நெறி கட்டுதல்|தான் நிணநீர் முடிச்சு
கைகள் அடிபடும் போதோ அல்லது கால்கள் அடிபடும் போதோ அக்குள் மற்றும் தொடைப் பகுதிகளில் சிறு சிறு முடிச்சுகள் தோன்றுகின்றன. அடிபட்ட பகுதி சரி செய்யப்படும் வரை இந்த முடிச்சுகள் அங்கு காணப்படுகின்றன. இவற்றை கிராமங்களில் நெறி கட்டுதல் என்று அழைப்பார்கள். இவைகள் தான் நிணநீர் முடிச்சுகள்.
இரத்த ஓட்டத்தில் கலந்து உடலில் பரவ முயலும் நச்சுப் பொருட்கள், அந்நியப் பொருட்கள் போன்ற உடலுக்கு ஊறு விளைக்கும் பொருட்களை வடிகட்டி அழிக்கும் வேலையை நிணநீர் முடிச்சுகள் செய்கின்றன.
அடிப்படை உடலியல் - 13
நிண நீர் மண்டலம்
நம் உடலில் அமைந்துள்ள இரத்தத்தைப் போன்ற இன்னொரு இணைப்புப் பொருள் தான் – நிணநீர். இரத்த ஓட்டம் போன்றே நிணநீர் ஓட்டமும் நம் உடல் முழுவதும் நடைபெறுகிறது. இரத்தத்தின் பணிகளில் பங்குபெறும் நிணநீர், நம் உடலுக்குள் வரும் அந்நியப் பொருள் எதிர்ப்பை முக்கியப் பணியாகக் கொண்டுள்ளது.
அதே போல, நம் உடலில் அமைந்துள்ள புலன் உறுப்புகள் உடலின் வெளித்தொடர்புக் கலன்கள் ஆகும். உடல் புற உலகோடு தொடர்பு கொள்வதே புலன் உறுப்புகள் வழியாகத்தான். இவ்விரண்டு தொகுப்புகள் குறித்து விரிவாக அறியலாம்.
நிணநீர்
நிணநீர் என்பது இரத்தத்தின் பணிகளில் பங்கேற்கும் வடிநீர் ஆகும். இது இரத்தத்தில் இருந்து கசிந்து நுண்ணிய இரத்தக் குழாய்களான தந்துகிகள் வழியாக வெளியேறுகிறது.
நிணநீர் இரத்தம் போன்று சிவப்பு நிறம் அல்ல. இது நிறமற்ற திரவமாகக் காணப்படுகிறது. இரத்தத்தைப் போன்றே ஒவ்வொரு திசுவிலிருந்தும் உருவாகியிருக்கும் கழிவுப் பொருட்களை நிணநீர் திரும்ப எடுத்துச் செல்கிறது.
இது இரத்தத்தில் உள்ள பிளாஸ்மா எனும் திரவப் பொருளிலிருந்து பிரிந்து வருவதால் பிளாஸ்மா போன்றே இருக்கும். ஆனால், நிணநீர் பிளாஸ்மாவை விட கூடுதலான கொழுப்புப் பொருட்களைக் கொண்டுள்ளது. இது காரத்தன்மை வாய்ந்தது. நிணநீரில் இரத்த வெள்ளை அணுக்களின் ஒரு வகையான லிம்போசைட்டுகள் காணப்படுகின்றன. இரத்த தட்டுகள் எனப்படும் பிளேட்லட்டுகள் காணப்படுவதில்லை.
மிக நுண்ணிய குழாய்களாகக் காட்சியளிக்கும் நிணநீர் தந்துகிகள், அதிலிருந்து கொஞ்சம் பெரியதாக இருக்கும் நிணநீர்க் குழாய்கள், இன்னும் கொஞ்சம் பெரிய அமைப்பைக் கொண்டுள்ள நிணநீர்ப் பெருங்குழாய் மற்றும் முடிச்சுகள் போல தோற்றமளிக்கும் நிணநீர் முடிச்சுகள் ஆகிய பகுதிகளைக் கொண்டு நிணநீர் மணடலம் இயங்குகிறது.
நிணநீர் மண்டலத்தின் பணிகள்
1. நிணநீர் முடிச்சுகள் நம் உடலுக்குள் வரும் அந்நியப் பொருட்களை எதிர்த்துப் போராடுகிறது. அவற்றை வடிகட்டி, எதிர்த்து அழிக்கிறது.
2. மண்ணீரலின் சக்தியோடு இயங்கும் நிணநீர் மண்டலத்தில் நிணநீர் முடிச்சுகள் இரத்த வெள்ளை அணுக்களின் ஒரு வகையான லிம்போசைட்டுகளை உருவாக்குகின்றன.
3. திசுக்களில் அதிகமாகப் பரவியிருக்கும் திரவத்தை பிரித்தெடுத்து, மறுசுழற்சிக்கு அனுப்புகிறது.
4. திசுக்களின் கழிவுப் பொருட்களை பிரித்தெடுத்து, இரத்தத்திற்கு அனுப்புகிறது.
5. நிணநீர் முடிச்சுகளில் பிறக்கும் லிம்போசைட்டுகள் உடலுக்குள் நுழையும் அந்நியப் பொருட்களை விழுங்கி விடுகின்றன.
நிணநீர் மண்டலம்
நிணநீர் மண்டலம் நிணநீர் தந்துகிகள், நிணநீர்க் குழாய்கள், நிணநீர்ப் பெருங்குழாய் மற்றும் நிணநீர் முடிச்சுகள் ஆகிய அமைபுகளைக் கொண்டதாகும்.
1. நிணநீர் மண்டலம் துவங்கும் இடம் – நிணநீர் தந்துகளில் இருந்துதான். மிக நுண்ணிய அமைப்பைக் கொண்ட தந்துகிகள் மிக மெல்லிய சுவர்களைப் பேறொருக்கின்றன. இரத்த தந்துகிகளைப் போன்ற அமைப்பை நிணநீர் தந்துகிகள் கொண்டுள்ளன.
2. இரத்த நுண்குழல்களில் இருந்து நிணநீர் தந்துகிகளுக்கு நிணநீர் கசிந்து வந்து சேருகிறது.
3. நிணநீர் தந்துகிகள் – நிணநீர் குழாய்களில் இணைகின்றன. நிணநிர் குழாய்களில் தான் நிணநீர் முடிச்சுகள் அமைந்துள்ளன.
4. நிணநீர் குழாய்கள் மிகப் பெரிய அமைப்பாக மாறி, வலது நிணநீர்ப் பெருங்குழாய் மற்றும் மார்பு நிணநீர்ப் பெருங்குழாய்களுடன் இணைகிறது.
5. இரு நிணைநீர்ப் பெருங்குழாய்களும் சப்கிளாவியன் வெயின் என அழைக்கப்படும் மேற்பெரும் சிரையுடன் இணைகிறது.
6. நம் சிறுகுடலில் அமைந்திருக்கும் குடல் உறிஞ்சிகளின் வழியாக கொழுப்பை கிரகிக்கும் அமைப்பு லாக்டெல்ஸ் ஆகும். லாக்டெல்சின் வழியாக செரிக்கப்பட்ட கொழுப்பு உறிஞ்சப்பட்டு, நிணநீர் மண்டலத்தை வந்தடைகிறது.
நிணநீர் முடிச்சுகள்
நிணநீர்க் குழாய்களில் அங்கங்கே சிறு விதைகள் போல காட்சியளிக்கும் நிணநீர் முடிச்சுகள் அமைந்துள்ளன.
நிணநீர் முடிச்சுகள் கழுத்து, மார்பு, வயிறு, அக்குள் மற்றும் தொடைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. இரத்தத்தில் நுழையும் அந்நியப் பொருட்களுக்கு எதிரான எதிர்பொருட்களை உருவாக்குகின்றன நிணநீர் முடிச்சுகள். இரத்த வெள்ளையணுக்களின் வகைகளான லிம்போசைட்டுகள் மற்றும் மோனோ சைட்டுகள் ஆகிய அணுக்களை உற்பத்தி செய்கின்றன.
இரத்த ஓட்டத்தில் கலந்து உடலில் பரவ முயலும் நச்சுப் பொருட்கள், அந்நியப் பொருட்கள் போன்ற உடலுக்கு ஊறு விளைக்கும் பொருட்களை வடிகட்டி அழிக்கும் வேலையை நிணநீர் முடிச்சுகள் செய்கின்றன.
கைகள் அடிபடும் போதோ அல்லது கால்கள் அடிபடும் போதோ அக்குள் மற்றும் தொடைப் பகுதிகளில் சிறு சிறு முடிச்சுகள் தோன்றுகின்றன. அடிபட்ட பகுதி சரி செய்யப்படும் வரை இந்த முடிச்சுகள் அங்கு காணப்படுகின்றன. இவற்றை கிராமங்களில் நெறி கட்டுதல் என்று அழைப்பார்கள். இவைகள் தான் நிணநீர் முடிச்சுகள்.
தொண்டைப் பகுதியில் அமைந்திருக்கும் டான்சில்களும் நிணநீர் முடிச்சுகள் தான். இவை தலைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை வடிகட்டி, கழிவுகள் மற்றும் அந்நியப் பொருகளில் இருந்து தலையின் உறுப்புகளை குறிப்பாக மூளையைப் பாதுகாப்பதும் – நிணநீர் முடிச்சுகள் தான்.
பிளாஸ்மா புரதங்களை குறிப்பாக குளோபுலினை சுரப்பதும் நிணநீர் முடிச்சுகள் தான். நிணநீர் முடிச்சுகள் நிணநீர் சுரப்பிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
நிணநீர் பெருங்குழாய்கள்
நிணநீர் மண்டலத்தை இரத்த ஓட்டத்தோடு இணைக்கும் வேலையைச் செய்பவை நிணநீர்ப் பெருங்குழாய்கள் ஆகும். இரண்டு நிணநீர் பெருங்குழாய்கள் நம் உடலில் அமைந்துள்ளன.
1. மார்பு நிணநீர்ப் பெருங்குழாய்
2. வலது நிணநீர்ப் பெருங்குழாய்
மார்பு நிணநீர்ப் பெருங்குழாய்
நமது உடலில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து சேரும் நிணநீர்க்குழாய்கள் இறுதியில் நிணநீர்ப் பெருங்குழாயில் முடிவடைகின்றன. இரு கால்கள், வயிற்றுப் பகுதி, இடது கை, மார்பின் இடது பகுதி, தலை, கழுத்து, முகம் போன்ற உறுப்புகளின் இடது புறமிருந்து உற்பத்தியாகும் நிணநீர் மார்பு நிணநீர்ப் பெருங்குழாய்க்கு வந்து சேர்கிறது.
வலது நிணநீர்ப் பெருங்குழாய்
இது மார்பு நிணநீர்ப் பெருங்குழாயை விட அளவில் சிறியதாகக் காணப்படுகிறது.
மார்பில் வலது புறம், வலது கை, வலது கால், தலை, கழுத்து ஆகியவற்றின் இடது புறம் உற்பத்தியாகும் நிணநீர் வலது நிணநீர்ப் பெருங்குழாய்க்கு வந்து சேர்கிறது.
நிணநீர் உறுப்புகள்
நிணநீர் மண்டலத்தில் இன்னும் சில உறுப்புகளும் அமைந்துள்ளன. இவைகளும் நிணநீர் முடிச்சுகள் அல்லது சுரப்பிகளைப் போன்றவை ஆகும். நிணநீர்த் திசுக்களால் ஆன இவ்வுறுப்புகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.
1. மண்ணிரல்
2. தைமஸ்
3. டான்சில்ஸ்
4. அப்பெண்டிக்ஸ் எனும் குடல்வால்
5. குடல் நிணநீர் அமைப்பு
மண்ணீரல்
மண்ணீரலை நிணநீர் மண்டலத்தின் தலைவன் என்று கூறுவார்கள். நேரடியாக முக்கியத்துவம் பெறாத உறுப்பாக மண்ணீரல் காணப்படுகிறது. ஆனால், உடல் இயக்கத்தில் மறைமுகமாகப் பங்கு கொள்ளும் மண்ணிரலின் பணிகள் உடல் இயக்கத்திற்கு அடிப்படையானவை. எதிர்ப்பு இயக்கத்தை ஒழுங்கு செய்பவை.
மண்ணீரலின் பணிகளைப் பார்க்கலாம்.
1. மண்ணிரல் அனைத்துவிதமான இரத்த செல்களையும் உற்பத்தி செய்கிறது. தாயின் கர்ப்பப் பையில் சிசு வளரும் போது மண்ணீரல் நேரடியாக இரத்த செல்களை உற்பத்தி செய்கிறது. குழந்தை பிறந்த பிறகு நேரடியாக அல்லாமல் பல்வேறு விதங்களில் செயல்பட்டு இரத்த அணுக்களை உற்பத்தி செய்கிறது. உதாரணமாக, எலும்பு மஜ்ஜைக்கு சக்தியளிப்பதன் மூலம் இரத்த சிவப்பணுக்களையும், நிண நீர் முடிச்சுகளை பராமரிப்பதன் மூலம் வெள்ளை அணுக்களில் சில வகைகளையும் மறைமுகமாக உற்பத்தி செய்கிறது.
2. வயது முதிர்ந்த இரத்த சிவப்பணுக்களை மண்ணீரல் அழிக்கிறது.
3. மண்ணீரல் அமைந்துள்ள ஹிஸ்டோசைட்ஸ் செல்கள் அந்நியப் பொருட்களை அழிக்கும் வேலையைச் செய்கின்றன.
4. அந்நியப் பொருட்களுக்கும், உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களுக்கும் எதிரான எதிர்ப் பொருட்களை உற்பத்தி செய்கிறது.
5. செரிமான இயக்கத்தில் மறைமுகப் பங்காற்றும் மண்ணீரல் சக்தியைப் பிரித்தெடுக்கும் பணியில் பங்கேற்கிறது.
6. உடல் முழுவதும் அமைந்திருக்கும் மென் திசுக்களாலான உள்ளுறுப்புகளின் நிலைத்தன்மைக்கு மண்ணீரல் சக்தியளிக்கிறது.
7. உடலின் எந்தப் பகுதி பாதிப்புக்குள்ளானாலும் அங்கு நிணநீர் குவிந்து வீக்கத்தை ஏற்படுத்தி, அப்பகுதியைச் சீர் படுத்தும் பணியை மண்ணீரல் வழிநடத்துகிறது.
பிற நிணநீர்த்திசு உறுப்புகள்
தைமஸ், டான்சில்ஸ் மற்றும் குடல்வால், சிறுகுடல் பகுதிகளிலும் நிணநீர்த் திசுக்கள் எனப்படும்
No comments:
Post a Comment