jaga flash news

Sunday, 1 December 2013

புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?

புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...? 

நான் மிகவும் கடினமாக உழைத்து ஒரு வீடு கட்டி வருகிறேன் இன்னும் இரண்டு மாதத்தில் வீட்டு வேலைகள் நல்லபடியாக முடிந்து விடும் அதன் பிறகு புதிய வீட்டில் குடிபோகும் முன்பு என்னென்ன ஹோமங்கள் செய்ய வேண்டும்? 

யாகம் மற்றும் ஹோமங்கள் செய்வதை சிலர் கேலி செய்கிறார்கள் நெருப்பை வளர்த்து நெய்யை ஊற்றி அதில் சில பொருட்களை மந்திரங்கள் சொல்லி எரிய விடுவதற்கு என்ன பயன் இருந்துவிட போகிறது. காசும் நேரமும் தான் செலவே தவிர வேறு எந்த பயனும் இல்லை என்று அவர்கள் சொல்கிறார்கள்....

பொதுவாக நாம் பல நேரங்களில் வெளி தோற்றங்களை வைத்தே அனைத்து விஷயங்களையும் உண்மைகளை தேடுகிறோம் அது சரியான அணுகுமுறை அல்ல உண்மை என்பது வெளித்தோற்றத்தில் மட்டும் தான் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது பலா பழத்தின் வெளிபாகத்தை மட்டும் கணக்கு போட்டால் உள்ளே இருக்கும் சுவையான சுழைகள் கிடைக்காமலே போய்விடும்.

எனவே உண்மை என்பது வெளியில் மட்டுமல்ல உள்ளேயும் இருக்கிறது. அதாவது கண்ணுக்கு தெரிந்தும் தெரியாத சூட்சம வடிவிலும் உண்மைகள் உண்டு யாகத்தில் உள்ள உண்மைகள் அப்படிப்பட்டதே நெருப்பு மட்டும் தான் கீழிருந்து மேல் நோக்கி செல்லும் இயற்க்கை சக்தியாகும். அதில் பூமியில் உள்ள அதிர்வுகளை எடுத்துகொண்டு பிரபஞ்சத்தில் சேர்க்கும் சக்தி இருக்கிறது என்று வேதங்கள் சொல்கின்றன அயன வெளியில் பல வித அதிர்வுகள் சதா சஞ்சாரம் செய்தவண்ணம் உள்ளது. மூலிகை பொருட்களை ஆகுதிகலாக கொண்டு சொல்லப்படும் மந்திர அதிர்வுகளை அக்னி பிரபஞ்ச அதிர்வுகளோடு சேர்க்கின்றன இதன் மூலம் யாகம் மற்றும் ஹோமம் செய்யும் கர்த்தா பல நன்மையை அடைகிறான் அந்த நன்மை என்பது கண்ணுக்கு தெரிந்தும் இருக்கலாம் தெரியாமலும் இருக்கலாம்.

வீடு என்பது மனிதர்கள் வாழும் ஒரு கூடாரம் மட்டுமல்ல வாஸ்துபடி கட்டப்படும் இல்லங்கள் அயன வெளியில் உள்ள நல்ல அதிர்வுகளை தனக்குள் ஈர்க்கும் சக்தி வாய்ந்த கேந்திரங்களாகவும் இருக்கிறது. எனவே இல்லங்களில் நல்ல எண்ணங்களும் சந்தோசங்களும் நிறைய வேண்டுமென்றால் அவற்றில் தொடர்ந்து சத்கர்மாக்கள் செய்யப்பட வேண்டும். வைதீக முறைப்படி சத்கர்மாக்கள் என்றால் அவற்றில் ஹோமங்களும் அடங்கும்

மனிதன் வாழ்வதற்கு புதிதாக ஒரு வீட்டை உருவாக்கி அதில் குடியேறும் போது பிரணவ வடிவான அதிர்வுகள் நிறையும் படி முதலில் செய்ய வேண்டும். அதற்கு உகந்த ஹோமம் கணபதி ஹோமமாகும் இல்லத் தலைவனுடைய நேரங்காலங்களை சரிபடுத்தி அவனை வீட்டில் செளக்கியமாக வாழ செய்வது நவக்ரக ஹோமமாகும். அதே போல கட்டுமானத்தில் உள்ள குறைபாடுகளையும் தோஷங்களையும் நீக்க வல்லது வாஸ்து ஹோமமாகும். ஒரு புதிய வீட்டில் குடிபோகும் முன்னால் இத்தகைய ஹோமங்களை செய்வது வைதீக நெறிப்படி மிகவும் சிறந்ததாகும்

No comments:

Post a Comment