jaga flash news

Monday, 24 September 2012

30x40 சைட் எனப்படும் 1200 சதுர அடிகள் கொண்ட வீட்டுமனை தான் இன்றைய நடுத்தர வர்க்கங்களின் இலக்கு.
ஒரு வராண்டா, ஒரு ஹால், ஒரு கிச்சன், ஒரு டைனிங், ஒரு மாஸ்டர் பெட்ரும். ஒரு சில்ட்ரன் ரும், ஒரு ஸ்டடி ரும், அப்புறம் முக்கியமாக ஒரு போர்டிகோ. வாங்கப்போகிற காரை நிறுத்த இடம் வேண்டும் அல்லவா?

1200
சதுர அடியில் இவ்வளவையும் கட்ட முடியுமா என்று பெரும்பாலோர் யோசிப்பதில்லை. வங்கிக் கடனுக்கான டாக்குமெண்ட்டுகளை தயார் செய்வதிலேயே காலத்தைக் கழித்துவிடுவதால், கடைசி நேரத்தில் அவரசமாக ஒரு பிளானை ரெடி செய்து கொண்டு களத்தில் குதித்து விடுகிறார்கள்,
ஈசான்யம் என்பது ஒரு வீட்டின் தலைப் பகுதியை போன்றது. தலை வெட்டப்பட்ட உடலுக்கு என்ன மரியாதையோ அதே மரியாதைதான் இது போன்ற வீடுகளுக்கும்!
அந்த காலத்தில் வாஸ்து இருந்ததா என்று கேட்பவர்களைப் பார்த்து நாம் கேட்கும் ஒரே கேள்வி,
அந்த காலத்தில் வீட்டின் நுழை வாயிலில் ஈசானியம் வெட்டுப்பட்ட போர்டிகோ வைத்த வீடுகள் இருந்தது உண்டா என்பதுதான்.
அப்பொழுதெல்லாம் குதிரைகளுக்கு லாயங்களும் மாடுகளுக்கு தொழுவங்களும் தனித்தனியாக இருந்தன. ஜட்கா வண்டிகளும் மாட்டு வண்டிகளும் காம்பவுண்ட்டுக்கு வெளியே ஒரு கொட்டகையில் பத்திரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது வழக்கம்.
இன்றைக்கு பெரும்பாலான வீடுகள் ஈசானிய வெட்டுடன் கட்டப்படுவதைக் கண்டால் மனசு கணக்கிறது. கேட்டால் வாஸ்து பிளான் என்கிறார்கள். இது கிழக்குப் பார்த்த மனை. எனவே தோஷமில்லை என்கிறார்கள்.
எந்த திசை வீடாக இருக்கட்டும்: கிழக்கும் வடக்கும் இணையும் மூலையான ஈசானியப் பகுதியை வெட்டிவிட்டு. ஈசானியத்தைக் காலியாக விட்டிருக்கிறேனே என்று தம்பட்டம் அடித்துக் கொள்வது ஒரு பேஷனாகி வருகிறது. இது தவறு.
ஈசானியம் வெட்டுப்பட்ட போர்டிகோவை அமைத்தால் ஒருவேளை கார் வாங்கலாம். ஆனால், அதைவிற்று மோர் வாங்க ரொம்ப காலம் ஆகாது!

No comments:

Post a Comment