jaga flash news

Saturday, 22 December 2012

ஒருவரின் ஆயுளை எப்படித் தீர்மானிப்பது?



தீர்க்காயுள்
 ஜோதிடத்திலேயே மிகவும் கடினமானது இதுதான். கீழ்வரும் கிரக நிலைகள் தீர்க்க ஆயுளைக் காட்டுகின்றன.
  • லக்கினதிபதி தன் சொந்த வீட்டிலோ, அல்லது உச்ச வீட்டிலோ இருத்தல்.
  • 8-ம் வீட்டில் சனியோ அல்லது குருவோ இருத்தல்.
  • லக்கினமும், சந்திரனும் நல்லவர்கள் சேர்க்கை பெற்றிருத்தல்.
  • லக்கினாதிபதியும், சந்திரனும் கேந்திரவீடுகளிலோ அல்லது திரிகோண வீடுகளிலோ இருத்தல்.
  • லக்கினாதிபதி 8-ம் வீட்டில் இருத்தல்
  • எட்டாம் வீட்டிற்கதிபதி 8-ம் வீட்டிலோ அல்லது லக்கினத்திலோ இருத்தல் அல்லது ல்க்கினத்தையோ அல்லது 8-ம் வீட்டையோ பார்த்தல்
  • சந்திரனும், லக்கினாதிபதியும் சேர்ந்து இருந்தாலோ அல்லது குருவும் சேர்ந்து இருத்தல்.
  • குரு, சனியையோ அல்லது 8-ம் வீட்டையோ பார்த்தல்.
கீழே கூறியுள்ளவைகள் அற்ப ஆயுளைக் காட்டுகின்றன.
1. 8-ம் வீட்டில் சனியைத்தவிர பாபகிரகங்கள் இருந்தாலும், 6, 12 வீடுகளில்
  • செவ்வாயும், சனியும் இருந்தாலும் அற்ப ஆயுள்தான்.
  • லக்கினத்தில் சந்திரனோடு பாபிகள் சேர்ந்து இருத்தல்
  • லக்கினத்தில் செவ்வாய் இருந்து சுபர் பார்வை இல்லாது இருந்தாலும், 6, 8-ம் வீடுகளில் சனியிருந்து சுபர் பார்வை இல்லாதிருப்பதும்,
  • பொதுவாக லக்கினம், மூன்றாம் வீடு, 8-ம் வீடு ஆகியவற்றில் பாவிகள் இருந்து சுபர் பார்வை இல்லாவிட்டாலும் அற்ப ஆயுள்தான்.

No comments:

Post a Comment