jaga flash news

Sunday, 30 September 2012

‘மகர சங்கராந்தி’

ஒரு வருடத்துக்கு 12 மாதங்கள் என்பதை அறிவோம். அதில், தை மாதம் துவங்கி ஆனி மாதம் வரை உத்தராயனம் என்றும், ஆடி மாதம் துவங்கி மார்கழி மாதம் வரை தக்ஷிணாயனம் என்றும் பிரித்து அருளியிருக்கிறார்கள் ரிஷிகள்! 
உத்தராயன காலத்தை தேவர்களின் பகல் பொழுது என்றும், தக்ஷிணாயன காலத்தை தேவர்களின் இரவுப் பொழுது என்றும் சொல்வர். தை மாதப் பிறப்பான (15.1.12) அன்றைய தினத்தை, உத்தராயன புண்ய காலம் என்பார்கள். சூரியன், தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்வதால், அந்த நாளை ‘மகர சங்கராந்தி’ என்றும் போற்றுவார்கள். இந்தப் பூவுலகம் சிறப்புற இயங்கத் தேவையான ஒளியையும், அதன் மூலம் சக்தியையும் அளிக்கும் ஸ்ரீசூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண் டாடுவதே தைத் திருநாளின் நோக்கம்! இந்த நாளை, பொங்கல் படையலிட்டு சூரிய பூஜை செய்வது மிகவும் விசேஷம். 
சூரியனை ஆராதித்துப் போற்றுகிற பொங்கல் திருநாள், இந்த வருடம் ஞாயிற்ற
ுக் கிழமையன்று வருவது பெரும் பாக்கியம்.
ஓம் மித்ராய நம: ஓம் ரவயே நம:
ஓம் சூர்யாய நம: ஓம் பாநவே நம:
ஓம் ககாய நம: ஓம் பூஷ்னே நம:
ஓம் ஹிரண்யகர்பாய நம: ஓம் மரீசயே நம:
ஓம் ஆதித்யாய நம: ஓம் ஸவித்ரே நம:
ஓம் அர்காய நம:
ஓம் பாஸ்கராய நம
எனும் மந்திரத்தைச் சொல்லி, தினமும் காலையில் பன்னிரு நமஸ்காரங்கள் செய்பவர்களுக்கு இந்தப் பிறப்பு மட்டுமின்றி, இனி எடுக்கிற ஒவ்வொரு பிறப்பிலும் செல்வச் செழிப்பில் எந்தக் குறையும் ஏற்படாது என்றும், நல்ல தேக ஆரோக்கியத்துடன் வாழ்க்கை அமையும் என்றும் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. ‘உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார்’ என்பார்கள். நமக்குத் தேவையான உணவுகளுக் காக, தன் வாழ்க்கையையே தியாகம் செய்யும் உழவர் பெருமக்களுக்கு இந்த நாளில், மனதார நன்றி செலுத்துவோம்!

No comments:

Post a Comment