது இது பெண்களுக்கு ஆஸ்டியோபொரோசிஸ் நோய் ஏற்படும் வாய்ப்புகளை வெகுவாக குறைகிறது.

பதட்டம் :-

தேவையற்ற கவலைகள் மற்றும் கற்பனையான எதிர்பார்ப்புகளால் சிலரின் மனதில் பயம் அதிகரித்து பதட்டமும், படபடப்பு தன்மையும் அதிகம் ஏற்படுகிறது. பிளம்ஸ் பழங்களில் மூளை செல்கள் மற்றும் நரம்புகளில் ஏற்படும் இறுக்கம், அழுத்தம் போன்றவற்றை குறைத்து மனதில் ஏற்படும் வீணான பதட்டத்தை குறைக்கிறது.

பிளம்ஸின் மகத்துவங்கள் :-

எளிதில் ஜீரணமாகக்கூடிய பிளம்ஸில் நார்ச்சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள இசாதின்(Isathin) என்ற வேதிப்பொருள் ஜீரண மண்டலத்தை நன்றாக செயல்பட வைத்து மலச்சிக்கல் குறைபாட்டை சரி செய்யும்.

வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் சத்துக்கள் பிளம்ஸ் பழத்தில் சிறப்பாகவே உள்ளன. வைட்டமின் ஏ, பார்வைத்திறனுக்கு மிக அவசியமானது. நுரையீரல் மற்றும் வாய் புற்றுநோய்களில் இருந்து காக்கும் ஆற்றலும் வைட்டமின் ஏ-க்கு உள்ளது.

பொட்டாசியம், ஃபுளோரைடு, இரும்பு போன்ற அத்தியாவசிய தாது உப்புக்கள் மிகுதியாக உள்ள பிளம்ஸ் பழத்தில் சிறிதளவு வைட்டமின்-கே உள்ளது.

இது ரத்தம் உறைதலுக்கு உதவக்கூடியது. மேலும், ரத்தத்தை விருத்தி செய்வதோடு, ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது.

மேலும், ரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களை கரைக்கும் குணமுடையது.

நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும். இளவயதிலேயே முதுமைத் தோற்றத்துடன் காட்சியளிப்பவர்கள் பிளம்ஸ் சாப்பிடுவதால், உடல் புத்துணர்வு பெறும்.... %

‘புதிய வைரஸ் தாக்குதல்கள் அதிகரித்திருக்கும் நிலையில், அவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள பிளம்ஸ் சாப்பிடுங்கள்‘ என்கிறது ஜப்பானின் ஆய்வு ஒன்று.

குறிப்பு :-

 ( பிளம்ஸ் பழத்தில் இருக்கும் ஆக்சலேட் தாது சிறுநீரக் கல் கோளாறு உடையவர்களுக்கும், பித்தப்பையில் கல் பிரச்சினை கொண்டவர் களுக்கும் அவர்களுடைய நோய் தொற்றை அதிகமாக்கும். எனவே, இவர்கள் மட்டும் பிளம்சைத் தவிர்ப்பது நல்லது. ) 

மற்றபடி நார்மல் ஆக உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பழத்தை தோலுடன் சாப்பிடலாம்.... %

நன்றி ... > வாழ்க வளமுடன் ... %

No comments:

Post a Comment