நீங்கள் ஒரு மரத்தின் பகுதியிலுள்ள கிளைகளிலுள்ள இலைகளைப் பறித்துவிட்டால், பத்து பதினைந்து நாட்களுக்குள்ளாக அவ்விடத்தில் முன்னைவிட அதிகமான இலைகள் தளிர்விட்டிருப்பதை கவனித்திருக்கிறீர்களா? இலைகள் பறிக்கப்பட்ட பகுதியில் மரமானது தன் சக்தியை திருப்பிவிடுவதே இதற்கு காரணம். இதுபோலத்தான் உங்கள் உடம்பிலும் நிகழ்கிறது. சில குறிப்பிட்ட வகையிலான ஆன்மசாதனை செய்து கொண்டிருப்பவர்கள் இந்த வகையான சக்திப் பிரயோகம் நிகழ வேண்டும் என விரும்புகிறார்கள். நினைக்கும்போதெல்லாம் அவர்கள் தலைமுடியை மழித்துக் கொள்வதில்லை.
எந்த நாளில் மொட்டை?
அமாவாசைக்கு முந்திய நாளான சிவராத்திரியன்று இப்படிச் செய்கிறார்கள். ஏனெனில் அமாவாசையன்றும் அதற்கு மறுநாளும் மனித உடலின் சக்திநிலை மேல்நோக்கி எழும்புகிறது. அதை நாம் மேலும் தீவிரமாக்க விழைகின்றோம். எனவே தலைமுடியை இவ்வாறு மழித்துக் கொள்ளுவதானது, 'சாதனா' முறையோடு சம்பந்தப்பட்டதாகும். அப்படி இல்லாதபோது முடியை மழித்துக் கொள்வதால் பெரிய வேறுபாடு தெரியாது. இப்படி மழித்துக் கொள்ளும் பழக்கமில்லாதவர்கள் ஏதேனும் ஒரு சமயம் (குறிப்பாக பெண்கள்) அப்படிச் செய்தால் அவர்கள் தங்கள் சுயநிலையிலிருந்து சற்று தடுமாறி (பிறழ்ந்து) விடுவதை நீங்கள் பார்த்திருக்கக்கூடும்.
ஏனெனில் தலைமுடியை மழித்துக் கொள்வதால் ஏற்படும் சக்தி ஓட்டம் ஒரு குறிப்பிட்ட இடம் நோக்கிப் பாய்வதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாதபடி ஆகிவிடுகிறது. ஏற்கெனவே மனநிலையில் பாதிப்பு உள்ளவர்களுக்கு இதனால் மேலும் பாதிப்பு அதிகமாகும். ஆனால் இந்நிகழ்வை சரியாக முறைப்படுத்தி அதோடு ஆன்மீகப் பயிற்சியையும் (சாதனா) இணைக்கும்போது அது அவர்களுக்கு நன்மை பயக்கிறது. ஆன்ம சாதகர்கள் பயிற்சி முன்னேற்றத்துக்காக மட்டுமின்றி ஒரு குறிப்பிட்ட உயர்வான இலக்கை அடையும் நோக்குடன் இயற்கை தரும் ஒவ்வொரு வாய்ப்பையும் சிறு உதவியைக்கூட உபயோகித்துக்கொள்ள விரும்புகின்றனர். தலைமுடியை மழித்துக்கொள்ளும் வழக்கமும் அதன் ஒரு பகுதியே.
சிலர் முடி வளர்ப்பது ஏன்?
ஒருவரின் சக்தி சிரசை மீறிக் கொண்டு சென்று தேகத்திற்கு (வெளியே) மேலே உள்ள இரண்டு சக்கரங்களை செயல்படத் தூண்டும் நிலையை அடைந்துவிட்ட சாதகர்கள் தலைமுடியை மழித்துக் கொள்வதில்லை. மாறாக முடியை நன்கு வளர்த்து மேல்நோக்கி முடிச்சுப் போட்டுக் கொள்கிறார்கள். இது சக்தி நிலையை காப்புறுதி செய்கிறது. போதுமான அளவு சிரசில் முடியில்லை எனில் துணியை (தலைப்பாகை) பயன்படுத்துகிறார்கள்.
மேலே குறிப்பிட்டவாறு தேகத்திற்கு மேலுள்ள இரண்டு சக்கரங்களும் உயிர்துடிப்புடன் விளங்குகின்றவர்களுக்கு ஆன்மீக வழியில் மகத்தான வாய்ப்பும் அதேசமயம் ஸ்தூல உடல் பலகீனமான நிலையிலும் இருக்கும். ஆகவே சக்தியானது குறிப்பிட்ட அளவுக்கு மேலாக உடம்பிலிருந்து உறிஞ்சப்படும் காரணத்தால் பல யோகிகள் 35 வயது வாக்கில் இறந்துவிடுகின்றனர். சக்திநிலை மேம்படும்போது உடல் உறுதி இல்லாமை மற்றும் உடலின் இயக்கமுறை சூட்சுமம் அறியாமையினாலும் ஆகும்.
உடலை திடமாக்கும் ஹதயோகா!
மனித உடம்பென்பது மிகவும் நவீனப்படுத்தப்பட்ட எந்திரம் (கருவி) ஆகும். இதை உருவாக்கியவன், நவீன மயமாகவும், அதேசமயம் சூட்சுமங்கள் நிறைந்ததாகவும் உருவாக்கியுள்ளான். எனவே நிறைய சாதனைகள் நிகழ்த்துகின்ற வாய்ப்புகள் இதன் மூலம் உள்ளது. திடமான உடம்பிருந்தால் அதன்மூலம் ஆனால் அதன் வரம்புகளைத் தாண்டிய நிகழ்வுகளுக்கு செல்லமுடியும். அத்தகைய ஒரு நிகழ்வு உடலை பலகீனமாக்கவோ அல்லது துறந்துவிட்டே போவதாகவோ இருக்கும். எனவேதான் உடம்பைத் திடமாக்கும் 'ஹதயோகா' பயிற்சி முக்கியத்துவம் பெறுகிறது. இப்பயிற்சி தீவிர ஆன்மீக முயற்சிக்கு ஏற்றவாறு உடலை ஆற்றல் மிக்கதாக மாற்றிவிடுகிறது.
அய்யா வே. சாமி அவர்களுக்கு நமஸ்காரம். மிக அருமை அய்யா
ReplyDelete