திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள்-
அருள்மிகு திருக்கோளூர் அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில் ஆகும். நவதிருப்பதிகளில் எட்டாவது திருப்பதியாகவும் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்தியேழாவது திவ்ய தேசமாகவும் நவக்கிரகங்களில் செவ்வாய்த் தலமாகவும் இத்திருத்தலம் அமைந்துள்ளது.
புராண சிறப்பு:
முற்காலத்தில் வடதிசைக்கு அதிபதியாகிய குபேரன் அளகாபுரியில் வசித்து வந்தார் அவர் மிகச் சிறந்த சிவன் பக்தர். ஒரு நாள் சிவபெருமானை நேரடியாக தரிசிக்க கைலாயத்தை அடைந்தார். அப்பொழுது சிவபெருமானுடன் தனித்திருந்த பார்வதிதேவி மிகுந்த அழகுடன் காண விளங்கினார்.
Sri Vaithamanidhi Perumal, Temple, Tirukolur
தனத்திற்கு அதிபதியாகிய குபேரன் தேவதேவியரின் தனிமையை உணராது தரிசிக்க சென்ற போது அதிரூபமாகிய இவள் யார் என்று கௌரியை உற்று நோக்குகின்றார். இதை கண்ட உமையவள் கோபம் கொண்டு ‘நீர் கெட்ட எண்ணத்துடன் என்னை பார்த்தீர் எனவே உமது ரூபம் விகாரமடையக்கடவது, நவநிதிகளும் உம்மை விட்டகலும், ஒரு கண்ணையும் இழப்பீர்' என சபித்துவிடுகிறார். குபேரன் மிகவும் மனவருத்தமடைந்து சிவபெருமானை துதித்தி நடந்த விஷயத்தை தெரிவிக்கிறார். சிவபெருமானும் திருமாலை சரணடையுமாறு கூறுகிறார்.
குபேரன் தன் சங்க நிதி பதும நிதி உட்பட நவநிதிகளை இழந்து ஆதரிப்பார் யாருமின்றி பூலோகம் வந்தடைந்து பொருநையாற்றின் தென்கரையில் புனித நீராடி பகவானை குறித்து கடும் தவம் செய்தார். குபேரனின் தவத்திற்கு இரங்கிய பகவான் தாமோதரன் நதி தீர்த்தத்தில் நீராடச் செய்து சாபம் நீக்கி அருள் புரிந்தார்.
வைத்தமாநிதி என்ற திருநமத்துடன் நவநிதிகளின் மீது சயனம் கொண்டு அவற்றை காப்பாற்றி அருளினார். குபேரனும் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று தன் இருப்பிடம் வந்தடைந்தார்.
இலக்கியச் சிறப்பு:
பன்னிரெண்டு ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வார் அவதரித்த திருத்தலமாகும். நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.
தனிச்சிறப்பு:
நவதிருப்பதிகளில் எட்டாவது திருப்பதியாகவும் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்தியேழாவது திவ்ய தேசமாகவும் நவக்கிரகங்களில் செவ்வாய்த் தலமாகவும் இத்திருத்தலம் அமைந்துள்ளது. மேலும் செல்வநிலையில் சிறப்படையவும் இழந்த செல்வங்களை மீண்டும் திரும்பப் பெறுவதற்கும் இத்திருத்தலத்திற்கு வந்து வழிபடுவது சிறப்பு.
ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ள பெருமாள் மரக்காலை (நெல் அளக்க பயன்படும் மரத்தாலான பாத்திரம்) தலைக்கு வைத்து படுத்திருப்பது ஆதனூருக்கு அடுத்து இத்திருத்தலத்தில் மட்டுமே ஆகும்.
Sri Vaithamanidhi Perumal, Temple, Tirukolur
அமைவிடம்:
திருநெல்வேலி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஆழ்வார் திருநகரியிலிருந்து மூம்று கிலோமீட்டார் தொலைவில் அமைந்துள்ளது. திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூரிலிருந்து போக்குவரத்து வசதி உள்ளது.
இறைவன் : அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள்
இறைவியர் : அருள்மிகு குமுதவல்லி
அருள்மிகு: கோளூர்வல்லி
தீர்த்தம் : குபேர தீர்த்தம்
தலவிருட்சம் : புளிய மரம்
ஆகமம் : வைகாநச ஆகமம்
விமானம் ஸ்ரீகர விமானம்
சிறப்பு செய்தி:
குபேரன் தான் இழந்த செல்வத்தை பரமனைப் போற்றி மீண்டும் பெற்ற நாளாக தல வரலாற்றில் கூறப்படுவதாது, மாசி மாதம் சுக்லபட்சம் வளர்பிறை துவாதசி அன்று என்பதாகும். இந்த நாள் வரும் திங்கள் கிழமை 02-03-2015 ஆகும். செல்வ வளம் பெற விரும்புபவர்களும் தாங்கள் இழந்த செல்வத்தை மீண்டும் பெற விரும்புபவர்களும் அன்றைய தினம் இத்தலத்திற்கு வந்து பெருமாளை வழிபடுவது சிறப்பு.
Very nice அய்யா வெ.சாமி அவர்களே.
ReplyDeleteஅய்யா வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம். 2025- ஆம் வருட தமிழ் புத்தாண்டு ஆசீர்வாதம் வேண்டி தங்கள் பதம் பணிகிறேன். ஆசீர்வதியுங்கள்.
ReplyDeleteMon. 14, Apr. 2025 at 12.35 Pm .
ReplyDelete*சோதிடவியல் :*
சோதிடவியலில் இன்று இராசிபற்றி சுருக்கமாக காணலாம்.... 1
*இராசிகள் :*
சோதிடவியலில் கோள்கள், நாட்களுக்கு அடுத்தாற்போல் முக்கியத்துவம் வாய்ந்தவை இராசிகளாகும்.
வான மண்டலம் 360 பாகைகள் கொண்ட ஒரு வட்டமாகக் கருதப்படுகிறது.
இதனை 12- இராசிகளாகப் பிரிக்க ஒவ்வொரு இராசியும் 30- பாகைகள் கொண்டதாக ஆகிறது.
இந்த பன்னிரண்டு இராசிகளின் பெயர்கள் .....
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு , மகரம், கும்பம் மற்றும் மீனம்.
இவற்றை எளிதாக கூறும்படி மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது ... கட்டமாக இதை எப்படி எழுதுவது என காணலாம்...!
-------------------------------------------
330° - 360° | 0°-30 | 30°-60° | ம°-90° |
மீனம் | மேஷம் | ரிஷபம் | மீதுனம் |
----------------------------------------
300° -330° | இராசி | 90° - 120° |
கும்பம் | மண்டலம் | கடகம் |
----------- | | |
270°-300° | | 120°-150° |
மகரம் | | சிம்மம் |
------------------------------------------ 240°-270 | 210° -240° | 180°-210° |150°-180°|
தனுசு | விருச்சிகம் |துலாம் | கன்னி |
-------------------------------------------
இவையே ராசி மண்டலம் அமைக்கும் முறை ஆகும்.
மீண்டும் சந்திக்கலாம் !
Jansikannan438@gmail.com .
Mon. 21, Apr. 2025 at 12.49 pm..
ReplyDelete*கொடிக்கவி :*
*விக்கிரமசிங்கபுரம் பயிற்சி செல்வோர்க்கான பதிவு !*
*கொடிக்கவி நூல் 14- சாத்திரங்களின் சித்தாந்த அட்டகத்தில் மிகச் சிறிய நூல் .
ஆசிரியர் : உமாபதி சிவம் (1313)
*தலைமை அந்தணராகிய உமாபதியார் தில்லையில் பல்லக்கில் செல்ல .....
*மறைஞான சம்பந்தர் *பட்ட கட்டையில் போகுது பார் பகற்குருடு* என்று கூற ......
*உண்மை ஞானம் பெற்றவராய் உமா பதியார் அவர் பின் சென்றார்.
*தறி நெய்வோர் செய்த உப்பில்லா கஞ்சியை உண்ட மறைஞான சம்பந்தரின் கையில் ஒழுகிய எஞ்சியதை உண்டார்.
*உமாபதியாரை தில்லைவாழ் அந்தணர் புறம் தள்ளினர்.
*எனவே, கொற்றவன் குடியில் தங்கினார்.
*தில்லை திருவிழாவின் போது, அந்தணர் கொடி ஏற்றியும் கொடி ஏறவில்லை.
*உமாபதி வந்தால் கொடி ஏறும் - அசரீரி.
*அந்தணர் மன்னிப்புக் கோரி உமாபதி சிவத்தை அழைத்து வந்தனர்.
*உமாபதி சிவம் தில்லையில் கொடிமரம் முன்பு, *கட்டளைக் கலித்துறையில் 1 - பாடலும், 3 - வெண்பாவும் பாட கொடி ஏறியது.*
*இந்த 4- பாடல்களும் கொடிக்கவி* எனப் போற்றப்பட்டது.
பாடலை அடுத்த பதிவில் காணலாம்.
திருச்சிற்றம்பலம்
Jansikannan438@gmail.com
Mon. 21, Apr. 2025 at 11.36 pm.
ReplyDelete*ஆலயம் :*
*அறிந்து கொள்வோமே !*
கடவுள் திருவடியில் ஆன்மா இலயிக்கும்.
கோவில் கடவுள் தங்குமிடம்.
ஆலயம் மூலமே இறைவன் அருளை பொழிகின்றான்.
கோவில் மனித வடிவம். (ஷேத்திரம் சரீர பிரஸ்தானம். )
பாதம் = கோபுரம்
கொப்பூள் = பலிபீடம்
மார்பு = மகாமண்டபம்
சிரம் = . கர்ப்ப கிரகம்
வலது செவி = தட்சிணாமூர்த்தி
கழுத்தில் = நந்தி
மூக்கு = ஸ்நபன மண்டபம்
தலையுச்சி = விமானம்
முழங்கால் = ஆஸ்தான மண்டபம்
தொடை = நிருத்த மண்டபம்
கழுத்து = அர்த்த மண்டபம்
மார்பில் = நடராஜர்
இடது செவி = சண்டிகேஸ்வரர்
வாய் = ஸ்நபன மண்டப வாசல்
புருவமத்தி = இலங்கம்.
கோபுரம் :* இது ஸ்தூல லிங்கம். இறைவனது விராடஸ்வரூபமே கோபுரம்.
கும்பம் :* ஷோட சாந்தம்.
*கோபுர தரிசனம்* இறைவனது பாத தரிசனம்.
*பிரகாரங்கள் :*
3 - பிரகாரம் = அன்ன, பிராண மனோமய கோசங்களை உணர்த்தும்
5 - பிரகாரம் = அன்ன, பிராண, மனோமய, விஞ்ஞான , ஆனந்த மய கோசங்களை உணர்த்தும்.
7 - பிரகாரம் = அன்ன, பிராண, மனோமய , விஞ்ஞான, ஆனந்த மய கோசம், ஸ்தூல, சூட்சுமங்களை விளக்கும்.
பல முறை பிரகாரத்தை சுற்றி வலம் வருதல் கோசங்களை கடந்து இறைவன் விளங்குதலை குறிக்கும்.
*விமானம் :*
விமானம் - 3 - வகைப்படும்
பீட் ம் முதல் அனைத்தும் சதுரம் - நாகரம் (ஆண் விமானம்).
கண்டம் முதல் வட்ட வடிவம் - வேசரம் (அலி விமானம்).
கண்டம் முதல் எண்கோண வடிவம் - திராவிடம் (பெண் விமானம்) .
விமானமும் - ஸ்தூல லிங்கம் ஆகும்.
இதன் கீழ்ப்புறம் - முருகன்.
மேற்புறம் - விஷ்ணு.
தென்புறம் - தெட்சிணாமூர்த்தி.
வடபுறம் - பிரமன் உருவமும் இருக்கும்.
மீண்டும் சந்திக்கலாம் !
திருச்சிற்றம்பலம்
Jansikannan438@gmail.com.
This comment has been removed by the author.
ReplyDeleteWed 21, May, 2025 at 9.05 Pm .
ReplyDelete*மாண்டூக்ய உபநிஷத் :*
மந்திரம் (ஸ்லோகம்) - 2
"ஸர்வம் ஹ்யேதத் ப்ரஹ்ம | அயமாத்மா ப்ரஹ்ம | ஸோSயமாத்மா சதுஷ்பாத் |"
*பொருள் :*
ஏதத் - இந்த
ஸர்வம் - அனைத்தும்
ப்ரஹ்ம ஹி (ப்ரஹ்ம ) - இறைவனே
அயம் - இந்த
ஆத்மா - ஆன்மா
ஸ - அந்த
சதுஷ்பாத் - 4 - பாகங்கள்,
*விளக்கம் :*
நாம் காணும் இவை அனைத்தும் இறைவனே (ப்ரஹ்மமே ).
"இந்த உடலில் உள்ள ஆத்துமாவும் (ஆன்மா, ஜீவன்) இறைவனே.
அத்தகைய இறைவன் 4 - பகுதிகளை உடையது
*கருத்து :*
பொருளும் சொல்லும் ஒன்றே , இந்த எல்லாமும் ஓங்காரமே என முதல் மந்திரம் "ஓமிதி ஏதத் அக்ஷரம் இதம் ஸர்வம் என கூறப்பட்டது.
பின்னர், பொருளை முதன்மையாக வைத்து " ஸர்வம் ஸ்யேதத் ப்ரஹ்ம" என்று இவ்வாறு ஒரே கருத்தை இருவகையில் தெளிவாக அழுத்திக் கூறப்பட்டுள்ளது.
2 - வது மந்திரமான இம் மந்த்ரத்தில். எல்லாமுமாக விளங்கும் இறைவன் (ப்ரஹமம்) எங்கோ இருக்கும் உண்மைப் பொருளன்று ; அது ப்ரத்யக்ஷமாக நம் உடலுக்குள்ளே இருக்கும் "ஆத்மாவே" (ஆன்மா) என்பதைச் சுட்டிக்காட்ட "அயமாத்மா ப்ரஹ்ம" என்ற தொடர் வந்தது.
இறைவனை (ப்ரஹ்மத்தை) எளிய முறையில் அறிவதன் பொருட்டு அதற்கு 4 - பாதங்கள் ( பகுதிகள்) உள்ளன.
இதில் 1 - 3 பாதங்கள் , 4 - ஆம் நிலையை அடைய வழிகாட்டும் *காரணப் பெயர்கள்.
4- ஆம் பாதம், *அடையப்படும் நிலையை குறிக்கும்* காரணப் பெயர்.
*குறிப்பு :*
1 - வது மந்திரம் அனைத்தும் ஒங்காரமே என்கிறது.
2 - வது மந்திரம் அனைத்தும் இறைவனே (ப்ரஹ்மம்) என்கிறது.
Jansikannan438@gmail.com
Fri . 23, May , 2025 at 7.15 am
ReplyDelete*திருவாசகத்தில் "மும்மலம்" :*
சைவ சித்தாந்தத்தில், ஆணவம், கன்மம், மாயை என்னும் 3 - பொருள்களும் மும்மலம் எனப்படுகின்றன. இவற்றைத் *தளை* என்கிறோம்.
தளை என்பது *கட்டு.* உயிரின் வியாபகத்தைக் கட்டுப்படுத்தி உயிரைப் பிறப்பு - இறப்புக்கு உட்படுத்துவதால் இவை *தளை* எனப்படுகின்றன.
தளைக்கு ... மலம், பாசம் என்னும் சொற்கள் சைவ சித்தாந்தக் குறியீடுகள் ஆகும்.
சரி.... இப்போ திருவாசகத்துக்குள் வருவோம்...!
திருவாசகத்தில், மலம், பாசம் என்னும் சொற்கள் பல இடங்களில் வருகின்றன.
*"மும்மை மலம் அறுவித்து" (தில்லையில் அருளிய 51. அச்சோப் பதிகத்தில் - 658.*
*"பசு பாசம் அறுத்தானை" தில்லையில் அருளிய கண்ட பத்து - 478*
என்னும் தொடர்களிலிருந்து இவ்வுண்மையை அறியலாம்.
*தில்லையில் அருளிய கீர்த்தித் திருவகவலில் - 111 - 112 -ல்*
*"மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும்
தூய மேனி சுடர்விடு சோதி"* என்று
மணிவாசகர் அருளியுள்ளார்.
*மும்மலம் என்பது ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மலங்களைக் குறிக்கும் என்பது யாவரும் அறிந்ததே.
இந்த *மூலம்* என்ற சொல்லுக்கு * *காரணம்* என்றொரு பொருள் உண்டு.
எனவே, மும்மலங்களும் காரியப்படுவதற்கு முன்பே, காரண நிலையில் உள்ளன என்பது பெறப்படுகிறது . ஆக, இதுவே *மூலம் ஆகிய மும்மலம் என்னும் தொடருக்குப் பொருளாகும்.*
மும்மலங்களும் "மூலம்" என்பதால், இவை வேறு எதிலிருந்தும் தோன்றவில்லை என்பதும், அநாதியே உள்ளன என்பதும் புலனாகின்றன.
*மூவர் தேவாரங்களிலும் *"மலம்"* என்னும் சைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல்லாட்சி வருகிறது.
ஆயினும் ...... *திருவாசகத்தில் மட்டுமே, *"மும்மலம்"* என்னும் சொல்லாட்சி உள்ளது.
மூவர் தேவாரங்களில் எண்ணிக்கை சுட்டாமல் வரும் *மலம்* என்ற சொல்,
*திருவாசகத்தில் மட்டுமே "மும்மலம்"
என்று சுட்டி காட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*
*மும்மலம்* என்னும் சொல்லாட்சி திருவாசகத்தில் பல இடங்களில் கையாளப்படுவதைக் காணலாம்.
ஒரு சில எடுத்துக்காட்டுக்களை இங்கு பார்ப்போம் .....!
அழுக்கு அடையா நெஞ்சு உருக "
*மும்மலங்கள்* பாயும் கழுக்கடை காண்.*
(தில்லையில் அருளிய திருத்தசாங்கம் - 364 )
உள்ள *மலம் மூன்றும்* மாய உகு பெருந்தேன் .
*உள்ள மலம் மூன்றும்* என்றதனால், மூன்று மலங்களும் என்றும் உள்ள அநாதிப் பொருள்கள் என்பது பெறப்பட்டது. (திருப்பெருந்துறையில் அருளிய 48. பண்டாய நான் மறை - 629).
*மும்மை மலம்* அறுவித்து முதலாய முதல்வன் தான்
(தில்லையில் அருளிய 51. அச்சோப் பதிகம் - 658).
* மும்மை* என்னும் சொல் .... உம்மை, இம்மை , அம்மை என்னும் மூன்று நிலைகளிலும் மூன்று மலங்களும் உள்ளன என்று பொருள்.
இங்கு .......
*"உம்மை" என்பது, உயிர்கள் பிறவிக்கு வரும் முன்பு உள்ள நிலையைக் குறிக்கும்.*
*"இம்மை" என்பது, உயிர்கள் பிறப்புட் பட்டுள்ள நிலையைக் குறிக்கும்.*
*"அம்மை" என்பது உயிர்கள் வீடு பேறு பெற்றுப் பிறப்புக்குட்படாத நிலையைக் குறிக்கும்.
உயிர்களானது பிறப்புக்கு வருவதற்கு முன்பும், பிறப்புக்கு உட்படாத போதும் மும்மலங்களும் காரண நிலையில் உள்ளன .
உயிர்கள் பிறப்புட்படும் போது அவை மூன்றும் காரிய நிலையில் இருக்கின்றது.
*அதாவது, "மும்மை" என்பது | முக்காலத்தும் மூன்று மலங்களும் உளதாம் தன்மை உடையன என்பதைக் குறிக்கின்றது.*
Jansikannan438@gmail.com .