jaga flash news

Monday, 16 December 2024

1 கிராம் தங்கத்தை அடமானம் வைத்தால் எவ்வளவு பணம் கிடைக்கும்?

 1 கிராம் தங்கத்தை அடமானம் வைத்தால் எவ்வளவு பணம் கிடைக்கும்? இப்படி தான் லோன் தொகை கணக்கிடப்படுகிறத நம் நாட்டில் தங்கத்திற்கென்று தனி மதிப்பு இருக்கும். காரணம் இதை தேவைப்படும் நேரங்களில் பணமாக மாற்றி பெற்றுக் கொள்ளலாம். தங்க கடன் என்பது அவசரப் பணத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் பலருக்கும் 1 கிராம் தங்க நகைக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்? என்ற விவரங்கள் தெரியாது. இந்தப் பதிவில் 1 கிராம் தங்கத்தை அடகு வைத்தால் எவ்வளவு தொகையை கடைக்காரர் வழங்குவார்? என்பது குறித்து தெரிந்து கொள்வோம். தங்கக் கடன்: தங்கத்தின் எடை மற்றும் அடமானம் வைக்கும் போது தங்கத்தின் விலை ஆகிய இரண்டு காரணிகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அதோடு நீங்கள் வாங்கிய தங்கத்தின் மதிப்பு, தங்கத்தின் தூய்மை மற்றும் லோன் டு வேல்யூ ரேஷியோ (LTV) என்ற 3 காரணிகளை அடிப்படையாகக் கொண்டது. இதில் லோன் டு வேல்யூ ரேஷியோ என்பது கடன் வழங்குனரால் நிர்ணயிக்கப்படும் விகிதமாகும். "வங்கிகள், NBFC-கள் கொடுக்கும் தங்க நகை கடன்.. இப்போ லேட்டஸ்ட் வட்டி எவ்வளவு தெரியுமா? " தங்க கடன் விகிதத்தை கணக்கிடும் போது மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்: 
 தங்கத்தின் தூய்மை: நீங்கள் வழங்கும் தங்கத்தின் தூய்மை அதன் மதிப்பை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடன் வழங்குபவர்கள் 18 கேரட் முதல் 24 கேரட் வரை தூய்மையான தங்கத்தை ஏற்றுக் கொண்டு கடன் தருகின்றனர். அதிக கேரட் அதிக கடன் தொகைக்கு வழிவகுக்கும். உதாரணமாக 24 கேரட் தங்கம் தூய்மையானது. எனவே 18 கேரட் தங்கத்தோடு ஒப்பிடுகையில் 24 கேரட் தங்கத்திற்கு அதிக கடன் கிடைக்கும். 
 தங்கத்தின் சந்தை விலை: தங்கக் கடனை மதிப்பிடுவதில் தங்கத்தின் அப்போதைய விலையும் கருத்தில் கொள்ளப்படும். பொதுவாக உலக பொருளாதார நிலைமைகள், தேவை, புவிசார் அரசியல் பதட்டங்கள் போன்றவற்றின் காரணமாக தங்கம் நிலையில் தினசரி அடிப்படையில் மாறுதல் ஏற்படுகிறது. உதாரணமாக உங்கள் பகுதியில் 1 கிராம் ஏழாயிரம் என்றால் 7000 என்று வைத்துக் கொள்வோம். இது உங்கள் தங்க கடனுக்கான அடிப்படை விலை மட்டுமே. பொதுவாக தங்கத்தின் சந்தை மதிப்பில் 75% வரை கடன் தொகையாக பெறலாம். எனவே அதிக சந்தை விகிதம் இருக்கும் போது நீங்கள் பெரும் கடன் தொகையும் அதிகரிக்கும். லோன் டு வேல்யூ ரேஷியோ: LTV என்பது உங்கள் தங்கத்தின் சந்தை மதிப்பை வைத்து எவ்வளவு கடன் வழங்கப்பட உள்ளது என்பதைத் தீர்மானிக்கும் விகிதமாகும். பெரும்பாலான கடன் வழங்குனர்கள் 75 சதவீதம் வரை லோன் வழங்குகின்றனர். உதாரணமாக 24 தங்கத்தின் மதிப்பு 7,000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் 100 கிராம் தங்கத்தை அடமானம் வைக்கிறீர்கள். அப்படியானால் உங்கள் தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ. 7,00,000. அப்படியானால் இதில் 75% வரை நீங்கள் கடனாகப் பெறலாம். அதன்படி ரூ. 5,25,000 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். 

No comments:

Post a Comment