jaga flash news

Thursday, 6 August 2020

பிரம்மஹத்தி தோஷம் என்பது என்ன?

பிரம்மஹத்தி தோஷம் என்பது என்ன அது எதனால் ஏற்படுகிறது அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன அதிலிருந்து நம்மை எப்படி காத்துக்கொள்வது என்பது பற்றிய பதிவு இது கடும் பாவம் செய்தவர்கள், கொலை செய்தவர்கள், மனைவி, பெற்றோரை கவனிக்காமல் விடுபவர்கள் என முற்பிறவி கர்மாக்களால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்து அதில் துன்பப்படுபவர்கள் ஏராளம்.

ஒருவரின் பிறந்த ஜாதக ரீதியாக குரு சனி இணைந்து இருந்தாலோ அல்லது வேறு எந்த தொடர்பு பெற்றிருந்தாலும் பலம் பெற்றிருந்தாலும் பிரம்மஹத்தி தோஷம் இருப்பதாக சொல்லப்படுவதுண்டு. இவ்வகை தோஷம் பிடித்தவர்கள் சரியான காலத்தில் எதுவும் கிடைக்காமல் திருமணம், குழந்தை, வேலை என எதுவுமே சரியாக அமையாமல் எல்லாவற்றிலும் கடும் துன்பங்களையும் காரியத்தடங்களையும் கொடுத்துகொண்டே இருக்கும்.

பிரம்மஹத்தி தோஷத்திற்க்கு பரிகாரம் என்றால் திருவிடை மருதூர் கோவிலில் பிரம்மஹத்தி தோஷ பரிகார பூஜை செய்து கோவிலின் தலைவாசல் வழியாக சென்று பின்வாசல் வழியாக வரவேண்டும் என்பது மரபு. மதுரை மன்னனுக்கு பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் இக்கோவிலின் வழியாக இம்முறையில் சென்றுவந்தபோது நீங்கியதாக கூறப்படுகிறது.

பெரும்பாலானவர்கள் சொல்வது இந்தக்கோவிலின் பரிஹார முறையைத்தான். இதைத்தவிர வேறு சில எளிதான பரிஹாரமுறைகளும் சொல்லப்படுகிறது. ராம நாதபுரம் அருகே தேவிபட்டினத்தில் ராமபிரான் கடலுக்கு அடியில் உருவாக்கிய நவக்கிரகங்களுக்கு தகுந்த வைதீகர் மூலம் பூஜைகள் செய்து கடலில் நீராடி வழிபட்டு அங்குள்ள கடலடைத்த பெருமாளை வணங்கினால் பிரம்மஹத்திதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை

பழமையான சிவன் கோவில்களில் அனைத்து சன்னதிகளிலும் பஞ்சக்கூட்டு எண்ணெய் கொண்டு விளக்கேற்றிவந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். ராமேஸ்வரம் கடலில் நீராடி அனைத்து தீர்த்தங்களிலும் குளித்து ஒரு நாள் அங்கேயே தங்கி இருந்து மறுநாள் ராமேஸ்வரம் அருகில் தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள ஜடாமகுடேஸ்வரர் கோவிலில் உள்ள ஜடாமகுட தீர்த்தத்தில் நீராடி ஜடாமகுடேஸ்வரரை வழிபட்டு வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

ஏனென்றால் ராவணனுடன் வதம் செய்து ராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷம் இத்தலத்தில்தான் ராமபிரானுக்கு நீங்கியதாக வரலாறு. ஒவ்வொரு அமாவாசை தினத்தன்று, மாலை 5 மணிக்கு சிவன் கோவிலுக்கு சென்று, ஒன்பது சுற்றுகள் சுற்றிவந்து சிவனை வணங்கிவரவேண்டும்.

இதுபோல ஒன்பது அமாவாசை தினங்களில் சுற்றிவந்து வணங்கி, சிவனுக்கு மூன்று அகல் விளக்கு ஏற்றி, அர்ச்சனையும், அபிஷேகம் செய்து வந்தால் சிவபெருமான் அருள்பாலித்து, பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவார் என்பது ஐதீகம். இவைகளை செய்வதால் பிரம்மஹத்தி தோஷத்தால் அனுபவித்து வரும் பாதிப்புகளில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

No comments:

Post a Comment