சரவாஷ்டகவர்க்கப் பரல்கள்
சர்வாஷ்டகவர்க்கப் பரல்கள் என்றால், ஏழு கிரகங்களின் சுயவர்க்கப் பரல்களையும் கூட்டி ஒவ்வொரு ராசிக்கும் கிடைக்கும் மொத்தப் பரல்களாகும். அப்படிக் கூட்டிவந்த தொகையை ராசிகளில் எழுதி அதை மொத்தமாகக்கூட்டினால் கிடைப்பதுதான் அந்த 337 என்னும் மந்திர எண்ணாகும்அந்த எண் உலகில் உள்ள அனைவருக்கும் ஒன்று போல இருக்கும். எவருக்கும் அதை விட ஒரு பரல் கூடவோ அல்லது குறையவோ வராது.
சரவாஷ்டக வர்க்கப்பரல்களின் பலன்கள்
மொத்தப் பரல்கள் 337. ராசிகள் 12 வகுத்தால் சராசரியாக ஒரு ராசிக்கு 28 பரல்கள் வரும்.ஒரு வீட்டில் (அதாவது ஒரு ராசியில்) சராசரிக்கும் குறைவான பரல்கள் இருந்தால், அந்த வீடு வலிமையாக, சிறப்பாக இல்லை என்று பொருள்.
1. ஒரு வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால், அந்த வீட்டால் ஜாதகனுக்குப் பெரிய (நல்ல) பலன்கள் இருக்காது.
2. ஒரு வீட்டில் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், அந்த வீட்டால் ஜாதகனுக்கு மிகவும் நன்மையான பலன்கள் உண்டாகும்
.3. ஜாதகன் ஒரு வீட்டின் முழுப் பலனையும் அடைய வேண்டுமென்றால்அந்த வீட்டில் 30ம் அல்லது அதற்கு மேலான பரல்களும் இருக்க வேண்டும்.
4. கிரகங்கள் ஜாதகத்தில் உச்சமாக இருந்தாலும் அல்லது கேந்திர,திரிகோண வீடுகளில் இருந்தாலும், அல்லது சொந்த வீட்டில்இருந்தாலும் அந்த வீட்டில் சராசரிக்கும் குறைவான பரல்கள்இருந்தால், அந்தக் கிரகங்கள் முழுமையாகச் செய்லபடாது.
5. கிரகங்கள் ஜாதகத்தில் நீசமடைந்திருந்தாலும் அல்லது எதிரி வீட்டில் குடியிருந்தாலும் அல்லது 6ஆம் வீடு, 8ஆம் வீடு அல்லது 12ஆம் வீடுபோன்ற தீய ஸ்தானங்களில் அமர்ந்திருந்தாலும் அந்த வீட்டில் சராசரிக்கும் அதிகமான பரல்கள் இருந்தால் அவைகள் முழுமையாகச் செயல்பட்டு ஜாதகனுக்கு நன்மைகளை செய்வார்கள்!.
6. லக்கினத்தில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருக்ககூடாது. இருந்தால் ஜாதகன் கஷ்டப்படப் பிறந்தவன். வாழ்க்கை போராட்டங்கள்நிறைந்ததாக இருக்கும்
7. ஏழாம் வீட்டில், அதாவது களத்திர ஸ்தானத்தில் 20 பரல்கள் அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருக்கக்கூடாது. இருந்தால் ஜாதகனுக்குஉரிய வயதில் திருமணம் ஆகாது. திருமணம் அநியாயத்திற்குத் தாமதமாகும். அத்துடன் தாமதமாகத் திருமணம் நடந்தாலும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தராது.
8. ஏழாம் வீட்டில் 30 அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால், ஜாதகனுக்கு உரிய வயதில் திருமணம் ஆகும். திருமண வாழ்க்கைமகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும்.
9. லக்கினத்தில் இருப்பதைவிட ஏழாம் வீட்டில் அதிகப் பரல்கள்இருந்தால், ஜாதகனுக்கு, அவன் தகுதியைவிட, அதாவதுஅவனைவிட மேலான தகுதியை உடைய பெண் மனைவியாக அமைவாள். பெண்ணாக இருந்தால், மேலான தகுதியை உடையகணவன் அமைவான்.
10. மாறாக லக்கினத்தைவிட ஏழாம் வீட்டில் பரல்கள் குறைவாக இருந்தால், ஜாதகனின் நினைப்பைவிட, விருப்பதைவிட,தகுதியைவிட (status) குறைவான அமைப்பை உடையே பெண்ணே மனைவியாக அமைவாள். அல்லது கணவன் அமைவான்.
11. பத்தாம் வீட்டில் 32 அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால், ஜாதகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். அல்லது நல்ல தொழில் அமையும்
12. பத்தாம் வீட்டில் சராசரிக்கும் குறைவான பரல்கள் இருந்தால்எடுத்தவுடன் நல்ல வேலை அமைவது சிரமம். கிடைக்கும் வேலையில் சேர்ந்து கொள்ள வேண்டியதுதான். பிறகு ஜாதகத்தில் உள்ள லக்கினாதிபதி அல்லது பத்தாம் அதிபதி அல்லது கரமகாரகன் சனியின் மேன்மையைப் பொருத்து அவர்களுடைய தசா புத்திக் காலங்களில்நல்ல வேலை கிடைக்கும்.
13. பத்தாம் வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால், கிடைக்கின்ற வேலையில் அது எப்படி இருந்தாலும், மனதைத் தேற்றிக்கொண்டு பணியாற்ற வேண்டியதுதான். ஜாதகப்படி நல்ல காலம்வரும்போது நிலைமை மாறும் என்று நம்பிக்கையோடு இருக்க வேண்டியதுதான்.
14. இரண்டாம் வீட்டில் (House of finance) 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால் எப்போதும்
பணப் பிரச்சினை இருக்கும். வரவிற்குமேல் செலவாகும். சுருக்கமாகச் சொன்னால் கையில் காசு தங்காது. ஓட்டைக்கை என்று சொல்லுவார்கள்.
15. நான்காம் வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால் வாழ்க்கையில் comforts, Luxury எல்லாம் இருக்காது. அதாவது சொத்துசுகம் எல்லாம் இருக்காது. பிறகு ஜாதகத்தில் லக்கினாதிபதி, சுக்கிரன், செவ்வாய் ஆக்கிய கிரகங்களின் வலைமையைப் பொறுத்து,அவர்களுடைய தசாபுத்திகளில் சொத்து, சுகங்கள் கிடைக்கலாம். (சுகம் என்றால் என்னவென்று தெரியுமல்லவா? வண்டி, வாகனங்கள், ஸ்பிளிட் ஏர் கண்டிஷனர் போன்றவை)
16. பாக்கிய ஸ்தானத்தில் (அதாவது ஒன்பதாம் வீட்டில்) சராசரிஅல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால்தான் பூர்வீகச்சொத்துக்கள் இருக்கும். அல்லது கிடைக்கும்
17. நான்காம் வீட்டில் 30ம் அல்லது அதற்கு மேலான பரல்களும் இருந்தால்தான் நல்ல, அன்பான,
பரிவான, பாசமுள்ள தாய் அமைவாள்
18. ஒன்பதாம் வீட்டில் 30ம் அல்லது அதற்கு மேலான பரல்களும் இருந்தால்தான் நல்ல, நம்மை போற்றி வளர்க்கக்கூடிய, நமக்குப்பெருமை சேர்க்கக்கூடிய தந்தை அமைவார்.
19. ஆறாம் வீட்டில் 32ம் அல்லது அதற்கு மேலான பரல்கள் இருந்தால், வாழ்க்கையில், நோய், கடன்,
எதிரி, ஆகிய பிரச்சினைகள் இல்லாமல்இருக்கலாம்
20. எட்டாம் வீட்டில் 25 அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால், வாழ்க்கையில் பெரும்
கஷ்டங்கள் வராது.
பெரிய பிரச்சினைகள் வராது
பரல்கள் என்றால் என்ன?
அஷ்டகவர்க்கத்தில் மொத்த மதிப்பெண் 337 என்பது அனைவருக்கும் தெரிந்தது. அந்த மதிப்பெண் 12 வீடுகளுக்கும் பொதுவானது என்னும்போது, 337 வகுத்தல் 12 = ஒரு வீட்டின் சராசரி மதிப்பெண் 28 அந்த சராசரி மதிப்பெண்ணிற்கு மேல் இருக்கும் வீடு நல்ல நிலைமையில் உள்ளது என்றாகிவிடும்.
அதேபோல ஒரு கிரகத்தின் தனி மதிப்பெண் எட்டு. சராசரி மதிப்பெண் நான்கு. நான்கிற்கு மேல் மதிப்பெண்களுடன் நிற்கும் கிரகம் வலுவானதாகஇருக்கும். அது தன்னுடைய கோச்சாரத்திலும் (Transit) தசா புக்தியிலும்நல்ல பலன்களைத் தரும். இல்லையென்றால் தீமையான/சுமாரான பலன்களே நடைபெறும்.
Timing of events ஐக் கணக்கிடுவதற்கும் இந்த அஷ்டவர்க்கம் பயன்படும்.
தமிழில் இந்த மதிப்பெண்களைப் பரல்கள் என்பார்கள்.
1. 25 பரல்களுக்குக் கீழே உள்ள வீடுகள் நல்லதல்ல. அவற்றிற்குரியபலன்கள் சாதகமாக இருக்காது.
2. 30 பரல்கள் உள்ள வீடுகள் நல்ல பலன்களைத் தரும்.
3.30 பரல்களுக்கு மேலே இருந்தால் மிகச் சிறந்த பலன்களைத் தரும்
4. ஆட்சி, உச்ச பலன்களோடும் அல்லது கேந்திர, திரிகோண அமைப் போடும் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள்கூட தங்கள் சுய வர்க்கத்தில் குறைந்தபரல்களோடு இருந்தால் அவைகள் நல்ல பலன்களைத் தராது
உதாரணத்திற்கு ஒரு ஜாதகனுடைய நான்காம் வீட்டில் 30 அல்லதுஅதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால் ஜாதகன் நன்றாகப் படிப்பான். அதேபோல ஒருவனுடைய ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் 30ற்கும் மேற்பட்ட பரல்கள் இருந்தால் அவனுக்கு நல்ல மனைவி கிடைப்பாள். உரியகாலத்தில் திருமணமாகும். பெண்ணாக இருந்தால் நல்ல அன்பான அவளைப் போற்றி வைத்துக் கொள்ளக் கூடிய கணவன் கிடைப்பான் இப்படி ஒவ்வொருவீட்டின் பலனையும் அதிகமான பரல்களை வைத்துச் சிறப்பாகச் சொல்லிக் கொண்டே போகலாம். அதுபோல ஒருவனுடைய லக்கினத்தில் நாற்பது அல்லது அதற்குமேற்பட்ட பரல்கள் இருந்தால், ஜாதகன் தலைவனாகி விடுவான். அவனுக்குத் தலைமை தாங்கும் யோகம் தேடி வரும்.சரி ஒரு இடத்தில் 40 என்னும்போது அங்கே 12 பரல்கள் கூடிப்போய் விடுவதால் வேறு இடங்களில் அது குறைந்து விடுமல்லவா? மொத்தம் 337தானே? எங்கே குறைந்து உள்ளது என்று பார்க்க வேண்டும்!
பொதுவாகப் பார்த்தீர்கள் என்றால் தலைமை ஸ்தானத்தில் அதிகம்பரல்கள் உள்ள தலைவர்களுக்குக் குடும்பஸ்தானத்தில் பரல்கள்குறைவாக இருக்கும், அதனால் அவர்கள் தங்கள் குடும்பத்தை மறந்து விட்டு தேசம், தேசம் என்று நாட்டுக்காகப் பாடு பட்டிருப்பார்கள்.
செய்யும் தொழிலுக்கு (10ஆம் வீட்டிற்கு) 30 பரல்களுக்கு மேல் இருந்தால் சிறப்பு. நல்ல வேலை கிடைக்கும் அல்லது நல்ல தொழில் அமையும். ஆனால் 36 ம் அதற்கு மேலும் இருந்தால் செய்யும் வேலையில் ஒரு சபீர் பாட்டியாகவோ, அல்லது நாராயண மூர்த்தியாகவோ அல்லது பில் கேட்ஸாகவோ உச்சத்தைத் தொட முடியும்! உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?
இந்தக் கேள்வியைக் கேட்டால் ஒரே மாதிரியான பதில் சர்வ நிச்சயமாக வராது. ஒவ்வொருவரிடம் இருந்து ஒவ்வொரு மாதிரியான பதில் வரும்.
அன்புமிக்க தாய், அறிவுமிக்க தந்தை, பாசமிக்க சகோதரர்கள்,சகோதரிகள், பரிவுமிக்க மனைவி, உள்ளத்தைக் கொடுக்கும் குழந்தைகள், உயிரைக்கூட கொடுக்கும் நண்பர்கள், இவற்றோடு பாரதி பாடிய காணி நிலம், வற்றாத கேணி, பத்துப்பதினைந்து தென்னை மரங்கள், கத்தும் குயிலோசை, অ...!
என்ன அதோடு? இது போதாதா?
சற்றுப் பொறுங்கள் சொல்லி முடித்துவிடுகிறேன்.
அதோடு இணைப்பாக அசையா சொத்துக்கள், வற்றாத வங்கிக் கணக்கு இருப்பு, பிடித்தமான ஊரில் வசிக்கும் வசதி, போட்டியில்லாத தொழில்,இன்னோவா, டாட்டா சுமோ அல்லது ஹோண்டா சிட்டி கார்கள், பாரதரத்னா வேண்டாம், அட்லீஸ்ட் பத்மபூஷன் பட்டம் கிடைக்கும் கௌரவம். ஒரு வட்டம் அல்லது மாவட்டச் செயலாளர் பதவி, என்று பலரும்பலவற்றை ஏக்கத்துடன் அல்லது ஆசையுடன் சொல்வார்கள். அவ்வளவும் கிடைத்து விடுமா என்ன? கிடைக்காது! அதெல்லாம் எப்படிக் கிடைக்கும். அதற்கு உரிய தகுதி நமக்கு இருக்கிறதா என்று பார்க்க வேண்டாமா? ஆசையிருக்குத் தாசில் பண்ண; அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க'என்று கிராமங்களில் சொல்வார்கள் 80% மக்களின் வாழ்க்கை அப்படித்தான் இருக்கும்! இருப்பதை வைத்துத் திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.
சரி மனித முயற்சி என்பதற்குப் பலன் எதுவும் கிடையாதா?
ஏன் இல்லை? முயற்சிக்குப் பலன் உண்டு.
நீ மாட்டை வைத்துதான் பிழைப்பு நடத்த வேண்டுமென்பதுதான் விதியென்றால் நீ மாட்டை வைத்துத்தான் பிழைப்பை நடத்தியாகவேண்டும். ஆனால் மாட்டின் எண்ணிக்கையை இறைவன் தீர்மானிப்பதில்லை.அது உன் கையில்தான் உள்ளது. உன் முயற்சியில்தான் உள்ளது. 4 மாடுகளா அல்லது 40 மாடுகளா என்பது உன் முயற்சியால் நிர்ணயிக்கப்படும். ஒரு ஏழைப் பால் வியாபாரி இருந்தான். இரண்டு மாடுகளை வைத்துப்பால் வியாபாரம் செய்து கொண்டிருந்தான். வருமானம் போதவில்லை. பற்றாக்குறை. வீட்டில் அவன் மனைவி, பிள்ளைகளைச் சேர்த்து ஐந்து ஜீவன்கள் வீட்டு வாசல் திண்ணையில் கவலையோடு அவன் அமர்ந்திருந்தபோது, அந்த வழியாகச் சென்ற முனிவர் ஒருவர்,அவனை நோக்கிக் கேட்டார்.”தம்பி, சற்றுக் களைப்பாக இருக்கிறது. பசியாற ஏதாவது கிடைக்குமா?” அவன் பதறிவிட்டான். பசியின் கொடுமை அறிந்தவனல்லவா? உடனே திண்ணையை விட்டுக் குதித்துக் கீழே வந்தவன், “அய்யா நல்ல மோர்இருக்கிறது. தரட்டுமா?” என்று கேட்டான்.அவர் சம்மதம் சொல்ல. ஒரு செம்பு நிறைய மோரைக் கொண்டு வந்து கொடுத்தான்.வாங்கி அமைதியாகக் குடித்தார் முனிவர். குடித்தபிறகுதான் அவனைஉற்று நோக்கினார். அவன் முகத்தில் கவலை குடிகொண்டிருந்தது.தன் ஞானக்கண்ணால் அவனுடைய நிலைமையை முழுதாக உணர்ந்தவர் சொன்னார்: “நாளை அதிகாலை என்னை வந்துபார். உன் கவலைகளை ஓட்டும்வழியைச் சொல்லித் தருகிறேன்”அவன் அவருடைய இருப்பிடத்தை அறிந்து கொண்டு, அடுத்த நாள் உதயத்தில், நம்பிக்கையுடன், அவரைச் சென்று பார்த்தான்.அவர் அவனுடன் அதிகமாகப் பேசவில்லை. ஆனால் தீர்க்கமாகஒன்றைச் சொன்னார் “உன்னிடம் இருக்கும் இரண்டு மாடுகளையும்ஓட்டிக் கொண்டு போய்
பக்கத்து ஊர்ச் சந்தையில் விற்று விட்டு வந்து, விற்ற பணத்தை உன் வீட்டில் பத்திரமாக வை.” அவன் அதிர்ந்து போய் விட்டான். மாடுகள் இரண்டையும் விற்று விட்டால் வயிற்றுப் பிழைப்பிற்கு என்ன செய்வது என்று அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளும் முனைப்பில்,“அய்யா...” என்று இழுத்தான்.அது தெரியாதா அவருக்கு? கையைக் உயர்த்திக் காட்டியதோடு, சொன்னார், “சொன்னதைச் செய், மற்றது தானாக நடக்கும், மீண்டும் நீயே வந்துஎன்னைப் பார்ப்பாய், இப்போது போ!”அவன் அவர் சொன்னபடியே செய்தான். இரண்டு மாடுகளும் நல்ல விலைக்குப் போயிற்று. விற்ற பணத்தைக் கொண்டு வந்து, வீட்டுப்பரணி உள்ன் மேலிருந்த பானைக்குள் வைத்து மூடினான். பிறகு நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, பாயைப் போட்டு படுத்து உறங்கிவிட்டான்.தூக்கம் என்றால் அப்படியொரு தூக்கம். மாலை ஆறு மணிக்குத்தான், "அம்மா..." என்று தன் மாடுகள் கத்தும் ஒலி கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தவன், ஓடிப்போய் தன் வீட்டிற்குப் பின் புறம்இருந்த தொழுவத்தில் பார்த்தான். அங்கே அவனுடைய மாடுகள் இரண்டும் நின்று கொண்டிருந்தன. மயக்கம் வராத குறை அவனுக்கு. அதோடு அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. விற்று விட்டு வந்த மாடுகள் எப்படித் திரும்பி வந்தன? இருட்டி விட்டதால் வீட்டிலேயே தங்கி விட்டு, அடுத்த நாள் காலையில் ஒட்டமும் நடையுமாகச் சென்று முனிவரைப் பார்த்தான்.தியானத்தில் இருந்த அவர் இவன் உள்ளே வந்த ஒலி கேட்டு, கண்களைத் திறந்து பார்த்தார். பார்த்தவர் கேட்டார்." என்ன உன்னுடைய மாடுகள் இரண்டும் திரும்பி வந்து விட்டனவா?” அவன் ஆச்சரியத்தின் எல்லைக்கே போய் விட்டான். சலனமற்று காட்சியளித்த அவர் சொன்னார்,"நேற்றுச் செய்ததுபோலஇன்றும் செய்: ஒன்றும் கேட்காதே, பிறகு சொல்கிறேன் இப்போதுபோய் வா”வந்த வேகத்திலேயே திரும்பியவன், அவர் சொல்லியபடியே அன்றும் செய்தான். மறுபடியும் கிட்டத்தட்ட அதே அளவு தொகை கிடைத்தது. வீட்டிற்குக் கொண்டு வந்து, பானைக்குள் போட்டுப் பரணுக்குள் வைத்துவிட்டு, எப்போதும் போல சாப்பிட்டு விட்டுக் கண் அயர்ந்தான்.நேற்று நடந்தது போலவே இன்றும் நடந்தது. அவன் அதிசயப்படும் விதமாக அவனுடைய இரண்டு மாடுகளும் இன்றும் திரும்பி வந்து தொழுவத்தில்நின்று கொண்டிருந்தன!இது தொடர்ந்தது. ஒரு நாள் அல்ல இரு நாள் அல்ல பத்து நாட்கள் தொடர்ந்தது. வழக்கப்படி பதினோறாம் நாள் காலையில் முனிவரைச்சென்று பார்த்தான்
அவர் சொன்னார், "இனிமேல் அந்த அதிசயம் தொடராது. உன்னிடம் இப்போது 20 மாடுகளுக்கான தொகை இருக்கிறது. இன்று சந்தைக்குப்போ; நல்ல மாடுகளாகக் கிடைக்கும் 20 மாடுகளை வாங்கி வந்து இன்றுமுதல் உன் பால் வியாபாரத்தை நல்லபடியாகச் செய்!” அவன் நெகிழ்ந்து விட்டான். கண்கள் பனிக்கக் கேட்டான், “அய்யாஉங்களுக்கு நான் மிகுந்த நன்றிக் கடன் பட்டவனாக இருப்பேன். இதுவரை அந்த அதியசம் எப்படி நடந்தது என்பதைச்சொன்னீர்கள்என்றால் நான் சற்று மன நிம்மதியோடு போவேன்.“உன் தலையெழுத்து மாடுகளை வைத்து பிழைப்பதுதான். ஆனால் நீ முயற்சி எதுவும் செய்யாமல், இருப்பதை வைத்து இதுவரை உன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு வந்திருக்கிறாய். உனக்கு உதவும்பொருட்டே, எனது சித்து வேலையால் நான் அப்படிச் செய்தேன். எதற்கும் ஒரு அளவு உண்டு. அது தெரிந்து நான் நேற்றோடு நிறுத்திவிட்டேன். இனிமேல் நான் நினைத்தால்கூட உனக்கு உதவ முடியாது. இறைவனை வேண்டிக்கொள். உன் பிரச்சினைகள் எல்லாம் தீரும்அதோடு இனிச் சோம்பியிருக்காமல் முயற்சி செய்து கடுமையாக உழைத்தாய் என்றால் உன் மாடுகளின் எண்ணிக்கை கூடிய சீக்கிரம் 100 ஆகும். பிறகு 200 ஆகும். போய்ப் பிழைத்துக் கொள்!” என்று முடித்தார்.கதை அவ்வளவுதான். முயற்சி எப்படி வேலை செய்யும் என்பதற்குத்தான் இந்தக் கதை!
நமக்கும் ஒரு முனிவர் வருவாரா என்று யாரும் காத்துக் கொண்டிருக்க வேண்டாம். இது கலியுகம். முனிவரெல்லாம் வரமாட்டார்.முனி வேண்டும் என்றால் வரும்.முனி என்றால் என்னவா? அதுதான் நட்பு என்ற பெயரில் வரும்டாஸ்மார்க், சல்பேட்டா பார்ட்டிகள் அதாவது தண்ணியடிக்கும் ஆசாமிகள்.சரி துவக்கத்திற்கு வருகிறேன். நல்ல வாழ்க்கைக்குஜாதகம் எப்படியிருக்க வேண்டும்?
ஒன்று, ஒன்பது, பத்து, மற்றும் பதினோறாம் வீடுகளில் 30ற்கும்மேற்பட்ட பரல்கள் இருக்க வேண்டும்.
অ First House (Lagna), Ninth House (House of gains), 10th House (House of Profession) 11th House (House of Profit) की நான்குஇடங்களிலும் 30 பரல்களோ அல்லது 30ற்கு மேற்பட்டஎண்ணிக்கையில் பரல்கள் இருக்க வேண்டும்.மற்ற இடங்களெல்லாம் முக்கியமில்லையா? இல்லை!அப்படியிருந்தால் வாழ்க்கை எப்படியிருக்கும்? சூப்பராக இருக்கும்!
படிக்கும் வாசகர்கள் யாருக்காவது அப்படியிருக்கிறதா? இருந்தால் சொல்லுங்கள்
எனக்குத் தெரிந்து என்னுடைய உறவினர்கள் இரண்டு பேருக்கு இருக்கிறது. அவர்களது வாழ்க்கையும் சூப்பராக இருக்கிறது. அவர்களுடையஜாதகத்தை நான் பர்த்திருக்கிறேன். அதனால்தான் அடித்துச் சொல்கிறேன்.சொத்துக்கள் இரண்டு வகைப்படும்; கஷ்டங்களும் இரண்டு வகைப்படும்.அசையாத சொத்து (Fixed asset) அசையும் சொத்து (Movable asset) என்று சொத்துக்களைப் பிரித்துப் பார்க்கலாம். இடம், வீடு, நிலம், தோட்டம்எல்லாம் முதல் வகையில் சேரும். நகைகள், பணம், வைப்புநிதிச் சான்றிதழ்கள், பங்குப் பத்திரங்கள் எல்லாம் இரண்டாம் வகையில் சேரும். நம்மைப் பெற்ற அன்னையும் அசையும் சொத்துதான். அனால் சொத்துக்களில் எல்லாம் முதன்மையான சொத்து.அதுபோல கஷ்டங்களும் இரண்டு வகைப்படும். நிரந்தரமான கஷ்டங்கள், தற்காலிகமான கஷ்டங்கள் நிரந்தரமான கஷ்டங்கள் எதெது? தற்காலிகமான கஷ்டங்கள் எதெது? கஷ்டங்களைப் பட்டியலிடுவது கஷ்டமானது. கர்மகாரகன் சனியிடம் என்ன மென்பொருள் இருக்கிறதென்று தெரியவில்லை என்ன சர்வர் இருக்கிறதென்று தெரியவில்லை இந்தியாவில் உள்ள 120 கோடி ஜனங்களுக்கும் 120 கோடி விதமான கஷ்டங்களைக்
பக்கத்து ஊர்ச் சந்தையில் விற்று விட்டு வந்து, விற்ற பணத்தை உன் வீட்டில் பத்திரமாக வை.” அவன் அதிர்ந்து போய் விட்டான். மாடுகள் இரண்டையும் விற்று விட்டால் வயிற்றுப் பிழைப்பிற்கு என்ன செய்வது என்று அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளும் முனைப்பில்,“அய்யா...” என்று இழுத்தான்.அது தெரியாதா அவருக்கு? கையைக் உயர்த்திக் காட்டியதோடு, சொன்னார், “சொன்னதைச் செய், மற்றது தானாக நடக்கும், மீண்டும் நீயே வந்துஎன்னைப் பார்ப்பாய், இப்போது போ!”அவன் அவர் சொன்னபடியே செய்தான். இரண்டு மாடுகளும் நல்ல விலைக்குப் போயிற்று. விற்ற பணத்தைக் கொண்டு வந்து, வீட்டுப்பரணின் மேலிருந்த பானைக்குள் வைத்து மூடினான். பிறகு நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, பாயைப் போட்டு படுத்து உறங்கிவிட்டான்.தூக்கம் என்றால் அப்படியொரு தூக்கம். மாலை ஆறு மணிக்குத்தான், "அம்மா..." என்று தன் மாடுகள் கத்தும் ஒலி கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தவன், ஓடிப்போய் தன் வீட்டிற்குப் பின் புறம்இருந்த தொழுவத்தில் பார்த்தான். அங்கே அவனுடைய மாடுகள் இரண்டும் நின்று கொண்டிருந்தன. மயக்கம் வராத குறை அவனுக்கு. அதோடு அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. விற்று விட்டு வந்த மாடுகள் எப்படித் திரும்பி வந்தன? இருட்டி விட்டதால் வீட்டிலேயே தங்கி விட்டு, அடுத்த நாள் காலையில் ஒட்டமும் நடையுமாகச் சென்று முனிவரைப் பார்த்தான்.தியானத்தில் இருந்த அவர் இவன் உள்ளே வந்த ஒலி கேட்டு, கண்களைத் திறந்து பார்த்தார். பார்த்தவர் கேட்டார்." என்ன உன்னுடைய மாடுகள் இரண்டும் திரும்பி வந்து விட்டனவா?” அவன் ஆச்சரியத்தின் எல்லைக்கே போய் விட்டான். சலனமற்று காட்சியளித்த அவர் சொன்னார்,"நேற்றுச் செய்ததுபோலஇன்றும் செய்: ஒன்றும் கேட்காதே, பிறகு சொல்கிறேன் இப்போதுபோய் வா”வந்த வேகத்திலேயே திரும்பியவன், அவர் சொல்லியபடியே அன்றும் செய்தான். மறுபடியும் கிட்டத்தட்ட அதே அளவு தொகை கிடைத்தது. வீட்டிற்குக் கொண்டு வந்து, பானைக்குள் போட்டுப் பரணுக்குள் வைத்துவிட்டு, எப்போதும் போல சாப்பிட்டு விட்டுக் கண் அயர்ந்தான்.நேற்று நடந்தது போலவே இன்றும் நடந்தது. அவன் அதிசயப்படும் விதமாக அவனுடைய இரண்டு மாடுகளும் இன்றும் திரும்பி வந்து தொழுவத்தில்நின்று கொண்டிருந்தன!இது தொடர்ந்தது. ஒரு நாள் அல்ல இரு நாள் அல்ல பத்து நாட்கள் தொடர்ந்தது. வழக்கப்படி பதினோறாம் நாள் காலையில் முனிவரைச்சென்று பார்த்தான்

অ First House (Lagna), Ninth House (House of gains), 10th House (House of Profession) 11th House (House of Profit) की நான்குஇடங்களிலும் 30 பரல்களோ அல்லது 30ற்கு மேற்பட்டஎண்ணிக்கையில் பரல்கள் இருக்க
எனக்குத் தெரிந்து என்னுடைய உறவினர்கள் இரண்டு பேருக்கு இருக்கிறது. அவர்களது வாழ்க்கையும் சூப்பராக இருக்கிறது. அவர்களுடையஜாதகத்தை நான் பர்த்திருக்கிறேன். அதனால்தான் அடித்துச் சொல்கிறேன்.சொத்துக்கள் இரண்டு வகைப்படும்; கஷ்டங்களும் இரண்டு வகைப்படும்.அசையாத சொத்து (Fixed asset) அசையும் சொத்து (Movable asset) என்று சொத்துக்களைப் பிரித்துப் பார்க்கலாம். இடம், வீடு, நிலம், தோட்டம்எல்லாம் முதல் வகையில் சேரும். நகைகள், பணம், வைப்புநிதிச் சான்றிதழ்கள், பங்குப் பத்திரங்கள் எல்லாம் இரண்டாம் வகையில் சேரும். நம்மைப் பெற்ற அன்னையும் அசையும் சொத்துதான். அனால் சொத்துக்களில் எல்லாம் முதன்மையான சொத்து.அதுபோல கஷ்டங்களும் இரண்டு வகைப்படும். நிரந்தரமான கஷ்டங்கள், தற்காலிகமான கஷ்டங்கள் நிரந்தரமான கஷ்டங்கள் எதெது? தற்காலிகமான கஷ்டங்கள் எதெது? கஷ்டங்களைப் பட்டியலிடுவது கஷ்டமானது. கர்மகாரகன் சனியிடம் என்ன மென்பொருள் இருக்கிறதென்று தெரியவில்லை என்ன சர்வர் இருக்கிறதென்று தெரியவில்லை இந்தியாவில் உள்ள 120 கோடி ஜனங்களுக்கும் 120 கோடி விதமான கஷ்டங்களைக்
இழுத்தான்.அது
அறிவைக் குறிக்கும் -true knowledge. ஞானம் என்பது அனைத்தும் அறிந்த நிலை. முழுமையான அறிவு. wisdom, full knowledgeவிஞ்ஞானம் என்பது அறிவியல் science. தர்க்க முறையால் சோதித்து (reasoning) அறிவது விஞ்ஞானம். எல்லாம் இங்கே இருக்கிறது. இருப்பதைக் கண்டுபிடித்து, முறைப்படுத்திச் சொல்வதுதான் விஞ்ஞானம் புவி ஈர்ப்பு விசையைக் கண்டு பிடித்து, சர் ஐசக் நியூட்டன் அதை முறைப்படுத்திச் சொன்னார். அதற்கு Newton's law of universal gravitation என்று பெயர். அதுபோல அவருடைய Three Laws of Motion என்னும் கண்டு பிடிப்பும் மிகவும் பிரபலம். மிதத்தல் விதிக்கு law of Archimedes (hydrostatics) the apparent loss in weight of a body immersed in a fluid is equal to the weight of the displaced fluid என்று அதற்குப் பெயர். இதுபோல ஐன்ஸ்டீனின் Einstein's Theory of Relativity யும் பிரபலமானது. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ஒன்றைக் கவனிக்க வேண்டும் நீங்கள். இவர்கள் அனைவரும் இருப்பதைத்தான் கண்டு பிடித்துச் சொன்னார்கள். புதிதாக எதையும் உருவாக்கவில்லை.ஏற்கனவே இருப்பதுதான். மிதத்தல்விதி முன்பே இருப்பதுதான். யாரும் எதையும் உருவாக்க முடியாது. ஒன்றில் இருந்துதான் மற்றொன்று.இறைவனும், அவன் படைத்தவைகளும் ஒன்றுதான். ஒன்றை ஒன்றிலிருந்து வேறு படுத்திக்காட்ட முடியாது. The creator and his creations are one and the same. அதைத்தான் நாம் எல்லாம் ஈசன் செயல் என்கிறோம். இறைவன் தூணிலும் இருக்கிறான். துரும்பிலும் இருக்கிறான் என்கிறோம்.நீங்கள் பிறந்தபோதே உங்களுக்கு வேண்டியது எல்லாம் இங்கே படைக்கப்பட்டுள்ளது. உங்களுக்குக் கொடுக்கப் பெற்றுள்ளது. நீங்கள் சுவாசிப்பதற்குக் காற்று, நீர், உணவுப்பொருட்கள், தானியங்கள், காய்கறிகள், கனிகள் என்று எல்லாமே உள்ளன. நீங்கள் புதிதாக எதையும் உருவாக்க வேண்டாம். every thing is given!
"பறவையைக்கண்டான் விமானம் படைத்தான் பாயும் மீன்களில் படகினைக் கண்டான் எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான் எதனைக்கண்டான் பணம்தனைப் படைத்தான்"
என்று கவியரசர் அற்புதமாகப் பாட்டில் சொன்னார்.பறவைகள் பறக்கின்றன. பெட்ரோல் செலவு இல்லாமல் பறக்கின்றன. எந்தவிதப் பராமரிப்புச் செலவும் அவைகளுக்கு இல்லை. சைபீரியாவில் இருந்து வேடந்தங்கலுக்கு வந்துவிட்டுப்போகின்றன. ஆஸ்திரேலியாவில் இருந்து இங்கே வந்துவிட்டுப்போகின்றன. ராடார் மற்றும் வழிகாட்டும் கருவிகள் அவைகளுக்கு இல்லை. இறைவன் படைப்பின் அதிசயங்கள் அவை.எந்தப் பறவையும் வேலைக்குச் செல்வதில்லை. மாதச் சம்பளத்தையோ, அல்லது தன் தந்தை சேர்த்து வைத்துவிட்டு போனதையோ எதிர்பார்த்து அவைகள் இல்லை. மனிதனின் அவலங்கள் அவைகளுக்கு இல்லை. எதிரொலியைக் கேட்ட மனிதனின் சிந்தனையில் உருவானதுதான் வானொலி வானொலியின் அடுத்த பரிணாம வளர்ச்சிதான் தொலை பேசி, அடுத்தடுத்து வந்து இன்று அலைபேசியில் நிற்கிறான்.மனிதனின் குரல் வளம்தான் முதற்கருவி. அது கடவுள் கொடுத்தது. அந்தக் குரல் எழுப்பும் ஓசைகளை, பேச்சுக்களைக் கடத்துவதற்கு காற்று இருக்கிறது. வெற்றிடமாக இல்லாமல் இருக்கிறது. தான் படைத்த ஜீவராசிகளுக்கெல்லாம் வேண்டிய உணவை இறைவன் படைத்திருக்கிறான். எந்தப்பறவையாவது பசியில் விழுந்து செத்துப் போனதாக சரித்திரம் இருக்கிறதா? இல்லை. கல்லிற்குள் இருக்கும் தேரையையும் அவன் உயிர்வாழ வைத்திருக்கிறான். வைத்துக் கொண்டிருக்கிறான்.எந்தப் பறவையும் தான் சாப்பிட்ட பழத்தின் மீதியைக் கொண்டுபோய் தன் கூட்டில் வைப்பதில்லை. கிடைக்கும் தானியங்களை அள்ளிக்கொண்டுபோய் கூண்டிற்குள் மூட்டைகட்டி வைப்பதில்லை. கிடைப்பதை, கிடைத்த இடத்திலேயே உண்ணுகின்றன.
மனிதனைப்போல எதையும் சேமித்துவைப்பதில்லை. வற்றலாக்கி வைப்பதில்லை.
அதைக் கண்ட கவியரசர் இப்படிப்பாடினார்.
“அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்"
மனிதருக்கு என்னவொரு சிந்தனை இருந்திருக்கிறது பாருங்கள்.பறவைகளைப்போல கவலைப் படாமல் இரு என்று சொன்னார். உலகின் சீதோஷ்ண நிலைமை இடத்திற்கு இடம் மாறுவதைப் பார்த்திருப்பீர்கள். சென்னையில் 36 டிகிரி வெய்யில் என்றால் அதே நேரத்தில் கோவையில் 32 டிகிரி ஊட்டியில் 22 டிகிரி. அட்ச ரேகை தீர்க்க ரேகைகளை வைத்தும். மலைப்பிரதேசங்கள் போன்ற உயரங்களை வைத்தும். காற்றின் அழுத்ததைவைத்தும் சீதோஷ்ணம் மாறுபடுகிறது. அதே நிலைப்பாட்டில், காற்றில் உள்ள ஆக்சிஸனின் அளவும் மாறுபட வேண்டுமல்லவா? கடற்கரைப் பிரதேங்களில், அடர்ந்த வனப் பகுதிகளில், மலைப் பிரதேசங்களில், பாலவனங்களில் என்று இடத்திற்கு இடம் காற்றில் உள்ள ஆக்சிஸனின் அளவு மாறுபடவேண்டுமல்லவா? மாறுபடாது. இறைவன் கருணை மிக்கவர். தான் படைத்த ஜீவராசிகள் சுவாசிப்பதற்காக காற்றில் உள்ள ஆக்சிஸனின் அளவு 21% என்பதை அத்தனை இடங்களிலும் ஒரே மாதிரி இருக்கும்படியாகப் பார்த்துக்கொண்டுள்ளார். உயர்ந்த பனிப்பிரதேசங்களில் காற்றின் அளவு குறையுமே தவிர, காற்றில் உள்ள ஆக்சிஸனின் அளவு மாறாது. The actual percentage of oxygen doesn't change, but there is just less air at higher altitudes. Our climate varies regionally, and the temperature and precipitation tend to be influenced by local geographical characters such as latitude, altitude, distance from the coast, nearby ocean currents, prevailing winds, mountain ranges and vegetation. Different local and regional climate characteristics were classified. ஆயிரக்கணக்கான மலர்கள் அனுதினமும் பூக்கின்றன. அந்த மலர்களுக்கு விதம் விதமான நிறங்களும், வாசனையும் எங்கிருந்து கிடைக்கின்றன. என்றைக்காவது
யோசித்திருக்கிறீர்களா? பலவிதமான கனிகளும், காய்கறிகளும் கிடைக்கின்றன. அவற்றில் உள்ள விதம் விதமான சுவைகள் எப்படி உண்டாகின்றன? அதே மண்தான். அதே நீர்தான். ஒரே இடத்தில் விளையும், மிளகாயும், பாகற்காயும் வெவ்வேறு சுவையுடன் இருக்கின்றன. மிளகாய்க்கு காரம் எங்கிருந்து கிடைக்கிறது? பாகற்காய்க்குக் கசப்பு எங்கிருந்து கிடைக்கிறது? என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா?
இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.
இந்தக் கட்டுரையின் நோக்கம் இறைவன் இருக்கிறான். அவன் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கை உங்களுக்கு ஏற்பட வேண்டும். உடனே ஒருவர் கேட்டார்: “இறைவனையும், சூரியனையும் வணங்கிவிட்டு வீட்டில் இருந்தால் நெல் எப்படி விளையும்?“ஏரால் உழுது அல்லது இன்றையத் தேதியில் உள்ள வசதிகளை வைத்து டிராக்டரால் உழுது, விதைகளைத்தூவி, உரமிட்டுவளர்த்தாலும், பயிர் வளர்வதற்கு நீரும், சூரிய வெப்பமும் அல்லவா முக்கியம். அவை இரண்டையும் தருவது சூரியன் அல்லவா? வளர்ந்த பயிர்களை (வாழை, தென்னை போன்றவை) புயல் சூராவளி வந்து சாய்க்கலாம் அல்லவா? கடும் மழையால் பயிர்கள் அழியலாம் இல்லையா? ஆகவே இறைவனும் சூரியனும் இல்லாமல் எதுவும் இல்லை. அதை உணரவேண்டும்இதைத்தான் பகவான் கண்ணபரமாத்மா இப்படி சொன்னார்: “செயல்கள் உன் கையில் இருக்கின்றன். விளைவுகள் உன் கையில் இல்லை”Actions are in your hand; Not the results பிண்ணாக்கைத் தெரிந்து வைத்திருக்கும் மனிதன் இறைவனின் சக்தியை முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை. பிண்ணாக்கு, மாடுகளுக்குப் பயன்படும். கோழிகளுக்குப் பயன்படும். அதைவைத்துக் காசு பண்ணலாம். காசுபண்ணக்கூடிய அனைத்தையும் தெரிந்து வைத்திருக்கும் மனிதன் காசைத்தான் கடவுள் என்பான்.
“காசேதான் கடவுளடா அந்த கடவுளுக்கும் இது தெரியுமடா" என்பான்.
கடவுள் அவனை மன்னிப்பாராக!
ஆகவே நம்பிக்கையோடு இருங்கள். சுயவர்கத்தில் பரல்கள் குறைந்தாலும் மொத்த அஷ்டகவக்கத்தின் கூட்டல் அனைவருக்கும் 337 தான். ஒருவருக்குக்கூட வந்துள்ளது. ஒருவருக்குக் குறைவாக வந்துள்ளது என்ற பேச்சுக்கே இடமில்லை. இறைவனின் படைப்பில் அனைவரும் சமம்தான்.
நமது மெய்ஞானம் அதைத்தான் சொல்கிறது.
விஞ்ஞானம் உட்பட அத்தனை ஞானமும் மெய்ஞானத்திற்குள் அடக்கம். அதை மனதில் வையுங்கள்! அஷ்டகவர்க்கப் பலாபலன்கள்:
சூரியன்தான் பிரதான கிரகம். சூரியன் பிரதான கிரகமாக இருந்தாலும், முதல் நிலை சுபக்கிரகம் என்று போற்றப் படும் குரு பகவான்தான் ஜாதகத்தில் முக்கிய பங்காற்றுவார்.
ஜாதகத்தில் குரு வலுவாக இருந்தால் போதும். குரு பகவான், உச்சம் பெற்றோ அல்லது திரிகோண இடங்கள் அல்லது கேந்திர இடங்களில் இருப்பது நல்லது. சுயவர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருப்பது நல்லது. குருபகவான் எப்போது நன்மைகளைச் செய்வார். தனது தசா புத்திகளில் செய்வார். அத்துடன் கோள்சாரத்தில் உரிய இடங்களில் பயணிக்கும்போது அதாவது சுற்றிவரும்போது செய்வார்.
அவருக்கு உரிய இடங்கள் எது?
வாத்தியார், வெளியூர்ப் பயணம். நாளை ஒரு நாள் வகுப்பறைக்கு விடுமுறை!
இன்றைய நன்மொழி
Your Death !!!!
When a bird is alive, It eats Ants,
When the bird is dead, Ants eat the bird!
Time & Circumstances can change at any time
Don't devalue or hurt anyone in life.
You may be powerful today
But Remember, Time is more powerful than You!!!
One tree makes a million match stick
But when the time comes, Only one match stick is needed to burn million trees
Moral: One day you will die and will be eaten by ants. The only thing you take is your Deeds, So be good and do good, Thank Almighty for everything and don't disrespect others. You are lucked that you have been blessed
Astrology தெரிந்த பிரம்மாண்டமும் தெரியாத பிரம்மாண்டமும்!
ஒரு பிரபல் நடிகையின் உடல் வனப்பைப் பார்த்துவிட்டு.ஒரு பிரபல இயக்குனர் சொன்னார்: "நான் பார்த்ததிலேயே இதுதான் பிரம்மாண்டம்"
நாம் பார்த்திருந்தாலும் அப்படித்தான் சொல்லுவோம். ஆனால் வெட்கப்பட்டு அல்லது இமேஜ் கெட்டுவிடுமே என்று பயந்து அல்லது மனைவியிடம் பூரிக் கட்டையால் அடிவாங்க வேண்டுமே என்று பயந்து வெளியே சொல்லா விட்டாலும் மனதிற்குள்ளாவது நினைத்துக்கொள்வோம்.
அவை எல்லாம் அழியக்கூடிய பிரம்மாண்டங்கள். ஒரு நாள் சுடுகாட்டிற்கோ அல்லது இடுகாட்டிற்கோ போகக்கூடிய பிரம்மாண்டங்கள்.
இறைவன் படைப்பில் ஏராளமான பிரம்மாண்டங்கள் உள்ளன.
கங்கையும், யமுனையும் சங்கமிக்கும் இடத்திற்குப் படகில் சென்று ஆற்றின் நடுவில் இருந்து பாருங்கள். நீரின் அளவும் ஆழமும், வேகமும் நம்மைத் திகைக்க வைக்கும்.
பழநியில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரம் சென்று கொடைக்கானல் மலை அடிவாரத்தில் இருந்து, கண்களை உயர்த்தி, மலையின் தொடர்ச்சியைப் பாருங்கள். உங்களைத் திகைக்க வைக்கும்.
கன்னியாகுமரியில் இருந்து கொட்டாரம் வரை..ஏன் நாகர் கோவில் வரை, மழை பெய்து ஓய்ந்த ஒரு மாலை நேரத்தில் காரிலோ அல்லது பேருந்திலோ பயணித்துப் பாருங்கள், இரு புறமும் பச்சைப் பசேல் என்ற ரம்மியமான காட்சி உங்கள் மனதை அள்ளிக்கொண்டு போய்விடும்.
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்!
வானமும், வானத்தில் உள்ள கோள்களின் துல்லியமான சுழற்சியும் பிரம்மாண்டம்தான்.
ஆர்யபட்டர்,வராஹிமிஹிரர், பராசுரர், ஜெய்மானி போன்ற முனிவர்கள் அவற்றையெல்லாம் கணித்து வைத்துவிட்டுப் போனார்களே அவைகளும் பிரம்மாண்டம்தான். தொழில் நுட்ப வசத்திகள் எதுவும் இல்லாத காலத்தில் அவர்கள் செய்த பணிகளும் பிரம்மாண்டம்தான்ஜோதிடமும் பிரம்மாண்டமானதுதான். பெருங்கடலைப் போன்று பிரம்மாண்டமானதுதான். அதைப் பற்றி முன்பே எழுதியுள்ளேன்.ஜோதிடத்தின் உட்பிரிவான அஷ்டகவர்க்கமும் பிரம்மாண்டமானதுதான்
அதைப் பற்றி இன்று பார்ப்போம்
அஷ்டகவர்க்கம் என்றால் என்ன?
அஷ்ட என்றால் எட்டு வர்க்கம் என்றால் அட்டவணை!
எட்டு அட்டவணைகள் அடங்கியது அஷ்டகவர்க்கம்.
அஷ்டகவர்க்கம் என்றாகத் தெரிந்தால் (தெரிந்துகொள்வது சுலபம்) உங்கள் ஜாதகத்தையும், உங்கள் வீட்டில் உள்ளவர்களின் ஜாதகத்தையும்.
நீங்களே அலசிப் பிழிந்து விடலாம்!
அதாவது அந்த 337 டானிக்கைப் பற்றிய முழு விவரங்கள்!
அஷ்டக வர்க்கம் எப்படிக் கணக்கிடப்படுகிறது என்பதை முன்பே சொல்லிக் கொடுத்துள்ளேன். அல்லது கணினி ஜாதகத்தில் அது விரிவாகக் கொடுக்கப்பட்டிருக்கும். கணக்கிடும் வேலை உங்களுக்கு இல்லை!
ஆனால் அதை மேல்நிலைப் பாடத்தில் மீண்டும் ஒருமுறை விரிவாகக் கொடுத்துள்ளேன். இங்கே எழுதினால் திருட்டுப் போய்விடும் சாமிகளா!
ஏழு கிரகங்களின் சுயவர்க்கங்களைக் கூட்டினால் சர்வாஷ்டகவர்க்கம் (ராசி வாரியாக மொத்த அஷ்டகவர்க்கம்) கிடைக்கும்.
சுயவர்க்கத்தில் சில கிரகங்களுக்கு மற்ற கிரகங்களால் 3 இடங்கள் முதல் 9 இடங்கள்வரை உகந்ததாகி மதிப்பெண்கள் கிடைக்கின்றன.
சுயவர்க்கத்தில் அந்த கிரகம் நிற்கும் இடத்தின் மதிப்பெண்தான் அதன் சுயவர்க்கம். அதை மனதில் கொள்க! 0 வும் கிடைக்கலாம் அல்லது 8 மதிப்பெண்களும் கிடைக்கலாம்.
சரி எத்தனை வ்கையான அல்லது விதமான கட்டங்களை உருவாக்கலாம்?
7 + 2 x 12 = 8 to the power of 12 (Rasi) 68 719 476 736
ராகு & கேதுவிற்கு அஷ்டகவர்க்க ஆட்டத்தில் இடமில்லை. என்ன காரணம்? அவர்கள் இருவருக்கும் சொந்த வீடு இல்லாததால் ஆட்டத்தில் இடமில்லை. ராகு & கேதுவின் ரசிகர்கள் ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டுக்கொள்ளலாம்!
68 71 94 76 736
68.7 பில்லியன் சுயவர்க்கக் கட்டங்கள் ஒரு கிரகத்திற்கு மட்டும் உருவாக்கலாம். (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி.அதை மனதில் வையுங்கள்) ஏழு கிரகத்திற்கும் சேர்த்து 481 பில்லியன் சுயவர்க்க வித்தியாசங்கள் வரும். அதுதான் அஷ்டகவர்க்க ஜோதிடத்தின் பிரம்மாண்டம்!
ஒருவரின் சுயவர்க்கம்போல வேறு ஒருவருக்கு இருக்க வாய்ப்பில்லை. வலது கை கட்டை விரல் ரேகை எப்படித் தலைக்குத் தலை மாறுபடுகிறதோ அப்படி அஷ்டகவர்க்கமும் ஜாதகத்திற்கு ஜாதகமும் மாறுபடும். ஆனால் மொத்த பரல்கள் 337 மட்டுமே
உலகத்தில் எத்தனையோ குட்டைகள். குளங்கள், ஊருணிகள், ஆறுகள், ஓடைகள், நதிகள், கடல்கள் உள்ளன.ஆனால் எல்லாவற்றிலும் இருக்கும் தண்ணீருக்குப் பெயர் தண்ணீர்தான்!
அங்கேதான் இறைவன் நிற்கிறான்! இருக்கிறான்!
அவன் அனைவரையும் சமமாகத்தான் படைத்திருக்கிறான்.
ஆரம்பம் முதல் அதைத்தான் நான் வலியுறுத்திச் சொல்லி வருகிறேன்!
அய்யன் வள்ளுவரும் இறைவனை அப்படித்தான் சொல்லி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்.
“வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல!”
(விருப்பு, வெறுப்பு இல்லாத இறைவனின் திருவடியை இடைவிடாது வணங்குபவர்களுக்கு என்றும், எக்காலத்திலும், எவ்விடத்திலும் துன்பம் இல்லை!)விருப்பு வெறுப்பு (Likes & dislikes) இல்லாதவன் இறைவன். இவன் வேண்டியவன், அவன் வேண்டியவன் என்ற பாகுபாடு இல்லாதவன் இறைவன். அவன் படைப்பில் அனைவரும் சமம்!இறைவன் கருணை வடிவானவர். உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் - மனிதன் உட்பட - அனைத்துமே அவருக்குச் சமமானவைதான். அவருக்கு வேண்டியது வேண்டாதவை என்று எதுவும் கிடையாது.தன்னை நம்புகிறவனும் அல்லது நம்பாதவனும், மேலும் தன்னை நம்புகிறவனை முட்டாள் என்று சொல்கிறவனும் அவருக்கு ஒன்றுதான். தன்னை மறுத்துப் பேசுகிறவனையும் அவர் முகம் மலர்ந்து ஏற்றுக் கொள்கிறார். அவனுக்கும் கருணை காட்டுகிறார். அவனுக்கும் நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கிறார். இல்லையென்றால் அவர் எப்படி இறைவனாக இருக்க முடியும்?நம்பினாலும் அல்லது நம்பாவிட்டாலும் பாதிப்பு ஒன்றும் அவருக்கில்லை.சரி, அப்படியென்றால் இருவருக்கும் (நம்புகிறவன் நம்பாதவன்) என்ன வித்தியாசம்?நம்புகிறவன், ஒரு பிரச்சினை வரும்போது அதை இறைவன் பார்த்துக் கொள்வார் என்று கவலைப் படுவதை விட்டுவிட்டு நிம்மதியாக இருப்பான். நம்பாதவன் பிரச்சினையோடு, கவலையையும் கை பிடித்துக்கொண்டு அல்லல் படுவான்அதனால்தான் இறைவனை Almighty என்கிறோம். இல்லயென்றால் அவன் வெறும் mighty ஆகிப் போய்விடுவான்!நமக்குத் தெரிந்த பிரம்மாண்டங்கள் எல்லாம், அழியக் கூடியவை. இறைவன் படைப்பின் பிரம்மாண்டங்கள் எல்லாம் நிரந்தரமானவை! அதை மனதில் கொள்க!(தொடரும்)
ஒரு மாறுதலுக்காகப் பாடத்தை மாற்றி எழுதியுள்ளேன். உங்கள் கேள்விகளும், பதில்களும் பகுதி இரண்டு நாட்கள் கழித்து வரும் பொறுத்திருங்கள் அன்புடன் வாத்தியார்
இன்றைய பொன்மொழி
அன்பைப் பகிர்ந்து கொள்வது வாழ்க்கையில் மிகப் பெரிய சந்தோசம். ---ஸ்டேபிள்.
Astrology ஏற்ற, இறக்கங்களை எப்படி அறிவது?
Amala Paul from the film Vettai. Thanks to the person who uploaded the image in the net கீழே இடைச்சேர்க்கையில் ஐந்து படங்கள் உள்ளன அவற்றையும் பாருங்கள்
Astrology ஏற்ற, இறக்கங்களை எப்படி அறிவது?
தினமும் தயிர் சாதம் என்றால் எப்படிச் சாப்பிடுவீர்கள்? சைடு டிஷ்சாக எண்ணெய் வாழைக்காய் பொரியல் அல்லது உருளைக்கிழங்கு காரகறி அல்லது மாங்காய் தொக்கு இருந்தால் சாப்பிடலாம். ஒரு
நாள் அல்லது இரண்டு நாள் என்றால் சாப்பிடலாம். தினமும் என்றால் எப்படியும் முடியும் சாமி?
தொண்டைக்குப் பிறகு எல்லா உணவும் ஒன்றுதான் என்றாலும் நாக்கு விடாதே ராசா!
நாக்கைக் கட்டுப்படுத்தலாம் என்றால் குரங்கு விடாதே சாமி!
நாக்கோடு சம்பந்தப் பட்ட குரங்கு எது என்று தெரியாதவர்கள் பதிவை விட்டு விலகவும்!
அதனால் எளிய உணவாக இருந்தாலும் விதம் விதமாக இருந்தால்தான் நல்லது.
அதுபோல தினமும் நட்சத்திரக் கோவில்களைப் பற்றியே எழுதிக் கொண்டிருந் தால், படிக்கும் நீங்கள் கட்டையை எடுத்து என் தலையில் ஒரு போடு போட்டால் என்ன ஆவது?
ஆகவே வாரம் இரண்டு கோவில்கள் அறிமுகமாகும். மற்ற நாட்களில் வேறு தலைப்புக்களில் பாடங்கள். மீண்டும் அடுத்த வாரம் இரண்டு நட்சத்திரக் கோவில்களுக்கான பாடங்கள் வெளியாகும். தங்கள் நட்சத்திரக் கோவிலுக்காகக் காத்திருக்கும் கண்மணிகள் பொறுத்திருக்கவும்
Astrology ஏற்ற, இறக்கங்களை எப்படி அறிவது?
அஷ்டகவர்க்கப் பாடம் எண்.15
2: Key Points in ashtakavarga
ஏற்ற இறக்கங்கள் என்றால் என்ன? உங்கள் மொழியில் சொன்னால் up & down periods என்று வைத்துக்கொள்ளுங்கள்.
நன்றாக ஓடிக்கொண்டிருந்த வாகனம் செல்லும் வழியில் - அதுவும் திம்பம் போன்ற வனப்பகுதிகளில் நின்று போய் இடக்கு செய்தால் என்ன செய்ய முடியும்?
இரவு நேரம் கும்மிருட்டு. யானைக்காடு. கடந்து செல்லும் சகவண்டிக்காரன் நிறுத்தாமல் போய்க்கொண்டிருப்பான். விடியும்வரை காத்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு ஏதாவது செய்ய முயற்சிக்கலாம்.
சிலருக்குப் பார்த்தீர்கள் என்றால், தடம் புரண்ட வண்டியைப்போல வாழ்க்கை தலைகீழாக மாறியிருக்கும். செல்வச் செழிப்போடு இருந்தவன். பணச்சிக்கலுக்கு ஆளாகியிருப்பான். கடன் தொல்லை வாட்டி எடுக்கும். கஷ்டங்கள் கசக்கிப் பிழியும். ஓடி ஒளிந்து கொள்ளும் நிலை உண்டாகிவிடும். இன்னோவா காரில் வலம் வந்தவன் சட்டை கசங்க நகரப் பேருந்துகளில் பயணித்துக் கொண்டிருப்பான். ஆட்டோவிற்குக் காசில்லாமல் நடராஜா சர்வீசில் சென்று கொண்டிருப்பான். அடையார் பார்க் கேட் ஹோட்டலின் ஃபுட் கோர்ட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன், நடைபாதைக் கடைகளில் சாப்பிடத் துவங்குவான்.
புத்திசாலித்தனமாக நடந்திருந்தால், நிலைமை இப்படி ஆகியிருக்காதா?
என்ன சாலித் தனம் இருந்தாலும் விதிவிடாது. கிரகங்கள் விடாது. எல்லாம் கர்மவினைப் பலன்!
விதியைப் பற்றி விவரமாக அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள், அய்யன் வள்ளுவர் எழுதிய குறளின் 38ஆம் அதிகாரத்தைப் படித்துப் பாருங்கள் தெரியவரும். அந்த அதிகாரம்தான் பொருட்பாலின் கடைசி அதிகாரம். விளக்க உரையோடு படியுங்கள். அதன் தலைப்பு ஊழ்வினை (Destiny) அற்புதமான அதிகாரம்.
சரி, சொல்லவந்த விஷயத்திற்கு வருகிறேன்.
சனீஷ்வரன்தான் கர்மகாரகன் (Authority for work) அவனால்தான் உங்களுடைய ஜீவனம்
நடந்துகொண்டிருக்கும். பூர்வீகச் சொத்தில் அல்லது மனையாட்டி கொண்டுவந்த செல்வத்தில் ஜீவனம் நடத்திக்கொண்டிருப்பவன் கதை எல்லாம் தனிக்கதை. அவனைப்பற்றி இன்னொரு நாள் பார்ப்போம். உழைக்கும் வர்க்கத்தின் கதையை, உணர்வுள்ளவனின் கதையை இன்று பார்ப்போம்
திடீரென்று இறக்கங்கள் உண்டானால் ஜாதகத்தைப் பார்க்க வேண்டும். 30-40 வயது உள்ளவன் பார்க்க மாட்டான். மனத் தெம்பு விடாது. 40ஐக் கடந்தவன், கண்டிப்பாக கையில் ஜாதகத்தை எடுத்துவிடுவான். அவர்களுக்காகத்தான் இன்றையப் பதிவு.
கஷ்டங்கள் எப்போது உங்களை அணைக்கத்துவங்கும்?
சனி மகாதிசை/புத்திகளில் அல்லது கோள்சாரச் சனியின் காலத்தில் (Changed period of transit Saturn) காலத்தில் சனி நம்மை அணைக்கத்துவங்கும். சனீஷ்வரனின் அணைப்பில் சுமார் 19 ஆண்டுகாலம் நான் இருந்திருக்கிறேன். சுகமான அணைப்பு அல்ல அது. அவஸ்தையான அணைப்பு. தேவதையின் அணைப்பு அல்ல அது. பிசாசின் அணைப்பு அது!
கோசாரச் சனி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம் மாறும். ஒரு ராசியைவிட்டு அடுத்த
No comments:
Post a Comment