jaga flash news

Sunday, 1 December 2013

அமாவாசை தினத்தில் நல்ல காரியங்களை துவங்கலாமா?

அமாவாசை தினத்தில் நல்ல காரியங்களை துவங்கலாமா? 

அமாவாசைக்கு பிறகு வரும் நாட்களை வளர்பிறை நாட்கள் என்று அழைக்கிறோம். எனவே புதிய காரியங்களை வளர்பிறையின் துவக்க நாளிலிருந்து ஆரம்பிப்பது நலமென்று நிறையப்பேர் நம்புகிறார்கள். சிலர் அமாவாசை என்பது சந்திரன் இல்லாத நாள் அதாவது பூமிக்கு சந்திரன் தெரியாது அன்று இருட்டாக இருக்கும். எனவே இருட்டு பொழுதில் நற்காரியங்களை செய்ய கூடாது என்றும் சொல்கிறார்கள். இதில் எது சரி எது தவறு என்று முடிவெடுப்பது மகா சிரமமான காரியம். அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு போகலாம். ஆனால் அது சரியல்ல.

இதை ஜோதிட சாஸ்திரம் மற்றும் வானியல் சாஸ்திரத்தின் அடிப்படையில் பார்க்க வேண்டும். அமாவசை தினத்தில் சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன அன்று இவ்விரு கிரகங்களும் ஒரே ராசியில் இருக்கும் அந்த நேரத்தில் இரண்டு கிரகங்களில் ஆகர்ஷன சக்தியும் மிக அதிகமாக இருக்கும். இதனால் மனித மூளையில் துரிதமான மாற்றங்கள் நிகழும் வாய்ப்பு நிறைய உண்டு அதாவது மனம் கொந்தளிப்பான நிலையிலேயே இருக்கும். ஏறக்குறைய கடலை போல எனவே அந்த நாட்களில் சுப காரியங்கள் செய்வது கூட தவறு அல்ல ஆனால் புதிய காரியங்களை துவங்குவது தவறு ..

1 comment: