jaga flash news

Monday 31 December 2012

அஷ்ட லஷ்மிகள்


அஷ்ட லஷ்மிகள் என்றால், எட்டு லஷ்மிகள் ஆவர். அந்த அஷ்ட (8) லஷ்மிகளின் பெயர்களும் அவர்களது சிறப்புக்களை பார்ப்போமா!
அஷ்டலஷ்மிகளின் பெயர்கள்
கஜலட்சுமி,  ஆதிலட்சுமி,  சந்தானலட்சுமி, சந்தானலட்சுமி, தானிய லட்சுமி,  விஜயலட்சுமி, வீரலட்சுமி, மஹாலட்சுமி
அஷ்ட லஷ்மிகளின் சிறப்புக்கள்
 1. கஜலட்சுமி:-
.
நான்கு கரங்களுடனும், அதில் இரு கைகள் தாமரை மலரை ஏந்த, ஒரு கரம் உன்னதமான அபய முத்திரை அளி க்க நூற்றெட்டு இதழ்த் தாமரை மலரில் வசிப் பவள். வெளுத்த திருமேனி இவளுடையது, பேரொளிப் பிழம்பு என விளங்கும் பேரழகு கொண்டவள், பல வகைப்பட்ட அணிமணிகளு ம் பூண்டு தூய ஆடையும் அணிந்தவள். இவளி ன் இருபுறங்களிலும் சாமரமேந்தித் தோழியர் பணி செய்யப்பட்டாடை புனைந்து அது அவள து திருவடிகள் வரை தொங்கும். இதுவே கஜ லட்சுமியின் திரு அம்சமாகும்.
.
2. ஆதிலட்சுமி:-
.
ஆதிலட்சுமி பொன்னான இரு கைகளை உடையவளும் இருவகைப் பட்ட பொலிவும், நல்ல அழகும், கருணை பொ ழியும் அருட்கண்களை உடையவளும், அபய கரமுள்ளவள். பூமாலை அணிந்தவள், என்று ம் சிறந்த தாமரை மலரில் வசிப்பவள். குறை வில்லாத அணிகலன்கள் பலவகைகளை அணிந்தவள். சகல விதமான கலை இலக் கணங்களின் எல்லையாக விளங்குபவள். பேரொளிப் பிழம்பை உடையவள். தங்கம் போ ன்று ஜொலிக்கும் சிவந்தபட்டை அணிந்தவ ள். தனது இருபுறத்தைச்சுற்றிலும் அழகு வெ ள்ளம் சூழ்ந்து பெருகக்காட்சியளிப்பவள், சக்தியின் திருநாவத் தை உடையவளும், அழகுக்கெல்லாம் அழகு செய்பவளும் மூல முத லான ஆதிலட்சுமி யே ஆவாள்.
.
3. சந்தானலட்சுமி:-
.
எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுபவளும், தலையில் பின்ன லாகிய சடைகளை உடையவளும், வெள்ளைத் தாம ரையில் அமர் ந்து வீற்றிருப்பவளும், தன் இருபுறமும் தீபம், சாமரம் இவைகளுடன் பணிப்பெண்கள் அணி வகுத்து நிற்க, இராஜமரியாதையுடனும், அபய கரத் துடனும், இருகரங்களில் நிறைகுடம் ஏந்தியவளும், கருணையே வடிவாகவும் உள்ளவள் இதுவே சந்தா ன லட்சுமியின் திரு அம்சமாகும்.
.
4. தனலட்சுமி:-
.
மனதிற்கு இனியவளும், கிரீடம் அணிந்தவளும், தங்கத்தைப் போன் று தகதகக்கும் பேரொளியைத் தன்னகத்தே கொண் டவன், சோம்பல் இல்லாமல் தன் உண்மையான உழைப்பினால் செல்வம் தேடுபவர்களுக்கு கருணை யளிப்பளும், பலவிதமான அணிமணிகள் அணிந் தவளும், வலது கையில் நிறைகுடம் ஏந்தி, இடது கையில் சக்கரம், அம்பு, தாம்பூலம், சங்கு, தாமரை, மணிமாலை இவைகளுடனும், மாலையும், கஞ்சுக மும் அணிந் தவள் தனலட்சுமி.
.
5. தானியலட்சுமி:-
.
எப்போதும் அருளைச் செய்கிற அபய கரம் உடையவளும், தங்கத் தைப் போல் ஒளி பரவச்செய்கிற கிரீடம் அணிந் தவளும், தாமரை, கரும்பு, நெற்கதிர், வாழை ப்பழம், கலசம் முதலியவை களை கரங் களில் உடையவளும், வலது கையில் தாமரை மலரை ஏந்தியவளும், கருணையே வடிவாக வெண்மை நிறத்தையுடையவளும், தலை யில் சடைகள் பின்னி அணிந்தவளும், ஏல்லா விதமான ஆடை , அணிவணிகளை அணிந்து உயர்ந்த ஆசனத் தில் அமர்ந்து பெருமையுடன் ஆனந்தம் மேலோ ங்கியவளும் மனதைக் கவரும் பேரழகு கொண் டவளும் ஆகிய தானிய லட்சுமியை வணங்குவோம்.
.
6. விஜயலட்சுமி:-
.
உலகங்களுக்கெல்லாம் தலைவியானவளும், என்றும் வெற்றியெ ல்லாம் தருபவளும், எட்டு கரங்களை உடையவளு ம், உயர்ந்த சிம்மாசனத்தில் வீற்றிருப்பவளும், கருப்பு நிறமுள்ள மேனியை உடையவளும், பேரழகுடணும் எல்லா வகையான அணிமணி ஆபரணங்களை அணிந்து, வலது கையில் கத்தி, பாசம், சக்கரம் பூண் டு, ஒரு கை அபயம் காட்ட, இடது கையில் அங்குசம், கேடயம், சங்கம் இவையுடன் ஒரு கையில் வரத முத்திரையுடன், வீரமும் கம்பீரமும் கொண்டு சாம் ராஜ்ய சக்ரவர்த்தியைப் போல வீற்றிருக்கும் திருக்கோலமே விஜய லட்சுமியின் இயல்பு ஆகும்.
.
7. வீரலட்சுமி:-
.
எட்டுக் கைகளுடன் ஒப்பிலாத சிம்மாசனத்தில் அமர்ந்து, தலையில் ஒளிபொருந்திய பொன்னாலான கிரீடத்தை அணிந்த வளும், ஒரு திருக்கரத்தில் அபயமும் காட்டி, மற்றொ ரு திருக்கரத்தில் வரதமும் காட்டி மற்ற கரங்களில் வரிசையாக சக்கரம், அம்பு, சங்கம், வில், கபாலம் என்ற ஆயுதங்களைக் கொண்ட வீரலட்சுமியை வண ங்கி பேரருள் பெறுவோம்.
.
8. மஹாலட்சுமி:-
.
தாமரை மொட்டில் வீற்றிருப்பவளும், நான்கு கரங்களினாலும், இரு யானைகளால் வணங்கப்படுபவளும், தாமரை மலரி ன் இதழ்களைப் போன்று, சிவந்து காணும் கண்க ளை உடையவளும், அபய கரமும், வரதகரமும் பே ரொளி செய்ய மேல்நோக்கிய இருகரங்களில் தாம ரை மலர் இலக, வெண்பட்டு அணிந்த, என்றுமே மன திற்கு இன்பத்தை மட்டுமே தரும் ஸ்ரீமஹா லட்சுமி தேவியை வழிபட்டு வாழ்வில் பேரானந்தம் பெறுவோம். 

2 comments: