jaga flash news

Sunday, 1 December 2013

தூங்கக்கூடாத நேரம் எது தெரியுமா?

 தூங்கக்கூடாத நேரம் எது தெரியுமா?

சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள அதிகாலைப் பொழுதை உஷத் காலம் என்பர். அந்த சமயத்தில் தேவர்கள், சிவபார்வதி, மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் வானமண்டலத்தில் சஞ்சரிப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில் கண்டிப்பாக தூங்கக்கூடாது. தியானம், வழிபாடு போன்ற பயனுள்ள பணிகளைச் செய்யவேண்டும். இந்த நேரத்தில் செய்யும் வழிபாடு பலமடங்கு புண்ணியத்தை தரும். சூரியோதயே சாஸ்தமயே ச ஸாயினம் விமுஞ்சதி ஸ்ரீரபி ஸக்ரபாணிநம் என்கிறது சாஸ்திரம். சூரியன் உதயமாகும் நேரத்தில் தூங்குபவன், இந்திரனைப் போல செல்வச்செழிப்பு கொண்டவனாக இருந்தாலும், அவனை விட்டு திருமகள் விலகி விடுவாள் என்பது இதன் பொருள்.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. பிரம்ம முகூர்த்தம் என்பதே அதிகாலைப்பொழுது. அந்த நேரம் நம் மனதிற்கு மிகவும் அமைதலான நேரம். அதிகாலையில் மனம் நிச்சலனமாக இருக்கும். அந்த நேரம் கடவுளுக்கும், நமக்குமிடையேயான உறவு மட்டுமே இருக்கும். ஆகவே, அந்த நேரத்தில் ஆண்டவரைத் தேடினால், முழுபலன். கிறிஸ்தவ முறைப்படி, அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் கண்டடைவார்கள்... என்றால் தேவனை முழுமையாக அறிந்துகொள்வார்கள் என்று பொருள்படும்.

    ReplyDelete