jaga flash news

Saturday, 29 September 2012

யோனிப் பொருத்தம் இல்லாவிட்டால் தாம்பத்தியத்தில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?


திருமணத்தைப் பொருத்தவரை யோனிப் பொருத்தம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பொதுவாக திருமணத்தின் முக்கிய குறிக்கோள் புதிய சந்ததியை (குழந்தைகள்) உருவாக்குவது. இதற்கு தம்பதிகளுக்குள் உடல் ரீதியான உறவு முக்கியம்.
சுக்கிரன் நீதி, சுக்கிரன் நாடி ஆகிய நூல்களில் தம்பதிகளுக்கு பொருத்தம் பார்க்கும் போது அதனை லக்னம், ராசி ஆகிய 2 கோணங்களில் பார்க்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.ஜோதிடத்தைப் பொறுத்தவரை லக்னம் என்பது உயிர்; ராசி என்பது உடல்.
உதாரணத்திற்கு ஒருவர் மீன லக்னம், ரிஷப ராசி என்றால், மீன லக்னத்திற்கு 7, 8ஆம் இடம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்பதுடன், ராசிக்கும் 7,8ஆம் இடத்தைப் பார்க்க வேண்டும்.
ஜோதிட ரீதியாக ராசி என்பது சந்திரன் இருக்கும் இடத்தைக் குறிக்கிறது. உடல், மனதிற்கு உரிய கிரகம் சந்திரன். உடலுறவுக்கு உடலும், மனதும் ஒத்துழைக்க வேண்டும். எனவே, யோனிப் பொருத்தத்தைக் கணிக்கும் போது ராசியையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
யோனிப் பொருத்தம் உடல் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் ஜோதிடத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு விலங்குகள் கூறப்பட்டுள்ளன. அந்த வகையில் தம்பதிகளுக்கு உரிய விலங்குகள் பகை இல்லாத வகையில் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு உரிய விலங்கு உடல் ரீதியான உறவு மேற்கொள்ளும் தன்மைகள்/இயல்பு சம்பந்தப்பட்டவருக்கும் காணப்படும்.
உதாரணமாக அஸ்வினி நட்சத்திரத்திற்கு உரிய விலங்கு ஆண் குதிரை என்று ஜோதிடத்தில் கூறப்பட்டு உள்ளது. எனவே, குதிரைக்கு உரிய சுபாவங்கள்/தன்மைகள் சம்பந்தப்பட்டவர் மேற்கொள்ளும் உறவின் போது வெளிப்படும். இது காம சாஸ்திரத்திலும் கூறப்பட்டுள்ளது.
ஒரு சில தம்பதிகளுக்கு யோனிப் பொருத்தம் இல்லாமல் போவது உண்டு. இதன் காரணமாக அவர்களில் ஒருவர் வேறு துணையை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதன் காரணமாக பண்பாடு, கலாசாரம் உடைகிறது. இதற்கு யோனிப் பொருத்தம் இல்லாத தம்பதிகளுக்கு உடலுறவில் நீடித்த தன்மை, மகிழ்ச்சி, மனநிறைவு இல்லாததே காரணம்.
கள்ளக்காதல், முறைதவறிய உறவுகள் உள்ளிட்ட விடயங்களை நாம் ஆய்வு செய்ததில் அந்த தம்பதிகள்/காதலர்களுக்கு யோனிப் பொருத்தம் இல்லை என்பது தெரியவந்தது.
மற்றொரு கோணத்தில் பார்த்தால், ஒரு சில ஆண்களுக்கு எழுச்சிக் குறைபாடு காணப்படும். இதற்கு லக்னத்திற்கு 3ஆம் இடம் (போகஸ்தானம்) காரணம். லக்னத்திற்கு 3ஆம் இடத்தில் நல்ல கிரகங்கள் அமர்ந்திருக்க வேண்டும். அதேபோல் 3க்கு உரியவரும் சிறப்பாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எழுச்சிக் குறைபாடு ஏற்பட வாய்ப்புண்டு.
சமீபத்தில் குழந்தை இல்லாத காரணத்திற்காக என்னிடம் வந்திருந்த ஒரு தம்பதியரின் ஜாதகத்தைப் பார்த்த போது பெண்ணுக்கு (சிம்ம லக்னம்) 3ஆம் இடத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தார். ஆனால் தனுசு லக்னத்தை உடைய ஆணின் ஜாதகத்தில் 6ஆம் இடத்தில் கேதுவுடன் சேர்ந்து சனி மறைந்திருந்தார். தனுசு லக்னத்திற்கு 3ஆம் இடத்திற்கு உரியவரான சனி, 6ஆம் இடத்தில் பாவ கிரகத்துடன் இணைந்து மறைந்ததால், அவரால் மனைவியை உடல் ரீதியாக திருப்தியளிக்க முடியவில்லை.
இந்தத் தம்பதிக்கு நட்சத்திரப்படி யோனிப் பொருத்தம் இருந்தது. ஆனால் கிரக அமைப்புகளின் படி, ஆணின் லக்னத்திற்கு 3ஆம் இடம் கெட்டுப் போனதால் புணர்ச்சியின் போது அவரது உறுப்பில் எழுச்சி ஏற்படாத குறைபாடு காணப்பட்டது. மருத்துவ ரீதியாக செயற்கையாக சில சிகிச்சைகள் மேற்கொண்டு பலன் கிடைக்கவில்லை என அவர்கள் கூறினர்.
கடந்த பிறவியிலோ, இந்தப் பிறவியிலோ கலவி நிலையில் உள்ள ஒருவரை (அது மனிதராகவும் இருக்கலாம்; விலங்கு/பறவையாகவும் இருக்கலாம்) சம்பந்தப்பட்ட ஜாதகர் பிரித்தால் அல்லது இடையூறு செய்தால் 3க்கு உரிய கிரகம் பாவ கிரகங்களுடன் சேர்ந்துவிடும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதன் காரணமாக அவருக்கு போக சுகம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.
மற்றொரு பெண், தனது கணவரின் ஜாதகத்தையும், தனது ஜாதகத்தையும் கொண்டு வந்து தனக்கு எப்போது விவாகரத்து கிடைக்கும் எனக் கேட்டார். அவரிடம் விடயத்தை முழுமையாகக் கேட்ட போது முதலில் சொல்லத் தயங்கிய அவர், பின்னர் தனக்கு திருமண வாழ்க்கையில் ஈடுபாடு இல்லை என்று கூறினார்.
அவரது கணவரின் ஜாதகம் மிகவும் சிறப்பாக இருந்தது. லக்னாதிபதி உட்பட முக்கிய ஸ்தானங்கள் அனைத்தும் நன்றாக காணப்பட்டது. மனைவியின் ஜாதகத்தைப் பார்த்த போது இருவருக்கு யோனிப் பொருத்தம் இருந்தாலும், 3ஆம் இடம் கெட்டுப்போய் இருந்தது.
அந்த பெண்ணுக்கு ரிஷப லக்னம். அதற்கு 3ஆம் இடத்து அதிபதியான சந்திரன், ராகுவுடன் இணைந்திருந்தார். இதன் காரணமாக அவருக்கு உடலுறவில் பெரியளவில் ஈடுபாடு இல்லை. ஆனால் அவரது கணவருக்கு போகஸ்தானம் சிறப்பாக இருந்ததால் அவர் தன் மனைவி மீது அதிக ஈடுபாட்டுடன் இருந்தார். கணவரின் ஆசைகளை அந்த மனைவியால் ஈடு செய்ய முடியாத காரணத்தால் மனைவி விவாகரத்து பெறும் முடிவுக்கு மனதளவில் வந்திருந்தார்.
மேலும், அந்தப் பெண்ணுக்கு தன்னுடைய சிறு வயதில் இருந்தே காதல், கலவி உள்ளிட்ட விடயங்கள் தவறானவை என்று தனது பாட்டியால் ஆணித்தரமாக உணர்த்தப்பட்டதாகவும் என்னிடம் கூறினார்.
இதன் காரணமாக என்னால் கணவரை முழுமையாக திருப்திப்படுத்த முடியவில்லை. சந்திரன், ராகுவுடன் இணைந்ததால் அந்தப் பெண் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவருக்கு உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் போய்விட்டது என்றார்

No comments:

Post a Comment