jaga flash news

Monday 31 December 2012

உலகில் உள்ள அபூர்வமான அஷ்ட(8) கோயில்கள்!!!


உலகில் உள்ள அபூர்வமான அஷ்ட(8) கோயில்கள்!!!

இந்த உலகில் பல மதங்கள் மற்றும் மதச் சின்னங்கள் பலவற்றைக் காணலாம். அதிலும் அந்த மதங்களில் இந்து மதம், புத்த மதம், தாவோயிஸம் மற்றும் சீக்கியம் என்று பலவற்றைக் காணலாம். ஆகவே மக்கள் பல்வேறு வித்தியாசமான கடவுள் வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். அந்த மதங்களில் சின்னங்களைப் பார்த்தால், அதன் சிற்பக்கலையானது பல ஆண்டுகளுக்கு முன்னரே வடிவமை க்கப்பட்டவையாக இருக்கும். இருப்பினும், அந்த மாதிரியான கோயி ல்கள் பக்தர்களுக்கு மட்டுமின்றி, ஒரு சிறந்த வரலாற்று சிறப்பு மிக்க தளமாக இருந்து வருகிறது. என்னதான் வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், மக்கள் வித்தியாசமான வகையில் இருக்கும் இடங்களைப் பார்ப்பதில் அதிக முக்கியத்துவத்தை தான் கொடுத்துவருகின்றனர்.
மேலும் சுற்றுலாத்தலங்கள் என்று சொன்னதும், அனைவரின் மன தில் முதலில் வந்து நிற்பது கோயி ல்கள் தான். ஆகவே அத்தகைய கோயில்களில் மிகவும் அபூர்மா மாகவும், ஆச்சரியமூட்டும் வகையி லும் இருக்கும், உலகில் உள்ள சில கோயில்களைப் பற்றிப் பார்ப் போமா!!!
மரகத புத்தர் கோயில் (Temple of Emerald Buddha)

பாங்காக்கில் அமைந் துள்ள இந்த கோயிலை வாட் ப்ரா க்யூ (Wat Phra Kaew) என்றும் சொல்வார்கள். இந்த கோயிலானது அரசர் முதலாம் ராமாவால் தொன்புரியிலிருந்து, பாங்காக்கில் 1785 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கோயிலில் உள்ள மரகத புத்தர்சிலையா னது தவம் செய்வது போல் இருப்பதோடு, இந்த கோவிலின் சிலை க்கு அருகில் அரசர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும்.
.
ஸ்வேடகோன் பகோடா (Shwedagon Pagoda)
புத்தர் கோவிலிலேயே மிகவும் பழமையானதும், வரலாற்றில் முக் கிய மானதுமானது என்றால் அது மியான்மரில் இருக்கும் ஸ்வேட கோன் பகோடா தான். இதில் பகோடா என்றாலே கூம்பு கோபுரம் என்று அர்த் தம். இந்த மாதிரியான கூம்பு வடிவ கோபுரம் பெரும் பாலும் பர்மாவில் தான் காணப்படும். இதிலும் இந்த கோவிலில் கூம்பு வடிவ கோபுரம் தங்கத்தால் செய்யப்பட்டிருப்ப தோடு, இரவி லும், பகலிலும் நன்கு மின் னும்.
.
தக்த்சாங் மடம் (Taktshang Monastry)
பூட்டான் நாட்டில் உள்ள ஒரு புகழ்பெற்ற புத்த மடம் தான் தக்த்சாங் மடம். இது தவம் செய்வதற்கு சிறந்த ஒரு மடம். இந்த மடமானது 1692 இல் கட்டப்பட்டது. இங்கு பத்மசம்பவர் என்னும் இரண்டாம் புத்தர் புலியின்மீது ஏறி வந்ததால், இந்த மடத்திற்கு வந்ததால், இதற் கு இப்பெயர் வந்தது என்றும் கூறப்படுகிறது.
.
தங்க கோயில் (Golden Temple)
இந்தியாவில் உள்ள பஞ்சாம் மாநிலத்தில் அமைந்துள்ள கோல்டன் டெம்பிள் எனப்படும் “ஹர்மந்திர்” ஆலயம், மிகவும் புகழ்பெற்ற, பார் வையாளர்களின் ஆவலைத் தூண்டும் ஒரு புனித ஆலயம். இந்த தங்க ஆலயமானது பொன்னால் மின்னுவதோடு, குளத்தின் மையத் தில் அமைந்துள்ளது.
.
பிரம்பனன் (Prambanan)
இது உலகிலேயே மற்றொரு அழகான புகழ் பெற்ற கோயில். இந்த கோயிலானது முக்கடவுளான சிவன், பிரம்மா மற்றும் விஷ்ணு விற்காக கட்டப்பட்டுள்ளது. இது தான் இந்தோனேஷி யாவிலேயே மிகவும் பெரிய கோயில். இங்கு உள்ள சிலைகள் மற்றும் ஓவியங் கள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் அதிசயமூட்டக் கூடியவை.
.
வாட் ராங் குன் (Wat Rong Khun)
தாய்லாந்து என்றாலே புத்த கோயில்கள் திரும்பிய இடமெல்லாம் இருக்கும். அத்தகைய கோவில்களில் வாட் ராங் குன் என்னும் புத்த கோயில், வெள்ளை மெசைக் கற்களால் மிகுந்த கலை நயத்துடன், இன்னும் கட்டப்பட்டு வருகிறது.
.
போரோபுதூர் (Borobudur)
இந்தோனேஷியா தீவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள போரோ புதூர், மகாயான பௌத்த நினைவுச் சின்னம். இது 2,672 புடைப்புச் சிற்பங்களையும், 504 புத்த சிலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு ள்ளது. இது ஆறு சதுர வடிவ மேடைகளுடன், மூன்று வட்ட வடிவ மேடைகளையும் கொண்டது.
.
ஸ்ரீரங்கநாதர் ஆலயம் (Sri Ranganathaswamy Temple)
உலகிலேயே மிகவும் பெரிய இந்து கோயில் என்றால் அது ஸ்ரீரங்க நாதர் கோவில்தான். இந்த கோவிலின் சிறப்பே கோபுரம் தான். இந்த கோபுரத்தில் உள்ள சிலைகள் அனைத்தும், இந்துமதப்புராணங்களி ன் படி சித்திகரிக்கப்பட்டது. இந்த பெரிய கோபுரமானது குறைந்தது 200 அடி உயரத்துடன் இருப்பதோடு, 15 கதைகளையும் கொண்டது

2 comments:

  1. அய்யா.. வெ.சாமி அவர்களே..! நான் மீண்டும் ஆரம்பத்தில் இருந்தே.. தங்கள் பதிவைக் காண விரும்புகிறேன். அன்புடன்.. ஜான்ஸி கண்ணன். திருநெல்வேலி.

    ReplyDelete
  2. என்னாச்சு.. அடிக்கடி கூகுள் லாக் ஆகிறது..அய்யா.

    ReplyDelete