jaga flash news

Monday, 1 February 2016

செவ்வாய் பகவான்

 செவ்வாய் பகவான்
ஜாதகத்தில் செவ்வாய் கெட்டு இருந்தாலும், பலம் குறைந்து இருந்தாலும், திசை/ புக்தி நடந்தாலும் செய்யவேண்டிய சிறப்பு பரிகாரம்.
1. செவ்வாய்க்கிழமையில் கசப்பான பண்டங்கள் செய்து பிறருக்கு தானம் கொடுக்கலாம், அல்லது வீட்டுக்கு வரும் உறவினருக்கு கொடுக்கலாம், தானும் சாப்பிடலாம்.
2. சகோதர/ சகோதரிகளுக்கு வஸ்திரம் வாங்கி (தானம்)கொடுத்து ஆசீர்வாதம் வாங்கவும்.
4. செவ்வாய்க்கிழமைகயில் கருங்காலி மரத்தை சுற்றிலும் சுத்தம் செய்து வழிபடவும், முடிந்தால் சுற்றி தீபம் வைத்து தூபம் காட்டி வழிபடலாம்.
5. செவ்வாய்க்கிழமையில் செவ்வாய் ஓரையில் (காலை 6.00 - 7.00) வீட்டின் அல்லது பூஜை அறையின் தெற்கு பகுதியில் ஒரு தீபம் கிழக்கு முகமாக வைத்து, தீபம் முன் ஒரு செண்பக மலர் வைத்து, ஓம் குஜயா நம என்று 108 முறை சொல்லி வழிபடவும்.
6. செவ்வாய்க்கிழமை காலை செவ்வாய் ஓரையில், ஒரு தாம்பாளத்தில் சிறிது துவரையை பரப்பி வைத்து அதன்மேல் 7 அகல்கள் நல்லெண்ணை ஊற்றி ஏற்றி வைத்து, துபாம் காண்பித்து கற்பூர ஆராதனை செய்யவும். ஓம் மங்களயா நமஹா என்று 108 முறை செல்லவும். தெற்கு மூலையில் கிழக்கு முகமாக ஏற்ற வேண்டும்.
7. கோயில்களுக்கு விழாக்கள் சமயத்தில் அடுப்பு எரிய விறகு, மின்சாதன விளக்குகள் வாங்கி தரலாம்.
8. கோயில்களுக்கு நல்லெண்ணெய் வாங்கி தரலாம்.
9. நல்ல ஆரோக்கியமானவர்கள் ரத்த தானம் செய்யலாம்.
இதானல் சகோதரர்கள்/ சகோதரிகள் நலம் பெறுவர், செவ்வாய் தோஷம், செவ்வாயால் ஏற்படும் பிற தோஷங்கள் விலகும். கோபம் விலகும். குடும்பம், வாகனங்கள், தொழில், பொருளாதாரம் விருத்தியாகும். துரத்தும் துன்பங்கள் தூரத்தில் போகும், செவ்வாய் திசை முழுவதும் நல்ல பலன்கள் கிடைக்கும்.

No comments:

Post a Comment