சரவாஷ்டகவர்க்கப் பரல்கள்
சர்வாஷ்டகவர்க்கப் பரல்கள் என்றால், ஏழு கிரகங்களின் சுயவர்க்கப் பரல்களையும் கூட்டி ஒவ்வொரு ராசிக்கும் கிடைக்கும் மொத்தப் பரல்களாகும். அப்படிக் கூட்டிவந்த தொகையை ராசிகளில் எழுதி அதை மொத்தமாகக்கூட்டினால் கிடைப்பதுதான் அந்த 337 என்னும் மந்திர எண்ணாகும்அந்த எண் உலகில் உள்ள அனைவருக்கும் ஒன்று போல இருக்கும். எவருக்கும் அதை விட ஒரு பரல் கூடவோ அல்லது குறையவோ வராது.பாரதப் பிரதமருக்கும் அதே 337தான். உங்களுக்கும் 337தான்தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கும் அதே 337தான். உங்களுக்கும் 337தான்அழகான பெண்ணான ஹன்சிகா மோத்வாணிக்கும் அதே 337தான். உங்களுக்கும் 337தான்கைவண்டி இழுத்துப் பிழைப்பை நடத்தும் நல்லுசாமிக்கும் அதே 337தான். இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் தலைவர் நாராயண மூர்த்திக்கும் அதே 337தான்
பின் வாழ்க்கை எவ்வாறு வேறு படுகிறது? அதை வரும் பாடங்களில் விரிவாகப் பார்ப்போம்!
சரவாஷ்டக வர்க்கப்பரல்களின் பலன்கள்
மொத்தப் பரல்கள் 337. ராசிகள் 12 வகுத்தால் சராசரியாக ஒரு ராசிக்கு 28 பரல்கள் வரும்.ஒரு வீட்டில் (அதாவது ஒரு ராசியில்) சராசரிக்கும் குறைவான பரல்கள் இருந்தால், அந்த வீடு வலிமையாக, சிறப்பாக இல்லை என்று பொருள்.
1. ஒரு வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால், அந்த வீட்டால் ஜாதகனுக்குப் பெரிய (நல்ல) பலன்கள் இருக்காது.
2. ஒரு வீட்டில் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், அந்த வீட்டால் ஜாதகனுக்கு மிகவும் நன்மையான பலன்கள் உண்டாகும்
.3. ஜாதகன் ஒரு வீட்டின் முழுப் பலனையும் அடைய வேண்டுமென்றால்அந்த வீட்டில் 30ம் அல்லது அதற்கு மேலான பரல்களும் இருக்க வேண்டும்.
4. கிரகங்கள் ஜாதகத்தில் உச்சமாக இருந்தாலும் அல்லது கேந்திர,திரிகோண வீடுகளில் இருந்தாலும், அல்லது சொந்த வீட்டில்இருந்தாலும் அந்த வீட்டில் சராசரிக்கும் குறைவான பரல்கள்இருந்தால், அந்தக் கிரகங்கள் முழுமையாகச் செய்லபடாது.
5. கிரகங்கள் ஜாதகத்தில் நீசமடைந்திருந்தாலும் அல்லது எதிரி வீட்டில் குடியிருந்தாலும் அல்லது 6ஆம் வீடு, 8ஆம் வீடு அல்லது 12ஆம் வீடுபோன்ற தீய ஸ்தானங்களில் அமர்ந்திருந்தாலும் அந்த வீட்டில் சராசரிக்கும் அதிகமான பரல்கள் இருந்தால் அவைகள் முழுமையாகச் செயல்பட்டு ஜாதகனுக்கு நன்மைகளை செய்வார்கள்!.
6. லக்கினத்தில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருக்ககூடாது. இருந்தால் ஜாதகன் கஷ்டப்படப் பிறந்தவன். வாழ்க்கை போராட்டங்கள்நிறைந்ததாக இருக்கும்
7. ஏழாம் வீட்டில், அதாவது களத்திர ஸ்தானத்தில் 20 பரல்கள் அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருக்கக்கூடாது. இருந்தால் ஜாதகனுக்குஉரிய வயதில் திருமணம் ஆகாது. திருமணம் அநியாயத்திற்குத் தாமதமாகும். அத்துடன் தாமதமாகத் திருமணம் நடந்தாலும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தராது.
8. ஏழாம் வீட்டில் 30 அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால், ஜாதகனுக்கு உரிய வயதில் திருமணம் ஆகும். திருமண வாழ்க்கைமகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும்.
9. லக்கினத்தில் இருப்பதைவிட ஏழாம் வீட்டில் அதிகப் பரல்கள்இருந்தால், ஜாதகனுக்கு, அவன் தகுதியைவிட, அதாவதுஅவனைவிட மேலான தகுதியை உடைய பெண் மனைவியாக அமைவாள். பெண்ணாக இருந்தால், மேலான தகுதியை உடையகணவன் அமைவான்.
10. மாறாக லக்கினத்தைவிட ஏழாம் வீட்டில் பரல்கள் குறைவாக இருந்தால், ஜாதகனின் நினைப்பைவிட, விருப்பதைவிட,தகுதியைவிட (status) குறைவான அமைப்பை உடையே பெண்ணே மனைவியாக அமைவாள். அல்லது கணவன் அமைவான்.
11. பத்தாம் வீட்டில் 32 அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால், ஜாதகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். அல்லது நல்ல தொழில் அமையும்
12. பத்தாம் வீட்டில் சராசரிக்கும் குறைவான பரல்கள் இருந்தால்எடுத்தவுடன் நல்ல வேலை அமைவது சிரமம். கிடைக்கும் வேலையில் சேர்ந்து கொள்ள வேண்டியதுதான். பிறகு ஜாதகத்தில் உள்ள லக்கினாதிபதி அல்லது பத்தாம் அதிபதி அல்லது கரமகாரகன் சனியின் மேன்மையைப் பொருத்து அவர்களுடைய தசா புத்திக் காலங்களில்நல்ல வேலை கிடைக்கும்.
13. பத்தாம் வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால், கிடைக்கின்ற வேலையில் அது எப்படி இருந்தாலும், மனதைத் தேற்றிக்கொண்டு பணியாற்ற வேண்டியதுதான். ஜாதகப்படி நல்ல காலம்வரும்போது நிலைமை மாறும் என்று நம்பிக்கையோடு இருக்க வேண்டியதுதான்.14. இரண்டாம் வீட்டில் (House of finance) 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால் எப்போதும்
பணப் பிரச்சினை இருக்கும். வரவிற்குமேல் செலவாகும். சுருக்கமாகச் சொன்னால் கையில் காசு தங்காது. ஓட்டைக்கை என்று சொல்லுவார்கள்.
15. நான்காம் வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால் வாழ்க்கையில் comforts, Luxury எல்லாம் இருக்காது. அதாவது சொத்துசுகம் எல்லாம் இருக்காது. பிறகு ஜாதகத்தில் லக்கினாதிபதி, சுக்கிரன், செவ்வாய் ஆக்கிய கிரகங்களின் வலைமையைப் பொறுத்து,அவர்களுடைய தசாபுத்திகளில் சொத்து, சுகங்கள் கிடைக்கலாம். (சுகம் என்றால் என்னவென்று தெரியுமல்லவா? வண்டி, வாகனங்கள், ஸ்பிளிட் ஏர் கண்டிஷனர் போன்றவை)
16. பாக்கிய ஸ்தானத்தில் (அதாவது ஒன்பதாம் வீட்டில்) சராசரிஅல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால்தான் பூர்வீகச்சொத்துக்கள் இருக்கும். அல்லது கிடைக்கும்
17. நான்காம் வீட்டில் 30ம் அல்லது அதற்கு மேலான பரல்களும் இருந்தால்தான் நல்ல, அன்பான,
பரிவான, பாசமுள்ள தாய் அமைவாள்
18. ஒன்பதாம் வீட்டில் 30ம் அல்லது அதற்கு மேலான பரல்களும் இருந்தால்தான் நல்ல, நம்மை போற்றி வளர்க்கக்கூடிய, நமக்குப்பெருமை சேர்க்கக்கூடிய தந்தை அமைவார்.
19. ஆறாம் வீட்டில் 32ம் அல்லது அதற்கு மேலான பரல்கள் இருந்தால், வாழ்க்கையில், நோய், கடன்,
எதிரி, ஆகிய பிரச்சினைகள் இல்லாமல்இருக்கலாம்
20. எட்டாம் வீட்டில் 25 அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால், வாழ்க்கையில் பெரும்
கஷ்டங்கள் வராது.
பெரிய பிரச்சினைகள் வராது
ஒன்று, ஒன்பது, பத்து, மற்றும் பதினோறாம் வீடுகளில் 30ற்கும்மேற்பட்ட பரல்கள் இருக்க வேண்டும்.
First House (Lagna), Ninth House (House of gains), 10th House (House of Profession) 11th House (House of Profit) நான்குஇடங்களிலும் 30 பரல்களோ அல்லது 30ற்கு மேற்பட்டஎண்ணிக்கையில் பரல்கள் இருக்க வேண்டும்.மற்ற இடங்களெல்லாம் முக்கியமில்லையா? இல்லை!அப்படியிருந்தால் வாழ்க்கை எப்படியிருக்கும்? சூப்பராக இருக்கும்!
பரல்கள் என்றால் என்ன?
அஷ்டகவர்க்கத்தில் மொத்த மதிப்பெண் 337 என்பது அனைவருக்கும் தெரிந்தது. அந்த மதிப்பெண் 12 வீடுகளுக்கும் பொதுவானது என்னும்போது, 337 வகுத்தல் 12 = ஒரு வீட்டின் சராசரி மதிப்பெண் 28 அந்த சராசரி மதிப்பெண்ணிற்கு மேல் இருக்கும் வீடு நல்ல நிலைமையில் உள்ளது என்றாகிவிடும்.
Timing of events ஐக் கணக்கிடுவதற்கும் இந்த அஷ்டவர்க்கம் பயன்படும்.
தமிழில் இந்த மதிப்பெண்களைப் பரல்கள் என்பார்கள்.
1. 25 பரல்களுக்குக் கீழே உள்ள வீடுகள் நல்லதல்ல. அவற்றிற்குரியபலன்கள் சாதகமாக இருக்காது.
2. 30 பரல்கள் உள்ள வீடுகள் நல்ல பலன்களைத் தரும்.
3.30 பரல்களுக்கு மேலே இருந்தால் மிகச் சிறந்த பலன்களைத் தரும்
4. ஆட்சி, உச்ச பலன்களோடும் அல்லது கேந்திர, திரிகோண அமைப் போடும் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள்கூட தங்கள் சுய வர்க்கத்தில் குறைந்தபரல்களோடு இருந்தால் அவைகள் நல்ல பலன்களைத் தராது
5. உதாரணத்திற்கு ஒரு ஜாதகனுடைய நான்காம் வீட்டில் 30 அல்லதுஅதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால் ஜாதகன் நன்றாகப் படிப்பான். அதேபோல ஒருவனுடைய ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் 30ற்கும் மேற்பட்ட பரல்கள் இருந்தால் அவனுக்கு நல்ல மனைவி கிடைப்பாள். உரியகாலத்தில் திருமணமாகும். பெண்ணாக இருந்தால் நல்ல அன்பான அவளைப் போற்றி வைத்துக் கொள்ளக் கூடிய கணவன் கிடைப்பான் இப்படி ஒவ்வொருவீட்டின் பலனையும் அதிகமான பரல்களை வைத்துச் சிறப்பாகச் சொல்லிக் கொண்டே போகலாம். அதுபோல ஒருவனுடைய லக்கினத்தில் நாற்பது அல்லது அதற்குமேற்பட்ட பரல்கள் இருந்தால், ஜாதகன் தலைவனாகி விடுவான். அவனுக்குத் தலைமை தாங்கும் யோகம் தேடி வரும்.சரி ஒரு இடத்தில் 40 என்னும்போது அங்கே 12 பரல்கள் கூடிப்போய் விடுவதால் வேறு இடங்களில் அது குறைந்து விடுமல்லவா? மொத்தம் 337தானே? எங்கே குறைந்து உள்ளது என்று பார்க்க வேண்டும்!
பொதுவாகப் பார்த்தீர்கள் என்றால் தலைமை ஸ்தானத்தில் அதிகம்பரல்கள் உள்ள தலைவர்களுக்குக் குடும்பஸ்தானத்தில் பரல்கள்குறைவாக இருக்கும், அதனால் அவர்கள் தங்கள் குடும்பத்தை மறந்து விட்டு தேசம், தேசம் என்று நாட்டுக்காகப் பாடு பட்டிருப்பார்கள்.
செய்யும் தொழிலுக்கு (10ஆம் வீட்டிற்கு) 30 பரல்களுக்கு மேல் இருந்தால் சிறப்பு. நல்ல வேலை கிடைக்கும் அல்லது நல்ல தொழில் அமையும். ஆனால் 36 ம் அதற்கு மேலும் இருந்தால் செய்யும் வேலையில் ஒரு சபீர் பாட்டியாகவோ, அல்லது நாராயண மூர்த்தியாகவோ அல்லது பில் கேட்ஸாகவோ உச்சத்தைத் தொட முடியும்! உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?
, பரிவுமிக்க மனைவி, உள்ளத்தைக் கொடுக்கும்
No comments:
Post a Comment