jaga flash news

Thursday, 27 December 2012

பசி எடுக்குது இல்லையா??புதினாவை சாப்பிடுங்க!


பசி எடுக்குது இல்லையா??புதினாவை சாப்பிடுங்க!


புதினா கீரையை உணவில் சேர்த்து கொள்வதால் பசியைத்தூண்டி உணவிற்கு ருசியையும் கொடுக்கிறது . வாந்தியையும் கட்டுப்படுத்துகிறது.  தொடர்ந்து எடுக்கும் விக்கல் நீங்கும் . மயக்கத்தை நீக்க இக்கீரையை கசக்கி நுகரலாம் .தலைவலிக்கு இதன் சாற்றை நெற்றியில் பூசலாம் .வாத நோய்க்கும் காய்ச்சலுக்கும் ,வறட்டு இருமலுக்கும் இது சிறந்த மருந்தாகும் .
மாதவிடாய் தாமதமாகும் பெண்கள் இக்கீரையை உலர்த்தி தூள் செய்து  தேனில் கலந்து தினமும் மூன்று வேளை உட்கொண்டால் மாதவிடாய் தாமதவாது  நீங்கும் .புதினா இலையை ஒரு தம்ளர் நீரில் கொதிக்க வைத்து எடுத்து ஆறிய பிறகு இளசூட்டில் குடித்தால் நன்றாக பசி எடுக்கும் .
புதினாவுடன்  இஞ்சியையும் உப்பும் சேர்த்து  அரைத்து தினமும் உணவில் மூன்று வேளை சேர்த்து வந்தால் வாய்நாற்றம், அஜீரணம் ,பித்தமும் அகலும்.
புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன. துவையல், சட்னி, பொடி போன்றவை தயாரித்தும் மசால் வடையில் சேர்த்தும், பிரியானி மற்றும் இறைச்சி வகைகளில் சேர்த்தும் புதினாக் கீரை பயன்படுத்தப்படுகிறது.
இந்தப் பற்பொடியை ஒருவர் தினசரி உபயோகித்து வருவாரானால், அவர் ஆயுள்வரை பல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியினாலும் பீடிக்கப்பட மாட்டார். எவ்வளவு பற்பொடி தேவையோ அந்த அளவிற்கு புதினாக்கீரையைக் கொண்டு வந்து இலைகளை மட்டும் கிள்ளி எடுத்துச் சுத்தம் பார்த்து, அதை வெய்யிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும்.
புதினாக்கீரை கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த ஒரு கைகண்ட மருந்தாக இருந்து வருகிறது. புதினாக்கீரை பற்களில் ஏற்படும் பல வியாதிகளைக் குணப்படுத்தும். புதினாக்கீரையைக் கொண்டு ஓர் அருமையான பற்பொடி தயார் செய்யலாம். இந்தப் பற்பொடியை உபயோகித்து வந்தால் பல்லீரல் வேக்காடு, பல்லீரலில் இரத்தம் வருதல், பல் சொத்தை, பல் அசைவு இவைகளைக் குணப்படுத்தும். வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க இந்தப் பற்பொடி நன்கு பயன்படும்.
புதினாவை துவையல் செய்து நல்லெண்ணெய் விட்டு சாதத்தில் பிசைந்து சாப்பிட பித்தம் மூட்டு வலி ,ஆஸ்துமா ,ஈரல் சம்பந்த பட்ட நோய்கள்,  சிறுநீர்  உபத்திரம் நீங்கும். புதினா உடலுக்கு வெப்பம் தருவதால் மூல நோய்கள் உள்ளவர்கள் இக்கீரையை தவிர்த்தல் நல்லது .

2 comments:

  1. அய்யா...! வெ. சாமி அவர்களே..!!!
    புதினா கீரை விளக்கம் நானும் அளிக்கிறேனே...!

    புதினா :

    வேறு பெயர்கள் : ஈயெச்சக்கீரை, பொதினா,புதியன் மூலி,புதீனா.
    தாவரவியல் பெயர்: Mentha Arvensis(Old Name : Mentha Sativa)
    குடும்பப் பெயர் : Lamiaceae.
    ஆங்கிலப் பெயர்: The Marsh Mint
    தெலுங்கு : Pudina
    சமஸ்கிருதம் : Pudina
    மலையாளம் : Putiyana
    ஹிந்தி : Chetni-maragu
    வளரியல்பு : சிறு செடி

    தாவரத்தின் புற அமைப்பு விளக்கம் :

    இது ஒரு வாசனை நிறைந்த தாவரம்.
    .தனி இலைகள் எதிரிலை குறுக்கு மறுக்கு அடுக்கத்தில் அமையப் பெற்றிருக்கும். இலை விளிம்பு பற்கள் போன்ற முனைகள் உடையதாகக் காணப்படும். சிறிய இளஞ்சிவப்பு நிறமான மலர்கள் கொத்து கொத்தாகக் காணப்படும்.

    பயன்படும் பகுதி : சமூலம்.
    சுவை : கார்ப்பு.
    தன்மை : சீத வெப்பம்
    பிரிவு : கார்ப்பு

    தாவர வேதிப் பொருட்கள் :

    இலையிலுள்ள நறுமண எண்ணெயில் Carvone, Carene Menthol எனும் டெர்பினாய்டுகள் உள்ளன. Camphor என்ற பொருளும், இதிலிருந்து கிடைக்கப் பெறுகிறது.

    செய்கைகள் :

    இசிவகற்றி, வெப்பமுண்டாக்கி, அகட்டுவாய்வகற்றி.

    மருத்துவ குணங்கள் :

    அஜீரணம்,கபநோய்கள்,நீர்க்கட்டு
    வயிற்று வலி, சுவையின்மை, வாந்தி,காமாலை,விக்கல் முதலியன குணமாகும்.

    ReplyDelete
  2. நோய் தீர்க்கும் முறைகள் :

    1) புதினா கீரையை நன்கு உலர்த்திப் பொடி செய்து பல் துலக்கி வர பல் நோய்கள் மட்டுப்படும்.

    2) புதினாக் கீரையைத் துவையல் செய்து சாப்பிட அஜீரணம், வயிற்றுவலி தீரும்.

    3) புதினா கீரையை உலர்த்திக் குடிநீரிட்டு 50 மி.லி வீதம் கொடுத்துவர காமாலை,விக்கல்,வயிற்றுவலி நீங்கும்.

    4) புதினா கீரையை உலர்த்தி, அத்துடன் கற்பூரப் புல்லையும், சமஅளவு எடுத்து, குடிநீரிட்டுக் கொடுக்க.. வாந்தி,தலைவலி,ஜுரம் தணியும். சிறுநீரைப் பெருக்கும். நல்ல உறக்கம் உண்டாகும். சூதகக் கொளாறுகள், வயிற்றுவலி நீங்கும்.

    5) இதிலிருந்து எடுக்கப்படும் ஒருவகை எண்ணெய் வெளிநாட்டில் தயாராகும் Peppermint தைலத்தைப் போலிருக்கும். ஆனால்,காரம் சற்று குறைச்சலாகும். இதை நெற்றியில் தடவ, தலைவலி குணமாகும். சிறிது நீர் கலந்து உள்ளுக்குக் கொடுக்க வயிற்றுவலியை நீக்கி பசியை உண்டு பண்ணும்.

    ReplyDelete