jaga flash news

Monday, 16 December 2024

சுண்டு விரல் மோதிர விரல் அளவு


டைப்-A உங்கள் சுண்டு விரல் மோதிர விரலின் மேல் கோடு வரை இருந்தால், நீங்கள் அவ்வளவு எளிதில் மற்றவர்களுடன் பழகமாட்டீர்கள். உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் கூட உங்கள் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லமாட்டீர்கள். நேர்மையின்மை உங்களுக்கு அதிக கோபத்தை ஏற்படுத்தும். நீங்கள் எப்போதும் ஒருவருக்கு உண்மையாக, நேர்மையாக இருப்பீர்கள். நீங்கள் எப்போதும் மற்றவர்களிடம் இருந்து தள்ளி, தனிமையில் இருக்கவே விரும்புவீர்கள். இதனால் பலர் உங்களை ஆணவம் பிடித்தவர்களாக தவறாக நினைக்கலாம். ஆனால் உங்களைப் பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கு நீங்கள் எப்படிப்பட்டவர் என்பது நன்கு தெரியும். நீங்களும் அதுவே போதும் என்று இருப்பீர்கள். மற்றவர்களிடம் உங்களை நிரூபிக்க விரும்பமாட்டீர்கள்.

டைப் - B உங்கள் சுண்டு விரல் மோதிர விரலின் மேல் கோடுக்கு மேல் நீளமாக இருந்தால், நீங்கள் மிகவும் உண்மையாக இருப்பீர்கள் மற்றும் மிகவும் சென்சிடிவ்வானவர்கள். உங்களுக்கு காதலன்/காதலி இருந்தால், அவர்கள் தான் உலகம் என்று இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் அவர்களுக்கு தான் முன்னுரிமை அளிப்பீர்கள். அவர்களுடன் ஆழமாக இணைந்திருக்க முயற்சிப்பீர்கள்.
நீங்கள் உங்களை எப்போதும் மகிழ்ச்சியான நபராக வெளிக்காட்டிக் கொள்வீர்கள். வாழ்க்கையில், உங்களின் வேலை, கல்வி, குடும்பம் அல்லது நண்பர்கள் என நீங்கள் எதை எண்ணுகிறீர்களோ, அவற்றிற்கு உங்களை முழுமையாக அர்ப்பணிக்கிறீர்கள். இப்படியான எண்ணம் நீங்கள் நினைத்ததை சாதிக்க உதவுகிறது. மொத்தத்தில் நீங்கள் அமைதியானவர். எப்பேற்பட்ட அழுத்தமான சூழ்நிலையிலும் உங்களை கூலாக வைத்துக் கொள்வீர்கள். டைப் - C உங்கள் சுண்டு விரல் மோதிர விரலின் மேல் கோடு வரை இல்லாமல் குட்டையாக இருந்தால், நீங்கள் கலகலப்பான நபர் மற்றும் உங்களிடம் எந்த ஒரு எதிர்மறையும் நெருங்க முடியாது. நீங்கள் தனக்கு ஒருவர் செய்த தவறை எளிதில் மன்னிப்பதோடு, மறக்கவும் செய்வீர்கள். மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே ஒன்றை பேசமாட்டீர்கள். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவீர்கள். மேலும் நீங்கள் மிகவும் சுறுசுறுப்பான நபர். உங்கள் துணையுடன் அல்லது அன்புக்குரியவருடன் வாக்குவாதம் அல்லது சண்டை ஏற்பட்டால், முதலில் நீங்கள் போய் மன்னிப்பு கேட்டு பேசுவீர்கள். பரிச்சயம் உங்களுக்கு ஆறுதல் அளிப்பதோடு, உங்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைத் தரும்


No comments:

Post a Comment