jaga flash news

Wednesday, 25 December 2024

லக்கினமும் அதன் குணங்கள்



 லக்கினமும் அதன் குணங்கள் மற்றும் சுப, அசுப கிரகங்களின் பலன்கள்
ஜோதிடமும், ஜோதிட விதிகளும் சாதாரணமாக புரிவதில்லை. ஜோதிடம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், அதன் அடிப்படையான ராசி, லக்கினம் மற்றும் அதன் குணாதிசயங்களை தெரிந்து கொள்வது அவசியம். அப்படி லக்கினம் என்பது குறித்தும், சுப, அசுப கிரகங்கள் லக்கினம் முதலான இடங்களில் இருந்தால் எப்படிப்பட்ட பலன்கள் தரும் என்பதை பார்ப்போம்...

 
ஜோதிடமும், ஜோதிட விதிகளும் சாதாரணமாக புரிவதில்லை. ஜோதிடம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், அதன் அடிப்படையான ராசி, லக்கினம் மற்றும் அதன் குணாதிசயங்களை தெரிந்து கொள்வது அவசியம். அப்படி லக்கினம் என்பது குறித்தும், சுப, அசுப கிரகங்கள் லக்கினம் முதலான இடங்களில் இருந்தால் எப்படிப்பட்ட பலன்கள் தரும் என்பதை பார்ப்போம்...
Lagna Characteristics : லக்கினமும் அதன் குணங்கள் மற்றும் சுப, அசுப கிரகங்களின் பலன்கள்

Lagna Characteristics : லக்கினமும் அதன் குணங்கள் மற்றும் சுப, அசுப கிரகங்களின் பலன்கள்



லக்கினமும் அதன் ஸ்தான பலனும்

ஜோதிடத்தின் மிக முக்கிய அம்சமாக ராசி பார்க்கப்படுவது போல, லக்கினம் மிக முக்கியமானது. ராசியை விட லக்கினத்தை வைத்து ஜாதக பலன் சொல்வது மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ஒரு கிரக பெயர்ச்சி நடக்கும் போது ஒருவர் ராசிக்கான பலனை மட்டும் பார்க்காமல், அவரின் லக்கினம் என்ன என்பதை அறிந்து கொண்டு, அதற்கான பலன்களையும் பார்க்கும் பட்சத்தில் அவருக்கு எப்படி அந்த கிரக பெயர்ச்சி பலன் அமையும் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.




ஜாதகத்தில் லக்கினம் என்பது ‘ல’ என குறிப்பிடப்பட்டிருக்கும்.

லக்கினம் அமைந்துள்ள இடத்திலிருந்து அடுத்தடுத்து ஜாதகத்தில் வீடுகளின் அடிப்படையில், அந்த நபர் எப்படிப்பட்ட குணம், தோற்றம் கொண்டிருப்பார், அவரின் அடிப்படை பண்புகள் எப்படி இருக்கும் என்பதை இங்கு பார்ப்போம்.

ஜாதகத்தில் மேல் வரிசையில் இரண்டாவது கட்டத்தில் ‘ல’ என குறிப்பிடப்பட்டிருந்தால். அவருக்கு மேஷ லக்கினம். 3வது கட்டத்தில் இருந்தால் ரிஷப லக்கினம் என வரிசையாக வரும்.



லக்கினம் - முதல் வீடு:

ஜாதகதாரரின் தோற்றம், குண நலன்களை குறித்து இருக்கும்.

இரண்டாம் வீடு

தனம், ஆரம்ப கால கல்வி, குடும்பம், வாக்கு உள்ளிட்டவற்றைக் குறிக்கும்.

மூன்றாம் வீடு

தைரியம், வீரியம், இளைய சகோதரர் உறவைக் குறிக்கும்.

நான்காம் வீடு

கல்வி, தாய் ஸ்தானம், வாழும், வீடு, வாகனம் உள்ளிட்ட சுக ஸ்தானத்தை குறிக்கிறது.

ஐந்தாம் வீடு

பூர்வ புண்ணிய ஸ்தானம் என குறிப்பிடப்படும் இந்த வீடு குழந்தைகள்,முற்பிறவி, குல தெய்வ அருள் உள்ளிட்டவற்றை குறிக்கும்.


ஆறாம் வீடு

நோய், எதிரி ஸ்தானம் எனப்படும் இது கடன், வியாதி, நோய், எதிரிகள் எப்படி என்பதை குறிக்கும்

ஏழாம் வீடு

மனைவி, தொழில், கூட்டாளி ஸ்தானமான இது கணவன் - மனைவி உறவு, நண்பர்கள் உறவு எப்படி என்பதை அறியலாம்.

எட்டாம் வீடு

ஆயுள் (பென்ண்களுக்கான மாங்கல்ய ஸ்தானம்), துஸ் ஸ்தானத்தை, வாழ்வில் ஏற்படும் திடீர் எழுச்சி, வீழ்ச்சி, மான பங்கம், வில்லங்கம், அவமானம், சிறை வாசம் உள்ளிட்டவற்றை குறிக்கின்றது.

ஒன்பதாம் வீடு

பாக்கிய ஸ்தானம், தந்தை ஸ்தானம் என குறிப்பிடப்படுகின்றது.

பத்தாம் வீடு

கர்ம ஸ்தானம், தொழில் ஸ்தானம் என குறிப்பிடப்படுகிறது. ஜாதக தாரரின் தொழில் எப்படி அமைந்திருக்கும் என்பதைக் கணிக்கக் கூடியது.

பதினொன்றாம் வீடு

லாப ஸ்தான, மூத்த சகோதரர் ஸ்தானம், இரண்டாம் திருமணம் யாருக்கு அமையும் என்பதையும் குறிக்கக் கூடியது.

பன்னிரண்டாம் வீடு

விரய, மோட்ச ஸ்தானம் என்றும், அயன, சயன போகம் தரக்கூடிய அதாவது நல்ல தூக்கம், சுகம் தரக்கூடியதும், மோட்சம் தரக்கூடிய ஸ்தானம்.


லக்கின கேந்திரம்

உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்கினத்திற்கு ஏற்ப கிரகங்களின் சுப மற்றும் அசுப தன்மையைப் பொருத்து பலன்கள் அமையும்.

ஜாதகத்தில் லக்கின கேந்திர ஸ்தானங்கள்

லக்கின கேந்திரம் (விஷ்ணு ஸ்தானம் - அதாவது 1, 4, 7, 10 ஆகிய இடங்களை குறிக்கின்றது.

லக்கின கேந்திரத்தில் இயற்கையாகவே அசுப கிரகங்கள் சுப கிரகங்களாகின்றன. அதே போல் இயற்கையாக சில சுப கிரகங்கள் நன்மை செய்தாலும், சில கிரகங்கள் நன்மையை தருவதில்லை.


​திரிகோண ஸ்தானம்


லட்சுமி ஸ்தானம் என சொல்லக்கூடிய 1, 5, 9 வீடுகளை குறிக்கின்றது.

சுப கிரகங்கள் இந்த திரிகோண ஸ்தானத்தில் இருந்தால் அந்த கிரகங்கள் சிறப்பான நற்பலன்களை அள்ளித்தரும் என்பது ஜோதிட விதி.

1ஆம் வீடு - திரிகோணமும், கேந்திரமும் ஆகிறது.

ஏதேனும் ஒரு கிரகம் திரிகோணத்தில் அல்லது கேந்திரத்தில் நின்றால் அது மிகுந்த பலத்துடன் நிற்கின்றது என்று பொருள்.

ஆண் பெண் ராசிகளும், சரம், ஸ்திரம், உபயம் ராசிகள் உணர்த்துவது என்ன?


​பணபர ஸ்தானம்

பணபர ஸ்தானம் (லக்னத்தில் இருந்து 2,5,8,11)

லக்னத்தில் இருந்து 2,5,8,11 ஆகிய வீடுகள் சுப ஸ்தானங்களாகின்றன.

இதில் இரண்டாம் வீடு ஜாதகரின் பண வருவாய் நிலையை குறிக்கின்றது.

5ஆம் இடம் ஜாதகரின் முற்பிறவியின் காரணமாக இப்பிறவியில் அவர் பெறும் தன யோகத்தை குறிக்கின்றது.

எட்டாம் இடம் ஜாதகரின் எதிர்பாராத மற்றும் மறைவான தன பலங்களை சுட்டுக் காடுகின்றது.

11ஆம் இடம் ஒருவரின் வியாபாரம், தொழில், உத்தியோகத்தின் மூலம் பெறும் லாபம், தனவரவைக் குறிக்கின்றது.





​உபஜெய ஸ்தானம்

உபஜெய ஸ்தானம் (லக்கினம் முதல் 3, 6, 10, 11 ஆகிய ஸ்தானங்கள்)

3ஆம் இடம் இயல்பாக தைரிய, வீரியத்தைக் குறிப்பதாகும்.

6ஆம் இடம் பகை, எதிரி, நோய், வியாதி ஆகியவற்றை குறிப்பதாகும்.

10ஆம் இடம் ஜாதகரின் செயல்பாடுகள் மற்றும் கர்மம் எனப்படும் கடமையை குறிப்பதாகும்.

11ஆம் இடம் அவரின் லாபத்தை குறிப்பதாகும்.




மறைவு ஸ்தானம்

மறைவு ஸ்தானம் (லக்கினம் முதல் 3, 6, 8, 12 ஆகிய ஸ்தானங்கள்)

இந்த மறைவு ஸ்தானத்தில் அசுப கிரகங்கள் இருந்தால் அவை நற்பலனை தரும். அதே போல் சுப கிரகங்கள் அமைந்திருந்தால் அவை தரும் சுப பலன்கள் மங்கிவிடும்.

அதாவது ஒரு சுப கிரகம் இந்த மறைவு ஸ்தானத்தில் ஏதேனும் ஒரு வீட்டில் இருந்தால், அதனால் பெரிதாக எந்த நற்பலனையும் செய்ய முடியாது.

ஒருகிரகம் நீசம் ஆகி இருக்கும் பட்சத்தில் அல்லது மறைவு வீடுகளில் இருந்தால் அல்லது பகை வீட்டிலிருந்தால் அல்லது பகை கிரகங்களுடன் சேர்ந்திருந்தால், அந்த கிரகம் சரியான நிலையில் இல்லை என எடுத்துக் கொள்ளலாம்.




No comments:

Post a Comment