jaga flash news

Monday, 31 December 2012

டச் ஸ்க்ரீன் – இயங்குவது எப்படி?


டச் ஸ்க்ரீன் – இயங்குவது எப்படி?

டச் ஸ்க்ரீன்’ என்று சொல்லப்படுகிற தொடுதிரைத் தொழில்நுட்பம் இப்போ து ரொம்பப் பிரபலமாக இருக்கிறது. செல்போன்களில், டேப் லட் கம்ப்யூட்ட ர்களில், சூப்பர் மார்க்கெட் கடைகளில் உள்ள பில் போடுகிற கருவிகளில், பேங்க் ஏடிஎம் இயந்திரங்களில், ஃப்ரிட் ஜ், வாஷிங்மெஷின், மைக்ரோவேவ் அவன், டிவி என்று இன்னும் எங்கெங் கேயோ இதைச் சர்வ சாதாரணமாகப் பார்க்கிறோம்.
இந்தக்கருவிகளை எல்லாம் இயக்குவ தற்கு நாம் பொத்தான்க ளை யோ, ரிமோட்டையோ தேடிச் சிரமப்பட வேண்டியதில்லை. அங்கே இருக்கிற திரையை நம் விரல்களால் லேசாகத் தொட்டாலே போதும், சட்டென்று அது இயங்க ஆரம்பித்து விடும்.
ஆனால் அதே திரையை, உங்கள் பேனாவிலோ, பென்சிலிலோ தொ ட்டுப் பாருங்கள். எதுவுமே தெரியாத மாதிரி தேமே என்று முழிக்கும்.
அதாவது, மனிதர்கள் விரல் பட்டால் மட்டுமே இயங்குகிற மாதிரி அந்தத் தொடுதிரைகளைத் தயாரித்திருக்கிறார்கள். அந்தத் தொழில் நுட்பத்தைதான் இப்போது விரிவாகப் பார்க்கப் போகிறோம்.
நாம் இரண்டு செல்போன்களை எடுத்துக் கொள்வோம். ஒன்று சாதாரண ஸ்க்ரீன் மொபைல், இன்னொன்று டச் ஸ்க்ரீன் மொபைல்.
இந்த இரண்டு செல்போன்களிலும் காட்சிகள் தெரிகின்றன, கலர் போட்டோக்களைப் பார்க்கிறோம், வீடியோ இயங்குகிறது, பாட்டுப் பா டுகிறது, ஏதாவதும் டைப் செய்தால் அது அப்படியே திரையில் தோன்றுகிறது… ஒரே ஒரு வித்தியாசம், சாதாரண செல்போன் திரை யை நாம் தொட்டால் எந்த ரியாக்ஷனும் இருக்காது, டச் ஸ்க்ரீன் செல்போன் மட்டும் நாம் தொடுவதைப் புரிந்துகொண்டு, அதுக்கு ஏற்ற மாதிரி இயங்குகிறது.
காரணம், சாதாரண செல்போன் திரையுடைய ஒரே வேலை, காட்சி களை வண்ணத்தில் திரையிட்டுக் காட்டுவதுதான். அதற்கான எலக் ட்ரானிக் நுட்பங்களை மட்டுமே அந்தத் திரையில் பதித்து வைத்திரு க்கிறார்கள்.
டச் ஸ்க்ரீன் என்பது, கிட்டத்தட்ட சாதாரண ஸ்க்ரீன் மாதிரியேதான் இருக்கும், இது செய்கிற எல்லா வேலைகளையும் அதுவும் செய்யும், ஆனால் கூடுதலாக அதில் ஒரு விசேஷ அடுக்கு இருக்கும்.
உதாரணமாக, உங்கள் வீட்டில் டிபனுக்குத் தோசை செய்கிறார்கள், ஒரு தோசையை வெறுமனே பரிமாறி விடுகிறார்கள், இன்னொரு தோசைக்குள்ளே உருளைக்கிழங்கை வைத்து‘மசால் தோசை’யாக த் தருகிறார்கள்.
இந்த இரண்டு தோசைகளையும் மேலோட்டமாகப் பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் தெரியும். ஆனால் சாப்பிட்டுப் பார்த்தால் வித்தியாசம் புரியும். காரணம், இரண்டாவது தோசைக்குள்ளே ஓர் அடுக்கு உருளைக்கிழங்கு ஒளிந்திருக்கிறது.
அதுபோல, டச் ஸ்க்ரீனுக்குள்ளே இருக்கிற அந்த விசேஷ ‘மசாலா’, கூடுதல் அடுக்கு, ஏராளமான வயர்கள் நிறைந்த ஒரு சின்னத் தகடு!
உங்கள் வீட்டில் டென்னிஸ் அல்லது பேட்மின்டன் மட்டை இருந்தா ல், அதைக் கையில் எடுத்துப் பாருங்கள். குறுக்கும் நெடுக்குமாகப் பல நரம்புகள் நெருக்கமாகப் பின்னப்பட்டிருக்கும். இந்த நரம்பு களு க்கு நடுவில் இருக்கிற பகுதி சின்னச் சின்னச் சதுரங்களாகத் தெரி யும்.
டச் ஸ்க்ரீனுக்குள்ளேயும் இந்த மாதிரி ஒரு கட்டமைப்புதான் இருக் கிறது. நரம்புக்குப் பதிலாக, அங்கே சின்ன மின்சார வயர்கள் மேலே யும் கீழேயும் ஓடுகின்றன. இப்படிப் பல நூறு வயர்கள் சேர்ந்துதான் ஒரு தொடு திரையை உருவாக்குகிறது.
இந்த வயர்கள் சாதாரணமாக நம் கண் பார்வைக்குத் தெரியாது. கார ணம், அதெல்லாம் ரொம்ப மெலிதாக இருக்கும், அதன் தடிமன் ஒரு தலைமுடியையும்விடக் குறைவு என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
இப்படி டச் ஸ்க்ரீனில் இருக்கிற எல்லா வயர்களுக்குள்ளும் கொஞ் சம் மின்சாரம் எப்போதும் பாய்ந்து கொண்டே இருக்கும். இந்த மின் சாரம் ஒழுங்காகப் பாய்கிறதா, அல்லது அதில் ஏதாவது மாற்றம் ஏற்படுகிறதா என்று தொடர்ந்து கவனிக்கிறதுக்கு ஓர் எலக்ட்ரானிக் சமாசாரம் உண்டு. கிட்டத்தட்ட, வீட்டு வாட்ச்மேன் மாதிரிதான்!
இப்போது, அந்த டச் ஸ்க்ரீனின் நடுவில் நீங்கள் உங்கள் விரலை வைக்கிறீர்கள். என்ன ஆகும்?
ஒரு பெரிய நதி. அதில் ஏராளமாகத் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கி றது. நீங்கள் கரையோரமாக நடந்து போய்த் தண்ணீருக்குள்ளே ஒரு குச்சியை விடுகிறீர்கள்.
இப்போது, அந்த நதி முழுவதும் தண்ணீர் இருந்தாலும்கூட, நீங்கள் குச்சியை வைத்த இடத்தில் மட்டும் நீரோட்டம் கொஞ்சம் மாறுபடும். இல்லையா?
அதுமாதிரி, அந்த டச் ஸ்க்ரீனில் உங்கள் விரல் எங்கே பட்டதோ, அந்த இடத்துக்குக் கீழே இருக்கிற வயர்களில் பாய்கிற மின்சாரத்தி ல் மட்டும் ஒருசின்ன மாற்றம் உண்டாகும். இதை அந்த ‘எலக்ட்ரா னிக் வாட்ச்மேன்’ கண்டுபிடித்து விடுவார். சட்டென்று அங்கே ஓடிப் போய் நீங்கள் என்ன வேலை செய்ய நினைத்தீர்களோ அதைச் செய் து முடித்து விடுவார்.
உதாரணமாக, அந்த விரல் பட்ட இடத்தில் ஒரு வீடியோ இருக்கிறது என்றால், உடனே அந்தப் படம் ஓட ஆரம்பிக்கும், அல்லது, ஆடியோ பாடும், கேம்ஸ் விளையாடலாம், கேமெராவில் படம் பிடிக்கலாம், யாரையாவது போனில் அழைத்துப் பேசலாம்… இப்படி நாம் பயன் படுத்துகிற கருவிக்கு ஏற்ப ஏகப்பட்ட பயன்பாடுகள் உண்டு, எல்லாம் விரல் நுனியில்!
வெறுமனே தொடறது மட்டுமில்லை, விரலைப் பயன்படுத்தி நாம் சில சைகைகளையும் செய்யலாம். வலதுபக்கம் தள்ளலாம், இடது பக்கம் தள்ளலாம், அழுத்தலாம், இவை ஒவ்வொன்றுக்கும் வெவ் வேறு அர்த்தம் உண்டு. அதைக் கவனித்து, அதுக்கு ஏற்ப உங்கள் ‘எலக்ட்ரானிக் வாட்ச்மேன்’ செயல்படுவார்.
இதுதவிர, பெரும்பாலான டச் ஸ்க்ரீன்களில் நாம் இரண்டு, மூன்று விரலைக்கூடப் பயன்படுத்தித் தொடலாம், சைகைகளைச் செய்ய லாம்.
இப்போது நீங்கள் ஒரு போனில் போட்டோக்களைப் பார்த்துக் கொ ண்டிருக்கிறீர்கள். விரலை வலது பக்கம் தள்ளினால், அடுத்த போ ட்டோ வருகிறது, இடதுபக்கம் தள்ளினால், முந்தின போட்டோ வரு கிறது, இரண்டு விரல்களைப் பயன்படுத்தினால் அந்த போட்டோ அளவு பெரிசாகிறது… இப்படி எல்லாமே விரல்களின் மூலம் செய்து கொள்ளலாம்.
இதனால், டச் ஸ்க்ரீன் கருவிகளைப் பயன்படுத்தியவர்கள் எல்லாரு ம், அதிலேயே ஆழ்ந்து போய்விடுகிறார்கள். நேரம் ஓடுவதே தெரி யாமல் உட்கார்ந்திருக்கிறார்கள். அதுக்குப் பிறகு, மற்ற சாதாரண ஸ்க்ரீன் உள்ள கருவிகளைப் பயன்படுத்தவே அவர்களுக்கு மனம் வருவதில்லை.
இது என்ன பெரிய விஷயம்? சமீபத்தில் வெளியான சில கருவிகளி ல், முக்கியமாக நவீன தொலைக்காட்சிகளில் இந்த டச் ஸ்க்ரீன்கூட இல்லை, அதுக்குப் பதிலாக, வெறுமனே நம் கைகளுடைய அசை வைப் பார்த்து அதற்கு ஏற்பச் செயல்படுகிற வசதியைச் சேர்த்திருக்கி றார்கள்.
உதாரணமாக, நீங்கள் உங்கள் கைகளைக் காற்றில் இடதுபக்கம் நகர்த்தினால், டிவியில் சேனல் மாறும், கையைக் குவித்து முன்னா டி குத்தினால் ஒலி குறையும். இப்படி ஒவ்வொரு சைகைக்கும் ஒவ்வோர் அர்த்தம்!
அடுத்து என்ன? நாம் சிந்தித்ததும் வேலை நடக்கவேண்டுமா? யாரா வது ஒரு விஞ்ஞானி அதையும் ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார்!
கேளுங்கள்!
1. சில டச் ஸ்க்ரீன்களை நாம் தொட்டவுடன் வேலை செய்கிறது, ஆனால் வேறு சில, அழுத்தினால்தான் இயங்குகிறது. இந்த வித்தி யாசம் ஏன்?
நவீன டச் ஸ்க்ரீன்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, கெபாசிட்டிவ் டச் ஸ்க்ரீன், இன்னொன்று, ரெசிஸ்டிவ் டச் ஸ்க்ரீன்.
இதில் கெபாசிட்டிவ் டச் ஸ்க்ரீன் கொஞ்சம் விலை அதிகம். ஆனால் பிரமாதமாக வேலை செய்யும். அதோடு ஒப்பிடும்போது ரெசிஸ்டிவ் டச் ஸ்க்ரீன் மந்தம்தான். கையை வைத்து ஓரளவு அழுத்தினால் மட்டுமே புரிந்து கொண்டு இயங்கும். வேகமும் கொஞ்சம் குறைவு.
ஆனாலும், விலை குறைவு என்ற காரணத்தால், ரெசிஸ்டிவ் டச் ஸ்க் ரீன்கள் பல கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றன. பணம் கொஞ்சம் கூடுதலாகச் செலவானாலும் பரவாயில்லை, நல்ல வேகமும் சிறப்பான அனுபவமும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், கெபாசிட்டிவ் டச் ஸ்க்ரீன் உள்ள பொருள்களைத் தேடி வாங்கிப் பயன் படுத்துவார்கள்.
2. சில டச் ஸ்க்ரீன் கருவிகளில், நம் விரலுக்குப் பதிலாகச் சின்னப் பேனா மாதிரி ஒரு கருவியைப் பயன்படுதுகிறார்களே, அது ஏன்?
விரல் தொடுதிரையெல்லாம் வருவதற்கு முன் அறிமுகமான தொழி ல்நுட்பம் அது. எல்லா பேனாக்களையும் பயன்படுத்த முடியாது, அத ற்கு என்றே வடிவமைக்கப்பட்ட ஸ்பெஷல் பேனாதான் வேண்டும், அதன் பெயர் ஸ்டைலஸ்!
சில ஸ்டைலஸ்களில் வயருண்டு. அது அந்தக்கருவியோடு பிணை க்கப்பட்டிருக்கும். மற்ற பெரும்பாலான ஸ்டைலஸ்கள் வயர்லெ ஸ்ஸாகச் செயல்படும்.
அடிப்படையில் விரலும் ஸ்டைலஸும் கிட்டத்தட்ட ஒரேமாதிரிதான் வேலை பார்க்கிறது. வித்தியாசம் என்னவென்றால், இந்த இரண்டு வகை ஸ்க்ரீனுக்குள்ளேயும் இருக்கிற மின்சார அமைப்புகள் மாறு படும். விரலால் தொடும்போது இயங்குகிற ஸ்க்ரீன் ரொம்ப நுட்பமா னதாக இருக்கும்.
இப்பவும் ஸ்டைலஸ் பயன்படுத்துகிறவர்கள் இருக்கிறார்கள். விர லில் தொட்டுப் பயன்படுத்துவதை விட அதுதான் வேகமானது, ஸ்க்ரீ னும் விரைவில் அழுக்காகாது என்று சொல்கிறார்கள்.
ஆனால், மக்கள் ஸ்டைலஸ் என்று ஒரு குச்சியைத் தனியாகத் தூக் கிக்கொண்டு அலைய விரும்புவதில்லை. விரலைத் வைத்து தொட் டால் வேலை நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதுதான் இப்போது சூப்பர் ஹிட்!

*மகாத்மா காந்தி, இந்திய நாட்டின் தந்தை ஆனது எப்போது ? ? ?*


*மகாத்மா காந்தி, இந்திய நாட்டின் தந்தை ஆனது எப்போது ? ? ?*

ந்த ஒரே ஒரு கேள்வி கேட்டு மத்திய அரசையே திணற அடித்த‍ 10 வயது சிறுமி
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக லக்னோவை சேர்ந்த 5 ம் வகுப்பு பயிலும் ஒரு பத்து வயது பள்ளி மாணவியான ஐஸ்வர்யா பராஷர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் திணறியுள் ளது மத்திய அரசு.
ஆம், அவர்கேட்ட கேள்வி ஒன்றும் சாதாரணமான கேள்வி அல்லவே. யாரும் கேட்காத ஒரு கேள்வியை அல்லவா அந்த பெண் கேட்டு விட்டாள். அவள் கேட்ட கேள்வி என்னவென்றால், எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட் டின் தந்தை ஆனார்? அதாவது எந்த ஆண்டில் அவருக்கு அத்தகைய பட்டம் வழங்கப்பட்டது என்று கேட்டாள் அந்த சிறு பெண் ஐஸ்வர்யா. .
பள்ளியில் பாட புத்தகம் படிக்கும்போது காந்தி, தேசத்தின் தந்தை என எழுதப்பட்டிருந்தது. இதை படித்தபின் முதலில் தன் பள்ளி ஆசிரியரை பார்த்து காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் என் று கேட்டுள்ளார் . அவர்களுக்கு பதில் தெரியவில்லை. பின்பு தங்கள் பெற்றோரிடம் கேட்டுப் பார்த்தார். அவர்களுக்கும் பதில் தெரியவில் லை. கூகிள் இணையத்தில் கூட பார்த்து உள்ளார். யாருக்கும் பதில் தெரியாததால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக பிரதமர் அலுவலகத்திடம் இதே கேள்வியை கேட்டுள்ளார் .
இந்த கேள்விக்கு பிரதமர் அலுவ லகத்தால் தகுந்த பதில் தர முடியா ததால், அந்த கேள்வியை தேசிய தகவல பதிவகத்திற்கு அனுப்பி வைத்தது பிரதமர் அலுவலகம். தகவல் பதிவகம் தங்களிடம் இது தொடர்பான வரலாற்று பதிவுக ளை ஐஸ்வர்யாவிற்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளனர் . மேலும் இந்த பதிவுகளைக் கொ ண்டு ஐஸ்வார்யாவே ஆராய்ச்சி செய்து கொள்ளுமாறு பரிந்துரை செய்தது தேசிய தகவல் பதிவகம்.
ஒரு பத்து வயது சிறுமி கேட்ட கேள்வி பிரதமர் அலுவகத்திற்கு செ ன்று, அங்கிருந்து உள்துறை அமைச்சகத்திற்கு சென்று பின் அங்கி ருந்து தேசிய தகவல் பதிவகத்திற்கு சென்று கடைசியில் யாரும் பதில் அளிக்கவில்லை என்பதுதான் வேடிக் கையிலும் வேடிக்கை. இச் சம்பவம் நடந்தது கடந்த மார்ச் மாதம் .
இப்படி கேள்விகேட்ட அந்த குட்டிப் பெண்ணுக்கு வாழ்த்துகள். இப்படி பல கேள்விகளை இளைய தலை முறை இப்போது கேட்க தொடக்கி விட்டார்கள். இதனால் பல மறைக்கப் பட்ட உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். அதனால் இந்த நாட்டில் நீதி நிலைநாட்டப்படும் காலமும் வரும் எனத் தெரிகிறது.
இந்திய வரலாற்றை புரட்டிப் பார்க்கும்போது 1944 ம் ஆண்டு ஜூலை மாதம் 6 ம் தேதி சிங்கப்பூர் வானொலி நிலையத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய உரையில் காந்தியடிகளை முதன்முதலில் தேசத் தந்தை எனக் குறிப்பிட்டதாகத் தெரிகிறது

ஹெல்மெட் (தலைக்கவசம்) வாங்குமுன் கவனிக்க வேண்டியவை என்ன?


ஹெல்மெட் (தலைக்கவசம்) வாங்குமுன் கவனிக்க வேண்டியவை என்ன?

தலைக்கவசம் (ஹெல்மெட்) என்றால் நமக்கு தலைவலிதான். மற்றவர்களின் கட்டாயத்திற்க்காகவோ அல்லது அபராதத்திற்க்கு பயந்து அணிபவர்கள் பலர். விருப்ப த்துடன் அணிபவர்கள் சிலர். நீங்க ள் இந்த வகையில் எதுவாயினும் ஹெல்மெட் வாங்குமுன் மிக முக் கியமாக கவனிக்கவேண்டிய கார ணிகளை ஜிக்வீல்ஸ் முன் வைத்த வை தமிழாக்கமாக இங்கு  தலைக் கவசம் வாங்குமுன் கவனிக்க வேண்டியவை என்ன?
பைக் வாங்குமுன் பல விடயங்களை கவனிக்கும் நாம் ஹெல்மெட் வாங்க சாலையோர கடைகளை கூட பலரும் பயன்படுத்துகிறோம். இதற்க்கு காரணம் ஹெல்மெட் பற்றி போதுமான விழிப்புணர்வு இல்லை என்பது நிதர்சனமான உண் மை.
 
பொருந்துதல் மற்றும் வசதிகரமான காரனிகள்:
 
1.உங்கள் தலையினை முழுமை யாக மூடும் தலைக்கவசத்தை மட்டு ம் வாங்குங்கள்.
 
2. கண்டிப்பாக ஹெல்மெட் (Helmet ) சரியாக பொருந்தியிருக்க (அதாவ து உங்கள் தலை மற்றும் தாடையில் சரியாக பொருந்த வேண்டும்) வேண்டும்.எக்காரணம் கொண்டும் சரியாக பொருந்தாத மற்றும் சிற ப்பான வசதிகள் இல்லாத தலைக்கவசத்தினை பயன்படுத்தக்கூடா து.
 
3. உங்கள் காது, கன்னங்கள் மற்றும் கழுத்தின் பின்புறம் போன்றவ ற்றில் எவ்விதமான உறுத் தல்களும் இல்லாமல் உங்களுக்கு இதமான சூழ்நிலை தந்தால்தான். உங்கள் பயணத்தின் பொழுது எவ்வித மான சிரமங்கள் இல்லாமல் இயலுபாக இருக்கும்.
 
4. எக்காரணம் கொண்டும் ஸ்ட்ராப் இல்லாத தலைக்கவசத்தினை பயன்படுத்தக் கூடாது.
 
5. உங்கள் ஸ்ட்ராப்யில் ஒரு விரல் நுழையும் அளவு இடைவெளி இருந்தால் போதுமானது.
 
6. உங்கள் ஸ்ட்ராப் உங்களுக்கான பாதுகாப்பினை உறுதிசெய்வதி ல் முக்கிய பங்கு வகிக்கின்றது. சட்டென்று ஏற்படும் நிகழ்வுகளின் பொழுது உங்கள் தலைக்கவசம் தலையை விட்டு வெளியேறாது.
 
7. முன்புற கண்ணாடியில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் பல உள்ளன அவற்றில் பூச்சுசெய்யப்பட்ட கண் ணாடிகள் அழகை கூட்டினாலும் அவை இரவு மற்றும் வெளிச்சம் குறைந்தவேளைகளில் சிறப்பான கா ட்சியினை காட்டுவதில் தடுமாறும்.
 
8. முன்புற கண்ணாடியில் கீறல்கள் மற்றும் அழுக்குகள் சேராமல் கவனித்துக்கொள்ளுங்கள். அதிகப்படியான கீறல்கள் மற்றும் உடை ந்தாலும் கண்ணாடியினை மாற்றுங்கள்.
 
9. உங்கள் தலைக்கவசம் பாது காப்பினை உறுதிப்படுத்தக் கூடி யதாக இருத்தல் அவசியம். மேலும் மிக கடிணமான மேற் புற ஓடு அமைந்திருத்தல் அவசி யம்.
 
தர முத்திரை அவசியம்
 
இந்தியாவின் ஐஎஸ்ஐ(ISI) அல்லது DOT(U.S. Department of Transportation) முத்திரை இருக்க வேண்டும்.
 
தோற்றம் மற்றும் வடிவம்
 
உங்கள் விருப்பமான மற்றும் அழகான வடிவத்தினை தேர்ந்தேடு ங்கள்.

நவ(9) வாசல் கொண்ட நம் உடம்பில் உள்ள 96 தத்துவங்கள்


நவ(9) வாசல் கொண்ட நம் உடம்பில் உள்ள 96 தத்துவங்கள்

இறைவனின் படைப்பு துருவ வேற்றுமை ஒற்று மைகளாக, வினையும் எதிர்வினையும் கொண்ட வைகளாக, இது வரையிலும் அவிழ்க்க முடியாத புதிராகவும் உள்ளது. அவைகளில் சிலவற்றை ஞான, விஞ்ஞான, அஞ்ஞான, வேதாந்த விளக்க ங்களின் மூலம் ஆன்றோர்கள், சான்றோர்கள் விளக்கி உள்ளனர். அறிந்து கொள்வோமா!!!!
அறிவு …………………………………..1 புத்தி
வினைகள் …………………………..2 நல்வினை, தீவினை
ஆசைகள் …………………………….3 மண், பொன், பெண்
அந்த கரணங்கள்…………………4 மனம், புத்தி, அகங்காரம், சித்தம்
பஞ்சபூதங்கள்…………………5 (பிருதிவி/பூமி/நிலம்/மண்),(அப்பு/ஜலம்/ நீ​ர் / புனல்) , (தேயு / அக்னி / நெருப்பு / அனல்), (வா​யு / கால் / கற்று / கனல்), (ஆகாயம் / வெளி / வானம் / விசும்பு)
பஞ்ச ஞானேந்திரியங்கள்….5 மெய், ,கண், மூக்கு, செவி
பஞ்ச கன்மேந்திரியங்கள்….5 (வாக்கு-வாய், பாணி-கை, பாதம்-கால், பாயுரு-மலவாய், உபஸ்தம்-கருவாய்)
பஞ்ச தன்மாத்திரைகள்.…….5 (சுவை-ரசம், ஒளி-ரூபம், ஊறு- ஸ்பரிசம்,  ஓசை-சப்தம், நாற்றம்-கந்தம்)
பஞ்சகோசங்கள்………………….5 (அன்னமய கோசம், பிராமணய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம்)
மூன்று மண்டலங்கள………..3 ( அக்னி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம் )
குணங்கள்…………………….​……..3 ராஜசம், தாமசம், சாத்வீகம்.
மலங்கள்……………………..​………3 ஆணவம், கன்மம், மாயை
பிணிகள்……………………..​……….3 வாதம், பித்தம், சிலேத்துமம்.
ஏட…………………………………​……..3 லோக ஏடணை, அர்த்த ஏடணை, புத்திர ஏடணை.
ஆதாரங்கள்…………………..​…….6 மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞா
அவஸ்தைகள்…………………….​5 சாக்கரம்-நனவு, சொப்பனம்-கனவு, கழுத்தி-உறக்கம், துரியம்-நிஷ்டை, துரியாதீதம்-உயிர்ப்படக்கம்
தாதுக்கள்……………………​……….7 இரசம், இரத்தம், மாமிசம், மேதஸ், அஸ்தி, மச்சை, சுக்கிலம்/சுரோனிதம்
ராகங்கள்.……………………​……….8 காமம், குரோதம், லோபம், மோகம், மதம்,  மாச்சர்யம்,  இடம்பம், அகங்காரம்.
தசநாடிகள்…………………….​ …..10 இடகலை/இடபக்க நரம்பு, பிங்கலை /வலபக்க நரம்பு, சுழுமுனை/நாடு நரம்பு, சிகுவை/உள்நாக்கு நரம்பு, புருடன்/வலக்கண் நரம்பு, காந்தாரி/இடக்கண் நரம்பு, அத்தி/வலச்செவி நரம்பு, அலம்புடை/இடச்செவி நரம்பு, சங்கினி/கருவாய் நரம்பு, குகு/மலவாய் நரம்பு.
தசவாயுக்கள்……………………..10பிராணன்/உயிர்க்காற்று, அபாணன்/ மலக்கற்று, வியானன்/தொழிற்காற்று,உதானன்/ஒலிக்காற்று, சமானன் /நிரவுக்காற்று, நாகன்/விழிக்காற்று,கூர்மன்/இமைக்காற்று, கிருகரன்/ தும்மல்காற்று,தேவதத்தன்/கொட்டாவிக்காற்று, தனஞ்செயன்/வீங்கல் காற்று.
ஆக கூடுதல் 96 தத்துவங்கள்.ஆகும்

நாய் வாங்கும்முன் நினைவில் கொள்ள‍ வேண்டியவை


நாய் வாங்கும்முன் நினைவில் கொள்ள‍ வேண்டியவை

வீட்டில் ஆசைக்கு செல்லமாக வளர்க்க நாய் வாங்குகிறோம் என் றால் அதற்கு ஒரு புதிய உயிரை குடும்பத்தில் சேர்க்கிறோம் என்று அர்த்தம். ஆனால் அவ்வாறு வீட்டில் வளர்க்க நாயை தேர்ந்தெ டுக்கும் போது ஒரு பெரிய குழப்பமே மனதி ல் நிலவும். ஏனெனில் தற்போது நிறைய செல்லப்பிராணிகள் இருக் கின்றன. ஆகவே எதை வளர்த்தால் சரியானதாக இருக்கும என்ற குழப் பம் மனதில் பெரிதும் இருக்கும். அதிலும் நாயை வாங்கிவிட்டு, பின் ஒரு சிறு தவறு நடந்தாலும், பிறகு அனைத்துமே தவறில் முடிந்து விடும். ஆகவே மிகவும் கவனத்து டன் இருக்க வேண்டும். இப்போது நாயை வாங்கும்முன் எவற்றை யெல்லாம் நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று பார்ப்போமா !!!
tips choosing the right dog
.
* நாயை வாங்குகிறோம் என்றால் முதலில் எதற்கு வாங்க வேண்டும்? என்று யோசிக்க வேண்டும். ஏனெனில் அதற்கு காரணம் நிறைய உள்ளன. அதாவது மிகவும் பிடி க்கும் என்பதற்காக, பாதுகாப்பிற்காக அல் லது ஒரு நல்ல துணையாக இருப்ப தற்காக என்ற காரணங்களுள் ஏதே னும் ஒன்றை தெளி வாக யோசித்துக் கொண்டால், பின் அதற்கேற்ப நாயை வாங்குவது என்பது எளிதாகி விடும். ஏனென்றால் நாய்களுள் பல வகை கள் உள்ளன. ஆகவே எதற்கு என்பது தெளிவாகி விட்டால், வாங்கு வது ஈஸியாகிவிடும்.
.
* மற்றொன்று நாயை வாங்கி யப் பின் அதனை நம்மால் சரியாக கவனிக்க முடியுமா? என்பதனையும் தெளிவாக யோசித்துக் கொள்ள வேண்டும். அதிலு ம் வேலைக்கு செல்பவர்கள் நாயை வாங்கு வதற்கு முன் பல முறை யோசி க்க வேண்டும். நாயை வாங்கினால் அதனை அடிக்கடி வெளியே அழைத்து செல்வது, அதனுடன் விளையாடு வது என்று அதனுடன் நேரத்தை செலவழி க்க வேண்டு ம். ஏனெனில் நாய் எப் போதும் தனிமையை விரும்பாது. இல் லை, முடியாது என்று இருப்பவர்கள், நாய் வாங்கும் எண்ணத் தை கைவிடுவது நல்லது.
.
* நாயை வாங்கினால், நம்மால் அதனை சரி யாக பராமரிக்க முடியுமா? என்று சிந்திக்க வேண்டும். ஏனெனில் நாயை பராமரிப் பது என்பது எளிதானது அல்ல. அதற்கு நிறைய செலவாகும். அத னை அடிக்கடி கால்நடை மருத்து வரிடம் அழைத்துச் செல்லுத ல், அதற்காக கடைகளி ல் விற்கும் உணவுகளை வாங்கி கொடுத்தல், அதன் ஆரோக்கியத்தி ற்கு வேண்டி யவற்றை செய்தல் போன்ற அனைத் தையும் நினைத்து, பின் வாங்க வேண்டும்.
.
* வீட்டி ற்கு எந்த மாதிரியான நாயை வாங் க வேண்டும். இப்போது வீடு சிறிய தாகவும் நாய் பெரியதாகவும் இரு ந்தால், அவற்றை பராம ரிப்ப து என்பது கடினமாகிவிடும். ஏனென் றா ல் அது செய்யும் குறும்புத்தனத்திற்கு அளவில்லாமல், அதனை கட் டுப்படுத்துவது என்பது கடினமாகிவிடும். ஆகவே சிறிய நாயை வாங்கினால், அதனை நாம் பழக்கப்படுத்தி, கட்டுப்படுத்தி விடலாம். ஆகவே மேற்கூறிய அனைத்தையும் நினைவில் கொண் டு, நாயை வாங்கினால், எந்த ஒரு பிரச்சனையுமின்றி, அதனுடன் சந்தோஷ மாக விளையாடி மகிழலாம்

F.I.R பதிவு செய்வது எப்படி?


F.I.R பதிவு செய்வது எப்படி?

First Information Report – என்பது F.I.R-ன் விரிவாக்கம். தமிழில் ‘முதல் தகவல் அறிக்கை’. குற்றம் சாட்டப்பட்டவர் மீது போலீஸா ரால் பதியப் படும் வழக்கு ஆவணம்.
“இந்திய தண்டனைச் சட்டத்தில், அனைத்து வகைக் குற்றங்களை யும் இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம். அதாவது, புகார் அளித்ததும் குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய் ய வேண்டிய குற்றங்கள், உடலில் ரத்தக் காயங்களை ஏற்படுத்தும் குற்றங்கள் மற்றும் சிறிய, பெரிய அளவிலான பண மோசடிகள் ஆகியவை உட னடி கைது நடவடிக்கை வேண்டுபவை. இவற்றுக் கு உடனடியாக F.I.R பதிய வேண்டும்.
உடலில் காயம் ஏற்படாத மன உளைச்ச லை உண்டாக்கும் வகையிலான குற்ற ங்கள் இரண்டாவது பிரிவில் அடங்குப வை. இக்குற்றங்களில் பாதிக்கப்பட் டோரின் புகாரை அந்த எல்லைக்கு உட்பட்ட நீதிமன்றத்துக்கு அனு ப்பி, மாஜிஸ்ட்ரேட்டின் ஒப்புதல் பெற்ற பிறகுதான், F.I.R பதிவு செய் ய முடியும்.
ம்பவம் நடந்த இடத்தை நிர்வகி க்கும் காவல் நிலையத்தில் தான் புகார் அளிக்க வேண்டும். ஆனால், அவசர காலம் என்றால், அருகில் இருக்கும் எந்தக் காவல் நிலையத் திலும் புகார் அளிக்க லாம். பொது வாக, F.I.R பதிவு செய்யும் நபர், முதல் நிலை காவலர் அந்தஸ்து க்கு (பக்க வாட்டில் இரு வெள்ளை க்கோடு இருக்கும் காக்கி யூனி ஃபார்ம் அணிந்து இருக்கும் காவலர் கள்) குறையாத நபராக இருக்க வேண் டும்.
அவருக்கும் மேல் உள்ள அதிகாரிகளான டி.எஸ்.பி., எஸ்.பி., என எவரிடமும் புகாரைப் பதிவு செய்யலாம். பாதிக்கப்பட்டவர் வாய் மொழி வாக்கு மூலமாகக்கூட புகார் அளிக்கலாம். ஆனால், சம்பந்த ப்பட்ட காவல் அதிகாரி அந்த வாக்குமூலத்தைப் புகாராக எழுதி, புகார்தாரரின் கையப்பத்தையோ கை ரேகையையோ அதில் இடம் பெறச் செய் ய வேண்டும். பிறகு, குற்றம் நடந்து இருப் பதை உறுதி செய்து, உடனடியாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வே ண்டும். பிறகு, இந்திய தண்ட னைச் சட்ட த்தில் உள்ள 511 பிரிவுகளில் புகார்தாரரி ன் பாதிப்புக்கு தக்க பிரிவுகளில் வழக்கி னைப் பதிவுசெய்ய வேண்டும்.
பிறகு, தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு அந்த F.I.R-ஐ நேரிலோ, தபாலிலோ அனுப்பிவிட வேண்டும். அந்த F.I.R நீதிபதி க்குக் கிடைத்துவிட்டதை உறுதிப் படுத்திக்கொண்டு, விசாரணை நடவ டிக்கையைத் தொடங்க வேண்டும். இந்த நடைமுறைகளைச் சரிவர மேற்கொள்ளாத சமயத்தில்தான், வழக்கு நீதிமன்ற விசார ணைக்கு வரும்போது, ‘குற்றம் நடந்த நேரம், F.I.R பதிவு செய்யப் பட்ட நேரம், அது நீதிமன்றத்துக்குக் கிடைத்த நேரம்’ ஆகியவற்றில் உள்ள முரண்பாடுக ளைச் சுட்டிக் காட்டி, குற்றவாளிகள் தப்பித்து விடுவார்கள்.
ஒரு F.I.R என்பது மொத்தம் ஆறு நகல்களைக் கொண்டது. காவல் அதிகாரி எழுதும் அசல் F.I.R அந்த நோட்டிலேயே இருக்கும். அதைக் கிழிக்கக் கூடாது. கார்பன் தாள் வைத்து எழுதப்படும்மீதி ஐந்து நகல்களைத்தான் புகார்தாரர், நீதி மன்றம் என விநியோகிக்க வேண் டும். புகார்தாரருக்கு F.I.R நகல் அளிக்க வேண்டியது அவசியம். அப்படித் தராமல் இருப்பதுகூட ஒரு குற்றம்

தெரிந்துக்கொள்ள இவ்வ‍ளவு இருக்கா???


தெரிந்துக்கொள்ள இவ்வ‍ளவு இருக்கா???

* கண்டங்களில் பெரியது ஆசியா கண்டம்.
* கடல்களில் பெரியது பசுபிக் பெருங் கடல்.
* தீவுகளில் பெரியது ஆஸ்திரேலியா தீவு.
* சிகரங்களில் பெரியது எவரெஸ்ட் சிகரம். * மலைகளில் பெரியது இமயமலை.
* ஆறுகளில் பெரியது அமேசான் ஆறு.
* ஏரிகளில் பெரியது காஸ்பியன் ஏரி.
* பாலைவனங்களில் பெரியது சஹாரா பாலைவனம்.
* பாறைகளைப் பற்றிய படிப்பு க்கு பெட்ராலஜி என்று பெயர்.
வெள்ளை யானைகளின் நிலம் என்றழைக்கப் படுவது தாய்லா ந்து.
* மலைகளின் நிலம் என்றழை க்கப்படுவது மியான்மர்.
* மணலின் வேதியியல் பெயர் சிலிகான் – டை – ஆக்ஸைடு.
* மண்புழுவுக்கு ஐந்து இதயங்கள் உள்ளன.
* மிக வெப்பமான கோள் வெள்ளி.
* உலகில் 2000 வகையான பாம்பு கள் உள்ளன.
* சூரிய ஒளி பூமியை வந்தடைய 8.3 நிமிடங்கள் ஆகின்றன.
* அரபிக் கடலின் ராணி எனப்படு வது கொச்சின்.
* இந்தியாவின் மிகப் பெரிய நூலகம் உள்ள இடம் கொல்கத்தா.
* ஓர் அணிலின் சராசரி ஆயுட்காலம் ஒன்பது ஆண்டுகள்.
* ஃபிலிப்பைன்ஸ் தீவுகளைக் கண்டு பிடித்தவர் மெகல்லன்.
* இரண்டாம் அசோகர் என்றழைக்கப் பட்டவர் கனிஷ்கர்.
* பாண்டிச்சேரியின் பழைய பெயர் வேதபுரி.
* செப்பு நாணயங்களை வெளியிட் டவர் முகமது பின் துக்ளக்.
* எரிமலை இல்லாத கண்டம் ஆஸ்திரேலியா.

திருவள்ளுவர்


திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்த‍னை? அவை என்னென்ன நூல்கள் தெரியுமா?

திருவள்ளுவர், திருக்குறள் உட்பட‌ 16 மேற்பட்ட நூல்களை  எழுதி யுள்ளார். அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள்
1. ஞானவெட்டியான் – 1500 
2. திருக்குறள் – 1330
3. ரத்தினச்சிந்தமணி – 800
4. பஞ்சரத்தினம் – 500
5. கற்பம் – 300
6. நாதாந்த சாரம் – 100
7. நாதாந்த திறவுகோல் – 100
8. வைத்திய சூஸ்திரம் – 100
9. கற்ப குருநூல் – 50
10. முப்பு சூஸ்திரம் – 30
11. வாத சூஸ்திரம் – 16
12. முப்புக்குரு – 11
13. கவுன மணி – 100
14. ஏணி ஏற்றம் – 100
15. குருநூல் – 51
16. சிற்ப சிந்தாமணி (ஜோதிட நூல்) 
இன்னமும் இருக்கும் ஆனால் நமக்கு தெரியவில்லை. நண்பர்கள் எவருக்கேனும் தெரிந்தால் இங்கு பதியவும்..
By: தமிழர் வரலாறு

நம் உடலில் உள்ள‍ நோய்பரப்பும் கிருமிகளை கொன்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காய்


நம் உடலில் உள்ள‍ நோய்பரப்பும் கிருமிகளை கொன்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காய்

பாகற்காய்

நம் உடலில் உள்ள பல கிருமிகளினால் தான் நமக்கு நோய் வருகிற 
து. சரியான உணவு உண்ணும் பட்சத்தி ல் கிருமிகள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும்.
உடலில் உள்ள கிருமிகள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரி க்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.
1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட் கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.
2. பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒருமணி நேர 
ம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடி யின் விஷம் உடம்பில் ஏறாது.
3. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப்பெற்றுச் சிர ங்கு உதிர்ந்து விடும்.
4. பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழை த்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்க ளுக்குக் கருப்பைநோய் தீரும். பிரச வத்துக்கு பின்வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகு ம் .
5. ஒரு பிடி கொடுப்பாகல் இலையு டன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்க ளைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.
6. பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்து டன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.
7. பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன் ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட் கொண்டால் உடனே காலரா நீங்கும். 
8. நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியை க் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.
9. ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுட ன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப் பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்து ம்.
10.மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக்கற்களுக் கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத்தொல் லைகளுக்கும் இது மருந்தாகிறது. 
11. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடு த்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறா ர்கள்.
12. சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகி றது.
13. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத் தவும் உதவுகிறது.
14. உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற் காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கல ந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பள பளப்பாகி விடுமாம்.