jaga flash news

Sunday 1 December 2013

தெவசம்; --

தெவசம்; ------------ தெய்வத்தின் வசம் என்பதன் சுருக்கமே தெவசம் ஆகும்.நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி,பட்சம்,தமிழ்மாதம் அறிந்து,ஒவ்வொரு தமிழ்வருடமும் அதே ...திதியன்று(ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்)குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே தெவசம் அல்லது சிரார்த்தமாகும். நம்மை நிம்மதியாக வாழ வைக்கும் சக்தி உடையதுபித்ரு தர்ப்பணம் ஆகும். ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான்.இவர்களை வழிபடும் முறைக்கு பிதுர்தர்ப்பணம் அல்லது சிரார்த்தம் என்று பெயர். இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன.இந்த தர்ப்பணத்தை இதேபோல அமாவாசைத் திதிகளிலும்செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும். ஒருவேளை முன்னோர்களின் இறந்தத் திதி தெரியாதவர்கள்,ஆடி அமாவாசை அல்லது தை அமாவாசையன்று இராமேஸ்வரம் அல்லது சொந்த ஊரில் உள்ள ஏதாவது ஒரு கோவிலில் அல்லது வீட்டிலேயே சிரார்த்தம் செய்வது நன்று.அதுவும் முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று(ஆண்டுக்கு ஒரு அமாவாசை என நமது ஆயுள் முழுக்கவும்) செய்து வருவது மிகவும் நன்மையகளையும்,அளப்பரிய நற்புண்ணியங்களையும் தரும். தெவச தினம் அன்று ஆதரவற்றோர், ஊனமுற்றோர், முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு ஒரு வேளை உணவிற்கு ஏற்பாடு செய்யலாம். அது மிகப்பெரிய புண்ணியமாகும்

No comments:

Post a Comment