அகத்தியர் சய சூரணம்
இருமல் ஆஸ்துமா தொண்டை(டான்சில்) வீக்கத்திற்கு..
அகத்தியர் கௌமதி நூல் 400 சுவடி முறை
பாடல் எண் :22,23,24
செய்பாகம்:
சித்தரத்தை-200கிராம்
கடுக்காய் -200 கிராம்
திப்பிலி-200கிராம்
வால் மிளகு-400கிராம்
சாதிக்காய் 150 கிராம்
மேற்கண்ட கடைசரக்குகளை புடைத்து தூசி நீக்கி சிறிது பசுநெய் விட்டு பொன்னிறமாக வறுத்து தூள் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேற்கண்ட சூரணத்தை கால் (அ) அரைதேக்கரண்டி வீதம் தேனில் அல்லது பனங்கற்கண்டு கலந்து சாப்பிட நாட்பட்ட சளி இருமல் பீனிசம் சுவாசகாசம் (ஆஸ்துமா) மூக்கடைப்பு தொண்டையில் சதை அடைப்பு(டான்சில்) கபத்தினாலும் வாய்வினால் வரும் மூச்சுதிணறலுக்கு குணமளிக்கும் ஒர் அரு மருந்து.
பசியின்மை நாருசியின்மை குமட்டல் வாந்தி வயிறு உப்பிசம் பொருமல் மருந்தீடு (இடுமருந்து) காமாலை ரத்த சோகை வாய்வு பிடிப்பு அண்ட வாயு (விரைவாதம்)குடல் வாய்வு (ஹெர்னியா) என சகல வாய்வுகளும் தீரும்.
சுவாச உறுப்புகளுக்கு பலமும் தீங்கு விளைவிக்கும் நுண்கிருமிகளுக்கு(வைரஸ் பாக்டீரியா ) தடுப்பாகவும் நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கும் ஓர் சித்தமருந்து.
சமயோசிதம் போல் பிணிக்குகேற்ப இதர துணை மருந்துகளுடன் கலந்து கொடுக்க நல்ல பலன்களை தரும் .
சித்தர் நியூஸ்✍
No comments:
Post a Comment