jaga flash news

Sunday 23 September 2012

சனியும் சுக்கிரனும்,சுக்கிரன் ராகு


·         ஆணுக்கு சனியும் சுக்கிரனும் இணைந்தால் போதைக்கு அடிமை...போதைன்னா பெண் மோகத்தையும் குறிக்கும்..
·         பெண்ணுக்கு சுக்கிரன் ராகு;கிழவனை மணந்து குமரனை அடைவாள்...!!!(ஜோதிட பாடல்.இது,.என் மேல் பாயக்கூடாது)
·         லக்னத்துக்கு 7க்குடையவன் 6ல் மறைந்தால் சண்டையுடன் திருமணம்..
8
ல் மறைந்தால் அவமான திருமணம்!!!
·         சதயத்துக்கு சொந்த புத்தியும் கிடையாது..சொல்புத்தியும் கிடையாது
(
நான் சொல்லலைங்கோவ்)
·         பூர்வபுன்ணியம் இருந்தால் பூரட்டாதியில் பிறப்பான்...
பூரட்டாதி பிறவி பொன் பிறவி!!
·         உத்திரட்டாதியான் ஊர் திரிவான்
வழக்கில் பலவான் உத்திரட்டாதியான்..( கேஸ் போட்டு அவனை நாறடிச்சிடுறேன் பாரு..என பலலை கடிக்கிறாரா..அவர் இந்த பார்ட்டி தான்
·         அவிட்டத்தில் பொறந்த பொண்ணை அந்நியத்தில் தராதே..
(
அதிர்ஷ்டம் போய்விடும் என்பதற்காக சொன்னது போலிருக்கு)
·         திருவோணத்தான் உலகாள்வான்(ரஜினி)
திருவாஓணத்தான் பரிமளபிரியன்
·         குழவி கூடு கட்டினால் பிறப்பு..நாய் பள்ளம் தோண்டினால் இறப்பு!!
(
இவை சகுனம்...)
·         உச்சத்தில் சொன்னால் அச்சமில்லை(பல்லி வாக்கு...கவுளி சாஸ்திரம்)
·         மூலத்து பெண் ,மாமியார் மூலையிலே...
கேட்டை நட்சத்திரப்பெண் கலகம் விளைவிப்பாள்..(முன்னோர் சொன்ன பழமொழி)
·         பூராடத்து அப்பன் ஊராடான்....(பயணம் னு நினைக்கிறேன்)
·         அனுஷம் ஐஸ்வர்யம் தரும்!!
·         கேது திசை நடக்கும்போது குடும்பத்தில் யாருக்கேனும் நடந்தால் குழப்பமான சூழலும்,கெட்ட செலவுகளும்(மருத்துவ செலவு) உறவினர்கள் பகையும் உண்டாகும்..வீட்டுக்குள் கெட்ட சக்தி நடமாட்டம் இருக்கும்..கணவன் ,மனைவிக்குள் வெறுப்பு உண்டாகும்...அத்தயக சூழலில் அக்காலத்தில் வீட்டு வாசலில் கரு ஊமத்தை காய்,எலுமிச்சை,5காய்ந்த மிளகாய்,கரித்துண்டு ஒன்று வைத்து கட்டி வாசலில் தொங்கவிட்டால் அந்த வீட்டை தெய்வம் காக்கும்...என்ற நம்பிக்கை உண்டு..
·         ரிசபம் ராசிக்கு மூலம் நட்சத்திரம்தான் அதிக தொந்தரவு தரும் சந்திராஷ்டம தினமாக இருக்கிறது...பண விரயம்,எந்த காரியமும் நடக்காத முடக்கடி நாளாக அலட்சியமாக இருத்தல்,ஒன்றுமில்லாத விசயத்துக்கு அதிக அலைச்சல்,அதிக வேலை,வர வேண்டிய பணம் வராமை,சலிப்பு,அவமானம்,வீண் சண்டை...உடலில் அடிபடுதல்...ஏமாற்றம் இவற்ரில் ஒன்றோ பலவோ நடந்து மன உளைச்சல் தரும் நாளாக இன்று இருக்கிறது கவனம்..

No comments:

Post a Comment