jaga flash news

Thursday, 4 October 2012

மறதி நோயை (அல்சீமர் நோய்) தடுக்கக்கூடிய காய்கறிகள்!


உடல் ஆரோக்கியத்திற்காக உட்கொள்ளப்படும் காய்கறிகள் மறதிநோய் எனப்படும் அல்சீமர் நோய் ஏற்படாமல் தடுக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் உள்ள சத்தான கொழுப்புகளும், காய்கறிகளில் உள்ள தாவர எண்ணெய்களும்தான் அல்சீமரை தடுக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
சிகாகோவில் உள்ள ஆய்வாளர்கள் 65 வயதிற்கு மேற்பட்ட 815 நபர்களிடம் இந்த ஆய்வினை மேற்கொண்டனர். அவர்களுக்கு உயர்தர சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பால் பொருட்களை கொடுத்து சோதனை செய்தனர். அதில் வியப்பூட்டும் மாற்றம் ஏற்பட்டது. 80 சதவிகிதம் வரை அல்சீமர் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. காய்கறிகளில் உள்ள நல்ல கொழுப்புகள் ரத்த நாளங்களில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கிவிடுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற காய்கறி உணவுகள் இதயநோய் ஏற்படாமல் தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள மேற்கொண்ட ஆய்வில் வைட்டமின் சி வைட்டமின் இ சத்து நிறைந்த உணவுகள் அல்சீமர் ஏற்படாமல் தடுப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைட்டமின்களில் உள்ள ஆண்டி ஆக்ஸிடென்ஸ் மூளை நரம்புகளுக்கு நன்மை தருகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மூளை நரம்புகளில் உள்ள திசுக்கள் பாதிக்கப்படுவதாலேயே அல்சீமர் எனப்படும் மறதிநோய் ஏற்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட 980 நபர்களுக்கு வைட்டமின் சி, வைட்டமின் இ நிறைந்த காய்கறிகள், உணவுகளை உட்கொள்ள கொடுத்தனர் அதில் 242 பேர்களுக்கு அல்சீமர் நோய் பாதிப்பு படிப்படியாக குறைந்தது தெரியவந்தது. இந்த இரு ஆய்வு முடிவுகளும் நரம்பியல் தொடர்பான மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
வைட்டமின் சி யினால் மனிதனுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. உயிரியல் ரசாயன மாற்றம் நடைபெறுவதில் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் சி ஆனது சிட்ரஸ் அமிலம் அடங்கிய அனைத்து பழங்களிலும் உள்ளது. தக்காளி, மிளகு, முட்டைகோஸ், கொய்யா, காலிபிளவர் போன்றவற்றில் இருக்கிறது. மனிதன் தனக்கு வேண்டிய தேவையான வைட்டமின் சி யை அவன் உணவின் மூலம் தான் பெற முடியும். மனித பரிணாம வளர்ச்சிக்கு அஸ்கார்பிக் அமிலம் ஆதாரமாக இருந்து வந்திருக்கிறது.
எலுமிச்சை, நெல்லிக்காய் போன்றவற்றில் வைட்டமின் சி, அஸ்கார்பிக் அமிலம் அதிகம் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் வைட்டமின் சி நீரில் கரைக்கூடிய, ஒளி ஓடுருவக்கூடிய வெள்ளை நிறப் பொடியாகும். நமது உடலில் போதுமான அளவில் வைட்டமின் சி சத்து இல்லாவிட்டால் சொறி, கரப்பான், பல்லில் ரத்தம் வடிதல் ஸ்கர்வி போன்ற நோய்கள் உண்டாகும். நம் உடலுக்கு அஸ்கார்பிக் அமிலத்தினால் பல நன்மைகள் உண்டு.
குறிப்பாக நமது உடலில் உள்ள உயிரணுக்களை ஒன்று சேர்த்து பிணைப்பதாகும். இதனால் புதிய செல்களை உற்பத்தி செய்யவும், அழிந்த செல்களை மாற்றவும் வைட்மின் சி துணை புரிவதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். வைட்டமின் சி பற்றாக்குறையால் முடியில் நிறமாற்றம், முடி உதிர்தல், தோலில் ரத்த கசிவு, கறுப்பு புள்ளிகள் தோன்றும். இதற்கு வைட்டமின் சி அதிக முள்ள உணவுகளை கொடுத்தால் எளிதில் குணப்படுத்தலாம்.
வைட்டமின் சி இருக்கும் உணவுகளை நாம் சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் உண்டாகிறது. குறிப்பாக இது உணவிலுள்ள இரும்பு சத்தை ஜீரணிக்க உதவுகிறது. மேலும் வைட்டமின் சி குறைவதால் ஜலதோஷமும் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது மூளைப் புற்றுநோய் கட்டிகளை உடைப்பதில் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிப்பதும் தெரியவந்துள்ளது.
அதிகளவு வைட்டமின்சி கொடுக்கப்பட்டால் புற்றுநோய் கட்டி உடைய தொடங்குகிறது என்றும், அதன் பின் ரோடியோ தெரபி சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் நல்ல பலனை பெறலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment