* நவக்கிரகங்களில் ஐந்து கிரகங்கள் ஒன்று சேர்ந்து ஏதாவது ஒரு பாவத்தில் நின்றால், அவர்களுக்கு ஜாதகம் பலிதமாகாது.
* ஐந்து அல்லது ஆறு கிரகங்கள் நீசம் பெற்று இருந்தால், வாழ்வில் பிச்சையெடுத்துக் கொண்டு, சாலை ஓரங்களில், சாக்கடை ஓரங்களில் வாழும் நிலை உண்டாகும். இத்தகைய அமைப்பு உள்ளவர்களுக்கும் ஜோதிடம் பலிக்காது.
* ஐந்து அல்லது ஆறு கிரகங்கள் உச்சம் பெற்று இருந்தாலும், ஜோதிடம் பலிக்காது.
* லக்னத்துக்கு பாதகாதிபதியின் நட்சத்திர சாரத்தில் 5 அல்லது 6 கிரகங்கள் என்று இருந்தால் வாழ்வில் வறுமை நிலையே நீடிக்கும். இவர்களுக்கு ஜோதிடம் பலிக்காது.
* கேதுவுடன் நான்கு கிரகங்கள் சேர்ந்து, ராகுவுடன் மூன்று கிரகங்கள் சேர்ந்து இருந்தாலும் வாழ்வில் கஷ்டம் தவிர, சுகம் அனுபவிக்க முடியாத நிலையே உருவாகும். இவர்களுக்கும் ஜாதகம் சொன்னால் பலிதம் ஆகாது.
இவர்களுக்கு நல்ல வாக்கு, நல்ல அறிவுரைகள் என எது சொன்னாலும் கேட்க மாட்டார்கள். ஏன், முறையான வசதி வாய்ப்புகளைச் செய்து கொடுத்தால்கூட பயன்படுத்திக்கொள்ள மாட்டார்கள்.
* அஷ்டமி திதியில் பிறந்து, சூரியன்-சந்திரன்-குரு-செவ்வாய்-சனி ஆகிய ஐந்து கிரகங்கள் ஒரே பாவத்தில் நின்று இருந்தாலும், அல்லது இவர்கள் அனைவரும் ராகு கேது நட்சத்திர சாரம் பெற்றாலும், இவர்களுக்கு ஜோதிடம் பலிதம் ஆகாது.
*அப்படிப்பட்டவர்களுக்கு என்ன பரிகாரம்?*
ஒவ்வொரு பிரதோஷ தினத்திலும் விரதம் இருந்து, சிவனை வழிபட்டால் மட்டுமே இவற்றிலிருந்து விடுபட முடியும். பிரதோஷ வழிபாடு சகல தோஷத்துக்கு வழிபாடாக இருக்கும்.
No comments:
Post a Comment