jaga flash news

Monday 24 September 2012

வெற்றிலையின் புதிய பயன்கள்

வெற்றிலையின் புதிய பயன்கள்

வெற்றிலை போடுவது நல்லதல்ல என பல் டாக்டர்கள் கூறுவர்.வெற்றிலை என்பது தனிப்பட்ட முறையில் கெடுதல் அல்ல. அதனுடன் சேர்க்கப்படும் பாக்கும், சுண்ணாம்புமே கெடுதலைத் தருகின்றன. வெற்றிலையில் உள்ள செவிகால் என்கிற வேதிப்பொருள் இயற்கை யானஆன்ட்டி-செப்டிக்ஆகும். வெற்றிலை செல் சிதைவைத் தடுக் கிறது என கோல்கட்டா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. கால்சியம் மாத்திரைகளை விட பால், தயிர், நல்லெண்ணெய், வெற்றிலையில் இருந்து கால்சியத்தை உடல் எளிதாக ஏற்றுக் கொள்கிறது. வயதான பெண்களுக்கு ரத்தத்தில் ஏற்படும் இழப்பை சரி செய்ய எலும்பில் இருந்து கால்சியத்தை உடல் எடுக்கிறது. இதனால் எலும்புகள் பலவீனமடையும். இந்த குறையை நிவர்த்தி செய்ய வெற்றிலையைப் பரிந்துரை செய்கின்றனர். வெற்றிலையில் உள்ள யூஜினால் என்னும் வேதிப்பொருள், புற்றுநோயைக் குணப்படுத்தும் இயல்பைப் பெற்றுள்ளது

No comments:

Post a Comment