jaga flash news

Tuesday, 10 December 2024

பக்குவப்பட்ட மனசு என்பது எது தெரியுமா?


பக்குவப்பட்ட மனசு என்பது எது தெரியுமா?

எந்த ஒரு செயலை செய்ய ஆரம்பித்தாலும் அதை பக்குவமாக கையாள தெரிந்திருக்க வேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலின் மூலமும் நிறைவும், நிம்மதியும் அமைதியும் அடைகிறோம் என்பதை உணர்ந்து உற்சாகமாக செயல்படும்போது மனதில் ஒரு நம்பிக்கை பிறக்கும். அப்படி நம்பிக்கை பிறந்து விட்டால் அதுதான் பக்குவப்பட்ட மனது.

மேலும் நண்பர்களும் உறவினர்களும் இதை செய்வார்கள் அதை செய்வார்கள் என அவர்களிடம் எதிர்பார்ப்புகள் வைத்திருப்பதை தவிர்த்து விட்டு, நாமாக அவர்களுக்கு உதவிகள் செய்ய தயாராகும் போது  நம்மாலும் எல்லோருக்கும் உதவ முடியும் என்ற தன்னம்பிக்கை பிறக்கும். அந்த தன்னம்பிக்கை தருவதுதான் பக்குவப்பட்ட மனது. 

சிலர் எப்பொழுதும் தான் பெரிய புத்திசாலி என மற்றவர்களுக்கு நிரூபிக்க முயற்சி செய்வார்கள். அல்லது அங்கீகாரம் கொடுங்கள்  என்று  ஒலி மறைவாக கேட்பார்கள். அவர்கள் நமக்கு சரியான அங்கீகாரம் கொடுக்கவில்லை, நன்றாக மதிக்கவில்லை என்று எதிர்பார்த்து உறவினர்களுடனோ சுற்றத்தார்ளுடனோ    கோபமடைவார்கள்.

அந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் கைவிடும் பொழுது நாம் அவர்களிடம் என்ன எதிர்பார்த்தோமோ அதை அவர்களுக்கே திருப்பி செய்தால் நம் மனதில்  உள்ள தாழ்வு மனப்பான்மை நீங்கி ஒரு நம்பிக்கை பிறக்கும். அதுதான் பக்குவப்பட்ட மனதிற்கு அடையாளம். 


மனம் மல்லிகையாய் இருக்கட்டும்!
இப்படி ஒவ்வொன்றையும் தளராத நம்பிக்கையுடன்  செய்து முடிப்பதற்கு ஒரு பக்குவம் வேண்டும். அந்தப் பக்குவம் தான் மனசுக்கு வேண்டியது. 

வண்ணங்கள் பூசாத சித்திரம் 

எண்ணங்கள் வெளிப்படாத  ஆசை

தோல்வி தொடாத வெற்றி   

பறித்து தொடுக்கப்படாத பூ

யுத்தத்தை சந்திக்காத தேசம்

உளியை சந்திக்காத சிற்பம்

தீயை சந்திக்காத தங்கம்

பிரசவத்தை சந்திக்காத பெண்மை

முழுமை பெற்றதாக சரித்திரம் இல்லை.

ஆக இவற்றையெல்லாம் சரியான முறையில் செதுக்கி  செப்பனிட இதையெல்லாம் நம்மால் செய்து முடித்து விட முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். அந்த நம்பிக்கையின் துணைகொண்டு அவற்றை எல்லாம் சீராக்கி  செப்பனிட்டால்தான் அவையெல்லாம் பக்குவம் அடையும். அந்த மாதிரியான பக்குவம்தான் மனசுக்கு வேண்டியது. அதைத்தான் பக்குவப்பட்ட மனசு என்பது.

 

1 comment:

  1. அட போங்கப்பா ! பக்குவப்பட்ட மனம் என்பது.. ஒருவர் முகத்தில் எச்சிலை உமிழ்ந்தால் கூட துடைத்துப் செல்லும் குணம் உடையவர்களே பக்குவப்பட்ட மனம் உடையவர்கள். அப்படிப்பட்டவர்கள் அமைதியாக மௌனமாக சிரித்தே வாழ்க்கையை கடந்து செல்வார்கள். அவர்களை மான ரோசம் இல்லாதவர்கள் என உலகம் பறைசாற்றும். ஆனால் உண்மை அதுவல்ல. அவர்களே மனப்பக்குவம் கொண்டவர்கள். இது வாய்ச் சவடால் கூறுபவர்களுக்கு பொருந்தாது. (அடுத்து தற்போதைய வாழ்க்கை ரீதியில் தனது மனைவியை பிறருக்கு விட்டுக் கொடுத்து வாழ்க்கை நடத்துபவர்களுக்கும் இது பொருந்தாது சாரே ! அவர்கள் முகத்தில் பிறர் காரி உமிழ்ந்தாலும் கூட துடைத்துப் செல்வான். எனவே இப்படிப்பட்டவர்களுககும் பொருந்தாது). ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு என்பது வேத வசனமாக மட்டுமே இருக்கிறது. எனவே மனப்பக்குவம் கொண்டவர்கள் என இவ்வுலகில் மனிதனாகப் பிறந்த எவருமே இல்லை எனலாம் அய்யா. மேலே கூறிய மனப்பக்குவம் உடையவர்கள் என்பது சகலத்தையும் ஆண்டு அனுபவித்து வாழ்க்கையை மௌனமாக வெளியே கூறாமல் கடந்து சென்றவர்கள் எனலாம். அது இன்றைய உலக ரீதியில் இல்லை. நமது முன்னோர்கள் காலத்தோடு முடிந்து விட்டன.

    ReplyDelete