jaga flash news

Friday, 21 December 2012

மனிதனின் ஒரு வருடம்


மனிதனின் ஒரு வருடம் = தேவர்களின் ஒரு நாள்
( தேவர்களின் பகல் நேரம் = சூரியன் வடக்கு நோக்கி செல்லும் ஆறு மாத காலம் –உத்தராயணம் )
( தேவர்களின் இரவு நேரம் = சூரியன் தெற்கு நோக்கி செல்லும் ஆறு மாத காலம் –தட்சினாயணம் )
365 தேவர்களின் நாள்             = 1 தேவர்களின் வருடம்
4800 தேவர்களின் வருடம்  = கிருத யுகம் / சத்ய யுகம்
3600 தேவர்களின் வருடம் = திரேத யுகம்
2400 தேவர்களின் வருடம்  = துவப்பார யுகம்
1200 தேவர்களின் வருடம்  = கலி யுகம்
12000 தேவர்களின் வருடம்  = 1 சதூர் யுகம்
 
1000 சதூர் யுகம் =  பிரம்ம உடைய ஒரு பகல் பொழுது
1000 சதூர் யுகம் = பிரம்ம உடைய ஒரு இரவு பொழுது
14  மனுக்கள் இந்த பிரபஞ்சத்தை தலைமை வகிப்பார்கள்
ஒரு மனுவின் காலம் = ஒரு மன்வந்த்ரம்
பிரம்மா வின் ஒரு பகல்  + பிரம்மா வின் ஒரு இரவு  = பிரம்மா வின் ஒரு நாள்
பிரம்மா வின் 365 நாட்கள்     = பிரம்மா வின் ஒரு வருடம்
பிரம்மா வின் வாழ் காலம் = 100 பிரம்ம வருடங்கள்
பிரம்மா வின் வாழ் காலம் முடிவு = மகாப்ரலயம் ( மொத்த உலகத்தின்  அழிவு )
பிரம்மா வின் வாழ்காலத்தின் முடிவில் மகாப்ரலயம் நிகழும்.அப்போது பிரம்மாவும் அழிக்கபடுவார். அதன் பிறகு 100 பிரம்மா வருடங்களுக்கு ஒரு உருவாக்கமும் இருக்காது. பிறகு பகவான்  விஷ்ணு மீண்டும் ஒரு பிரம்மா வை உருவாக்குவார். பிறகு உருவாக்கம் தொடரும்.
கல்பம் / உருவாக்கம்  = பிரம்மா வின் ஒரு பகல் பொழுது = 4320 மில்லியன்   மனித வருடங்கள்
ப்ரலயம் / அழிவு  = பிரம்மாவின் ஒரு இரவு பொழுது  = 4320 மில்லியன் மனித வருடங்கள்
நான்கு யுகங்களின் சுழற்சி ஆயிரம் முறை  நடப்பது ஒரு கல்பம் ஆகும்.
சத்ய யுகம் = 1728,000 மனித வருடங்கள் : 100 % நன்மக்கள் ; 0 % தீயமக்கள் 
திரேத யுகம் = 1296,000 மனித வருடங்கள் : 75 % நன்மக்கள் ; 25 %தீயமக்கள்
துவப்பார யுகம் = 864,000 மனித வருடங்கள் : 50% நன்மக்கள் ; 50 %தீயமக்கள்
கலியுகம் = 432,000 மனித வருடங்கள் : 25 % நன்மக்கள் ; 75 % தீயமக்கள்
ஒவ்வொரு கல்பமும் 14 மன்வந்த்ரம்( காலம்) ஆக பிரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மன்வந்த்ரமும் 71 சுழற்சி வரை நீடிக்கும்.
ஒவ்வொரு மன்வந்த்ரத்திலும் மனு தலைமை வகிக்கிறான்.  
             ஹரி ஓம் நமோ பகவத்தே வாசுதேவாய 

No comments:

Post a Comment