jaga flash news

Saturday, 29 September 2012

ஜாதகத்தில் சனி 7 வது வீட்டில் இருந்தால் வயது கூடிய மனைவியே பொதுவாக அமைவாள் என ஜோதிடம் கூறுகிறது.


வயது கூடிய பெண்ணை மணக்கலாமா? ஜோதிடம் என்ன சொல்கிறது?
                                                                
ஜாதகத்தில் சனி 7 வது வீட்டில் இருந்தால் வயது கூடிய மனைவியே பொதுவாக அமைவாள் என ஜோதிடம் கூறுகிறது. ஆனால் வயது கூடிய பெண்ணை மணப்பதை ஜோதிடம் ஆகாது என்று எதிர்க்கவில்லை.
பொதுவாக ஆணை விட பெண்ணோ அல்லது பெண்ணை விட ஆணோ கொஞ்சம் ஏற இறங்க இருப்பது நல்லது. எதற்காக என்றால், ஒருத்தர் நோயாலோ, வயோதிபத்தாலோ சங்கடங்கள் அனுபவிக்க நேர்ந்தால் இன்னொருத்தர் அதனை சமாளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் பெரியவர்கள் இதுபோன்று இடைவெளி வைத்து திருமணம் செய்து வைத்தார்கள்.
கொஞ்ச காலத்திற்கு முன்பு குறைந்தபட்சம் 5 அல்லது 6 வயது குறைவான பெண்ணையே திருமணம் முடிப்பார்கள். அதற்கும் முந்தைய காலத்தில் 12 வயது 13 வயது வித்தியாசமெல்லாம் இருந்தது. ஆனால் தற்பொழுது இருக்கும் நிலைமை அப்படி கிடையாது. பெண், ஒத்த வயதுடைய ஆணையோ அல்லது ஓரிரண்டு வருடம் குறைவான வயதுடைய ஆணை மணம் முடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பொதுவாக இந்த வயது வித்தியாசம் என்பதே ஒருத்தர் சங்கடப்படும் போது மற்றொருவர் இளமையுடன் இருந்து செயல்படுவதற்காகத்தான் செய்யப்பட்டது.
ஜோதிடத்தின் பிரகாரம் வயது கூடிய பெண்ணணை திருமணம் செய்வது தவறு இல்லை

No comments:

Post a Comment