jaga flash news

Monday, 1 February 2016

மகா சிவராத்திரி

மகா சிவராத்திரி திருவிழா என்றால் சிவனுடன் ஒரு இரவு
ஆண்டுக்கு ஒருநாள் இரவு
கண்கள் விழித்திரு
இல்லை..
ஓர் இரவாவது உன் அறிவை விழித்திருக்க செய்.. இதுதான் மகா
சிவராத்திரி.
7-3-2016 திங்கள்கிழமை சிவாலயங்களில் கொண்டாடுங்கள்
சிவனை அழிக்கும் சக்தி என்பார்கள். அதாவது உங்கள் அகங்காரத்தை அழிப்பவர், உங்கள் எல்லைகளைத் தகர்ப்பவர் என்று பொருள்.

1 comment:

  1. சிவராத்திரிக்கு ஒரு கதை. அதே மாதிரி வில்வ இலைக்கு என்ன மகிமை என்று கூற ஆசை.

    சிவபெருமானுக்கு, பூஜை செய்யப்படும்
    வில்வம், ஒரு கற்ப மூலிகை. அரச மரம்போல், வில்வ இலையும், நிறைந்த மகிமை கொண்டது. வில்வத்தை கூவிளம், கூவிளை, என்று வெவ்வேறு பெயர்களில் அழைப்பர். இதனை சிவ மூலிகைகளின் சிகரம் எனவும் அழைப்
    பர்.

    வில்வதளம் என்பது, மூன்று இலைகள் சேர்ந்தது. அவற்றை தனித்தனியாகக்
    கிள்ளக்கூடாது என்பது ஐதீகம். இது அனைத்து நோய்களையும் நீக்கவல்லது.
    வில்வத்தின் இலை, பூ, பிஞ்சு, பழம்,
    வேர்ப்பட்டை, பிசின் ஆகியவை மருத்துவப் பயன் உடையது. வில்வத்தின் மூ்ன்று இலைகள், பிரம்மா, விஷ்ணு, சிவன், ஆகியோரை
    குறிப்பதாக உணர்த்துகிறது. வில்வத்தின், இடது பக்க இலை பிரம்மா. வலது பக்க இலை விஷ்ணு. நடுவில் இருக்கும் இலை சிவன்.
    சிவனுக்குப் பிரியமானதும், ஆரோக்கி
    யத்திற்கு அரணாக இருப்பதுமான வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்தால் பல நன்மைகள் உண்டு.
    ஏழரை சனி பிடித்திருப்பவர்களுக்கு சரியான பரிகாரம் வில்வ இலை தான்.
    ஞாயிற்றுக் கிழமைகளில் வில்வ இலை
    கொண்டு சிவனுக்கு அர்ச்சனை செய்தால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும்.வில்வ இலையை *சாலிகிராம்* உருவம் என்பார்கள்.

    *வில்வத்தால் சிவனை அர்ச்சனை செய்யும்போது, சிவனோடு நாம் இன்னும் நெருங்க முடியும்*.


    ஒரு சமயம், சிவபெருமான் பார்வதி
    யுடன் கைலாய மலைசாரலில் உள்ள ஒரு சோலையில், வில்வ மரத்தடியில்
    வீற்றிருந்தார். அன்றைய தினம், ஓர் சிவராத்திரி.

    வில்வ மரத்தின் மீது இருந்த குரங்கு, வில்வ இலைகளை பறித்து கீழே போட்
    டுக் கொண்டே இருந்தது. அந்த இலைகள், மரத்தின் அடியில் வீற்றிருந்த, சிவபெருமான் மீதும், பார்வதிதேவி மீதும் விழுந்து கொண்டே இருந்தன. இதைக் கண்ட பார்வதி தேவிக்கு குரங்கின் மீது கோபம் ஏற்பட்
    டது. உடனே சிவபெருமான், தேவியே!
    குரங்கின் மீது கோபம் கொள்ளாதே!
    அது நம் இருவரையும் வில்வ இலை
    களால் அர்ச்சிக்கிறது என்று கூறி, குரங்கிற்கு நல்லுணர்வு உண்டாகுமாறு அருளினார் என்று இந்த கதை, நீண்டு கொண்டே போய், சிவனின் வரத்தால், அந்த குரங்கானது, சோழ மன்னனுக்கு
    மகனாகப் பிறந்து, *முகுந்தன்* என்ற
    பெயரில் அரசன் ஆகி, சிவனை மறவாது கருவூர் *பசுபதீஸ்வரப் பெருமாள் கோவில் திருப்பணிகள்* செய்ததாக தல வரலாறு கூறுகிறது. ஆகவே, அது மகா சிவராத்திரி.

    ReplyDelete