jaga flash news

Thursday, 27 December 2012

உடல் நலம் காக்கும் உளுந்து!


உடல் நலம் காக்கும் உளுந்து!


அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் கூட பிரசித்திப் பெற்ற உணவு இட்லிதான்! குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு அது! இட்லி மாவில் சேர்க்கப்படும் உளுந்து, மனிதனுக்கு ஆரோக்கியத்தை நல்கும் அற்புதப் பொருளாகும்.
* உளுந்தைக் கஞ்சியாகவோ, களியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேக வைத்தோ உணவாக உண்டு வந்தால், உடல் வலுவடையும். எலும்பு, தசை நரம்புகளின் ஊட்டத்திற்கு உளுந்து மிகவும் நல்லது.
* உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்துக் களி செய்து, பனை வெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.
* உளுந்தைக் காய வைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.
* உளுந்து சாப்பிட்டால் இடுப்பு வலிமையோடு திகழும்.
* பருவம் அடைந்த பெண்களுக்கும், நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த உளுந்தைக் கஞ்சியாகச் செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
* உளுந்தை நீரில் ஊற வைத்து எடுத்த நீரை, மறுநாள் அதிகாலையில் அருந்த சிறுநீரகம் சம்பந்தமான வியாதிகள் நீங்கும்.

1 comment:

  1. மிகவும் அருமையான மருத்துவம்.

    ReplyDelete