jaga flash news

Tuesday, 25 September 2012


சனிப் பெயர்ச்சி பலன்கள் (21.12.2011 முதல் 16.12.2014)வரை



மேஷ ராசி
அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, , லி, லு, லே, லோ, உள்ளவர்களுக்கும்)
ஏழாம் இடத்தில் சனி! இனிக்கும் வாழ்க்கைதான் இனி!
எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டுமென்று எண்ணும் மேஷ ராசி நேயர்களே!
உங்கள் ராசிநாதன் செவ்வாய் என்பதால் செயலில் வேகம் இருக்கும். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயலாற்றி வெற்றிக்கனியை விரைவில் எட்டிப்பிடிக்க விரும்பு வீர்கள். தவறு நடந்தால் தட்டிக் கேட்பதற்கும் தயங்க மாட்டீர்கள்.
உங்கள் ராசிக்குள் தேவ கணம், மனித கணம், அசுர கணம் ஆகிய மூன்றும் அடங்கி யிருப்பதால், அவற்றில் உங்கள் நட்சத்திரத்திற்குரிய கணம் எது என்பதை ஆராய்ந்து, அதற்குரிய விதத்தில் தெய்வ வழிபாட்டை தேர்ந்தெடுத்து மேற்கொண்டால், செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
கூட்டு யோகத்தைக் காட்டிலும், வீட்டு யோகம் உங்களுக்கு உண்டு. `பூமிகாரகன்செவ்வாயின் ஆதிக்கத்திற்குரிய ராசியில் நீங்கள் பிறந்திருப்பதால் சொத்துக்களால் உங்களுக்கு லாபம் உண்டு.
அந்தச் செவ்வாய், உங்கள் சுய ஜாதகத்தில் இருக்கும் சாரபலத்தை அறிந்து, நவாம் சத்திலும் அது இருக்கும் நிலை அறிந்து, அதைப் பார்க்கும் கிரகத்தின் பலமும், அதோடு சேர்ந்திருக்கும் கிரகத்தின் பலமும் பார்த்து, எடைபோட்டு அதற்குரிய எண் ஆதிக்கத்தில் உங்கள் பெயரையும் அமைத்து கொண்டால், பொன்னான எதிர்காலம் இப்பூவுலகில் உங்களுக்கு வந்து சேரும்.
படிப்பு, தொழில் போன்றவற்றை நீங்கள் தேர்ந்து எடுக்கும் பொழுது, செவ்வாய்க்குரிய தொழிலை தேர்ந்தெடுத்தால் தான் ஜெயித்துக் காட்ட இயலும்.
வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்கும் பொழுது கூட, தங்கு தடைகள் அகலவும், தக்க விதத்தில் ஒற்றுமை ஏற்படவும், உங்களது மனம் போல உங்கள் வாழ்க்கைத் துணை செயல்பட்டு, ஒத்துழைப்பு தரவும், அவர்கள் ஜாதகத்திலும் செவ்வாயின் நிலை அறிந்து பொருத்தம் பார்த்து தேர்ந்தெடுப்பது வருத்தத்தை தவிர்க்கும்.
இப்படிப்பட்ட குணங்களைப் பெற்ற உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சி தானா? என்பதைப் பற்றி பார்ப்போம்.
மறக்க முடியாத மார்கழி ஐந்து!
மார்கழி மாதம் 5-ந்தேதி முதல் துலாம் ராசியில் சனி சஞ்சரிக்கப்போகிறார். அங்கிருந்து கொண்டு ஜென்ம ராசியையும், நான்காமிடம், ஒன்பதாமிடம் (1, 4, 9) ஆகிய இடங்களை யும் பார்த்து புனிதப்படுத்தப் போகிறார். இதன் விளைவாக, உடல் ஆரோக்கியம், அறி வாற்றல், தாய், தந்தை, சுகம், பூர்வீகம், கால்நடைகள், வாகன யோகம் ஆகிய அனைத்து ஆதிபத்தியங்களிலும் அற்புதமான மாற்றங்களை உருவாக்கப்போகிறார்.
`கண்டகச்சனிஎன்பதால் கவனம் தேவை என்று எல்லோரும் சொல்வார்கள். நீங்கள் செய்த புண்ணியம், பெயர்ச்சியாகும் சனியை குரு பார்க்கிறார். `குரு பார்க்க கோடி நன்மை அல்லவா?’ அது மட்டுமல்லாமல், உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானம், லாப ஸ்தானத்திற்கு அதிபதியாக விளங்கும் சனி உச்சம் பெறுகிறார்.
சனியின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் அடிக்கடி உடல் நலத்தில் மட்டும் தொல்லை களைக் கொடுத்து குணமடைய வைப்பார். எனவே, தொடர்ந்து நீங்கள் சந்தோஷத்தை மட்டும் சந்திக்க வேண்டுமானால், சனி பகவான் கவசத்தைப்பாடி, சனீஸ்வரர் சந்நிதியில் எள் தீபம் ஏற்ற வேண்டும்.
மந்தன் பார்வையால் ஏற்படும் மகத்தான பலன்கள்!
உங்கள் ராசிக்கு ஏழில் சனிபகவானின் பார்வை 1, 4, 9 ஆகிய இடங் களைப் பார்ப்பதால் உன்னதமான மாற்றங்கள் வந்து சேரப்போகின்றன. திடீர் முடிவெடுத்து திக்குமுக்காடாமல் யோசித்து முடிவெடுத்தால் யோகங்கள் தேடிவரும்.
ஜென்ம ராசியை சனி பார்ப்பதால் ஆரோக்கிய குறைபாடு ஏற்படும் பொழுதே, மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டால் முட்டுக்கட்டைகள் அகலும்.
சனியின் பார்வை நான்காமிடத்தில் பதிவதால், குடும்ப ஒற்றுமை குறையாமல் பார்த்து கொள்வது நல்லது. வீடு வாங்கும் முயற்சி அல்லது கட்டும் முயற்சியில் ஆர்வம் கூடும். குடும்ப உறுப்பினர்களில் யார் பெயரில் சொத்துக்கள் வாங்கினால் அது நிலைக்கும் என்பதை ஜாதக ரீதியாக கண்டறிந்து, உங்கள் ராசிக்கு ஏற்ற கோவில்களை தேர்ந் தெடுத்து வழிபட்டு வருவதும், வாங்கிய சொத்தை நிலைக்க வைக்கும் ஆற்றலைக் கொடுக்கும்.
சனியின் பார்வை ஒன்பதாமிடத்தில் பதிவதால் பயணங்களால் பலன் கிடைக்கும். பாகப் பிரிவினைகள் சுமூகமாக முடியும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும். மாற்று இனத்தவர் களுடன் கூட்டாக தொழில்புரியும் வாய்ப்புகள் உருவாகும். கணவன்- மனைவிக்கு இடையே கனிவு கூடும்.
குருப்பெயர்ச்சி காலம்!
சுமார் 2 1/2 ஆண்டுகள் துலாம் ராசியில் சஞ்சரிக்க வேண்டிய சனிபகவான் கூடுதலாகவே சில மாதங்கள் அந்த ராசியில் சஞ்சரிக்கிறார். இக்காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. 17.5.2012-ல் ரிஷப ராசியிலும், 28.5.2013-ல் மிதுன ராசியிலும், 13.6.2014-ல் கடக ராசியிலும் குரு சஞ்சரிக்கப் போகிறார்.
ரிஷபத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை பலத்தால் 6, 8, 10 ஆகிய இடங்கள் புனிதமடைகின்றன. எனவே, எதிர்ப்புகள் அகலும். இல்லத்தில் நல்ல சம்பவம் நடைபெறும். தொய்வு விழுந்த தொழிலை விட்டு விட்டு, சுய தொழில் ஈடுபாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.
மிதுன குருவின் சஞ்சாரத்தின் பொழுது 7, 9, 11 ஆகிய இடங்கள் புனிதமடைவதால், வீட்டில் கெட்டிமேளம் கொட்டும் வாய்ப்பு உருவாகும். பிள்ளைச் செல்வம் இல்லாதவர் களுக்கு குருவருளால் கரு உருவாகும்.
கடக ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை பலத்தால் 8, 10, 12 ஆகிய இடங்கள் புனிதமடைவதால், தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்யும் வாய்ப்பு கிட்டும். புதிய பங்குதாரர்கள் சேருவர். வெளிநாட்டு பயணம் விருத்தியடையும்.
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்!
2.12.2012 ல் துலாம் ராசியில் ராகுவும், மேஷ ராசியில் கேதுவும் சஞ் சரிக்கப்போகிறார். 21.6.2014-ல் கன்னி ராசியில் ராகுவும், மீன ராசியில் கேதுவும் உலா வரப்போகிறார்கள். முதல் ராகுகேது பெயர்ச்சி காலத்தில் கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பெற்றோர்களால் நன்மை ஏற்படும். கணவன்-மனைவிக்குள் அனுசரிப்பு தேவை.
அடுத்து வரும் ராகுகேது பெயர்ச்சியால் பொருளாதார நிலை உயரும். அஷ்ட லட்சுமி யோகம் செயல்படும். அள்ளிக் கொடுக்கும் வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இடமாற்றம் எதிர்பார்த்தபடி அமையும்.
சனியின் வக்ர காலம் பொற்காலமாக மாற
துலாம் ராசியில் உச்சம் பெறும் சனி ஐந்து முறை வக்ரம் அடைந்து நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 10, 11-க்கு அதிபதியாக விளங்கி, தொழில் மற்றும் லாப ஸ்தானத்தை ஆதிபத்தியமாக கொண்ட ஒரு கிரகம் வக்ரம் பெறும் பொழுது, கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல், எதிரிகளால் ஏமாற்றம்காண நேரிடும். தொழிலில் வளர்ச்சியும், தளர்ச்சியும் மாறி மாறி வந்து கொண்டேயிருக்கும். தேவையில்லாத கடன்சுமை கூடும்.
இந்த வக்ர காலம் பொற்காலமாக அமைய வேண்டுமானால், ஆனை முகப்பெருமான் வழிபாட்டிலும். அனுமன் வழிபாட்டிலும், சனி பகவான் வழிபாட்டிலும் ஆர்வம் காட்டுங்கள்.
சனியின் சஞ்சாரப் பலன்கள்!
ஏழாமிடத்துச் சனியால் இனிய பலன் ஏற்படுமா?
இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் இப்பொழுது ஏழாமிடத்திற்கு வரப்போகிறார். கண்டகச்சனியாக வருகிறதே என்று கவலைப்பட வேண்டாம்.
சனிக்கிழமை தோறும் சனீஸ்வரர் சந்நிதியில் நீங்கள் அடியெடுத்து வைத்தால், இனிக்கும் வாழ்க்கை எந்நாளும் மலரும்.
`ஏழில் சனி வந்தால்
எண்ணற்ற மாற்றம் வரும்!
சூழும் பகை விலக,
துணிவோடு செயல் புரிய,
நாளும் பொழுதுமினி,
நல்லதே நடப்பதற்கு,
வாழ்வில் ஈஸ்வரனை
வழிபட்டால் பலன் கிட்டும்!’
என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
அந்த அடிப்படையில் உச்ச சனியின் பார்வை உங்கள் ராசியில் பதியும் இந்த நேரத்தில் அச்சமில்லாத வாழ்க்கைக்கு அடித்தளமிட்டுக் கொடுப்பது, அருகில் இருப்பவர் களை அனுசரித்து செல்வதோடு, ஆண்டவனை வழிபடுவதும் தான்.
உங்கள் ராசிக்கு 10, 11 -க்கு அதிபதியாக சனி விளங்குகிறார். தொழில் ஸ்தானத் திற்கும், லாப ஸ்தானத்திற்கும் அதிபதியாக விளங்கும் சனி உச்சம் பெறும் பொழுது, தொழிலையும் உருவாக்க வேண்டும். லாபத்தையும் கொடுக்க வேண்டும் அல்லவா? எனவே, அப்படி நற்பலன்களைக் கொடுக்கும் பொழுது, கண்டகச்சனியின் ஆதிபத்தியத் தையும் அது செய்ய வேண்டும்.
எனவே, வந்த பணம் மறுநிமிடமே செலவாகலாம். எனவே, கையில் காசு தங்க நெய்யில் தீபமேற்றி ஈஸ்வரனை வழிபடுவதோடு, எள் தீபம் ஏற்றி சனிபகவானையும் வழிபடுவது நல்லது.
தொட்ட காரியங்களில் வெற்றிபெற வழிபாடு!
காக வாகனத்தான் சனியை நம்பினால் தேக நலனும் சீராகும். செல்வ வளமும் பெருகும். எனவே, சிவகங்கை மாவட்டம் அருகில் உள்ள பெரிச்சிக் கோவிலுக்குச் சென்று தனஆகர்ஷன சனியையும், நவபாஷான வைரவரையும் வழிபட்டு வாருங்கள். சோகங்கள் மாறி, சுகங்கள் கூடுவதற்கு சனி பகவான் சந்நிதியில் சனிகவசம் பாடுங்கள்.
`காகத்தில் ஏறி நின்று,
கனிவோடு வரத்தை நல்கி,
தேகத்தைக் காக்கும் ஈசா,
செல்வத்தை வழங்கு வாயே!’
என்று பாடினால், வாழ்க்கை வளமாக அமையும். வார வழிபாடாக, செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபட்டு முன்னேற்றத்தை வரவழைத்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment