jaga flash news

Sunday, 1 December 2013

இந்து மதம்

இயற்கையின் நிகழ்வுகளான இடி, மின்னல், காட்டுநெருப்பு போன்றவற்றினைக் கண்டு பயந்த ஆதி மனிதன், அவற்றை கடவுள்களாக வழிபடத்தொடங்கினார்கள். சூரிய தேவன், சந்திர தேவன், அக்னி தேவன், வருண தேவன் என இயற்கையே முதல் கடவுளாகவும், இவற்றை இயக்குகின்ற சக்தியான பரம்பொருளாகவும் உணரப்பட்டது. இவை சிந்து நதிக்கரையில் நிகழ்ந்ததாகவும், இவர்களில் ஒரு பிரிவினரே தற்போதைய ஐரோப்பாவிற்கு இடம் பெயர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. இவர்களை வரலாற்று ஆசிரியர்கள் ஆரிய இனத்தவர் என்று அழைக்கின்றனர்.
பல்வேறு முனிவர்களாலும், முன்னோர்களாலும் செவிவழியாக கடத்தப்பட்ட வேதம் எனும் வாழ்வியல் முறையை விளக்கமானது, நாகரீகம் வளர்ந்த பின் ஓலைச்சுவடியில் பதியப்பட்டது. இந்த வேதங்களில் உள்ள ரிசா, குபா, கரமு போன்ற நதிகள் ஆப்கான் தேசத்தினை சேர்ந்தவை என்பதால், சிந்து நதி நாகரீகம் அதுவரை பரவியிருந்ததாக கூறப்பெறுகிறது. இவ்வாறான வேதத்தினை முன்நிறுத்துகின்ற மதம் வேதமதமெனவும் அழைக்கப்பெறுகிறது.
வேதத்தின் உட்பொருளை கொண்டு எளிமையாக மக்களுக்கு கூறுவதற்காக உபநிடதங்கள் உருவாயின. அதனினும் எளிமையாக கதைவடிவில் வேதம் மற்றும் உபநிடதங்களை விளக்குவதற்காக புராணங்கள் தோற்றுவிக்கப்பெற்றன. இவற்றில் பதினெட்டு புராணங்கள் மகாபுராணங்கள் என்றும், சில உபபுராணங்கள் என்றும் அழைக்கப்பெறுகின்றன.
ஆரியர்களின் வருகைக்கு முன்பு, ஏறத்தாள 450 மதங்கள் இந்தியப்பகுதியில் இருந்துள்ளன. அவற்றோடு வேதமதம் இரண்டறக் கலந்து தற்போதுள்ள இந்து மதமாக அறியப்பெறுகிறது

1 comment: